தொழிற்புரட்சி | வரலாறு | சமூக அறிவியல் - கீழ்க்கண்ட வினாக்களுக்கு விரிவான விடையளி | 9th Social Science : History: Industrial Revolution
VI. விரிவாக விடையளிக்கவும்.
1.
அமெரிக்காவில்
இரண்டாவது
தொழிற்புரட்சி
நடைபெற்றதற்கான
காரணங்களை
வரிசைப்படுத்துக.
விடை:
அமெரிக்காவில் இரண்டாவது தொழிற்புரட்சி :
உடலுழைப்பிலிருந்து தொழில்நுட்பம், இயந்திரம் சார்ந்த உற்பத்திக்கு மாறுதல்:
• இங்கிலாந்தின் சாமுவேல் சிலேட்டர் ஓர் ஜவுளி ஆலையை நிர்வாகிக்கும் அளவுக்கு அனுபவம் பெற்றிருந்தார். புதிய தொழில் நுட்பங்களால் அமெரிக்கர்களின் ஆர்வத்தை கேள்விபட்டு 1789ல் அமெரிக்காவின் நியூயார்க்கில் சட்டவிரோதமாகக் குடியேறினார்.
• ரோட்ஸ் தீவின் மோசஸ் பிரேளன் ஜவுளி ஆலையில் வேலைவாய்ப்பு பெற்று 1793ல் ஆலையை இயக்க வைத்தார். அமெரிக்க நாடுகளில் நீராற்றலின் மூலம் இயங்கிய முதல் ஜவுளி ஆலை இதுவே. சிலேட்டரின் தொழில் நுட்பம் மேலும் மேலும் புகழடைந்து பல தொழில் முனைவோர்கள் துணி ஆலைகள் தொடங்கி வளமடைந்தனர். அமெரிக்க அதிபர் ஆண்ட்ரூ ஜாக்சன், சிலேட்டரை “அமெரிக்கத் தொழிற்புரட்சியின் தந்தை” எனப் புகழ்ந்தார்.
புதிய தொழில் நுட்பக் கண்டுபிடிப்புகள் உருவாக்குதல்:
• ராபர்ட் ஃபுல்டன் - நீராவிப் படகுப் போக்குவரத்து (ஹட்சன் நதியில்) சாமுவேல் மோர்ஸ் - தந்தி
அலெக்சாண்டர் கிரஹாம் பெல் - தொலைபேசி
எலியாஸ் ஹோவே - தையல் இயந்திரம்
தாமஸ் ஆல்வா எடிசன் - மின் விளக்கு
கண்டங்களை இணைக்கும் இரயில் பாதை அமைதல் :
• 1869ல் கண்டங்களை இணைக்கும் முதல் இரயில் பாதை அமைக்கப்பட்டது. இது மக்கள் போக்குவரத்து, சரக்குப் போக்குவரத்து, மூலப்பொருடகள் எடுத்து வருதல் ஆகியவற்றுக்குப் பயன்பட்டது.
அமெரிக்க அரசின் ஆதரவு :
• அமெரிக்க அரசு தொழில் வளர்ச்சியை ஆதரித்தது. ரயில் பாதைகள் அமைப்பதற்கான நிலங்கள் வழங்கியது.
ஏகபோகம்:
• முதல் கனரக எஃகு உற்பத்தி மிகப்பெரிய அளவில் ஆண்ட்ரு கார்னேகி என்பவரால் தொடங்கப்பட்டது. சுரங்கங்கள் உற்பத்தி ஆலைகள், வெப்ப உலைகள், ரயில் பாதைகள், கப்பல் போக்குவரத்து என ஒவ்வொன்றையும் விலைக்கு வாங்கி, எஃகு உற்பத்தியின் ஒவ்வொரு கட்டத்தையும் தனது ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வந்தார்,
• ஒரு கிராமப்புற சமூகமாகத் திகழ்ந்த அமெரிக்கா, நகர்புறப் சமூகமாக மாறுவதைத் தொழிற்புரட்சி விரைவுப் படுத்தியது.
2.
இங்கிலாந்தின்
தொழிற்புரட்சியினால்
இந்தியாவில்
ஏற்பட்ட
விளைவுகள்
யாவை?
விடை:
இந்தியாவில் தொழிற்புரட்சி தாக்கம்:
• 18 ஆம் நுற்றாண்டின் இடைபகுதிவரை இந்தியா வேளாண்மைக்காக மட்டுமல்லாமல் அதன் மிகச்சிறந்த உற்பத்திப் பொருள்களுக்காகவும் அறியப்பட்டிருந்தது.
