இயல் 9 | 10 ஆம் வகுப்பு தமிழ் - மொழி அறிவு - கேள்விகள் மற்றும் பதில்கள் | 10th Tamil : Chapter 9 : Anbin mozhi
மொழியை ஆள்வோம்!
படித்து சுவைக்க.
"எழுத்தால், பேச்சால், ஆற்றலால்,
அறிவால், தொண்டால், பண்பால்,
பணியால், கனிவால் தமிழக வரலாற்றில் குறிக்கப்படும்படியான
அந்த அறிஞர் பெருமகனாரின் அருமைத் திருமுகத்தைக் கடைசியாகத் தரிசிக்க வழியெல்லாம் விழியெல்லாம்
நீர்தேக்கி ஊர்வலத்தைப் பார்க்கக் காத்திருந்த மக்கள் எத்தனை லட்சம் பேர்! அண்ணாவின் பொன்னுடலை நன்றாகத் தாங்கி வந்த பீரங்கி வண்டி தூரத்தில் வந்தபோதே
பொங்கிப் பொருமித் துடித்த உள்ளங்கள் எத்தனை எத்தனை லட்சம்! தமது
வாழ்வுக் காலத்தையே ஒரு சகாப்தமாக்கி முடித்துவிட்டுச் சென்ற அந்தப் பேரறிஞர்
திருமுகத்தைக் கண்டதும் குவிந்த கரங்கள் எத்தனை எத்தனை லட்சம்! கண்ணீரை அருவியாய்க் கொட்டிய கண்கள் எத்தனை எத்தனை லட்சம்! கண்ணுக்கு ஒளியாய்த் தமிழுக்குச் சுவையாய் மக்களுக்கு வாழ்வாய் அமைந்துவிட்ட
அந்தத் தலைவரின் இறுதிப் பயணம் சென்ற வழியெல்லாம் மலர் தூவி மாலைகளை வீசிய கரங்கள்
எத்தனை எத்தனை லட்சம்! அந்த அறிவுக் களஞ்சியத்தைத் தாங்கிய வண்டி
தங்களை விட்டு முன்னோக்கி நகர்ந்தபோது இதயத்தையே, உயிர்மூச்சையே
இழந்துவிட்டது போலக் கதறித் துடித்துத் தரையில் புரண்டு புரண்டு புழுவாய்த் துடித்தவர்கள்
எத்தனை லட்சம் பேர்கள்!”
மொழிபெயர்க்க.
1.
Education is what remains after one has forgotten what one has learned in
School. - Albert Einstein.
2.
Tomorrow is often the busiest day of the week. - Spanish Proverb
3.
It is during our darkest moments that we must focus to see the light. -
Aristotle
4.
Success is not final. failure is not fatal. It is the courage to continue that
counts. - Winston Churchill.
எ.கா:
1. பள்ளியில் கற்றபின் எது நமது நினைவில் நிற்கின்றதோ
அதுவே கல்வி - ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்
2. நாளையே இந்த வாரத்தின் மிகப் பரபரப்பான நாள்
- ஸ்பானீஷ் பழமொழி
3. நம் வாழ்வில் மிகவும் இருண்ட காலத்தில் தான் நாம்
அகவொளியைக் காண முற்பட வேண்டும் - அரிஸ்டாடில்
4. வெற்றி என்பது முடிவல்ல தோல்வி என்பது மரணமல்ல தொடர்ந்து
முனைகின்ற துணிவே கணக்கில் உள்ளது - வின்ஸ்டன் சர்ச்சில்.
உவமையைப் பயன்படுத்திச் சொற்றொடர் உருவாக்குக.
1. தாமரை இலை நீர் போல
என் நண்பன் தாமரை இலை நீர் போல பட்டும் படாமலும் பழகுவான்.
2. மழைமுகம் காணாப் பயிர்போல
தாயை இழந்த கருணையன் மழை முகம் காணாப் பயிர்போல வாடினான்.
3. கண்ணினைக் காக்கும் இமைபோல
காக்கை தன் குஞ்சுக் காக்கையை (பறவையை)
கண்ணினைக் காக்கும் இமைபோல காக்கும்.
