இயல் 2 | 11 ஆம் வகுப்பு தமிழ் - இலக்கணம்: புணர்ச்சி விதிகள் | 11th Tamil : Chapter 2 : Maamalai potrutum
இயல் 2
இனிக்கும் இலக்கணம்
புணர்ச்சி விதிகள்
சொற்புணர்ச்சியின்போது நிலைமொழி இறுதியிலும் வருமொழி முதலிலும் ஏற்படும் மாற்றங்களைச் சுருங்கச் சொல்லும் வரையறைகளைப் புணர்ச்சி விதிகன் என்பர். மொழியைப் பிழையின்றிக் கையாளவும் பாடலடிகளைப் பொருள் உணர்வுக்கு ஏற்ற வகையில் பிரித்தறியவும் மொழி ஆளுமையைப் புரிந்துகொள்ளவும் இப்புணர்ச்சி விதிகள் பயன்படுகின்றன.
உயிரீற்றுப் புணர்ச்சி
அ) உடம்படுமெய்ப் புணர்ச்சி
நிலைமொழியின் இறுதி எழுத்தும் வருமொழியின் முதலெழுத்தும் உயிரெழுத்துகளாய் இருந்தால், உச்சரிப்பின்போது ஒலி உடன்பாடு இல்லாமல் இடைவெளி ஏற்படும். எனவே. உடன்படாத அவ்விரு மொழிகளையும் சேர்த்துப் புணர்க்க வரும் மெய், உடம்படுமெய் ஆகும். பதினெட்டு மெய்களுன் ய், வ் ஆகிய இரு மெய்கள் மட்டும் உடம்படுமெய்களாக வரும்.
காட்சியழகு -
காட்சி +
ய் +
அழகு (இகர ஈறு)
தீயணைப்பான் –
தீ +
ய் +
அணைப்பான் (ஈகார ஈறு )
கலையறிவு -
கலை +
ய் +
அறிவு (ஐகார ஈறு)
மாவிலை -
மா +
வ் +
இலை (ஆகார ஈறு)
பூவழகு -
பூ +
வ் +
அழகு ( ஊகார ஈறு )
சேயிழை -
சே +
ய் +
இழை
சேவடி -
சே +
வ் +
அடி –
(ஏகார ஈறு யகர, வகர உடம்படுமெய்கள் பெற்று வருகின்றன)
ஆ) குற்றியலுகரப் புணர்ச்சி
i) குற்றியலுகரச் சொற்களில் நிலைமொழியின் இறுதியில் உள்ள குற்றியலுகரம் வருமொழியின் முதலில் உள்ள உயிரெழுத்துடன் புணரும்போது, தான் ஏறிய மெய்யை நிறுத்தி உகரம் மறையும். பின் நிலைமொழி இறுதியில் உள்ள மெய், வருமொழி முதலெழுத்தாகிய உயிரெழுத்துடன் புணரும்.
மாசற்றார் மாசு +
அற்றார்
மாசு(ச்+உ) + அற்றார் -
'உயிர்வரின் உக்குறன் மெய்விட்டு ஓடும்' என்னும் விதிப்படி 'உ'மறைந்தது.
மாச் +
அற்றார் -
'உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே என்னும் விதிப்படி 'மாசற்றார்' எனப் புணர்ந்தது.
உயிர்வரின் உக்குறள் மெய்விட்டு ஓடும் ( நன்னூல்-164
)
ii) ட், ற் என்னும் இரு மெய்களோடு ஊர்ந்துவரும் நெடில்தொடர், உயிர்த்தொடர்க் குற்றியலுகரங்கள் வருமொழியோடு சேரும்போது ஒற்று இரட்டித்துப் புணரும்.
