Home | 11 ஆம் வகுப்பு | 11வது தமிழ் | மொழி அறிவு - கேள்விகள் மற்றும் பதில்கள்

இயல் 5 : 11 ஆம் வகுப்பு தமிழ் - மொழி அறிவு - கேள்விகள் மற்றும் பதில்கள் | 11th Tamil : Chapter 5 : Naalellam vinasei

   Posted On :  16.08.2023 10:38 pm

11 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 5 : நாளெல்லாம் வினைசெய்

மொழி அறிவு - கேள்விகள் மற்றும் பதில்கள்

11 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 5 : நாளெல்லாம் வினைசெய் : மொழி அறிவு - கேள்விகள் மற்றும் பதில்கள் | தமிழ்நாடு பள்ளி சமச்சீர் புத்தகங்கள்

இலக்கணத் தேர்ச்சி கொள்

1. ஆசிரியப்பா எத்தனை வகைப்படும்? அவை யாவை?

விடை

ஆசிரியப்பா நான்கு வகைப்படும். நேரிசை ஆசிரியப்பா, நிலைமண்டில ஆசிரியப்பா இணைக்குறள் ஆசிரியப்பா, அடிமறிமண்டில ஆசிரியப்பா ஆகியன ஆகும்.

 

2. ஆசிரியப்பாவிற்குரிய சீரும் தளையும் யாவை?

விடை

ஆசிரியப்பாவிற்குரிய சீர் - இயற்சீர். இதனை 'ஆசிரிய உரிச்சீர்' என்பர்.

ஆசிரிப்பாவிற்குரிய தளை - ஆசிரியத்தளை.

 

3. அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தங்களின் வகைகளையும் அவற்றை இயற்றுவதற்கான விதிகளையும் கூறுக.

விடை

அறுசீர்க்கழி நெடிலடி ஆசிரிய விருத்தத்தின் வகைகளாவன:

ஓரடியுள் அரை அடிக்கு ஒரு விளச்சீரும் இருமாச்சீரும் வருவது உண்டு.

ஓரடியுள் அரை அடிக்கு இருமாச்சீரும் ஒரு காயிச்சீரும் வருவது உண்டு.

 ஓரடியுள் நான்கு காய்ச்சீரும். இரு மாச்சீரும் வருவது உணர்டு.

அறுசீர்க்கழிநெடிலடி அமையும் முறை

அறுசீர்க்கழிநெடிலடிகள் நான்கு கொண்டதாக அமைத்து, நான்கடியும் அளவொத்திருக்க வேண்டும்.

முதல் சீரிலும் நான்காம் சீரிலும் மோனை அமைத்தும், முதல் சீரிலும் ஐந்தாம் சீரிலும் மோனை அமைத்தும் அறுசீர்க்கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் எழுதலாம்.

 

4. பொருத்துக

) நேரிசை ஆசிரியப்பா - i). முதலடியும் இறுதியடியும் அளவடிகளாய் வரும்

) இணைக்குறள் ஆசிரியப்பா - ii) அடிகளை மாற்றினாலும் ஓசையும்பொருளும் மாறாது வரும்

) நிலைமண்டில ஆசிரியப்பா - iii) இறுதி அடியின் முந்தைய அடி சிந்தடியாய் வரும்

) அடிமறிமண்டில ஆசிரியப்பா - iv) எல்லா அடிகளும் அளவடி பெற்று வரும்.

விடை

) நேரிசை ஆசிரியப்பா - iii) இறுதி அடியின் முந்தைய அடி சிந்தடியாய் வரும்

) இணைக்குறள் ஆசிரியப்பா - i). முதலடியும் இறுதியடியும் அளவடிகளாய் வரும்

) நிலைமண்டில ஆசிரியப்பாiv) எல்லா அடிகளும் அளவடி பெற்று வரும்.

) அடிமறிமண்டில ஆசிரியப்பா -  ii) அடிகளை மாற்றினாலும் ஓசையும்பொருளும் மாறாது வரும்

 

5. பின்வரும் ஆறுசீர் விருத்தப்பாடல்களில் உள்ள விடுபட்ட சீர்களை ஏற்றவகையில் அமைத்துப் பயிற்சி பெறுக.