4. சிலை மேல் எழுத்து போல
சிறு வயதில் கற்கும் அடிக்கருத்துகள் சிலை மேல் எழுத்து போல
மனதிலே நிலைத்து நின்று நம் வாழ்வை வழி நடத்தும்.
பொருத்தமான நிறுத்தற் குறியிடுக.
சேரர்களின் பட்டப் பெயர்களில் கொல்லி வெற்பன் மலையமான்
போன்றவை குறிப்பிடத்தக்கவை கொல்லி மலையை வென்றவன் கொல்லி வெற்பன் எனவும் பிற மலைப்பகுதிகளை
வென்றவர்கள் மலையமான் எனவும் பெயர் சூட்டிக்கொண்டனர் இதற்குச் சங்க இலக்கியத்தில் சான்றுகள்
உள்ளன.
சேரர்களின் பட்ட பெயர்களில் “கொல்லி வெற்பன்'', "மலையமான்" போன்றவை
குறிப்பிடத்தக்கவை. கொல்லி மலையை வென்றவன் கொல்லி வெற்பன் எனவும்,
பிற மலைப்பகுதிகளை வென்றவர்கள் மலையமான் எனவும் பெயர் சூட்டிக் கொண்டனர்.
இதற்குச் சங்க இலக்கியத்தில் சான்றுகள் உள்ளன.
வாழ்த்துரை எழுதுக.
உங்கள் பள்ளியில் நடைபெறும் நாட்டு நலப்பணித்திட்ட முகாமின் தொடக்க விழாவில் மாணவர்களுக்கு வாழ்த்துரை வழங்க உரை ஒன்றை உருவாக்கித்
தருக.
வாழ்த்துரை
அன்பார்ந்த மாணவர்களே! நாட்டு நலப்பணித்திட்ட தொடக்க விழாவில் உமக்கு வாழ்த்துரை
வழங்குவதில் பெருமை கொள்கிறேன்.
• மாணவப் பருவத்திலே உங்களுக்கு நாட்டுப்பற்று சமூக அக்கறை தொண்டுள்ளம்
ஆகியவற்றை வளர்ப்பதற்கே நலப்பணித் திட்ட முகாம் நடத்தப்படுகிறது.
• உங்கள் பள்ளியில் பயிலும் மற்ற மாணவர்களுக்குக் கிடைக்காத பெரிய வாய்ப்பை
இங்கு கூடியிருக்கின்ற நீவிர் பெற்றுள்ளீர்! அதற்காக
வாழ்த்துகிறேன்.
• இக்கிராமத்தை தத்தெடுத்து ஒரு வார காலம் தங்கியிருந்து இச்சிற்றூருக்குத்
தேவையான சில அறப்பணியைச் செய்துள்ளீர்.
• கோவில் வளாகம் சுத்தம் செய்தல் விழிப்புணர்வுக் கூட்டம் நடத்துதல் (சாலை பாதுகாப்பு நெகிழி ஒழிப்பு போன்றவை) போன்ற அரிய செயல்களைச் செய்யும் நீவிர் !
• நாளைய சமுதாயத்தின் விடி விளக்குகளாய் சமூக அக்கறை கொண்ட ஆர்வலர்களாய், மனிதநேயம் மிக்கவர்களாய் மாறுவீர்கள் என்பதில் ஐயமில்லை.
• இந்த நாட்டு நலப்பணித்திட்டம் நடைபெறும் நாட்கள் முழுவதும் முழுமனதுடன்
அதில் செயல்பட்டு இச்சமுதாயத்தின் செயல் வீரர்களாய் நீவீர திகழ வாழ்த்திப் பாராட்டி
மகிழ்கிறேன்.
(நன்றி)
குறுக்கெழுத்துப் போட்டி
இடமிருந்து வலம்
1.
சிறுபொழுதின் வகைகள் ஒன்று (2)
2.
நேர் நேர் - வாய்ப்பாடு (2)
11.
எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று (5)
14.
