Home | 12 ஆம் வகுப்பு | 12வது அரசியல் அறிவியல் | இந்திய-நேபாள உறவுகள்

அரசியல் உறவுகள், தற்போதைய பிரச்சினைகள், கலாச்சார உறவுகள் , ஒத்துழைப்புக்கான பகுதிகள், சவால்கள் - இந்திய-நேபாள உறவுகள் | 12th Political Science : Chapter 10 : India and It’s Neighbours

   Posted On :  04.04.2022 02:21 am

12 ஆம் வகுப்பு அரசியல் அறிவியல் : அத்தியாயம் 10 : இந்தியாவும் அண்டை நாடுகளும்

இந்திய-நேபாள உறவுகள்

இந்தியா, நேபாளம் ஒன்றுக்கொன்று புவியியல் ரீதியாக அருகே அமைந்துள்ளன. நேபாளம். தாழ்வான நிலப்பகுதியில் பெரும்பாலும் கங்கை சமவெளியின் பாதையில் அமைந்து, இமயத்தின் அடிவாரத்தில் சீனாவிற்கும், ஆசியாவிற்கும் இடையே உள்ளது.

இந்திய-நேபாள உறவுகள்

.

இந்தியா, நேபாளம் ஒன்றுக்கொன்று புவியியல் ரீதியாக அருகே அமைந்துள்ளன. நேபாளம். தாழ்வான நிலப்பகுதியில் பெரும்பாலும் கங்கை சமவெளியின் பாதையில் அமைந்து, இமயத்தின் அடிவாரத்தில் சீனாவிற்கும், ஆசியாவிற்கும் இடையே உள்ளது. இவ்விரு நாடுகளும் கிழக்கே 1,850 கிலோ மீட்டர் எல்லையை பகிர்ந்தும், தெற்கு மற்றும் மேற்கு பகுதிகளில் உள்ள சிக்கிம், மேற்கு வங்காளம், பீகார், உத்திரப்பிரதேசம், உத்தரகாண்ட் போன்ற ஐந்து இந்திய மாநிலங்களால் சூழப்பட்டுள்ளன. முன்னதாக நேபாளம் ஒரு இந்து பெரும்பான்மையான நாடாக விளங்கியது. ஆனாலும் எட்டில் ஒரு பங்கு மக்கள் பௌத்த கொள்கையில் நம்பிக்கை உடையவர்கள் குறைந்த எண்ணிக்கையில் இஸ்லாமியர்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் வாழ்ந்து வருகிறார்கள்.

நேபாளத்தினை இறையாண்மை பெற்ற நாடாக நேரு ஏற்றுக்கொண்டாலும், அதே சமயத்தில் இந்தியாவின் பாதுகாப்பிற்கு ஒரு தனிச்சிறப்புடைய பகுதியாகவே அது விளங்குகிறது. சீனா திபெத்தை தன் பிடிக்குள் 1951இல் கொண்டுவந்தபோது நேபாளத்தின் முக்கியத்துவத்தை இந்தியா உணரலாயிற்று. நேபாளத்தின் மூலம் அச்சுறுத்தல் என்பதைவிட, நேபாளத்திற்கு அச்சுறுத்தல் என்பது இந்தியாவிற்கும் பெரும் இழப்பு ஏற்படுத்தும் என்பதினை உணர்த்தியது. இதன் தொடர்ச்சியாக இந்தியா நேபாளத்துடன் அமைதி மற்றும் நட்புறவு உடன்படிக்கையை ஜூலை 31, 1950இல் மேற்கொண்டது. நேபாளத்துடன் உறவுகளுக்கு இந்தியாவின் பாதுகாப்பு காரணி என்பதுடன் ஏனைய மற்ற காரணிகளும் அடிப்படையாக உள்ளன. மேற்கூறிய ஒப்பந்தம் கையெழுத்திட்ட அதே நாளில் வர்த்தக வாணிப உடன்படிக்கையிலும் கையெழுத்திட்டது. இந்த ஒப்பந்தம் இரு நாடுகளுக்கிடையே வலிமையான பொருளாதார உறவுகளை மேம்படுத்தியது.


