இயற்பியல் - பருப்பொருளின் பண்புகள் : முக்கியமான கேள்விகள் | 11th Physics : UNIT 7 : Properties of Matter
குறுவினாக்கள்
1. தகைவு மற்றும் திரிபு - வரையறு தகைவு
2. மீட்சிப்பண்பின் ஹீக் விதியைக் கூறுக.
3. பாய்ஸன் விகிதத்தை வரையறு.
4. மூலக்கூறுகளிடையே விசைகளின் மூலம் மீட்சிப்பண்பை விவரி.
5. எஃகு அல்லது இரப்பர், இவற்றில் எது அதிக மீட்சிப்பண்புள்ளது ஏன்?
6. ஒரு சுருள்வில் தராசு நீண்ட காலமாகப் பயன்படுத்திய பிறகு தவறான அளவீடுகளைக் காட்டுகிறது. ஏன்?
7. மீட்சிப்பண்பின் மீது வெப்பநிலையின் விளைவு யாது?
8. நீட்டப்பட்ட கம்பியின் மீட்சி நிலை ஆற்றலுக்கான கோவையை எழுதுக.
9. பாய்மங்களில் பாஸ்கல் விதியைக் கூறுக.
10. ஆர்க்கிமிடிஸ் தத்துவத்தைக் கூறுக.
11. மேல்நோக்கிய உந்து விசை அல்லது மிதக்கும் தன்மை என்றால் என்ன?
12. மிதத்தல் விதியைக் கூறுக.
13. ஒரு நீர்மத்தின் பாகியல் எண் - வரையறு
14. வரிச்சீர் ஒட்டம் மற்றும் சுழற்சி ஒட்டம் வேறுபடுத்துக.
15. ரெனால்டு எண் என்றால் என்ன? அதன் முக்கியத்துவம் யாது?
16. முற்றுத்திசைவேகம் - வரையறு
17. ஸ்டோக் விசைக்கான சமன்பாட்டை எழுதுக. அதில் உள்ள குறியீடுகளை விளக்குக.
18. பெர்னெளலியின் தோற்றத்தைக் கூறுக.
19. ஒரு நீர்மம் பெற்றுள்ள ஆற்றல்கள் யாவை? அவற்றின் சமன்பாடுகளை எழுதுக.
20. இரு வரிச்சீர் ஓட்டங்கள் ஒரே இடத்தில் குறுக்கிட இயலாது ஏன்?
21. நீர்மம் ஒன்றின் பரப்பு இழுவிசையை வரையறு. அதன் SI அலகு மற்றும் பரிமாணத்தைக் கூறுக.
22. பரப்பு இழுவிசையானது பரப்பு ஆற்றலுக்கு எவ்வாறு தொடர்புடையது?
23. திண்மம் மற்றும் திரவ சோடி ஒன்றின் சேர்கோணம் வரையறு.
24. ஒரின மற்றும் வேறினக்கவர்ச்சி விசைகளை வேறுபடுத்துக.
25. நீர்மத்தின் பரப்பு இழுவிசையைப் பாதிக்கும் காரணிகள் யாவை?
26. ஒரு சோப்புக் குமிழியினுள் காற்று ஊதப்பட்டால் அதனுள்ளே உள்ள அழுத்தம் என்னவாகும்?
27. நுண்புழை நுழைவு அல்லது நுண்புழைச் செயல்பாடு என்றால் என்ன?
28. நீரின் பரப்பில் வைக்கப்படும் எண்ணெய் துளியானது பரவுகிறது ஆனால் எண்ணெயில் வைக்கப்படும் நீர்த்துளி கோள வடிவில் சுருக்குகிறது ஏன்?
29. வென்சுரிமானியின் தத்துவம் மற்றும் பயன்பாட்டைக் கூறுக.
III. நெடுவினாக்கள்
1. ஹூக் விதியைக் கூறுக. ஒரு சோதனை உதவியுடன் அதனை சரிபார்க்கவும்.
2. மீட்சிக் குணகத்தின் வகைகளை விளக்குக. மூவகை மீட்சிக் குணகங்கள் உள்ளன. அவை,
3. கம்பி ஒன்றில் ஓரலகு பருமனில் சேமிக்கப்பட்ட மீட்சி ஆற்றலுக்கான கோவையை தருவி.
4. நீர்மப் பரப்பிற்குக் கீழே h ஆழத்தில் உள்ள மொத்த அழுத்தத்திற்கான சமன்பாட்டைத் தருவி.
