காக்டஸ் நடவடிக்கைகள் மாலத்தீவை இந்தியா காப்பாற்றியுள்ளது
1988இல் 80-200 இலங்கை தமிழ் போராளிகள் (PLOTE) அப்துல்லா லுத்துபி என்கிற தொழிலதிபரின் சூழ்ச்சியில் மாலத்தீவை நோக்கி தாக்குதல் நடத்தினர். மாலத்தீவில் ஊடுருவிய பிறகு, அவர்கள் தலைநகரமான 'மாலே'வில் ஊடுருவிமுக்கியமான பகுதிகளை ஆக்கிரமித்தனர்.
குடியரசுத்தலைவர் அப்துல் கயமின் ஆட்சியை கலைப்பதற்கு முனைந்தனர். ஆனால் கயும், மாலத்தீவின் தேசியப் பாதுகாப்பு பணி தலைமையிடத்தில் தஞ்சம் புகுந்தார். கயும் பல நாடுகளுக்கு அதாவது இந்தியா, பாகிஸ்தான் அமெரிக்கா, பிரிட்டன், மலேசியா, இலங்கை பிரச்சினையை விளக்கினார். அமெரிக்காாவும், பிரிட்டனும், தங்களால் நேரடியாக நடவடிக்கையில் இறங்க இயலாது என்றும், இந்தியா மூலம் தீர்வு கிடைக்க பெறும் என்றும் நம்பிக்கை அளித்தனர். பிரதமர் ராஜிவ் காந்தி மூலமாக இந்தியா வெகுவேகமாக தீர்வு நடவடிக்கையில் இறங்கியது.
குடியரசுத்தலைவர் கயுமின் வேண்டுகோள் கிடைத்த சில மணி நேரங்களில் இந்திய படைவீரர்கள் மாலத்தீவில் இருந்தனர். நவம்பர் 3 1988 இல் 15.30 மணி அளவில் இந்திய படை வீரர்களை மாலத்தீவில் இறக்கியது. கயூமின் செய்தி கிடைத்த 16 மணி நேரங்களில் ஆக்ரா போர் விமான நிலையத்திலிருந்து இல்யுசன் II 76 போர் விமானம் கிளம்பியது. 2,500கிலோ மீட்டர் கடந்து இந்தியா விமானப்படையின் 44-வது ஸ்கோட்ரன், முற்றுகையிடப்பட்ட மாலேதலைநகருக்கு ஒரு கிலோமீட்டர் தொலைவிலுள்ள ஹல்ஹிலே விமான நிலையத்தில் இறங்கியது. மேலும் தரையிறக்கப்பட்ட இந்திய விமானப் படைவீரர்கள், குடியரசுத்தலைவர் கயுமை மீட்டெடுத்தனர். போராட்டக்காரர்கள் விரட்டியடிக்கப்பட்டனர்.
இலங்கை தமிழ் போராளிகள் நகரம் முழுவதும் பல முக்கிய பகுதிகளைக் கைப்பற்றியபோது, அவர்கள் கண்காணிக்க மறந்த ஒரு பகுதி ஹல்ஹிலே விமான நிலையம். இந்த நுழைவாயிலை யாரும் கவனிக்காமல், இந்திய விமானப் படைவீரர்கள் தரையிறங்கின. விரைவாக விமான நிலையத்தின் கட்டுப்பாட்டை எடுத்துக் கொண்டனர். பின்னர் கமாண்டோகள் படகுகளைப் பயன்படுத்தி தலைநகருக்குள் நுழைந்து குடியரசுத்தலைவர் கயூமை மீட்டு, போராளிகளை விரட்டியடித்தனர்.
இந்திய தரப்பில் இந்நடவடிக்கையில் எந்தவித இழப்பும் இல்லாதது என்பது சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. ஆசியாவின் பாதுகாப்பில் இந்தியா மிகச்சிறப்பாக பங்காற்ற முடியும் என்பதை நிரூபித்தது காக்டஸ் நடவடிக்கை. அமெரிக்கா அதிபர் ரொனால்டு ரீகன் முதல் பிரிட்டனின் பிரதமர் மார்கரெட் தாட்சர் வரை உலக சமூகம் அனைத்தும் இந்தியாவின் இந்த உறுதியான நடவடிக்கையை பாராட்டினார்கள்