அரசியல் உறவுகள்

இந்தியாவுடனான நேபாளத்தின் உறவுகள், அரசருக்கும் வம்சாவழி பிரதமர் குடும்பத்திற்கும் இடையேயான போராட்டத்தை அடிப்படையாகக் கொண்டே இருந்து வந்தது. 1950இல் நேபாளத்தோடு ஒப்புதல் மேற்கொண்ட இந்தியா, மக்களாட்சிக்கு மாறவும், உரிமைகளை மக்களுக்கு அளிக்குமாறும் வேண்டிக் கொண்டது. ஆனால் அதற்கு சிறிதளவும் ராணா குடும்பத்தினர் செவிசாய்க்காமல் இருந்ததால் இந்திய அரசு நேரடியாக பிரச்சனையில் கவனம் செலுத்தியது.


நேரு இறந்த பிறகு, இந்தியாவின் உறவுகள் ஒரே மாதிரியானநிலை போக்கை கடைப்பிடித்தது. அடுத்தடுத்து பதவியேற்ற, சாஸ்திரி, இந்திராகாந்தி, ராஜீவ்காந்தி, வி.பி. சிங் மற்றும் சந்திரசேகர் முன்பு வழக்கமாயிருந்த கொள்கையையே பின்பற்றினர். இரு நாட்டின் தலைவர்களும் பல்வேறு சந்திப்புகளை முறையே நடத்தினர்.


1990-களில் இந்தியா "இரு தூண் கொள்கையை" பின்பற்றியது. பலகட்சி முறைமை நேபாளத்தில் தோன்றியதால் இந்நிலையை இந்தியா தேர்ந்தெடுத்தது. இரு தூண் கொள்கையாக அரசியல் சாசனச் சட்டத்தில் மன்னராட்சியும், பலகட்சி மக்களாட்சிமுறையும் அமைய இந்தியா விருப்பம் தெரிவித்தது. ஆனால் புதிய புத்தாயிரத்தில் இக்கொள்கை தொடர்பான நடவடிக்கைகளின் மாற்றம் ஏற்பட்டது. ஏனெனில் மன்னராட்சியில் மாற்றமும்,மாவோ கிளர்ச்சியாளர்களின் செயலும் வேகமும் நேபாளத்தைப் புரட்டி போட்டது.


இந்தியா-நேபாள உறவுகளுக்கிடையே தற்போதைய பிரச்சினைகள்

சூழல்

• வாணிபம் மற்றும் போக்குவரத்து தொடர்பான உடன்படிக்கையை நேபாளமும் சீனாவும் செய்து கொண்டுள்ளது.

• பிம்ஸ்டெக் பயிற்சியை (MILEX 2018) இந்தியா நடத்துகின்றபோது நேபாளம் அதில் கலந்து கொள்ளவில்லை.

இரு பெரும் பொருளாதார வல்லரசுகளான இந்திய-சீனாவிற்கு தெற்கே இமய மலைப்பகுதியின் இடையில் அமைந்துள்ள நேபாளம் இரண்டு நாடுகளுடனான தனி முக்கியத்துவமான வரலாற்று நட்பு உறவுகளை கொண்டுள்ளது.

நட்புறவின் பின்னணி 

• இரு நாடுகளும் பிரத்தியேகமான நட்புறவைக் கொண்டுள்ளது. இதன் பகிர்வு பொதுவான கலாச்சாரத்தையும், இமயத்திற்கு தெற்கேயுள்ள பகுதியிலுள்ள இரு நாடுகளுக்கும் நெருக்கமான பண்பாட்டு உறவுகள் உள்ளன. திருமணம், தொன்மையான சமயம், மொழி, இனம் ஆகியவற்றால் இரு நாடுகளுக்கும் நெருக்கமான பண்பாட்டு உறவுகள் உள்ளன 

• இரு நாடுகளின் மக்களுக்கிடையேயான உறவுகளும், மிக நெருக்கமாகவும், பன்முகத்தன்மை கொண்டதாகவும் இருக்கிறது. 

