கலைச்சொற்கள்: Glossary
அரசு(State): அரசு என்பது குறிப்பிட்ட நிலப்பரப்பையும் அதில் வாழும் மக்களையும் குறிப்பதாகும்.
அரசாங்கம் (Government): ஒரு நாட்டை அதிகாரம் பெற்ற மக்கள் குழுவால் அதிகாரப்பூர்வமாக கட்டுப்படுத்தும் அமைப்பே அரசாங்கம் ஆகும்.
சமுதாய ஒப்பந்தக் கோட்பாடு (Social Contract Theory): மனிதன் இயற்க்கை நிலையில் தங்களுக்குள் ஏற்படுத்திக் கொண்ட ஒப்பந்தமே சமுதாய ஒப்பந்தமாகும்.
சமுதாயம் (Society):
மக்கள் ஒருங்கிணைக்கப்பட்ட ஒரு பெரிய குழுவாக இணைந்து, பணிகளை எப்படி பங்கிட்டுக் கொள்வது, எந்த முடிவுகளை எப்படி எடுப்பது போன்றவைகளை அவர்களுக்குள்ளேயே தீர்மானித்துக்கொள்ளும் தன்மை படைத்த ஓர் அமைப்பு சமுதாயம் எனப்படும்.
தனிமனிதத்துவம் (Individualism): அரசின் கட்டுப்பாடுகளிலிருந்து அப்பாற்பட்டு ஓர் தனிமனிதனின்சுதந்திரமான செயல்பாடுகளை உறுதி செய்யும் கோட்பாடு.
ஸ்கேண்டிநேவியா (Scandinavia): இது வடக்கு ஐரோப்பாவில் உள்ள டென்மார்க், நார்வே, ஸ்வீடன் ஆகிய மூன்று நாடுகளின் ஒருங்கிணைந்த பகுதியைக் குறிப்பதாகும்.