Home | 11 ஆம் வகுப்பு | 11வது தமிழ் | இலக்கணம்: பா இயற்றப் பழகலாம்

இயல் 5 : 11 ஆம் வகுப்பு தமிழ் - இலக்கணம்: பா இயற்றப் பழகலாம் | 11th Tamil : Chapter 5 : Naalellam vinasei

   Posted On :  09.08.2023 06:17 am

11 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 5 : நாளெல்லாம் வினைசெய்

இலக்கணம்: பா இயற்றப் பழகலாம்

11 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 5 : நாளெல்லாம் வினைசெய் : இலக்கணம்: பா இயற்றப் பழகலாம் | தமிழ்நாடு பள்ளி சமச்சீர் புத்தகங்கள்

இயல் 5

இனிக்கும் இலக்கணம்

பா இயற்றப் பழகலாம்


ஆசிரியப்பா

பா. செய்யுன், தூக்கு, கவி, கவிதை, பாட்டு ஆகிய சொற்கள் ஒரே பொருளில் வருவன. எழுத்து, அசை, சீர், தளை, அடி, தொடை, ஆகியன செய்யுள் உறுப்புகளாகும். பாக்களின் வகைகள், அப்பாக்களின் ஓசைகள், பாக்கள் இயற்றுவதற்குரிய விதிமுறைகள் முதலியவற்றை விளக்குவது யாப்பருங்கலக்காரிகை என்னும் நூலாகும். இது யாப்பு என்னும் கடலைக் கடக்க உதவும் நூலாக உள்ளது.

தமிழ்ச் செய்யுள் வடிவங்கள் பெரும்பாலும் இசையை அடிப்படையாகக் கொண்டவை. ஓசையே தமிழ்ச் செய்யுளை மெருகேற்றும் இவ்வோசை, செய்யுளுக்கு மேலும் அழகு சேர்க்கிறது. வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா என்னும் பாவகைகள் முறையே செப்பலோசை, அகவலோசை, துள்ளலோசை, தூங்கலோசை என்னும் ஓசை வடிவம் கொண்டவை.

செய்யுளில் மோனை, எதுகை, இயைபு போன்றவை இசையைப் பிணைக்கின்றன. சீர் அடிப்படையில் அடிகள் வரையறை செய்யப்படுகின்றன. குறளடி இரண்டு சீர்களாகவும் சிந்தடி மூன்று சீர்களாகவும் அளவடி (நேரடி) நான்கு சீர்களாகவும் நெடிலடி ஐந்து சீர்களாகவும் கழிநெடிலடி ஆறு அல்லது அதற்கு மேற்பட்ட பல சீர்களாகவும் வரும்.

பா இயற்றுவதற்குரிய எளிய வடிவமாக ஆசிரியப்பாவைக் கூறலாம். அகவல் ஓசை பெற்றதால் ஆசிரியப்பாவை "அகவற்பா' என்றும் கூறுவர். பெரும்பாலும் ஆசிரியப்பா, இரண்டு அசைகளால் அமையும். ஆசிரியப்பாக்களால் ஆன பாடல்களே சங்ககாலத் தமிழில் மிகுதியாக உள்ளன.

அமைப்பும் படைப்பும்

யாப்பில் 'எழுத்து', அசையை அமைக்க உதவும். அசை என்பது இசை (மாத்திரை) சேர்ந்து வருவதாகும். அசை நேர், நிரை என இருவகையாக அமையும். அவை பின்வருமாறு,


சீர் ஒன்றின் அசைப் பிரிப்பில் தனி மெய்யெழுத்து வந்தாலோ இரண்டு மெய்யெழுத்துகள் இணைந்து வந்தாலோ அசையாகக் கணக்கில் எடுத்துக்கொள்ளக்கூடாது.

ஆல் - நேரசை - இருமாத்திரை அளவே கொள்ள வேண்டும் ('ல்' அலகு பெறாது)

இகழ்ச்சி நிரையசை - இருமாத்திரை அளவே கொள்ள வேண்டும் ('ழ்','ச்' அலகு பெறாது)

சீரும் தளையும்

அசைகள் சேர்ந்து அமைந்தாவ் சீர் பிறக்கும். ஆசிரியப்பாவிற்கு உரிய சீர் இயற்சீர் ஆகும். இதனை ஆசிரிய உரிச்சீர் என்றும் கூறுவர். தேமா, புளிமா ஆகிய இரண்டும் நேரீற்று ஈரசைச் சீர்களாகவும் கருவிளம், கூவிளம் ஆகிய இரண்டும் நிரையீற்று ஈரசைச் சீர்களாகவும் வரும். எனவே, ஆசிரிய உரிச்சீர் நான்கு வகைப்படும். வெண்பாவிற்குரிய தேமாங்காய், புளிமாங்காய். கருவினங்காய், கூவினங்காய் ஆகிய தேரித்து மூவசைச் சீர்களால் அமைந்த 'காய்ச்சீர்' கலந்தும் வரலாம்.


