இந்தியாவும் அண்டை நாடுகளும் | அரசியல் அறிவியல் - அருஞ்சொற்பொருள் | 12th Political Science : Chapter 10 : India and It’s Neighbours
அருஞ்சொற்பொருள்
❖ கூட்டு நடவடிக்கை குழு: இரு (அ) பல நாடுகளுக்கிடையேயான கூட்டு நடவடிக்கை மேற்கொள்ளுதல். இந்நடவடிக்கை மூலம் பொருளாதார, கலாச்சார உறவுகளை வலிமைப்படுத்துதல்.
❖ வடமேற்கு மாகாண எல்லை: பிரிட்டிஷ் அரசின் போது, கூட்டாட்சியால் நிர்வாகம் செய்யப்பட்ட மாகாணம்.
❖ தூதரகம்: நாடுகளுக்கிடையேயான உறவுகளை முன்னேற்றலுக்கு உதவும் கருவி (அ) நிறுவனம்.
❖ உலக வர்த்தக அமைப்பு: நாடுகளுக்கிடையேயான பொருளாதார மற்றும் வர்த்தகம் தொடர்பான திட்டங்களை உருவாக்கும் உலக வர்த்தக அமைப்பாகும்.
❖ சார்க்: தெற்காசிய மண்டல கூட்டமைப்பு, தெற்காசியாவில் அமைந்துள்ள நாடுகளுக்கிடையேயான ஒத்துழைப்பை பலப்படுத்தி உருவாக்கிய அமைப்பு.
❖ நம்பிக்கை குறைபாடு: இரு நாடுகளுக்கிடையேயான கூட்டுறவுகளின் எதிர்மறை இராஜதந்திரத்தின்யுக்தியாகும்.
❖ அணிசேரா இயக்கம்: அணிசேரா இயக்கம் என்பது மூன்றாம் உலக நாடுகளை ஒன்று சேர்ந்த உருவாக்கிய இவ்வமைப்பு முதலாளித்துவ மற்றும் கம்யூனிஸ்ட் கூட்டமைப்பிலிருந்து நடுநிலை வகிக்கிறது.
❖ மாநில அமைதி மற்றும் மேம்பாட்டுக் குழு: பர்மாவின் இராணுவ அரசாங்கத்தை அலுவலக பெயராக அமைதி மற்றும் வளர்ச்சி குழு என அழைக்கப்பெற்றது.
❖ பிரெட்டன் வுட்ஸ் முறை: முதலாக தரப்பில் உள்ள மேற்கத்திய நாடுகளிடையேயான வர்த்தகம் மாறாமல் நிதி உறவுகளை உருவாக்கும் விதிகளை நிறுவியது.
❖ அதீத சக்தி நாடுகள்: பொருளாதார மற்றும் இராணுவத் துறைகளில் முன்னேறிய நாடுகள் ஆகும்.