Home | 12 ஆம் வகுப்பு | 12வது அரசியல் அறிவியல் | இந்திய-இலங்கை உறவுகள்
   Posted On :  04.04.2022 02:14 am

12 ஆம் வகுப்பு அரசியல் அறிவியல் : அத்தியாயம் 10 : இந்தியாவும் அண்டை நாடுகளும்

இந்திய-இலங்கை உறவுகள்

இந்திய-இலங்கை இரு நாடுகளும் முறையே 1947, 1948இல் விடுதலை பெற்றதிலிருந்தே வலிமையான நட்புறவை போற்றிவந்திருக்கிறன.

இந்திய-இலங்கை உறவுகள்


இந்திய-இலங்கை இரு நாடுகளும் முறையே 1947, 1948இல் விடுதலை பெற்றதிலிருந்தே வலிமையான நட்புறவை போற்றிவந்திருக்கிறன. ஆனாலும் இலங்கையில் உள்நாட்டு பூசல் மற்றும் அரசியல், போன்றவை இந்நட்புறவிவை பாதிக்கும் வகையில் பல பிரச்சனைகள் நடந்தேறியுள்ளன.

பிரதான காரணமாக இன வேற்றுமை விளங்குகிறது. இலங்கையில் தமிழர் இனத்திற்கும், சிங்கள இனத்திற்கும் உள்ள பிரச்சனைகள் எப்போதும் இவ்விரு நாடுகளுக்கிடையே எதிர்மறையான தடைகளை வைத்தன. பாதுகாப்பு தொடர்பான நடவடிக்கைகளும் வட மற்றும் கிழக்கில் வாழும் தமிழர்கள் இனத்தாலும் இந்தியா இலங்கை உறவுகள் நிர்ணயிக்கப்பட்டது. 


இந்திய - இலங்கை உறவுகளுக் கிடையேயான முக்கிய பிரச்சினைகள்

இந்தியா இலங்கை உறவுகளில் ஆழமாக பதிந்த ஆரம்பநிலை பிரச்சனையாக இலங்கை குடியுரிமைச் சட்டம் 1948 விளங்குகிறது. இதன்படி விவசாய தமிழர்கள் அல்லது யாழ தமிழரகளுக்கு குடியுரமை மறுக்கப்பட்டது.

இப்பிரச்சனை இரு நாடுகளின் உறவுகளிலும் பெரிய விரிசல் வரக் காரணியாக ஆரம்பத்திலிருந்து இருந்து வந்தது. மேலும் இப்பிரச்சனையை இலங்கை, சீனாவைக் கொண்டு சமாளிப்பதை வாடிக்கையாக வைத்திருந்தது, மேலும் விரிசல் பெரிதாகக் காரணமாக அமைந்தது. மேலும் இந்தியப் பெருங்கடல் கூட்டணியில் இலங்கை இணைபிரியாத நாடாக விளங்கியது. இக்கூட்டணியில் அயல்நாடு என்பதுப் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக கருதப்பட்டது.

நான்காம் ஈழப்போர் முடிந்ததிலிருந்து, இந்திய-இலங்கை உறவுகள் ஆக்கப்பூர்மாகவும் நேர்மறையாகவும், அமையத் துவங்கியது. சமீப காலத்தில் வாணிபம் பன்மடங்காக உயர்ந்துள்ளது. ஆனாலும் பல்வேறு பிரச்சனைகள் இரு நாடுகள் இடையேயும் தீர்க்கப்படாததாக உள்ளன. அகதிகள் பிரச்சனைத் தீர்க்கப்படாமலேயே உள்ளது. இலங்கை அகதிகள் நாடு திரும்புதல், அரசியல் தீர்மானத்தை நம்பியே உள்ளது.