• இந்தியக் குடியரசு, நேபாளம் அமைதி மற்றும் நட்புக்கான 1950 இந்திய - நேபாள ஒப்பந்தத்துடன் முறையான உறவைத் தொடங்கின. இந்த ஒப்பந்தம் இந்தியநேபாளத்துடனான தற்போதைய உறவின் மைல்கல்லாகும். 

நேபாள உறவுகளின் முக்கியத்துவம் 

• இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையே "இடைச்சுவராக" நேபாளம் செயல்படுகிறது. 

• மேலும், நிலம் சூழ்ந்த நாடாக நேபாளம் அமைந்திருப்பதால் வெளிநாடுகளுடன் இணைப்பு பெற இந்தியாவை சார்ந்து இருப்பது அவசியமாகிறது.

பிரதமர் மோடி அவர்கள் "5டி" (5T) சூத்திரத்தைக் கொண்டு வந்துள்ளார். இந்திய-நேபாள உறவுகள் "பாரம்பரியம், வாணிபம், சுற்றுலா, தொழில்நுட்பம் மற்றும் போக்குவரத்து" போன்றவைகளால் நிர்ணயிக்கப்படும் என்று தனது மே 2018 பயணத்தின்போது கூறியுள்ளார்.

அரசியல் உறவுகள் 

• வரலாற்று ரீதியான உறவு முறையை நேபாளமும், இந்தியாவும் கொண்டுள்ளது. 

• 1950-களிலிருந்து அமைதி மற்றும் நட்புறவு தொடர்பான உறவுமுறை இரு நாடுகளுக்கும் உண்டு. 

• மேற்கூறிய ஒத்துழைப்பு ஒப்பந்தம் இரு நாடுகளுக்கிடையே இன்றுவரை நட்புறவு வலுப்பெற கருவியாக உள்ளது. 

• இந்தியா எப்போதும் தெற்காசியாவை அதன் செல்வாக்கு செலுத்தும் ஒரு பகுதியாக கருதுகிறது.

'இந்திய-நேபாள அமைதி மற்றும் நட்புறவுக்கான உடன்படிக்கை-1950

1950இல் மேற்கொள்ளப்பட்ட அமைதி மற்றும் நட்புறவு உடன்படிக்கையானது நேபாள அரசாங்கத்திற்கும், இந்திய அரசாங்கத்திற்கும் உலகத்தின் ஒற்றுமையை அடிப்படையாக வைத்து அண்டை நாடுகளுடன் உறவுமுறையை வலிமைப்படுத்தும் நோக்க முடையதாகும். இந்த உடன்படிக்கை 1950ஆம் ஆண்டு ஜூலை 31இல் நேபாள பிரதமர் ஷம்ஷர் ஜாங் பகதூர் ராணா, இந்திய தூதுவர் சத்ரேஷவர் நாராயாணசிங் முன்னிலையில் கையெழுத்திடப்பட்டது. இந்த உடன்படிக்கையின்படி இருநாட்டு மக்களும் தங்குதடையின்றி சுதந்திரமாக இரு நாடுகளுக்கும் செல்வதற்கும், பொருள்கள் ஏற்றுமதி-இறக்குமதி செய்வதற்கும், வெளியுறவுத்துறை விஷயங்களிலும், பாதுகாப்பு துறையில் பரிமாற்றங்கள் ஏற்பட ஏதுவான சூழல் ஏற்படுத்தப்பட்டது.


கலாச்சார உறவுகள் 

• இரு நாடுகளும் ஒரே வகையான கலாச்சாரத்தைப் பின்பற்றுகின்றன. மேலும் இரு நாட்டு மக்களுக்கும் மக்களுக்கிடையேயான உள்ள உறவுமுறைகளுக்கு வரலாற்றில் தனிச்சிறப்பு பெற்றதாக அமைந்துள்ளது. 