5. பாய்மங்களில் பாஸ்கல் விதியைக் கூறி அதனை நிரூபி.
6. ஆர்க்கிமிடிஸ் தத்துவத்தைக் கூறி அதனை நிரூபி.
7. ஸ்டோக் விதியைப் பயன்படுத்தி அதிக பாகுநிலை கொண்ட திரவத்தில் இயங்கும் கோளத்தின் முற்றுத்திசைவேகத்திற்கான சமன்பாட்டைத்தருவி.
8. ஒரு குழாயின் வழியே வரிச்சீர் ஒட்டத்தில் ஒரு வினாடியில் பாயும் திரவத்தின் பருமனுக்கான பாய்ஸன் சமன்பாட்டைத் தருவி.
9. 1. திரவத்துளி, 2. திரவக்குமிழி, 3. காற்றுக்குமிழி ஆகியவற்றின் உள்ளே மிகையழுத்தத்திற்கான கோவையைத் தருவி.
10. நுண்புழை நுழைவு என்றால் என்ன? நுண்புழையேற்ற முறையில் நீர்மம் ஒன்றின் பரப்பு இழுவிசைக்கான கோவையைத் தருவி.
11. நிறை மாறா நிலையின் அடிப்படையில் பாய்மம் ஒன்றின் ஓட்டத்திற்கான தொடர் மாறிலிச் சமன்பாட்டைத் தருவி.
12. அமுக்க இயலாத பாகுநிலையற்ற பாய்மம் ஒன்று வரிச்சீர் ஒட்டத்தில் செல்வதற்கான பெர்னெளலியின் தேற்றத்தைக் கூறி அதனை நிரூபி.
13. வென்சுரிமானியின் அமைப்பு மற்றும் செயல்பாட்டை விவரி. குழாயின் அகலமான நழைவுப் பகுதியில் ஒரு வினாடியில் பாயும் நீர்மத்தின் பருமனுக்கான கோவையைத் தருவி.
பயிற்சிக் கணக்குகள்
1. d mm விட்டம் கொண்ட ஒரு நுண்புழைக் குழாய் நீரானது 30mm உயரத்திற்கு மேலேறுமாறு நீரினுள் அமிழ்த்தப்பட்டுள்ளது. புதிய நுண்குழாயின் ஆரம் முந்தய மதிப்பில் (2/3) பங்காக இருந்தால் புதிய நுண்குழாயில் நீர் மேலேறும் உயரத்தைக் கணக்கிடுக.
தீர்வு :
h2 = 45mm
விடை: 45 mm
2. 1.52m நீளமும் 4cm விட்டமும் கொண்ட ஒரு உருளை ஒரு முனையில் பொருத்தப் பட்டுள்ளது. 4 × 105 N தொடுவரை விசை மறு முனையில் செலுத்தப்படு கிறது. உருளையின் விறைப்புக் குணகம் 6 × 1010 Nm-2 எனில் உருளை முறுக்கப்பட்ட கோணத்தைக் கணக்கிடுக.
விடை :
தீர்வு : F = 4 × 105 N d = 4 × 10-2 m
ηR = 6 × 1010 Nm-2 r = 2 × 10-2 m
விடை: 45.60
3. 2 cm ஆரம் கொண்ட சோப்புக்குமிழி A ஆனது மற்றொரு 4cm ஆரமுள்ள B என்ற சோப்புக்குமிழியினுள் உருவாகிறது. சிறிய சோப்புக்குமிழிக்கு உள்ளேயும் பெரிய சோப்புக் குமிழிக்கு வெளியேயும் உள்ள அழுத்த வேறுபாட்டைக் கொண்டுள்ள தனி ஒரு சோப்புக் குமிழியின் ஆரமானது A மற்றும் B ஆகிய இரு சோப்புக் குமிழிகளின் ஆரத்தை விட குறைவாக இருக்கும் என நிரூபி.
• சோப்புக் குமிழுக்கு உள் அடுக்கு மற்றும் வெளியடுக்கின் காரணமாக காற்றின் அழுத்த வேறுபாடு இரு மடங்காகும்.
