பிரமிள் | இயல் 2 | 11 ஆம் வகுப்பு தமிழ் - செய்யுள் கவிதைப்பேழை: காவியம் | 11th Tamil : Chapter 2 : Maamalai potrutum
இயல் 2
கவிதைப்பேழை
காவியம்
நுழையும்முன்
இறகுகளின் தொகுதியைச் சிறகு என்பர். சிறகிலிருந்து பிரிந்த இறகு, நிலத்துக்கும் வானுக்கும் இடைப்பட்ட பகுதியில் நிகழும் காற்றின் தீராத தழுவல்களால் மண்ணில் வீழாறு தன் வாழ்வை எழுதுகிறது. வாழ்வு என்பது காவியத்துக்கான பொதுவான பாடுபொருள்.
சிறகிலிருந்து பிரிந்த
இறகு ஒன்று
காற்றின் தீராத பக்கங்களில்
ஒரு பறவையின் வாழ்வை
எழுதிச் செல்கிறது.*
- பிரமிள்
நூல்வெளி
பிரமிள் என்ற பெயரில் எழுதிய சிவராமலிங்கம், இலங்கையில் பிறந்தவர். இவர் பானுசந்திரன், அரூப் சிவராம், தருமு சிவராம் போன்ற பல புனைபெயர்களில் எழுதியவர். புதுக்கவிதை, விமர்சனம், சிறுகதை, நாடகம், மொழியாக்கம் என விரிந்த தளத்தில் இயங்கியவர். ஓவியம், சிற்பம் ஆகியவற்றிலும் ஈடுபாடு கொண்டிருந்தார். இவருடைய கவிதைகள் முழுமையாகப் பிரமிள் கவிதைகள் என்ற பெயரில் தொகுக்கப்பட்டுள்ளன. லங்காபுரி ராஜா உள்ளிட்ட சிறுகதைத் தொகுப்புகளும் நக்ஷத்திரவாசி என்னும் நாடகமும் வெயிலும் நிழலும் உள்ளிட்ட கட்டுரைத் தொகுப்புகளும் வெளிவந்துள்ளன.