முதல் பருவம் அலகு 3 | 7 ஆம் வகுப்பு அறிவியல் - நம்மைச் சுற்றியுள்ள பருப்பொருள்கள் | 7th Science : Term 1 Unit 3 : Matter Around Us
அலகு 3
நம்மைச் சுற்றியுள்ள பருப்பொருள்கள்
தனிமங்கள், சேர்மங்கள் மற்றும் கலவைகள்
கற்றல் நோக்கங்கள்
இப்பாடத்தைக் கற்றபின் மாணவர்கள் பெறும் திறன்களாவன:
* தனிமங்கள் மற்றும் சேர்மங்களின் மூலக்கூறுகளை அறிந்து கொள்ளல்.
* பொதுவான தனிமங்களின் குறியீடுகளை எழுதுதல்.
* பொதுவாகப் பயன்படுத்தப்படும் தனிமங்களின் அணுக்கட்டு எண்ணைக் கணக்கிடுதல்.
* இயற்கை, மனித உடல் மற்றும் காற்றில் காணப்படும் தனிமங்கள் மற்றும் சேர்மங்களைப் பற்றி அறிதல்.
* திண்மம், திரவம் மற்றும் வாயுவில் வெப்பத்தினால் ஏற்படும் விளைவுகளைப் புரிந்து கொள்ளல்.
அறிமுகம்
இடத்தை அடைத்துக் கொள்வதும், நிறையை உடையதுமாகிய பொருள்கள் அனைத்தும் பருப்பொருள்கள் எனப்படுகின்றன என்பதை நாம் அறிவோம். பருப்பொருள்கள் எதனால் ஆக்கப்பட்டுள்ளன என உங்களுக்குத் தெரியுமா? பருப்பொருள்கள் அனைத்தும் வெறும் கண்களால் பார்க்க இயலாத மிக நுண்ணிய துகள்களால் ஆனவை என ஏற்கனவே நாம் படித்திருக்கின்றோம். அத்துகளே அணு எனப்படுகிறது. இப்பாடத்தில் அணுக்கள், மூலக்கூறுகள், தனிமங்கள், சேர்மங்கள், வேதி வாய்ப்பாடு மற்றும் அணுக்கட்டு எண் ஆகியவற்றைப் பற்றி பார்க்க இருக்கிறோம்.