• இருநாட்டு மக்களும் பரஸ்பரம், மத ரீதியான யாத்திரைகளுக்கு அடுத்த நாட்டுக்கு செல்வது வழக்கமாகியுள்ளது. பசுபதி மற்றும் ஜனக்பூர் ஆகிய பிரசித்தி பெற்ற கலாச்சார இடங்கள் நேபாளத்திலும், வாரணாசி மற்றும் நான்கு புனித ஸ்தலங்கள் இந்தியாவிலும் மக்கள் சென்று வர ஏதுவாய் உள்ளது. 

• புத்த புனித ஸ்தலங்களான லும்பினி நேபாளத்திலும், குஷி நகர், கயா, சாரநாத் இந்தியாவிலும் மக்களை ஈர்க்கிறது. 

• குறிப்பிட்டு கூறும் வகையில், இந்தியாவிற்கும் நேபாளத்திற்குமான உறவுகள் உணவு மற்றும் குடும்பம் ரீதியாக அமைந்து சிறப்பித்து காணப்படுகிறது.

செயல்பாடு


நன்றி: தி இந்து கேலிச்சித்திரம் 

மன்னர் ஞானேந்திரா, நிலப்பிரபுத்துவ ஏதேச்சதிகாரம் மற்றும் முடியாட்சி முறையில் இருந்து மக்களாட்சி குடியரசாக மாறிச்செல்வதை ஏன் ஏற்க மறுத்தார் என்பதற்கு இரண்டு காரணங்களைத் தருக.


ஒத்துழைப்புக்கான பகுதிகள் 

1. பொருளாதார மற்றும் வாணிபம் 

• நேபாளத்தின் மிகப்பெரிய வாணிப பங்குதாராக இந்தியா செயல்படுகிறது. அந்நிய முதலீட்டிலும், நேபாளத்துடனான வாணிபம், போக்குவரத்து வசதிகளிலும் இந்தியா முன்னிலை வகிக்கிறது. 

2. நேபாளத்தில் இந்திய முதலீடு 

• 40 சதவீதம் வெளிநாட்டு முதலீடானது இந்தியாவிலிருந்து முதன்மையான முதலீட்டாளர்கள் மூலம் நேபாளத்திற்கு செல்கிறது. 

3. நீர் வளங்கள் மற்றும் ஆற்றல் துறைகளின் ஒத்துழைப்பு 

• 2008இல் இந்தியாவிற்கும் நேபாளத்திற்கு இருதரப்பு ஒப்பந்தமானது நீர்வளம் மற்றும் நீர்மின் நிலையம் தொடர்பாக மூன்று அடுக்கு செயல்வழி முறை உருவாக்கப்பட்டது. 

• அதிவேகமாக பாய்கின்ற பல ஆறுகள் நேபாளத்தில் இருப்பதால் நீர் மின் நிலையம் மூலமாக மின் ஆற்றல் தயாரிக்க எளிதாகிறது. 80,000 மெகாவாட் உற்பத்தி திறனிலிருந்து நேபாளம் 700 மெகாவாட் மட்டுமே உற்பத்தி செய்கிறது. 

• சமீபத்தில் அருண் III என்ற 900 மெகாவாட் மின் ஆற்றல் தயாரிக்கக்கூடிய நீர் மின் நிலையம் நிறுவப்பட்டது. 2014இல் இந்தியாவிற்கும், நேபாளத்திற்கும் மின்னாற்றல், வாணிபம் எல்லை கடந்த இடைவெளி இணைப்பு மற்றும் கட்டடம் இணைப்பு தொடர்பாக ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. 

• நீண்ட கால ஒருங்கிணைந்த தொழில்நுட்பத்திட்டம் 2035 இல் உருவாக்குவதற்கு உண்டான இணை தொழில்நுட்பக்குழு நிறுவப்பட்டது. 