இனக் கூறுகள்

1921ஆம் ஆண்டின் மக்கள் கணக்கெடுப்பின்படி இலங்கையில் பத்து பெரிய இனங்கள் காணப்பட்டன. அவற்றுள் மூன்று இனம் துணைப் பிரிவுகளாக அமைந்தன (இலங்கை முன்பு சிலோன்) தலையாய இனங்களாக, 1. கீழ்நாடு மற்றும் கண்டய சிங்களர்கள் 2. இலங்கை மற்றும் இந்திய தமிழர்கள் 3. இலங்கை மற்றும் இந்திய மூர்கள், ஏனைய நான்கு இனங்களாக பர்கர்கள், யூரேசியன்ஸ், மலேயர்கள் மற்றும் வேதாஸ் வாழ்ந்து வந்தார்கள். 

பெருவாரியான மக்கள்தொகையில் சிங்களர்கள் மூன்றில் ஒரு பகுதியாகவும், புத்த இனத்தை சார்ந்தவராகவும் சிங்கள மொழியை பேசக்கூடியவராகவும் இருந்தனர். இலங்கையின் தமிழர்கள் இந்துக்களாகவும், திராவிட மொழியான தமிழை பேசக்கூடியவராகவும் வாழ்ந்தார்கள். இஸ்லாமியர்கள், தமிழ் மற்றும் சிங்கள மொழியை பேசக்கூடியவர்களாக இருந்தார்கள்.

இந்திய மீனவர்கள் மீண்டும் மீண்டும் வங்காள விரிகுடாவில் தாக்கப்படுவதும், கொல்லப்படுவதும் வழக்கமாக உள்ளது. இப்பிரச்சனைக்கு பல தீர்வுகள் காணப்பட்டன. ஆழ்கடல் மீன் பிடித்தல், கட்சத்தீவை குத்தகைக்கு விடல், இந்திய மற்றும் இலங்கை மீனவர்கள் ஒரு நாள் விட்டு ஒரு நாளாக மீன் பிடித்தல் போன்றவை தீர்வுகளாக முடிவு செய்யப்பட்டன. ஆனாலும் மேற்கூறிய தீர்மானங்களை இன்று வரை செயல்படுத்த முடியவில்லை . 


இலங்கை தமிழ் அகதிகள் பிரச்சனை

1948-க்கு பிறகு செயல்படுத்தப்பட்ட இலங்கை குடியுரிமைச் சட்டம் தமிழர்களை வேற்றுமைப்படுத்த ஆரம்பித்தது. இலங்கை நாடாளுமன்றத்திலே இயற்றப்பட்ட இந்த சட்டம் தெற்கு இந்தியாவின் பூர்வக்குடி மக்களாக பல நூற்றாண்டுகளாக இலங்கையில் வாழ்ந்து வந்த தமிழர்களுக்கு அவர்கள் உரிமையை மறுத்தது. கிட்டதட்ட 11 சதவீதம் அதாவது ஏழு இலட்சம் தமிழர்கள் தேச அடையாளமின்றி நாட்டற்றவர்களாக விடப்பட்டார்கள். 1964இல் பண்டார நாயக்கேவும், சாஸ்திரியும் சேர்ந்து ஒரு உடன்படிக்கையை உருவாக்கி அதன் மூலம் தமிழர்களை இந்தியாவிற்கு குடியேற்றம் செய்ய ஏற்பாடு செய்தனர். அடுத்த 30 ஆண்டுகளுக்குள் தமிழர்களை, கிட்டத்தட்ட மூன்று இலட்சம் நபர்களை குடியேற்றம் செய்ய ஏற்பாடு செய்தனர். 2003- வரை இந்நிகழ்வுகள் நடக்கும் தருவாயில் தமிழர்களுக்கு குடியுரிமை வழங்க இலங்கை அரசு முடிவு செய்தது. அதுவும் பல போராட்டங்களின் பிறகு, இச்சட்டம் நிறைவேற்றிய தருணத்தில் தமிழர்களின் எண்ணிக்கை இலங்கையில் ஐந்து சதவீதம் குறைந்தது.

