Home | 12 ஆம் வகுப்பு | 12வது அரசியல் அறிவியல் | இந்திய-மியான்மர் உறவுகள்
   Posted On :  04.04.2022 02:31 am

12 ஆம் வகுப்பு அரசியல் அறிவியல் : அத்தியாயம் 10 : இந்தியாவும் அண்டை நாடுகளும்

இந்திய-மியான்மர் உறவுகள்

அனைத்து புத்த பர்மியர்களும் வாழ்வில் ஒருமுறை இந்தியாவில் அமைந்துள்ள புத்தகயாவில் பிரார்த்தனை செய்வதற்கு விரும்புகிறார்கள்.

இந்திய-மியான்மர் உறவுகள்


இந்தியாவிற்கும் மியான்மருக்குமான (முன்பு பர்மா) உறவுகளின் வரலாறு 2500 ஆண்டுகள் கொண்டதாகும். பர்மியர்கள் புத்தமதத்தின் தொடர்புகள் இந்தியாவையும் மியான்மரையும் இணைத்துள்ளது என்று நம்புகிறார்கள் ஸ்வேதகான் பகோடா என்கிற புகழ்பெற்றவர் கூற்றின்படி, கோவிலின் இதயப் பகுதி புத்தரின் முடி புதைந்த இடத்தில் உள்ளதாகவும். அவை இரண்டு பர்மா வியாபாரிகளுக்கு அன்பளிப்பகாக அளிக்கப்பட்டதாகவும் ஒரு நம்பிக்கை உள்ளது. இந்த நம்பிக்கையில் அசோகரை பர்மாவில் பகோடா வகை கட்டுமானத்தை நிறுவுவதற்கு தூண்டியதாகவும் புத்த மதம் பரவுவதற்கு காரணமாக இருந்ததாகவும் கூறப்படுகிறது.

அனைத்து புத்த பர்மியர்களும் வாழ்வில் ஒருமுறை இந்தியாவில் அமைந்துள்ள புத்தகயாவில் பிரார்த்தனை செய்வதற்கு விரும்புகிறார்கள். இரு நாடுகளும் சுதந்திரம் பெறுவதற்கு வெகு நாள்கள் முன்னதாகவே, அங்கு இருக்கக்கூடிய மீசோ, நாகா குக்கி, தங்குள், பைட்டே போன்ற குழுக்கள் குடும்ப ரீதியாகவும், மொழி, மத மற்றும் கலாச்சார ரீதியாகவும் உறவு பாராட்டினார்கள். பிரிட்டிஷ் அரசாங்கம் வந்த பிறகே இரு நாடுகளுக்கிடையே எல்லைகள் உருவாக்கப்பட்டு தனி நாடுகளாக உருப்பெற்றன.

இனக்கூறுகள்


பர்மாவின் பாதுகாப்பு என்பது இந்தியாவின் பாதுகாப்பு ஆகும். இதனால் இந்தியாவின் கவனமும் எல்லையின் மீது இருந்தாக வேண்டும். பர்மாவை பாதுகாப்பதைவிட வேறு எந்த ஒரு செயலும் இந்தியாவிற்கு முக்கியமில்லை என்று கூறுகிறார். --K. M. பணிக்கர்



அறிமுகம்

இந்தியா, பர்மாவுடன் 1600 கி.மீ நில எல்லையும் வங்காள விரிகுடாவில் கடல் எல்லையும் பகிர்ந்து காணப்படுகிறது. இந்தியாவின் நான்கு வடகிழக்கு மாநிலங்களான அருணாச்சலப் பிரதேசம், நாகலாந்து, மணிப்பூர் மற்றும் மிசோரம், மியான்மருடன் எல்லை பகிர்வு காணப்படுகிறது.

இந்த புவிப்பரப்பு அமைப்பின் இணைப்பானது இந்தியப் பெருங்கடலில் பெருமளவு இந்தியாவின் முக்கியத்துவத்தை உணர்த்துகிறது. மேலும் இரு நாடுகளும் பாரம்பரியம், மதம், மொழி மற்றும் இன ரீதியான இணைப்புகளையும் பெற்றுள்ளது.