மக்களே போல்வர் ----------- (4)
வலமிருந்து இடம்
15.
மருந்தே ஆயினும் விருந்தோடு உண் - ஆசிரியர்
(4)
16.
மதிமுகம் உவமை எனில் முகமதி ------ (5)
மேலிருந்து கீழ் :
1.
முல்லைத் திணைக்குரிய பெரும்பொழுது (5)
2.
மொழிஞாயிறு (9)
3.
நல்ல என்னும் அடைமொழி கொண்ட தொகைநூல் - (5)
4.
கழை என்பதன் பொருள் (4)
7.
மதியின் மறுபெயர், இது நிலவையும் குறிக்கும்
(4)
10.
குறிஞ்சித் திணைக்குரிய விலங்கு ----- (4)
12.
--------- என்பது புறத்திணைகளுள் ஒன்று (4)
கீழிருந்து மேல்
5.
விடையின் வகைகள் (3)
6.
வீரமாமுனிவர் இயற்றிய நூல் (5)
8.
பிள்ளைத்தமிழின் இரண்டாம் பருவம் (4)
9.
முப்பால் பகுப்பு கொண்ட நூல்களுள் ஒன்று (6)
13.
மன்னனது உண்மையான புகழை எடுத்துக் கூறுவது (7)
17.
96 வகை சிற்றிலக்கிய வகைகள் ஒன்று (7)
18.
செய்தவம் - இலக்கணக்குறிப்பு (5)
விடை:
இடமிருந்து வலம்
1. காலை
2. தேமா
11. கலித்தொகை
14. கயவர்
வலமிருந்து இடம்
15. ஒளவையார்
16. உருவகம்
மேலிருந்து கீழ்
1. கார்காலம்
2. தேவநேயப்பாவாணர்
3. குறுந்தொகை
4. மூங்கில்
7. திங்கள்
10. சிங்கம்
12. கைக்கிளை
கீழிருந்து மேல்
5. எட்டு
6. தேம்பாவணி
8. செங்கீரை
9. திருக்குறள்
13. மெய்க்கீர்த்தி
17. பிள்ளைத்தமிழ்
18. வினைத்தொகை
பாடலில் இடம்பெற்றுள்ள தமிழ்ப் புலவர்களின் பெயர்களைக்
கண்டறிந்து எழுதுக.
கம்பனும் கண்டேத்தும் உமறுப் புலவரை எந்தக்
கொம்பனும் பணியும் அறம்பாடுஞ் ஜவாது ஆசுகவியை
காசிம்புலவரை, குணங்குடியாரை
சேகனாப் புலவரை
செய்குதம்பிப் பாவலரைச் சீர்தமிழ் மறக்காதன்றோ.
பாடலில் இடம் பெற்றுள்ள தமிழ்ப் புலவர்களின் பெயர்கள்:
1. கம்பன்
2. உமறுப்புலவர்
3. ஆசுகவி
4. அபுல் காசிம்
5. குணங்குடி மஸ்தான்
6. சேகனாப் புலவர்
7. செய்குத்தம்பி பாவலர்
8. ஜவ்வாதுப்புலவர்
9. சேக்கிழார்.
விண்ணப்பப் படிவத்தை நிரப்புக.
மேல்நிலை வகுப்பு - சேர்க்கை விண்ணப்பம்.
சேர்க்கை எண் : 489 தேதி - 15.06.2019 வகுப்பும் பிரிவும் - 11- அ
1. மாணவ / மாணவியின்
பெயர்: மு. முருகன்
2. பிறந்த தேதி: 06-08-2003
3. தேசிய இனம்: இந்தியன்
4. பெற்றோர் / பாதுகாவலர் பெயர்: முத்துக்குமார்
5. வீட்டு முகவரி: 5/483 பாரதி தெரு, திருநெல்வேலி.