107 முகாம்களில் அகதிகளாக 62,000 தமிழர்கள் பல்வேறு நிவாரண சலுகைகளை மத்திய மற்றும் மாநில அரசங்கத்திடம் பெற்று வருகிறார்கள். சமீபகாலத்தில் இலங்கை மாணாக்கர்களுக்கு தமிழ்நாட்டில் பொறியியல் படிப்பதற்கு ஏதுவாய் பல சலுகைகளை தமிழ்நாடு அரசு வழங்கியது. இச்சலுகை, முகாம்களிலில்லாத 36,800 அகதிகளால், தகுதியுள்ளவர்களுக்கு பயனை அளித்தது.


நிலை மாற்றங்கள்

தற்போது, இந்தியா-இலங்கை ஆகிய இரு நாடுகளுக்கும் அகதிகள், நாடு திரும்புதல் ஆகியவை முதன்மையான பிரச்சனையாக காணப்படவில்லை. ஆனால் இருக்கின்ற நிலைமையும் மாறாது வைத்திருக்க இயலவில்லை . தமிழ்நாடு அகதிகளின் அதிக எண்ணிக்கையை சமாளித்து வருகிறது. இரு நாடுகளுக்கிடையேயான நல்லுறவை போற்ற வேண்டுமெனில், அகதிகள் பிரச்சனையை விரைவில் முடிவுக்கு கொண்டு வருவது சிறந்தது. இந்திய தரப்பில் நீடித்த பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வருவதும் இலங்கைக்கு இனப்பிரச்சனைக்கு தீர்வு காணுவதும் முதன்மையானது ஆகும். இரு நாடுகளும் தாராள மனப்பான்மையுடன் தீர்வை கொண்டு வரும் பட்சத்தில் தன்னார்வத்தில் நாடு திரும்புதலை முடிவாக அறிவித்து, அதற்கென்று பிரத்தியோக பிரதிநிதிகளை நியமிப்பது நன்று. இப்பிரதிநிதித்துவம் தமிழ்நாடு அரசாங்க தரப்பிலும், இலங்கையின் வட மாகாண குழு அமைப்பிலும் அமைவது சிறந்தது.

இந்தியாவிலேயே வசிக்க விரும்பும் மக்களுக்கு குடியுரிமை வழங்குதல் அவசியம். பாகிஸ்தான் மற்றும் ஆப்கான் அகதிகளுக்கு குடியுரிமை வழங்கியது போல இலங்கை அகதிகளுக்கும் வழங்கலாம். பிரச்சனையை உண்டாக்குபவர்க்கு குடியுரிமை வழங்க மறுப்பது அவசியமாகிறது. இவை அனைத்தும் சீராக நடக்கின்ற வேளையில் அனைத்து அகதிகள் முகாம்களையும் மூடும்பட்சத்தில் அனைத்து பிரச்சனைகளும் முடிவுக்கு கொண்டு வரப்படும். ஏனெனில் அகதிகள் பிரச்சனையானது குடிமை போரை விட, வெகு காலம் தொடருகின்ற பெரும் சவாலாக அமைந்துள்ளது. 


கட்சத்தீவு

கட்சத்தீவு பூர்வீகமாக ராமநாதபுரம் மன்னர்களுக்கு சொந்தமானதாகும். எந்த ஒரு இலங்கையின் வரைபடமும் அதனுடைய நிலப்பரப்பாக கட்சத்தீவை கொண்டிருக்கவில்லை. ஆனாலும் கட்சத்தீவின் அமைவிடத்தை அடிப்படையாக வைத்து இலங்கை அதனை சொந்தம் கொண்டாட ஆரம்பித்தது, முன்னதாக இரு நாடுகளின் தலைவர்களுக்கும் கட்சத்தீவை பற்றி பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார்கள்.