மேலும் 'ஆசியான்' அமைப்பின் உறுப்பினராக மியான்மர் இந்தியாவின் அருகருகே இருப்பதால், தென் கிழக்கு ஆசியாவில் பெருமளவில் பொருளாதார ஒருமைப்பாடு ஏற்படுவதற்கு மியான்மர் உதவி செய்யும் என்று இந்தியா நம்புகிறது. இதற்காகவே உருவாக்கப்பட்ட "கிழக்கு நோக்கி கொள்கை" மற்றும் "கிழக்கு நோக்கி செயல்பாடு" போன்ற திட்டங்கள் பயன்படுத்தப்படுகின்றன. மியான்மரின் பொருளாதார மேம்பாட்டில் இந்தியாவிற்கு வர்த்தக வாய்ப்புகள் ஏராளமாகவும் அமைத்து காணப்படுகிறது.


1. இந்தியாவின் கிழக்கு நோக்கிய கொள்கை

இக்கொள்கையின் மூலம் இந்தியா தென் கிழக்கு ஆசியாவில் கலாச்சார, பொருளாதார மற்றும் பாதுகாப்பு உறவுகளை மேம்படுத்திக்கொள்ளவும் மண்டல சக்தியாக உருவாகவும், சீனாவிற்கு சிறந்த போட்டியாளராக முன்னேறவும் இந்தியா இராணுவம் சார்ந்த நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

இரு தேசிய நெடுஞ்சாலையும் மியான்மருடன் ஏனைய மற்ற தென் கிழக்கு மண்டலங்களுடன் இணைவதற்கு ஏதுவாக அமைந்துள்ளது.


2. இந்தியா-மியான்மர் - தாய்லாந்து நெடுஞ்சாலை நட்புறவு


இந்தியாவும் மியான்மரும், 3200 கி.மீ தொலைவில் உள்ள நான்கு வழிச்சாலை அமைப்பதற்கும், இந்தியா-மியான்மர் மற்றும் தாய்லாந்தை இணைக்கவும் நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளன. இப்பாதை திட்டம் மூலம் வட கிழக்கு பகுதிகளின் வழியாக 1600 கி.மீ நீளத்துக்கு சாலைகள் அமைக்கப்படும். ஏப்ரல் 2021இல் இத்திட்டம் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


3. வட கிழக்கு அணுகுமுறை


காலதான் பல்-அடுக்கு இடமாற்று போக்குவரத்துத்திட்டத்தின்படி,கொல்கத்தாவின் கிழக்கு துறைமுகத்தையும், மியான்மரின் சிட்வி துறைமுகத்தையும் இணைக்கும்படி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மியான்மரின் சிட்வி துறைமுகத்திலிருந்து லேஸ்யோவிற்கு ஆறு வழியாகவும் பின் லேஸ்யோவிலிருந்து மிசோரத்திற்கு தரை வழி போக்குவரத்தும் மேற்கொள்ளப்பட்டது.


இந்தியா-மியான்மர் உறவுகளின் பல்வேறு அம்சங்கள் 

தற்காப்பு மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பு 

1. பல ஆண்டுகளாக இவ்வகை நட்புறவு வலிமைப்பெற்று வருகிறது. உயர் மட்ட அரசாங்க நிர்வாக சந்திப்புகள் எல்லை ஒத்துழைப்பு உடன்படிக்கைகள், பயிற்சி, தரைப்படை, விமானம் மற்றும் கப்பற்படை உயரதிகாரிகளுடன் பேச்சுவார்த்தைகள் போன்ற நிகழ்வுகள் குறிப்பிட்டு விளங்குகின்றன. 

2. மேலும் மியான்மர் தன்னுடைய மண்ணை எக்காரணம் கொண்டும் இந்திய எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு இடம் அளிக்காமல் இருப்பதற்கு உத்திரவாதம் அளித்துள்ளது. 


வர்த்தக ஒத்துழைப்பு 

1. 1970-களில் இரு நாடுகளுக்கிடையே வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்திடப் பட்டுள்ளது. 

2. மியான்மரின் ஐந்தாவது பெரிய வர்த்தக பங்குதாரராக இந்தியா விளங்குகிறது. 

3. இந்தியாவில் ஏற்றுமதியானது சர்க்கரை (424 மில்லியன் டாலர்) மருந்து பொருள்கள் (184 மில்லியன் டாலர்) போன்றவை உள்ளடக்கியது. மோரே மற்றும் சாவ்காதர் வழியாக எல்லை வர்த்தகம் (87.89 மில்லியன் டாலர்)களை எட்டியது. 

