Home | 10 ஆம் வகுப்பு | 10வது தமிழ் | கவிதைப்பேழை: சித்தாளு

நாகூர்ரூமி | இயல் 9 | 10 ஆம் வகுப்பு தமிழ் - கவிதைப்பேழை: சித்தாளு | 10th Tamil : Chapter 9 : Anbin mozhi

   Posted On :  22.07.2022 03:11 am

10 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 9 : அன்பின் மொழி

கவிதைப்பேழை: சித்தாளு

10 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 9 : அன்பின் மொழி : கவிதைப்பேழை: சித்தாளு - நாகூர்ரூமி | தமிழ்நாடு பள்ளி சமச்சீர் புத்தகங்கள்

மனிதம்

கவிதைப் பேழை

சித்தாளு

- நாகூர்குமி



நுழையும் முன்

வானுயர்ந்த கட்டடங்களைப் பார்த்து வியக்கிறோம். அதிசயம் என்றும் போற்றுகிறோம். அதை உருவாக்க உழைத்தவர், வியர்த்தவர், இடுப்பொடியப் பாடுபட்டவர்களை நினைத்ததுண்டா? அந்த ஏழைகளின் துயரை, ஏங்கிடும் அவர் வாழ்வை அவர்களின் பசிக்குறி முகங்களை நொடியேனும் நினைப்பதுண்டா? இன்னலிலே இருக்கும் தொழிலாளர்கள் நிலையைக் கவிஞர்கள் நினைக்கிறார்கள் தொழிலாளர்களின் மனச்சுமையை அறியாத செங்கற்களைப் போலவே இருக்கும் கல்மனங்களுக்குள் மனிதத்தைப் புதத்திவிடுகிறார்கள்.


பொற்காலமாக இருந்தாலும்

இவள் தலையில் எழுதியதோ

கற்காலம்தான் எப்போதும்.

தொலைந்ததே வாழ்வு என

தலையில் கைவைத்து

புலம்புவார் பூமியிலே

தன் வாழ்வு தொலைக்காமல்

தற்காத்து வைப்பதற்காய்

தலையில் கைவைக்கிறாள் இவன்.

வாழ்வில் தலைக்கனம்

பிடித்தவர் உண்டு.

தலைக்கனமே வாழ்வாக

ஆகிப்போனது இவளுக்கு.

அடுக்குமாடி அலுவலகம்

எதுவாயினும்

அடுத்தவர் கனவுக்காக

அலுக்காமல் இவள் சுமக்கும்

கற்களெல்லாம்

அடுத்தவேளை உணவுக்காக.

செத்தாலும் சிறிதளவே

சலனங்கள் ஏற்படுத்தும்

சித்தாளின் மனச்சுமைகள்

செங்கற்கள் அறியாது.

 

நூல் வெளி

முகம்மதுரஃபி என்னும் இயற்பெயரைக் கொண்ட நாகூர் ரூமி தஞ்சை மாவட்டத்தில் பிறந்தவர்; இவர் எண்பதுகளில் கணையாழி இதழில் எழுதத் தொடங்கியவர். கவிதை, குறுநாவல், சிறுகதை, மொழிபெயர்ப்பு எனப் பலதளங்களில் இவர் தொடர்ந்து இயங்கி வருபவர். மீட்சி, சுபமங்களா, புதிய பார்வை, குங்குமம், கொல்லிப்பாவை, இலக்கிய வெளிவட்டம், குமுதம் ஆகிய இதழ்களில் இவரது படைப்புகள் வெளியாகியுள்ளன. இதுவரை நதியின் கால்கள், ஏழாவது சுவை, சொல்லாத சொல் ஆகிய மூன்று கவிதைத் தொகுதிகள் வெளியாகியுள்ளன. மொழிபெயர்ப்புக் கவிதைகள், சிறுகதைத்தொகுதிகள் ஆகியவற்றுடன் 'கப்பலுக்குப் போன மச்சான்' என்னும் நாவலையும் படைத்துள்ளார்.

 

கற்பவை கற்றபின்...

மனிதநேயத்தை வெளிப்படுத்தும் புதுக்கவிதைகளைத் தொகுத்து வகுப்பறையில் படித்துக் காட்டுக.

 

Tags : by NakurRumi | Chapter 9 | 10th Tamil நாகூர்ரூமி | இயல் 9 | 10 ஆம் வகுப்பு தமிழ்.
10th Tamil : Chapter 9 : Anbin mozhi : Poem: Sithaalu by NakurRumi | Chapter 9 | 10th Tamil in Tamil : 10th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 10 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 9 : அன்பின் மொழி : கவிதைப்பேழை: சித்தாளு - நாகூர்ரூமி | இயல் 9 | 10 ஆம் வகுப்பு தமிழ் : 10 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
10 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 9 : அன்பின் மொழி