வீடு +
தோட்டம் - வீட்டு +
தோட்டம் - வீட்டுத்தோட்டம்
காடு +
மரம் - காட்டு மரம்
முரடு +
காளை - முரட்டு +
காளை - முரட்டுக்காளை
பகடு +
வாழ்க்கை - பகட்டுவாழ்க்கை
சோறு +
பானை - சோற்று +
பானை - சோற்றுப்பாணை
ஆறு +
நீர் - ஆற்றுநீர்
வயிறு +
பசி - வயிற்று +
பசி - வயிற்றுப்பசி
கயிறு +
வண்டி - கயிற்றுவண்டி
நெடிலோடு உயிர்த்தொடர்க் குற்றுகரங்களுள்
டறஒற்று இரட்டும் வேற்றுமை மிகவே. (நன்னூல்-183)
இ) முற்றியலுகரப் புணர்ச்சி
நிலைமொழியின் இறுதியில் உள்ள முற்றியலுகரமும் குற்றியலுகரத்தைப் போலவே தான் ஏறிய மெய்யை நிறுத்தி உகரம் மறையும். பின் நிலைமொழி இறுதியில் உள்ள மெய் வருமொழி முதலெழுத்தாகிய உயிரெழுத்துடன் புணரும்.
வரவறிந்தான் – வரவு + அறிந்தான்
வரவு (வ் +உ) + அறிந்தான் -
'முற்றும் அற்று ஒரோவழி' என்னும் விதிப்படி 'உ' மறைந்தது.
வரவ் +
அறிந்தான் -
'உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே' என்னும் விதிப்படி 'வரவறிந்தான்"
எனப் புணர்ந்தது.
முற்றும் அற்று ஒரோவழி (நன்னூல்-164)
ஈ) இயல்பீறு, விதியீறு - புணர்ச்சி
இயல்பீராகவோ விதியீறாகவோ வரும் நிலைமொழியின் இறுதியில் நிற்கும் உயிரெழுத்துடன், கசதப என்னும் வல்லின மெய்களை முதலில்கொண்ட வருமொழிச்சொல் சேரும்போது அவற்றிடையே வல்லொற்று மிகுந்து புணரும்.
இயல்பீறு என்பது இயல்பாக நிற்கும் சொல்லின் வடிவம்
பள்ளி +
தோழன் -
பள்ளித்தோழன்
விதியீறு என்பது புணர்ந்தபின் நிற்கும் சொல்லின் வடிவம்
நிலம் +
தலைவர் -
நில +
தலைவர் (
விதியீறு )
- நிலத்தலைவர்
திரைப்படம் -
திரை +
படம்
திரை +
ப் +
படம் -
'இயல்பினும் விதியினும் நின்ற உயிர்முன் க ச த ப மிகும் 'என்னும் விதிப்படி' திரைப்படம்'எனப் புணர்ந்தது.
மரக்கலம் - மரம் +
கலம் –
மவ்வீறு ஒற்றழிந்து உயிரிறு துப்பவும் என்னும் விதியின்படி
மர +
கலம் -
'இயல்பினும் விதியினும் நின்ற உயிர்முன் கசதப மிகும்' என்னும் விதிப்படி 'மரக்கலம்' எனப் புணர்ந்தது.
இயல்பினும் விதியினும் நின்ற க ச த ப மிகும்; விதவாதன மன்னே. (நன்னூல்-165)
உ) பூப்பெயர்ப் புணர்ச்சி
பூ என்னும் சொல் நிலைமொழியாய் நிற்க வருமொழியின் முதலில் வல்லின மெய்யெழுத்துகள் வரும்போது வல்லினமெய் மிகுந்து புணர்வது மட்டுமன்றி, அவற்றிற்கு இனமான மெல்லின மெய் மிகுதலும் உண்டு. எனினும், மெல்லின மெய் மிகுதலே பெருவழக்காக உள்ளது.
