இயல் 9 | 10 ஆம் வகுப்பு தமிழ் - அன்பின் மொழி | 10th Tamil : Chapter 9 : Anbin mozhi
இயல் ஒன்பது
மனிதம், ஆளுமை
அன்பின் மொழி
கற்றல் நோக்கங்கள்
• மாற்றுச்சிந்தனைகள் சமூகத்தில் ஒருவரைத் தனித்து
அடையாளம் காட்டுவதை உணர்ந்து, அதுபோன்று சிந்திக்கும் ஆற்றலை
வளர்த்துக் கொள்ளுதல்.
• மனித மாண்புகளையும் விழுமியங்களையும்
வெளிப்படுத்தும் வாயில்களான இலக்கியங்களின் உட்பொருளை அறிய முற்படுதல்.
• நேர்த்தியும் செப்பமும் கொண்ட கதைகளை ஆர்வத்துடன்
படிக்கவும் எழுதவும் பழகுதல்.
• ஓர் ஆளுமையை மையமிட்ட கருத்துக்களைத் தொகுத்து
முறைப்படுத்திச் சீர்மையுடன் இதழ் வடிவில் வெளிப்படுத்தும் திறன் பெறுதல்.
• அணியிலக்கணக் கூறுகளைச் செய்யுளுடன் தொடர்புபடுத்தி
அதன் சுவையுணர்ந்து நயத்தல்.