4. மியான்மரின் முதலீட்டாளர்களில் இந்தியா பத்தாவது இடத்தில் நின்று 740.64 மில்லியன் அமெரிக்கா டாலர்களை முதலீடு செய்துள்ளது.

5. பெருமளவில் முதலீட்டாளர்கள் எண்ணெய் மற்றும் எரிவாயு துறைகளிலேயே தங்கள் முதலீடுகளை அமைத்துள்ளனர். மியான்மரில் முதலீடு செய்வதற்கு இந்திய நிறுவனங்கள் போட்டி போட்டு கொண்டு பல்வேறு ஒப்பந்தங்களை கையெழுத்திட்டுள்ளன. 

6. வெகு சாதாரண வர்த்தகத்திலிருந்து, இரு நாடுகளும் நில எல்லையில் தங்கள் பொருள்களை விற்பதற்கும் வாங்குவதற்குமான நடவடிக்கைகளிலும் இறங்கியுள்ளன. வங்கி துறையில் கூட்டுறவு, முதலீட்டிற்கும், வர்த்தகத்திற்கும் முக்கியமானதாக அமைகிறது. யுனைட்டெட் இந்திய வங்கி (United Bank of India) மியான்மரின் வங்கிகளான எம்.எப்.டி.ஆர் (MFTR), எம்.ஐ.சி.பி (MICB), எம்.இ.பி (MEB) மற்றும் ஒன்பது தனியார் வங்கிகளுடன் இரு நாடுகளின் வர்த்தக வளர்ச்சிக்காக ஒப்பந்தம் செய்துள்ளது. 

7. ஏனைய நாடுகளுடனான ஆற்றல் தொடர்பான உறவுகளுக்கு மியான்மருடனான கூட்டணி முக்கியமானதாகும். எடுத்துக்காட்டாக பெட்ரோல் மற்றும் இயற்கை வாயு தொடர்பான துறைகளாகும். 


கலாச்சார உறவுகள்

இந்தியாவும் மியான்மரும் நெருங்கிய கலாச்சார உறவுகளையும், புத்த சமய பாரம்பரியத்தையும் தழுவிய பண்பாட்டையும் கொண்டுள்ளன. 

1. பாகனில் உள்ள ஆனந்தா கோவிலை மறுசீரமைப்பது. 

2. இந்திய அரசாங்கத்தின் அன்பளிப்பாக அளிக்கப்பட்ட 16 அடி நீளமுள்ள புத்த சிலை (சாரநாத் மாதிரி) யாங்கூனில் உள்ள ஷீவெடககோன் பகோடவில் நிலை நிறுத்தப்பட்டது. 

3. "சம்வட்-II" என்ற பல்வேறு நம்பிக்கைகள், பண்பாடுகள் பற்றிய பேச்சு வார்த்தையை யாங்கூனில் ஆகஸ்ட் 6-7 2017 இல் நடத்தியது.

மியான்மரின் மன்னர்கள் மிண்டான் மற்றும் பாகியதா கட்டிய இரு கோவில்களை புத்த கயாவில் சீரமைப்பது பற்றிய பர்மாவின் விருப்பத்திற்கு இசைந்து கொடுத்தது. இந்த கோவில்களும் அதன் கல்வெட்டுகளும் இந்தியாவின் தொல்லியல் ஆராய்ச்சி துறையின் உதவியோடு மீட்டெடுப்பது இரு நாடுகளின் கொள்கைத் திட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 


இந்திய புலம்பெயர்ந்தவர்கள்

1. மியான்மரில், இந்தியர்களின் வருகையின் ஆரம்பம் 19ஆம் நூற்றாண்டின் மத்தியிலே பிரிட்டிஷ் அரசாங்கம் பர்மாவை 1852இல் ஆண்ட போது தொடங்கியது.

2. இரு நகரங்களான யாங்கூன் மற்றும் மண்டலேயில் இந்திய மக்கள் குடிமைப்பணிகள், வர்த்தகம், வாணிபம் போன்ற துறைகளில் வளர்ச்சியடைந்து இருந்தனர். 