• ஜான் கே என்பவரால் பறக்கும் நாடா கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து 30 ஆண்டுகளில் ஹர்கிரீவ்ஸ், ஆர்க்ரைட், கிராம்ப்டன் ஆகியோரின் கண்டுபிடிப்புகளினால் நூற்பு, நெசவுத் தொழில் ஆகியன பெரும் வளர்ச்சியடைந்தன. இதனால் இங்கிலாந்தில் குவிக்கப்பட்ட இந்தியப் பருத்தி இழைத் துணிகளுக்கும் பட்டு ஆடைகளுக்கும் தடைவிதித்தும் இங்கிலாந்தில் சட்டம் இயற்றப்பட்டது.
• வங்கத்து நெசவாளர்கள் பெரும் துன்பத்துக்கு ஆளாயினர். இங்கிலாந்தின் தொழிற்சாலைகளுக்குத் தேவைப்படும் வணிகப்பயிர்களை மட்டும் சாகுபடி செய்ய வற்புறுத்தினர்.
• கைத்தறி நெசவு, பருத்தி ஆடைகளுக்கான சந்தை இழப்பால் இந்தியா பண்டைய உற்பத்தித் துறையில் வகித்து வந்திருந்த இடத்தை இழந்து மூலப்பொருள்களை ஏற்றுமதி செய்யும் நாடாக மட்டுமே மாறியது.
• டாக்கா மஸ்லின் ஏற்றுமதி நிறுத்தப்பட்டது. கச்சாப் பருத்தி ஏற்றுமதியும் படிப்படியாகச் சரிந்தது.
• பிரிட்டன் உற்பத்தித் துணிகள் இந்தியச் சந்தைகளில் குறைவான விலைக்கு விற்கப்பட்டதால் இந்திய நெசவாளர்கள் வேலையற்றுத் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து உணவுக்கும் வழியற்றவர்களாயினர். பல லட்சம் மக்கள் பஞ்சத்தால் மடிந்தனர், பஞ்சத்தால் சாக விரும்பாத லட்சக்கணக்கானோர் (விவசாயிகள், கைவினைஞர்) தாய்நாட்டை விட்டு வெளியேறி, பிரிட்டிஷ் காலனி நாடுகளின் மலைத்தோட்டங்களில், மோசமான சூழல்களில் அடிமைகளாய், ஒப்பந்தக் கூலிகளாய் வாழ நேர்ந்தது.
வரலாற்றுடன் வலம் வருக
மாணவர் செயல்பாடுகள்
1.
தொழிற் புரட்சியின் சாதக, பாதக அம்சங்கள் குறித்து ஒரு பேச்சுப் போட்டி நடத்துக.
2.
துணி இழைகள், வடிவமைப்புகள் ஆகியவை இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் இடங்கள் பற்றிப் பட்டியல் தயார் செய்யவும்.
ஆசிரியரின் வழிகாட்டுதலுடன் செய்ய வேண்டியவை
1.
தொழிற்புரட்சியின் போது கண்டுபிடிக்கப்பட்டவை பற்றிய படங்களைச் சேகரிக்கவும்.
2.
பயன்படுத்தப்பட்ட கழிவு பிளாஸ்டிக்கைப் பயன்படுத்தி நவீன பிளாஸ்டிக் சாலைகள் அமைக்கப்படுவது குறித்து ஒரு கட்டுரை வரைக.
மேற்கோள் நூல்கள்
1.
Eric Hobsbawm, The Age of Revolution, 1789-1848, Phoenix Press, London, 1961.
2.
Eric Hobsbawm, Industry and Empire: The Birth of the Industrial Revolution, The
New Press, 1999.
3.
Peter N. Streams, The Industrial Revolution in World History, Routledge, 2018.
4. James E. Swain, A History of World Civilization,
Vols. I & II, McGraw Hill Book Co, 1947.)
5.
J.H. Nelson, The Madura Country: A Manual (1868)
6. A.J. Stuart, A Manual of the Tinnevelly
District in the Presidency of Madras (1879).
இணையச்செயல்பாடு
தொழிற்புரட்சி
ஊடாடும் காலவரிசையைப் பயன்படுத்தி உலக வரலாற்று நிகழ்வுகளை அறிவோமா!
படிநிலைகள்
படி-1
URL அல்லது QR குறியீட்டினைப் பயன்படுத்தி இச்செயல்பாட்டிற்கான இணையப்பக்கத்திற்குச் செல்க.
படி-2 தேடுபெட்டியில்" Industrial Revolution" என்று தட்டச்சு செய்யவும்
படி-3 தோன்றும் காலக்கோட்டுப் பக்கத்தினை முழுத்திரை வடிவமாக்கவும்
படி-4 காலவரிசை மற்றும் நிகழ்வுகள் காட்சிப்படங்களாகத் தோன்றும். அவற்றைச் சொடுக்கி வரலாற்று நிகழ்வுகளை அறியவும்.
உரலி:
https://www.timetoast.com/categories (or) scan the QR Code