பூ +
கொடி -
பூக்கொடி, பூங்கொடி
பூ +
சோலை -
பூச்சோலை, பூஞ்சோலை
பூ +
தொட்டி -
பூத்தொட்டி, பூந்தொட்டி
பூ +
பந்து -
பூப்பந்து, பூம்பந்து
பூப்பெயர் முன் இனமென்மையுந் தோன்றும் (நன்னூல்-200]
ஊ) மெய்யீற்றுப் புணர்ச்சி
நிலைமொழியீற்றின் இறுதி எழுத்து, மெய்யெழுத்தாக நிற்க வருமொழியின் முதலாக வரும் உயிரெழுத்துடனும் மெய்யெழுத்துடனும் சேரும் புணர்ச்சியை மெய்யீற்றுப் புணர்ச்சி என்பர்.
வாயொலி -
வாய் +
ஒலி -
'உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே என்னும் விதிப்படி 'வாயொலி' எனப் புணர்ந்தது.
உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே (நன்னூல் -
204)
மண் +
மகள் -
மண்மகள் என்பதில் நிலைமொழி இறுதியும் வருமொழி முதலும் மெய்யெழுத்தாக நிற்க இயல்பாகப் புணர்ந்தது.
எ) தனிக்குறில்முன் ஒற்று - புணர்ச்சி
நிலைமொழி தனிக்குறில் சார்ந்த மெய்யெழுத்தாக நின்று, வருமொழியின் முதல் உயிரெழுத்தாக இருப்பின் நிலைமொழி ஒற்று இரட்டிக்கும்.
கல் +
அதர் -
கல்லதர் -
தனிக்குறில்முன் ஒற்று உயிர்வரின் இரட்டும்
கல்ல் +
அதர் -
உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே என்னும் விதிப்படி கல்லதர் எனப் புணர்ந்தது.
தனிக்குறில்முன் ஒற்று உயிர்வரின் இரட்டும் (நன்னூல்205)
ஏ) மகர ஈற்றுப் புணர்ச்சி
நிலைமொழிச் சொல்லின் இறுதி எழுத்தாக மகரமெய் வரும்போது, அச்சொல் மூன்று நிலைகளில் புணரும்.
● மகரமெய் கெட்டுப் புணரும்
● மகரமெய் கெட்டு தின மெல்லெழுத்துத் தோன்றிப் புணரும்.
● மகரமெய் கெட்டு வல்லினம் மிக்குப் புணரும்.
பாடம் +
வேளை -
பாடவேளை -
மகரமெய் கெட்டுப் புணர்ந்தது.
பழம் +
தோல் -
பழ +
தோல் -
பழத்தோல்
- மகரமெய் கெட்டு வல்லினம் மிக்குப் புணர்ந்தது.
காலம் +
கடந்தவன் -
காலங்கடந்தவன்
- வருமொழி முதலெழுத்துக்கேற்ப மகரமெய் திரிந்து புணர்ந்தது.
மவ்வீறு ஒற்றழிந்து உயிரீறு ஒப்பவும்
வன்மைக்கு இனமாத் திரிபவும் ஆகும் (நன்னூல்-219)
ஐ) பண்புப்பெயர்ப் புணர்ச்சி
பண்புப்பெயர்ச்சொல் நிலைமொழிச் சொல்லாக நின்று வருமொழிச்சொல்லுடன் புணரும்போது பின்வரும் மாற்றங்களை அடையும்.
1. நிலைமொழியின் இறுதியில் உள்ள மை கெட்டுப் புணரும்.
பெருவழி -
பெருமை +
வழி -
'ஈறுபோதல்' விதிப்படி 'மை' விகுதி கெட்டுப் பெருவழி எனப் புணர்ந்தது.
2. மை விகுதி கெட்டு நிலைமொழிச் சொல்லின் இறுதியில் உள்ள உகரம் இகரமாகத் திரியும்.
பெரியன் -
பெருமை +
அன்
பெரு +
அன் -
ஈறுபோதல்
பெரி +
அன் -
இடை உகரம் இய்யாதல்
பெரி +
ய் +
அன் -
உடம்படுமெய் 'ய்' இடையில் தோன்றும்
பெரியன் -
(ய்+அ) உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே.