ஆசிரியத்தளை

மாமுன் நேர் ஒன்றி வந்தால் நேரொன்றாசிரியத் தளையாகும்

நல்லார் சொல்லோ - நல்/லார் - தேமா, சொல்/லோ - நேர் நேர் (தேமா )

விளம்முன் நிரை ஒன்றி வந்தால் நிரையொன்றாசிரியத் தளையாகும்.

கருவினில் திருமுகம் - கரு/வினில் - கருவிளம், திருமுகம் - நிரை நிரை ( கருவிளம்) இவ்வாறு ஆசிரியப்பாவானது இயற்சீரும் ஆசிரியத் தளையும் பெற்றுவரும்.

ஆசிரியப்பாவின் பொது இலக்கணம்

அகவலோசை கொண்டது.

எல்லா அடிகளும் நான்கு சீர்களைப் (அளவடி) பெற்றுவரும்.

இயற்சீர் மிகுந்தும் பிறசீர் கலந்தும் வரும்.

ஆசிரியத்தளை மிகுந்தும் பிற தளை சுவத்தும் வரும்.

நிரை நடுவாகிய வஞ்சி உரிச்சீர் (கூவிளங்கனி கருவினங்கனி) வராமல் அமையும்.

இறுதி அடியின் இறுதி எழுத்து பிற எழுத்தால் முடியும் என்றாலும், '' என்னும் எழுத்தால் முடிவது சிறப்பு. ஏகாரத்துடன் து, , ஆய், என், ஆகிய ஈறுகனாலும் முடியும்.

மூன்றடிச் சிற்றெல்லையாக அமையும். பேரெல்லை பாடுவோன் எண்ணத்திற்கேற்ப (கற்பனைக்கேற்ப) அமையும்.

ஆசிரியப்பாவின் வகைகள்

கடை அயற்பாதம்"

இறுதி அடிக்கு முந்தைய அடி மூன்று சீர்களைப் பெற்று வருவது நேரிசை ஆசிரியப்பாவாகும். மற்ற அடிகள் நான்கு சீர்களைப் பெற்றுவரும்.

"இடைபல குன்றின் இணைக்குறள்

முதலடியும் இறுதியடியும் நான்கு சீர்களைப் பெற்று இடையடிகள் இணை இணையாய் இருசீர்களாகவும் (குறளடி) மூன்று சீர்களாகவும் (சிந்தடி) வருவது இணைக்குறன் ஆசிரியப்பாவாகும்.

எல்லா அடிகளும் ஒத்து நடைபெறுமாயின் நிலைமண்டில ஆசிரியப்பா", எல்லா அடிகளும் நான்கு சீர்களைப் பெற்று வருவது நிலைமண்டில ஆசிரியப்பாவாகும். '' என்ற எழுத்தாலும் 'என்' என்ற அசைச் சொல்லாலும் முடியும். (அசைச்சொல் - யாப்புக்காக ஆக்கப்படும் பொருளில்லாத சொல்)

"நடு ஆதி அந்தத்து அடைதரு பாதத்து அகவல் அடிமறி மண்டிலமே

பாடலில் உள்ள அடிகளை மாற்றி மாற்றி அமைத்தாலும் ஓசையும் பொருளும் மாறாது அமைவது அடிமறிமண்டில ஆசிரியப்பாவாகும்.

ஆசிரியத்தாழிசை, ஆசிரியத்துறை, ஆசிரியவிருத்தம் என்பன ஆசிரியப்பாவின் இனங்கள் ஆகும்.

ஆசிரியப்பாவில் அமைந்த பாடல்-விளக்கம்

தமிழ்க்கவிஞர் பலர் ஆசிரியப்பாவால் எழுதியுள்ள பாடல்களில் ஆசிரியப்பாவின் இலக்கணங்களைக் கண்டறிந்து பயிற்சி பெறலாம்.

வாழிய செந்தமிழ் வாழ்கநற் றமிழர்

வாழிய பாரத மணித்திரு நாடு

இன்றெமை வருத்தும் இன்னல்கள் மாய்க

நன்மைத் தெய்துக தீதெலாம் நலிக......"

பாரதியாரின் இப்பாடல் ஒவ்வோரடியும் நான்கு ஈரசைச் சீர்களால் அமைந்து இடையில் காய்ச்சீராகிய மூவசைச் சீர்களைப் பெற்றுவந்த ஆசிரியப்பாவாகும்.

மேற்காண் பாடலைக் கீழ்க்கண்டவாறு அசையாகப் பிரிக்கலாம்.