4. தற்காப்பு ஒத்துழைப்பு 

• இந்திய இராணுவத்தில் கூர்க்கா படையில் ஆள் எடுப்பு பெருவாரியான நேபாள மலைவாழ் மாவட்டங்களிலிருந்து நடத்தப்படுகிறது. 

• 1950-லிருந்து இந்தியாவும், நேபாளமுடன் தங்களது தரைப்படை தளபதிகளுக்கு ஜெனரல் பதவியை மரியாதை நிமித்தமாக வழங்குகிறது.

• இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பின் அடிப்படையில், நேபாள ராணுவத்தை நவீனமாக்கவும், பயிற்சிகள் தரவும், புதிய கருவிகள் அளிப்பதுமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. 

• இந்திய ராணுவ பயிற்சி மையங்களில் ஒவ்வொரு வருடமும் 250 நேபாள ராணுவத்தினர் பயிற்சி பெறுவதற்கு ஏதுவாக இடங்கள் ஒதுக்கப்படுகின்றன. 

• 2019 இல் இந்தியாவும் நேபாளமும் சூரிய கிரண் XIII என்றழைக்கப்படும் கூட்டு ராணுவ பயிற்சியை, மே 30-லிருந்து ஜூன் 12 வரையில் உத்தராகண்டில் நடத்தியது. 

5. உள்கட்டமைப்பு மற்றும் இணைப்பு  

• சமீபத்தில் ரக்ஸால் காத்மண்டு ரயில் பாதை அமைப்பதற்கு புரிதல் உடன்படிக்கை கையெழுத்திடப்பட்டது. தகவல் பரிமாற்ற, தேசிய நெடுஞ்சாலை திட்டமும் மேற்கொள்ளப்பட்டது. 

• இவ்விரு நாடுகளும் உள்நாட்டு நீர்வழி போக்குவரத்தை உருவாக்குவதற்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன. 

6. இரு நாட்டு மக்களுக்கிடையேயான ஒத்துழைப்பு 

• இரு நாடுகளின் அரசாங்கங்களும், மூன்று சகோதர நகரங்கள் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. காத்மண்டுவாரணாசி-லும்பினி-புத்தகயா மற்றும் ஜனக்பூர், அயோத்தியா ஆகிய நகரங்களை மையப்படுத்தி உருவாக்கிய ஒப்பந்தமாகும். 

• ஜனக்பூருக்கும் அயோத்யாவிற்கும் நேரடியாகப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இவை இராமாயண வட்டம் வழியாக இயக்கப்படும் சுதேஷ் தரிசன திட்டத்தை அறிவித்தது. 

• நேபாளமும் இந்தியாவும் இந்து மற்றும் புத்த பாரம்பரியத்தை பகிர்ந்து கொள்கின்றன. லும்பினி, புத்தரின் பிறந்த இடம் நேபாளத்திலும், அவர் ஞானம்பெற்ற புத்தகயா இந்தியாவில் உள்ளது. இதேபோல் இரு நாடுகளிலும் இந்து புனித யாத்திரை இடங்கள் பரவி உள்ளன.


சவால்கள் 

1. எல்லைப் பிரச்சனைகள்

• இருபிரதான பிரச்சனைகள் சுஸ்தா மற்றும் கலாபானி (இந்தியா - சீனா - நேபாளம் -முச்சந்திப்பு) ஆகும். 

• இரு நாடுகளுக்கிடையேயான பேச்சு வார்த்தைகள் செயலாளர்களிடையே முடிவு செய்யப்பட்ட நிலையில், ஒரே ஒரு பேச்சுவார்தை மட்டும் 2015இல் நடத்தப்பெற்றது.

2. உள்நாட்டு பாதுகாப்பு

• நேபாளத்திற்கும், இந்தியாவிற்கும் இடையில் திறந்தவெளி எல்லை அமைந்துள்ளதால் சட்டபூர்வமற்ற இடம்பெயர்தலும் ஆள்கடத்தலும் எளிதான வகையில் அரங்கேற்கிறது.