3. மை விகுதி கெட்டு நிலைமொழிச் சொல்லின் முதலில் உள்ள குறில் எழுத்து நெடில் எழுத்தாய் மாறும்.
மூதூர் -
முதுமை +
ஊர்
முது +
ஊர் -
ஈறுபோதல்
மூது +
ஊர் -
ஆதிநீடல்
மூத் +
ஊர் -
உயிர்வரின் உக்குறள் மெய்விட்டு ஓடும்
மூதூர் -
(த்+ஊ) உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே
4. மை விகுதி கெட்டு நிலைமொழிச் சொல்லின் முதலில் உள்ள அகரம் ஐகாரமாக மாறும்.
பைந்தமிழ் -
பசுமை +
தமிழ்
பசு +
தமிழ் -
ஈறுபோதல்
பைசு +
தமிழ் -
அடி அகரம் ‘ஐ’ ஆதல்
பை +
தமிழ் இனையவும் 'சு' கெட்டது
பைந்தமிழ் -
(ந்) இனமிகல் என்னும் விதிப்படி.
5. மை விகுதி கெட்டு நிலைமொழிச் சொல் ஒற்று இரட்டிக்கும்.
நெட்டிலை -
நெடுமை +
இலை
நெடு +
இலை -
ஈறுபோதல்
நெட்டு +
இலை -
தன்னொற்றிரட்டல்
நெட்ட் +
இலை -
உயிர்வரின் உக்குறள் மெய்விட்டு ஓடும்
நெட்டிலை -
(ட்+இ) உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே
பண்புப்பெயர்ப் புணர்ச்சியில் தன்னொற்றிரட்டல் என்னும் விதியைப் பயன்படுத்த வேண்டும்.
வெற்றிலை -
வெறுமை +
இலை -
வெற்று +
இலை -
வெற்றிலை எனப் புணர்ந்தது.
6. ஈறுபோதல் விதியின்படி மை செட்டு நிலைமொழியின் இறுதி எழுத்து மகர மெய்யாக இருந்தால் "முன் நின்ற மெய் திரிதல்' விதியின்படி புணரும்.
செந்தமிழ் செம்மை +
தமிழ்
செம் +
தமிழ் -
ஈறுபோதல்
செம் +
தமிழ் -
(ம்-ந்) முன் நின்ற மெய் திரிதல்
7. ஈறுபோதல் விதியின்படி மைவிகுதி கெட்டு, நிலைமொழியின் இறுதி எழுத்து உயிரெழுத்தாய் இருந்து வருமொழி வல்லின மெய்யாக இருப்பின் "இனமிகல்'விதியின்படி புணரும்.
கருங்கடல் -
கருமை +
கடல்
கரு +
கடல் -
ஈறுபோதல்
கரு +
கடல் -
(ங்) இனமிகல்
8. மை விகுதி கெட்டு நிற்கும் நிலைமொழியின் இறுதி எழுத்து மேற்சொன்ன எவ்விதியிலும் பொருந்தாதிருப்பின் இனையவும் என்னும் விதியைப் பயன்படுத்த வேண்டும்.
பைந்தளிர் -
பசுமை +
தளிர்
பசு +
தளிர் -
ஈறுபோதல்
பைசு +
தளிர் -
அடி அகரம் 'ஐ' ஆதல்
பை +
தளிர் - இனையவும்
பை +
தளிர் -
(ந்) இனமிகல்
ஈறு போதல் இடைஉகரம் இய்யாதல்
ஆதி நீடல் அடிஅகரம் ஐ ஆதல்
தன்னொற்று இரட்டல் முன்நின்ற மெய்திரிதல்
இனம் மிகல் இனையவும் பண்பிற்கு இயல்பே (நன்னூல்-136)