நேர் நிரை நேர் நிரை நேர் நிரை நிரை நேர்

நேர் நிரை நேர் நிரை நிரை நிரை நேர் நேர்

நேர் நிரை நிரை நேர் நேர் நேர் நேர் நேர் நேர்

நேர் நேர் நேர் நேர் நிரை நேர் நிரை நிரை நேர்

மாச்சீர் என்று கூறினால், முதலில் அது ஈரசைச்சீர் என்றும், பிறகு நேரசையை ஈற்றிலே உடைய ஈரசைச்சீர் என்றும், காய்ச்சீர் என்று கூறினால் முதலில் அது மூவசைச்சீர் என்றும், பிறகு நேரசையை ஈற்றிலே உடைய மூவசைச்சீர் என்றும் நினைவுக்கு வரவேண்டும்.

பாடலின் அசைக்குரிய வாய்பாடு

கூவிளம் கூவிளம் கூவிளம் புளிமா

கூவிளம் கூவிளம் கருவினம் தேமா

கூவிளம் புளிமா தேமாங்காய் தேமா

தேமாங்காய் கூவிளம் கூவிளம் புளிமா

(இயற்சிரும்(ஈரசைச்சீர்) காய்ச்சிரும்(மூவசைச் சீர்) பயின்று வந்துள்ளன)

வாய்பாட்டிற்குரிய தளை

விளம் முன் நேர் விளம் முன் நேர் விளம் முன் நிரை மா முன் நேர்

விளம் முன் நேர் விளம் முன் நிரை விளம் முன் நேர் மா முன் நேர்

விளம் முன் நிரை மா முன் நேர் காய் முன் நேர் மா முன் நேர்

காய் முன் நேர் விளம் முன் நேர் வினம் முன் நிரை மா முன்...

(நேரொன்றாசிரியத் தளை, நிரையொன்றாசிரியத் தளை, இயற்சீர் வெண்டளை, வெண்சீர் வெண்டளை ஆகிய தளைகள் அமைந்துள்ளன)

இவ்வாறு இரண்டசைகளை உடைய எளிய சொற்களைக் கொண்டு ஆசிரியப்பாவிற்குரிய தளைகளோடு பாடல்களை எழுதிப் பழகுதல் வேண்டும்.

ஆசிரிய விருத்தம்

ஆசிரிய விருத்தத்தால் அமைந்த பாடல்களை இன்று பெருவழக்கில் உள்ளன. இவ்வகையான பாடல்களை எளிதாகக் கையாளலாம். ஆசிரியப்பாவின் இனங்களுள் ஒன்றே விருத்தம். ஆறு சீர்களால் அமைந்த பாடலை அறுசீர்க்கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் என்றும், ஏழு சீர்களால் அமைந்த பாடலை எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் என்றும் எட்டுச்சீர்களால் அமைந்த பாடலை எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் என்றும் பாவகையைக் குறிப்பிடுவர். ஆறு அல்லது அதற்கும் மேற்பட்ட எத்தனை சீர்கள் வந்தாலும் அந்த அடி 'கழிநெடிலடி ஆகும்.

அறுசீர்க்கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் அமையும் முறை

அறுசீர்க்கழிநெடிலடிகள் நான்கு கொண்டதாக அமைந்து, நான்கடியும் அளவொத்து வரவேண்டும். முதற்சீரிலும் நான்காம் சீரிலும் மோனை அமைத்தும், முதற்சீரிலும் ஐந்தாம் சீரிலும் மோனை அமைத்தும் அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் எழுதலாம்.

யாப்பிலாப் பாட லேனும்

யார்தரும் கவிதை யேனும்

மாப்பலாப் போல எண்ணி

மடியிலே வாங்கிக் கொண்டு

காப்பிலாத் தமிழர் நெஞ்சில்

காலமெல் லாமும் வாழும்

மூப்பிலாத் தமிழே! உன்னை

முதன்முதல் வணங்கு கின்றேன் !"

இப்பாடலில் அடிதோறும்

ஆறு சீர்கள் பெற்று, முதற்சீரிலும் நான்காம் சீரிலும் மோனை அமைந்து நயம் சிறக்கக் காணலாம்.

சீர் அமைப்பை வைத்து அறுசீர்க்கழிநெடிலடி ஆசிரிய விருத்தங்கள் பல்வேறு வகையாக எழுதப்படுகின்றன.

ஓரடியுள் அரை அடிக்கு ஒரு விளச்சீரும் இரு மாச்சீர் வருவனவும்

ஓரடியுள் அரை அடிக்கு இரு மாச்சீரும் ஒரு காய்ச்சீர் வருவனவும்

ஓரடியுள் நான்கு காய்ச்சீரும் இரு மாச்சீர் வருவனவும் உண்டு.

Tags : Chapter 5 | 11th Tamil இயல் 5 : 11 ஆம் வகுப்பு தமிழ்.
11th Tamil : Chapter 5 : Naalellam vinasei : Grammar: Paa eyatra palaKalam Chapter 5 | 11th Tamil in Tamil : 11th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 11 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 5 : நாளெல்லாம் வினைசெய் : இலக்கணம்: பா இயற்றப் பழகலாம் - இயல் 5 : 11 ஆம் வகுப்பு தமிழ் : 11 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
11 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 5 : நாளெல்லாம் வினைசெய்