• இந்த எல்லையானது மாவோஸ்டுகள், தீவிரவாதம் மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு மிகச் சுலபமாக உள்ளது.

3. வாணிபம் 

• நேபாளத்தில் வாணிபம் அதிகமாக இறக்குமதி செய்வதாலும் குறைவான ஏற்றுமதியாலும் சமீபகாலத்தில் பற்றாக்குறையாவே நீடிக்கிறது. 

• இந்தியா-நேபாளம் வாணிபத்தில் அதிகளவில் இந்தியாவிற்கு இலாபம் அளிக்கின்ற நிலை தற்போது உள்ளது.

4. அமைதி மற்றும் நட்புறவுக்கான ஒப்பந்தம்

 • 1950இல் கையெழுத்திடப்பட்ட இந்திய - நேபாள ஒப்பந்தம் நேபாள அரசியல் வித்தகர்களால் சமமற்றதாக விமர்சிக்கப்பட்டது.

• இந்த ஒப்பந்தத்தின்படி, நேபாளம் எந்த ஒரு இராணுவம் தொடர்பான பொருள்கள் வாங்கும்போது இந்தியாவில் ஒப்புதலைக் கேட்க வேண்டும் என்ற விதி அமைப்பு உள்ளது. நேபாளம் இவ்விதியை மாற்ற விருப்பம் தெரிவித்தது.

• நேபாள - இந்திய பிரபலமானவர்கள் குழுமம் இரு நாடுகளுக்கிடையேயான அனைத்து உடன்படிக்கைகளையும் மறுஆய்வு செய்து ஒரு விரிவான அறிக்கையை அளிக்க உள்ளது. இவ்வறிக்கை இருநாடுகளுக்கிடையேயான உறவுகளை சீரமைப்பது பற்றியது ஆகும்.

5. சீனா - நேபாள நெருக்கம் அதிகரித்தல்

• நேபாளம் இந்தியாவுடன் நட்புறவை ஈடுகட்டுவதற்கு சீனாவுடனான நேபாள உறவுகள், இந்தியாவின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக உள்ளது. 

• சீனத் தரப்பில், திபெத்தின் பக்கத்திலிருந்து நேபாளத்திற்கு அதிக எண்ணிக்கைகளில் நெடுஞ்சாலைகள் கட்டப்பட்டு வருகிறது. நேபாளத்தின் அனைத்து கிழக்கு மேற்கு நெடுஞ்சாலை வழியின் கீழ் கட்டப்பட்டுள்ளது. 

• வெகு விரைவில் சீன அரசாங்கம் திபெத்திலிருந்த காத்மாண்டிற்கு ரயில் போக்குவரத்தை தொடர்வதற்கு தயார் செய்துகொண்டிருக்கிறது. 

• மேலும் ஒரு பாதை ஒரு சாலை முன்னெடுப்பில்" நேபாளம் தன்னை இணைத்துக் கொண்டுள்ளது. 

• நேபாள குழுமங்ளோடு சீனா, இந்திய விற்பனையாளர்களை சீர் கெடுக்கும் போட்டி மனப்பான்மையோடு பணி செய்து வருவது. இந்தியாவிற்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளது.


இடமாற்று மற்றும் போக்குவரத்து ஒப்பந்தம்

நேபாளமும், சீனாவும் இடமாற்று மற்றும் போக்குவரத்து ஒப்பந்தத்தை இறுதி செய்தது. இந்த ஒப்பந்தத்தின் மூலம் நேபாளம், சீனாவின் நான்கு துறைமுகங்களையும் மூன்று உட்பகுதி துறைமுகங்களையும் வாணிபத்திற்காக பயன்படுத்தவும். இதன் மூலம் இந்தியாவை சார்ந்திருப்பது குறைகிறது.