ஆனாலும் 1974இல் இந்திராகாந்தி கட்சத்தீவை ஒப்பந்தம் அடிப்படையில் இலங்கைக்கு வழங்கினார். கட்சத்தீவு என்பது 285 ஏக்கர் பரப்பளவில் இந்தியாவிற்கும் இலங்கைக்கும் நடுவே மன்னார் வளைகுடாவில் அமைந்துள்ள ஆளில்லா தீவு ஆகும். அங்கே கத்தோலிக்க கோவில் இருப்பதால் இலங்கை அரசாங்கம் அவ்விடத்தை புனிதத் தன்மை உடையதாக அறிவித்தது. இரு நாடுகளிலிருந்து பக்தர்கள் புனித பயணமாக கட்சத்தீவுக்கு செல்வது வழக்கம். 1974-ன் ஒப்பந்தத்தின்படி இந்திய மீனவர்கள் தங்களுடைய மீன் பிடிக்கும் வலையை காய வைப்பதற்கும், அங்கே இருக்கும் தேவாலயத்தை வழிபடுவதற்கும் உரிமை பெற்றிருந்தனர். இதன் பிறகு 1976இல் கடல் போக்குவரத்து எல்லை கட்டுப்பாட்டின் காரணமாக ஐக்கிய நாட்டின் உத்தரவின் பேரில் வலைகளை காய வைப்பதற்கும் மற்றும் தேவாலயத்தை வழிபடும் உரிமையும் இழந்தனர். இதன் தொடர்ச்சியாக இந்திய மீனவர்கள் எண்ணற்ற துன்பங்களையும் சந்தித்து வருகின்றனர்.



மீனவர்கள் பிரச்சனை

• இரு நாடுகளின் கூட்டு பணிக்குழு தகவலின்படி தமிழ்நாடு மீனவர்களின்-111 படகுகள் மற்றும் 51 இந்திய மீனவர்களை 2019 இல் இலங்கை வடக்கு மாகாணத்தில் கைது செய்யப்பட்டோ அல்லது காவலில் வைக்கப்பட்டோ இருக்கிறார்கள்.

நேரு-ஜான் கொடெலாவாலா உடன்படிக்கை 1954


இந்த உடன்படிக்கை இந்தியாவின் பிரதமர் நேரு மற்றும் இலங்கையின் பிரதமர் கொடெலாவாலா ஆகிய இருவரும் சேர்ந்து கையெழுத்திட்ட ஒப்பந்தம் ஆகும். (18, ஜனவரி, 1954) இந்த ஒப்பந்தமானது இலங்கையில் வசிக்கக் கூடிய இந்திய பூர்வீகக்குடி மக்களின் நிலை மற்றும் எதிர்காலத்தை பற்றியது ஆகும். இம்மக்கள் யாவரும் பிரிட்டிஷ் இந்திய அரசாங்கத்தால் தேயிலை, காப்பி மற்றும் தேங்காய் தேட்டங்களில் கூலி வேலை செய்வதற்கு அழைத்து வரப்பட்டனர்.

இந்த ஒப்பந்தத்தின்படி, இந்திய மக்கள் இலங்கையிலிருந்து சொந்த நாடு திரும்புவதற்கு வழிவகுப்பதாகும். ஆனாலும் பிரதமர் நேரு, இந்திய குடியுரிமையை தாமாகவே முன்வந்து கோரும் மக்களுக்கு மட்டுமே இச்சலுகையை அனுமதித்தார். இலங்கை குடியுரிமை பெற தகுதியில்லாத மக்கள் அனைவருக்கும் இந்திய குடியுரிமையை வழங்கப்பட வேண்டும் என்ற இலங்கையின் கோரிக்கையை இந்தியா முற்றிலுமாக நிராகரித்து விட்டது.

• இப்பிரச்சனைக்கு காரணம் பிரச்சனைக்குரிய கட்சத்தீவு மீன் பிடித்தலும், குழம்பிய குட்டைகளில் மீன் பிடித்து சுற்றுபுற சூழ்நிலைக்கும் பொருளாதாரத்திற்கும் இடைஞ்சல் விளைவித்தது ஆகும். ஏனைய மற்ற இடங்களில் மீன் வளங்கள் குறைவாக இருப்பதால் பாக் - வளைகுடாவை தவிர்த்து இந்திய மீனவர்களால் வாழ்வாதாரத்தினை மூட இயலாது.