6. இறுதியாகப் படித்து முடித்த வகுப்பு: பத்தாம் வகுப்பு
7. பயின்ற மொழி: தமிழ்
8. பெற்ற மதிப்பெண்கள்: 498
9. இறுதியாகப் படித்த பள்ளியின் முகவரி:
அரசு மேல்நிலைப்பள்ளி, களக்காடு
10. மாற்றுச் சான்றிதழ் இணைக்கப்பட்டுள்ளதா? : ஆம்
11. தாய்மொழி: தமிழ்
12. சேரவிரும்பும் பாடப்பிரிவும்
பயிற்று மொழியும்: கணிதம், தமிழ்
மாணவ / மாணவியின் கையெழுத்து
நன்றியுரை எழுதுக:
பள்ளி
வளாகத்தில் நடைபெற்ற “மரம் நடுவிழாவுக்கு" வந்திருந்த சிறப்பு விருந்தினருக்கும் பெற்றோருக்கும் பள்ளியின் பசுமைப் பாதுகாப்புப்
படை ஸ்ரீ" சார்பாக நன்றியுரை எழுதுக.
• எம் பள்ளி பசுமைப் பாதுகாப்பு படையின் சார்பாக கொண்டாடிக்
கொண்டிருக்கும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழாவிற்கு வருகை தந்திருக்கும் அனைவருக்கும்
நன்றி.
• எம் அழைப்பிற்கிணங்க, பல அலுவல்களுக்கு
மத்தியிலும் தன் நேரத்தை எங்களுக்காக ஒதுக்கித் தந்து இவ்விழாவை சிறப்பு செய்து கொண்டிருக்கும்
வனச்சரக அலுவலர் அவர்களுக்கு எம் நன்றியை உரித்தாக்குகிறேன்.
• அது மட்டுமின்றி, மரம் நடுவதற்குத்
தேவையான மரக்கன்றுகளைத் தந்து உதவியதற்கும் எங்கள் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
• விழாவைச் சிறப்பிக்க வருகை தந்திருக்கும் பெற்றோர்களுக்கும்,
எம்மை ஊக்குவித்த தலைமை ஆசிரியர்க்கும், ஆசிரியப்
பெருமக்களுக்கும் அமைதி காத்த நண்பர்களுக்கும் எம் பசுமைப் பாதுகாப்புப் படை சார்பாக
நன்றி மலர்களைக் காணிக்கையாக்கி விடை பெறுகிறேன்.
நன்றி
வணக்கம் !
விளம்பரத்தை நாளிதழுக்கான செய்தியாக மாற்றியமைக்க.
"சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு " விழா
ஜனவரி 18 நெல்லை :
விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூரில் பாதுகாப்பு
விழிப்புணர்வு விழா கொண்டாடப்பட்டது. போக்குவரத்து
காவல்துறை ஆய்வாளர் தலைமையேற்றார். சாலைக் குறியீடுகளை விளக்கி
குறியீடுகள் உணர்த்துவதை மனதில் கொண்டு கட்டுப்பாட்டுடன் கூடிய வேகத்தில் வாகனத்தை
ஓட்ட வேண்டும் என்று வலியுறுத்தினார். குழந்தைகள், மாணவர்கள் மனதில் சாலை விதிகளை மதித்து விழிப்புணர்வுடன் வளர்க்க அறிவுறுத்தினார்.
தலைக்கவசம் நான்கு சக்கர வாகனம் ஓட்டும் போது இருக்கை பெல்ட்டை கட்டாயமாக
போட்டுக் கொள்ள வேண்டும் என்றார். நிறைவாக வருகை தந்திருந்த பெரியோர்,
குழந்தைகள், காவல்துறையைச் சேர்ந்தவர்கள் அனைவரும்
இணைந்து “சாலை விழிப்புணர்வை வலியுறுத்தித் தொடர் ஓட்டம்" நிகழ்த்தினர்.
கீழ்க்காணும் நாள்காட்டியில் புதன் கிழமையை ஒன்றாம்
தேதியாகக் கொண்ட தமிழெண்களால் நிரப்புக.
அகராதியில் காண்க.