இரு நாடுகளிக்கிடையேயான மண்டல மற்றும் துணை மண்டல ஒத்துழைப்பு 

ஆசியான் (ASEAN): இந்தியாவுடன் எல்லையை பகிர்ந்து கொள்ளும் ஒரே ஏசியான் நாடு மியான்மர் ஆகும். இந்தியாவிற்கும் ஆசியன் அமைப்பிற்கும் ஒரு பாலமாகவே செயல்படுகிறது. 

பிம்ஸ்டெக் (BIMSTEC): பிம்ஸ்டெக் அமைப்பின் சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தில் மியான்மர் கையெழுத்திட்டுள்ளது. ஆற்றல் துறையில், மியான்மர் முன்னோடியாக திகழ்கிறது. பிம்ஸ்டெக் அமைப்பில், மியான்மர் பெரும்பாலும் தாய்லாந்து மற்றும் இந்தியாவுடன் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடுகிறது. மியான்மரின் இந்திய ஏற்றுமதி பொருள்களாக பருப்பு வகைகள், சோளம், பீன்ஸ் மற்றும் வன உற்பத்திகளான தேக்கு, கடின மர வகைகள் போன்றவை உள்ளடக்கம். இந்தியாவிலிருந்து மியான்மர் ரசாயன பொருள்கள், மருந்துகள், மின்சார உபகரணங்கள் மற்றும் போக்குவரத்து சாதனங்கள் ஆகியவை இறக்குமதி செய்கிறது. 

மீகாங்-கங்கா ஒத்துழைப்பு: மீகாங்-கங்கா ஒத்துழைப்பு திட்டத்தில் உறுப்பினராக, இவ்வமைப்பு ஆரம்பித்த 2000ஆம் ஆண்டு முதல் மியான்மர் செயல்படுகிறது. இவ்வமைப்பு, இந்தியாவை மட்டுமல்லாமல் ஐந்து ஆசியன் நாடுகளான கம்போடியா, லாவோஸ், மியான்மர், தாய்லாந்து மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளை உள்ளடக்கி சுற்றுலா, கல்வி, கலாச்சாரம், போக்குவரத்து மற்றும் தகவல் பரிமாற்றம் போன்ற துறைகளில் நல்லுறவு ஏற்படுத்தும் பொருட்டு உண்டாக்கப்பட்ட அமைப்பாகும். இவ்வமைப்பின் தலைவர் பதவியானது ஆங்கில அகர வரிசையின்படி மேற்கொள்ளப்படுகிறது.

சார்க் (SAARC): ஆகஸ்ட் 2008இல் மியான்மருக்கு சார்க் அமைப்பு பார்வையாளர் அந்தஸ்தை அளித்தது. 

1. இந்தியாவில் மியான்மரை "கிழக்கின் நுழைவாயில்" என்று அழைக்கிறோம். ஆனாலும் இரு நாடுகளின் உறவுகளை பார்க்கிறபோது கடக்கக்கூடிய தூரங்கள் நிறையவே இருப்பதாக தெரிகிறது. நீண்ட நிலம் மற்றும் கடல் நீர் எல்லைகளை கொண்டிருப்பதால் புவியியல் அமைப்பை இரு நாடுகளும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். 

2. வரலாற்று ரீதியாக, மியான்மர் நாட்டின் சமூக-பொருளாதார காரணங்களை நிர்ணயிக்கூடிய நாடாக இந்தியா 1960 வரை இருந்தது. இராணுவ சர்வதிகாரத்துவ ஆட்சியும், அதன் பொருளாதார திட்டங்களும் இந்தியாவுடனான மியான்மரின் நட்பை சீர்க்குலைக்க துவங்கியது. 

3. அரசியல் மாற்ற நிகழ்வுகளால் தற்போதைய காலக்கட்டம் இந்தியாவிற்கு மிகச் சிறந்த வாய்ப்பை அளித்துள்ளதால் மியான்மருடனான உறவுகளை புதுப்பிப்பதற்கு தகுந்த நேரமாகும். 


12th Political Science : Chapter 10 : India and It’s Neighbours : India - Myanmar Relations in Tamil : 12th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 12 ஆம் வகுப்பு அரசியல் அறிவியல் : அத்தியாயம் 10 : இந்தியாவும் அண்டை நாடுகளும் : இந்திய-மியான்மர் உறவுகள் - : 12 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
12 ஆம் வகுப்பு அரசியல் அறிவியல் : அத்தியாயம் 10 : இந்தியாவும் அண்டை நாடுகளும்