2016இல் நவம்பரில் நடந்த இரு நாடுகளுக்கு இடையேயான அமைச்சர்கள் அளவிலான கூட்டத்தில் கூட்டுப் பணிக்குழு தொடர்பான நடவடிக்கைளில் இந்தியா 3 வருட கால அவகாசம் கேட்டது. மீனவர்கள் தொடர்பான இந்தியாவின் கோரிக்கையை இலங்கை அரசு நிராகரித்தது.


சாஸ்திரி- சிறிமாவோ ஒப்பந்தம் 1964


திருமதி சிறிமாவோ பண்டாரநாயக்கா இந்தியாவிற்கு 1964இல் வருகை செய்தார். நீண்ட பேச்சுவார்த்தைக்கு பிறகு பண்டார நாயக்காவிற்கும் சாஸ்திரிக்கும் இடையே ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. இதன் மூலம் 9,75,000 குடியுரிமை அல்லாத நபர்கள் பின்வரும் கணக்கீட்டை பொருத்து பிரிக்கப்படுவார்கள். 

• 3 இலட்சம் மக்கள் இலங்கை குடியுரிமையை பெறுவதாகும். 

• 5 இலட்சம் 25 ஆயிரம் மக்கள் இந்திய குடியுரிமையை பெறுவார்கள். 

• இவர்களுக்கு 15 வருடங்கள் கால அவகாசம் கொடுக்கப்பட்டு அதற்குள்ளாக இந்தியாவிற்கு வருமாறும் எஞ்சியுள்ள 1.50 லட்சம் குடியுரிமை இல்லாத நபர்களின் நிலையை பின்வரும் காலங்களில் தீர்மானிக்கலாம் என்றும் முடிவு செய்யப்பட்டது.

ராஜீவ்-ஜெயவர்த்தனே ஒப்பந்தம் (இந்தியா- இலங்கை 1987)


இலங்கை -இனப்பிரச்சினையை தீர்ப்பதற்கான இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி மற்றும் இலங்கை பிரதமர் ஜெ. ஜெயவர்த்தனே இடையேயான தூதரக ஒப்பந்தம் 

• வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளை உள்ளடக்கிய தன்னாட்சி அமைப்பு (எங்கு தமிழர்கள் செறிவாக இருக்கிறார்களோ) உருவாக்கப்படும். 

• இந்திய மேற்பார்வையாளர்களின் முன்னிலையில் மாகாண சபைகளுக்கான தேர்தல் டிசம்பர் 31, 1987 ஆம் ஆண்டிற்கு நடத்தி முடிக்கப்படும். 

• வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் அவசர நிலையானது நீக்கப்பட்டுள்ளது. 

• தமிழ், சிங்களம், ஆங்கிலம் ஆகியவை இலங்கையின் அலுவல் மொழியாக இருக்கும். 

• இலங்கை ராணுவம் மற்றும் தமிழ் போராளிகளிடையயே பகைமையை நிறுத்துவதற்கு இந்திய அமைதி காக்கும் படையை கொண்டுவரப்பட்டது.

இவ்ஒப்பந்தம் இலங்கையில் கடுமையாக எதிர்க்கப்பட்டது. கொழும்பு விமான நிலையத்தில் அணி வகுப்பு மரியாதையின் போது ராஜீவ் காந்தியை தாக்கவும் முயற்சி நடந்தது. 