குணதரன் - முனிவர், நற்குணமுள்ளவன்
செவ்வை - நேர்மை, மிகுதி, வழி, செப்பம், சரியான நிலை
நகல் - சிரிக்கை. மகிழ்ச்சி,
நட்பு, படி, ஏளனம்
பூட்கை - கொள்கை,
வலிமை, மனஉறுதி, சிங்கம்,
யானை
செயல் திட்டம்
மாணவர்களே விளையாட்டு உலகில் உங்களுக்குப் பிடித்த ஆளுமைத்திறன்
மிக்க விளையாட்டு வீரர் பற்றிய படங்கள், செய்திகளைத் தொகுத்து
தொகுப்பேடு (Album) செய்து கொள்ளுங்கள்.
(சான்று: சச்சின் டெண்டுல்கர்)
காட்சியைக் கண்டு கவிதை எழுதுக.
அறம் என்பது
வலக்கைக் கொடுப்பது
இடக்கைக்கு தெரியக் கூடாது - இது
தர்மத்தின் வேர்
அறமும் நியதியும்
அக்காலமும் இக்காலமும் உண்டு
தர்மம் செய்வது விளம்பரமல்ல
தாழ்ந்தோர் உயர்வு பெற
சுயப்படம் எடுத்து
வலைதளம் அனுப்பும்
வழக்கமே இன்று அறமா?
நிற்க அதற்கு தக...
ஒவ்வொரு
சூழலிலும் ஒருவருக்கு ஒருவர் உதவி செய்தபடி இருக்கிறார்கள், உதவி பெற்ற படியும் இருக்கிறார்கள், சில உதவிகள் அவர்கள்
மீதுள்ள அன்பினால் செய்கிறோம் சில உதவிகள் இரக்கத்தால் செய்கிறோம்; தொடர்வண்டியில் பாட்டுப் பாடிவரும் ஒருவருக்கு நம்மையறியாமல் பிச்சை போடுகிறோம்.
தொல்லை வேண்டாம் என்று கருதி, வேண்டாவெறுப்போடு
சில இடங்களில் உதவி செய்கிறோம்!
நீங்கள்
செய்த,
பார்த்த உதவிகளால் எய்திய மனநிலை.....
உதவி
வகுப்பறையில்
எழுதுகோல் கொடுத்து உதவியபோது
உறவினருக்கு
என் அம்மா பணம் அளித்து உதவியபோது
பேருந்தில் பயணம் செய்த போது உடன் பயணம் செய்த முதியோருக்குப் பயணச்
சீட்டு எடுத்துக் கொடுத்து உதவியபோது
ஒரு வேளை உணவு வழங்கிய போது
மனநிலை
இக்கட்டான
சூழலில் செய்த உதவியால் எனக்கு மனநிறைவு; அவருக்கு மனமகிழ்ச்சி!
கல்லூரிப்
படிப்பைத் தொடர முடிந்ததால் உறவினருக்கு ஏற்பட்ட நன்றியுணர்வு!
மனநிறைவும் அவரது முகத்தின் அமைதியும் மகிழ்ச்சியும் என்னையும் மகிழச்
செய்தது.
பசிப் பிணி தீர்த்த மகிழ்ச்சி ஏற்பட்டது.
கலைச்சொல் அறிவோம்
Humanism
- மனிதநேயம்
Cultural
Boundaries - பண்பாட்டு எல்லை
Cabinet - அமைச்சரவை
Cultural
values - பண்பாட்டு விழுவியங்கள்
அறிவை விரிவு செய்
யானை
சவாரி – பாவண்ணன்
கல்மரம்
– திலகவதி
அற்றைத்
திங்கள் அவ்வெண்ணிலவில் – ந. முருகேசபாண்டியன்
இணையத்தில் காண்க.
http://www.tamilvu.org/ta/courses-degree-p101-p1011-html-p1011661-23897 (ஜெயகாந்தன்)
https://nagoori.wordpress.com/
2010/02/04/நாகூர்-ரூமியும்-நானும்/
http://tamildigitallibrary.in/book-detail.php?
id=jZY9lup2kZl6TuXGlZQdjZU3luMy
#book1/
(இலக்கியச்
சிற்பிகள் – கு.அழகிரிசாமி)