நிலத்தால் சூழப்பட்ட (பூட்டப்பட்ட) இமாலய பேரரசு, ஒரு மாற்று வர்த்தகப் பாதையைப் பெற்றது, ஆனால் அது உதவுமா?


• சீனா-நேபாளம் செய்துக் கொண்ட இடமாற்று மற்றும் போக்குவரத்து ஒப்பந்தத்தின்படி நேபாள நாட்டு வர்த்தகர்கள் ரயில், சாலை, துறை மற்றும் கடல் துறைமுகங்களைப் பயன்படுத்திக் கொள்ளமுடியும். 

• நேபாளத்தின் லாரிகள், நீண்ட சரக்கு லாரிகள் மற்றும் சிறியப் போக்குவரத்துக் கப்பல்கள் ஆகியவற்றில் திபெத்தின் "சியாக்ட்சே  "பகுதியிலிருந்து கொண்டுவர சீனா அனுமதியளிக்கிறது. 

• நேபாளம் சீனாவின் ஆறு சோதனைச் சாவடிகளைப் பயன்படுத்திக் கொள்ளமுடியும்.

சாலை வழித்தடை

• தொலைவு ஒரு முக்கிய சிக்கலாகும் நேபாளத்திலிருந்து சீனத்துறைமுகம் 2000 கி.மீக்கும் அப்பால் உள்ளது.

• சரியான சாலை வசதி மற்றும் சுங்கம் சார்ந்த உள்கட்டமைப்பு போன்றவை இல்லாமை நேபாளத்தின் பக்கம் இருக்கும் மிகப் பெரிய சவால் என வர்த்தகர்கள் கூறுகிறார்கள்.

• இம்மாதிரியான தரைவழி மற்றும் ரயில்வே சாலைகளும் நேபாளத்திற்கும் சீனாவிற்குமான உறவுகளை வலிமையாக்கி கொண்டு இந்தியாவுடனான உறவில் சீன-இந்திய எல்லையை சீரழிக்கின்றன.


நேபாளத்தை பொறுத்தவரையில் ஏன் இந்தியாவிற்கு மாற்றாக சீனா இருக்கமுடியாது? 

• புவி அமைப்பில் இந்தியாவின் இடம் சிறப்பு வாய்ந்ததாகவும் அருகருகே அமைந்துள்ளது. ஆனால் சீனாவின் துறைமுக பாதையோ (அல்லது) ரெயில் பாதையோ நேரடியாக நேபாளத்திற்கு வர இயலாத புவி அமைப்பு உள்ளது. 

• நேபாளம் உபயோகப்படுத்துகிற சீனாவின் துறைமுகம் 3000கி.மீ தொலைவில் உள்ளது. ஆனால் இந்தியாவின் கொல்கத்தா மற்றும் விசாகப்பட்டினம் துறைமுகங்கள் வெகு அருகருகே அமைந்துள்ளது. 


Tags : Current Issues, Political, Cultural relations, Areas of Cooperation, Challenges அரசியல் உறவுகள், தற்போதைய பிரச்சினைகள், கலாச்சார உறவுகள் , ஒத்துழைப்புக்கான பகுதிகள், சவால்கள்.
12th Political Science : Chapter 10 : India and It’s Neighbours : India - Nepal Relations Current Issues, Political, Cultural relations, Areas of Cooperation, Challenges in Tamil : 12th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 12 ஆம் வகுப்பு அரசியல் அறிவியல் : அத்தியாயம் 10 : இந்தியாவும் அண்டை நாடுகளும் : இந்திய-நேபாள உறவுகள் - அரசியல் உறவுகள், தற்போதைய பிரச்சினைகள், கலாச்சார உறவுகள் , ஒத்துழைப்புக்கான பகுதிகள், சவால்கள் : 12 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
12 ஆம் வகுப்பு அரசியல் அறிவியல் : அத்தியாயம் 10 : இந்தியாவும் அண்டை நாடுகளும்