இலங்கை தமிழர்களுக்கான இந்திய மறுவாழ்வு திட்டங்கள்

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் வாழக்கூடிய தமிழ் மக்களுக்கு 50,000 வீடுகள் கட்டித் தருவதாக பிரதமர் மன்மோகன் சிங், இலங்கை குடியரசுத்தலைவர் ராஜபக்சேவுக்கு 2010இல் உறுதி அளித்திருந்தார். 47,000 வீடுகள் 2018-ல் கட்டி முடிக்கப்பட்டு விட்டன. இதற்கான செலவு கிட்டதட்ட 350 மில்லியன் அமெரிக்கா டாலர்கள். இது இந்தியாவின் மானியங்களிலேயே அதிகபட்சமாகும். இந்திய பிரதமர் மேற்கு இலங்கையில் தலைமன்னார் நகரத்திற்கு புதிய ரயில் பாதையில் பயணிகள் ரயிலை கொடியசைத்து தொடக்கி வைத்தார். தலைமன்னாரில் தொடங்கிய இந்த புது ரயில் பணியானது, உள்நாட்டு போர் முடிவடைந்த பின் வடமாகாணத்தின் வளர்ச்சிக்கான பணியாக தொடங்கியது. இது இந்தியாவின் எல்லைக்கருகே அமைந்துள்ள ஒரு நகரமாகும். இந்திய பிரதமர் மோடியும், இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேனாவும் தலைமன்னாரில் ஒரு புதிய ரயில் நிலையத்தை 1650 பையர் (Pier) அமைக்க அடிக்கல் நாட்டியுள்ளனர்.

கடைசியாக கட்டப்பட்ட 63 கிலோ மீட்டர் ரயில் தடங்கள், ஏற்கனவே தொடங்கப்பட்ட 265 கிலோமீட்டர் தூரமுள்ள பிரத்தியேகமான வடமாகாண ரயில்வே திட்டமாகும். இது இந்திய அரசாங்கத்தின் கீழ் வரும் கம்பெனியான IRCON-ன் உதவியால் உருவாக்கப்பட்டது.

இந்திய பூர்வீக தமிழர்களின் பிரச்சனைக்கு தீர்வுகள் காண லால் பகதூர் சாஸ்திரியின் காலத்திலேயே இரு நாடுகளும் முயற்சி எடுத்தன.

இந்திய அரசாங்கம் இலங்கையிலுள்ள இந்திய வம்சாவளியினருக்கு இரண்டில் மூன்று பங்கு குடியுரிமை வழங்குவதாக ஒத்துக்கொண்டது. ஆனால் தமிழர்களுக்கும், சிங்களர்களுக்குமான இனப் போரின் விளைவாக தமிழகத்தில் அகதிகளின் வரவு பிரச்சனையை தீவிரப்படுத்தியது. 


எதிர்கால ஒத்துழைப்பு 

• கச்சத்தீவை காலவரம்பற்ற குத்தகைக்கு எடுத்துக்கொள்ளும் வகையில் உடன்படிக்கை ஏற்படுத்த இந்தியா முனையலாம். 

• உரிமம் பெற்ற இந்த மீனவர்கள் குறிப்பிட்ட வரையறைக்குட்பட்ட இப்பகுதியில் மீன் பிடிக்க அனுமதிக்கலாம். அதுபோலவே இலங்கைமீனவர்களுக்கும் இச்சலுகையை ஏற்படுத்திக் கொடுக்கலாம். 

• இந்திய அரசாங்கம் மீன்பிடித் தொழிலை நிறுவனப்படுத்த முயற்சி  இந்திய அரசாங்கம் விரிவான திட்டத்தை மேற்கொண்டு இந்திய மீனவர்கள் பாக் வளைகுடாவில் மீன் பிடித்தலை ஒழுங்குபடுத்துவதற்கு முயற்சி செய்யலாம்.

மேற்கூறிய அனைத்தும் பிரச்சனைகளும் சரிவர தீர்வுகள் காணும் பட்சத்தில் இந்தியாவும் இலங்கையும் தெற்காசியாவில் தலையாய முடிவெடுக்கும் தன்மையை பெறுவதற்கு வாய்ப்பு அதிகம் உண்டு.




12th Political Science : Chapter 10 : India and It’s Neighbours : India - Sri Lanka Relations in Tamil : 12th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 12 ஆம் வகுப்பு அரசியல் அறிவியல் : அத்தியாயம் 10 : இந்தியாவும் அண்டை நாடுகளும் : இந்திய-இலங்கை உறவுகள் - : 12 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
12 ஆம் வகுப்பு அரசியல் அறிவியல் : அத்தியாயம் 10 : இந்தியாவும் அண்டை நாடுகளும்