∆ Pb = 4T/R
• பெரிய சோப்புக் குமிழியின் உள்ளே அழுத்த வேறுபாடு = ∆Pb = 4T/4 = T
• சிறிய குமிழியின் உள்ளே அழுத்த வேறுபாடு = ∆Ps = 4s/R = 4T/2 = 2T
அழுத்த வேறுபாடு ∆P = ∆Pb + ∆Ps
= T + 2T = 3T
• தனி ஒரு சோப்புக் குமிழியின் உள்ளே அழுத்த வேறுபாடு = 4T/R = 4T/4 = T
• தனி சோப்புக் குமிழியின் உள்ளே அழுத்த வேறுபாடு இரு குமிழிகளின் ஆரத்தை விட குறைவு. T < 3T
4. x Kg நிறையுள்ள ஒரு வெள்ளிக்கட்டி (Ag) கம்பியில் தொங்க விடப்பட்டு 0.72 ஒப்படர்த்தி கொண்ட திரவத்தில் மூழ்கியுள்ளது. Ag-யின் ஒப்படர்த்தி 10 மற்றும் கம்பியின் இழுவிசை 37.12 N எனில் வெள்ளிக்கட்டியின் நிறையைக் கணக்கிடுக.
திரவத்தின் ஒப்படர்த்தி = 0.72 = Pதிரவம்
Ag-ன் ஒப்படர்த்தி = 10 = PAg
Ag-ன் நிறை = xKg
கம்பியின் இழுவிசை = 37.12 N
தோற்ற எடை Wapp = W - B
விடை: x = 4 kg
5. ஒரு மூடிய குழாயுடன் இணைக்கப்பட்டுள்ள அழுத்தமானி 5 × 105 Nm-2 என்ற அளவீட்டைக் காட்டுகிறது. குழாயின் திறப்பானை திறந்தால் அழுத்த மானியில் 4.5 × 105 Nm-2 என்ற அளவீடு உள்ளது. குழாயில் பாயும் நீரின் வேகத்தை கணக்கிடுக.
தீர்வு :
விடை: 10 ms-1
1. ஒரு சர்க்கரைக் கட்டியின் ஒரு முனை காப்பியில் வைக்கப்பட்டால் சர்க்கரைக் கட்டியினுள் காப்பி மேலேறுகிறது ஏன்?
விடை:
நுண்புழை நுழைவின் காரணமாக சர்க்கரை கட்டியில் காப்பி மேலேறுகிறது.
2. எண்ணெய் கொள்கலனை (tin) காலி செய்ய இருதுளைகள் ஏன் இடப்படுகிறது?
விடை:
ஒரு துளையின் வழியே எண்ணெய் வெளிவரும் போது கொள்கலனுக்குள் (tin) அழுத்தம், வளிமண்டல அழுத்தத்தை விட குறையும். எனவே எண்ணெய் வெளிவருவது நின்றுவிடும். எனவே இரு துளை இடும்போது மற்றொரு துளை வழியே காற்று கொள்கலனினுள் நுழைந்து அழுத்தத்தை சமன் செய்யும்.
3. மழுங்கிய கத்தியை ஒப்பிட கூரான கத்தியால் காய்கறிகளை எளிதாக நறுக்கலாம் ஏன்?
விடை:
மழுங்கிய கத்தியை விட கூரான கத்தியின் முனையில் பரப்பு குறைவு. எனவே ஓரலகு பரப்பிற்கான விசை கூரிய கத்திக்கு அதிகம். எனவே கூரான கத்தியால் காய்கறிகளை எளிதாக நறுக்கலாம்.
4. விமானத்தில் செல்லும் பயணிகள் மேலேறும் போது தங்கள் பேனாவில் உள்ள மையை கொட்டி விடுமாறு ஏன் அறிவுறுத்தப் படுகிறார்கள்?
விடை:
• உயரம் அதிகரிப்பதால் விமானத்தில் வளிமண்டல அழுத்தம் குறையும்.
• பேனாவில் மையானது வளிமண்டல அழுத்தத்தில் நிரப்பப் பட்டிருக்கும்.
• விமானத்தில் அழுத்தம் குறைவதால் அதை சமன் செய்ய மையானது பேனாவிலிருந்து வெளியேறிவிடும்.
• எனவே விமானத்தில் ஏறும்போது தங்கள் பேனாவில் உள்ள மையை கொட்டிவிடுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
5. மென் பானங்களைக் குடிப்பதற்கு நாம் உறிஞ்சு குழாயைப் பயன்படுத்துகிறோம் ஏன்?
விடை:
• மென் பானங்களில் உறிஞ்சு குழாயை வைக்கும் போது நுண்புழை ஏற்றம் காரணமாக மேலே ஏறும்.
• மேலும் உறிஞ்சு குழாயை உறிஞ்சும் போது வளிமண்டல அழுத்தத்தை விட உறிஞ்சு குழாயில் அழுத்தம் குறையும். எனவே மேலே ஏறும். நாம் எளிதில் குடிக்கலாம்.