பயிற்சி 1

ஒரே அடியில் 6 சீர்; 1, 4 சீர்களில் மோனை வரவேண்டும். 1, 2, 4, 5 ஆகியன தேமா அல்லது புளிமாவாக வரவேண்டும். 3. 6 சீர்கள் ஏதேனும் ஒரு காய்ச்சீராக வரவேண்டும். வேறு தளைகள் பார்க்கத் தேவையில்லை. இவ்வகையில் பின்வரும் பயிற்சியை அமைக்க.

மாச்சீர் + மாச்சீர் + காய்ச்சீர்வாய்பாடு

மண்ணுக் கழகு மரமாகும்

மரத்திற் கழகு கிளையாகும்

கண்ணுக் கழகு கருவிழியாம்

கவிதைக் கழகு கருப்பொருளாம்

விண்ணுக் கழகு விண்மீன்களாம்

வீதிக் கழகு விசாலமாகும்

எண்ணுக் கழகு கணிதமாகும்

எழுத்துக் கழகு வடிவமாகும்.

 

பயிற்சி 2:

மண்ணுக்கு அழகு என்னும் இரு சீர்களின்பின் ஆகும் / தெளிவுடைமை / தெளிவாகும் / கிழியாமை / பயன்படுதல் / நற்கருத்து .... எனப் பல வகைகளில் சீர்களை அமைத்துக்கொள்ளலாம்.

நாட்டுக் கழகு நல்லாட்சியாம்

நாவிற் கழகு வாய்மையாம்

வீட்டுக் கழகு வெளிச்சமாகும்

விருந்திற் கழகு உபசரிப்பாம்

காட்டுக் கழகு மரங்களாகும்

கழனிக் கழகு பயிர்களாம்

ஏட்டுக் கழஞ எழுத்தாகும்

மாட்டுக் கழகு உழைப்பாகும்.

 

பயிற்சி 3:

ஒவ்வோரடியும், முதலிரு சீர்கள் ஈரசையாகவும் இறுதிச்சீர் நேரீற்று மூவசைச் சீராகவும் அமைத்துப் பழகுக.

காற்றைத் தந்த வான்வாழ்க!

கல்வியைத் தந்த குருவாழ்க

ஊற்றைத் தந்த நிலம்வாழ்க

சோற்றைத் தந்த வயல்வாழ்க

ஆற்றைத் தந்த மலைவாழ்க

சாற்றைத் தந்த கழிவாழ்க

ஒற்றுமை தந்த உளம்வாழ்க

வேற்றுமை காணா மனம்வாழ்க


 

கற்பவை கற்றபின்

 

1. உங்களது ஒரு வாரத்திய நிகழ்வுகளை நாட்குறிப்பில் பதிவு செய்க.

விடை

செப்டம்பர் 1 - திங்கள்

காலை 4 மணிகண்விழித்தல்

காலை 5-6 மணி - சிறப்பு வகுப்பு

காலை 7 மணி - பள்ளி செல்லுதல்

மாலை 6 மணி - வீடு திரும்புதல்

மாலை 7-9 மணி - அன்றைய பாடம் படித்தல்

இரவு 9-10 மணி வீட்டுப்பாடம் தயாரித்தல்

இரவு 10 மணி தூங்கச் செல்லுதல்

பள்ளி மாணவனாகிய நான் திங்கள் கிழமை முதல் சனிக்கிழமை வரை என் நாட்குறிப்பில் பதிவிடுவேன்.

செப்டம்பர் 7 - ஞாயிறு

காலை 7 மணி - கண் விழித்தல்

காலை 8 மணி - காலை உணவு உண்ணுதல்

9-10 மணி - தொலைக்காட்சிப் பார்த்தல்

காலை 10-12 மணி - தந்தையுடன் கடைக்குச் செல்லுதல்

மதியம் 12-1 மணி - மதிய உணவு, உண்ணுதல்

மாலை 1-3 மணி - ஓய்வு எடுத்தல்

மாலை 3-6 மணி - விளையாடுதல்

மாலை 6-8 மணி - படிக்கச் செல்லுதல்

இரவு 9 மணி - தூங்கச் செல்லுதல்

 

2. ஆனந்தரங்கர் நாட்குறிப்பு விவரிக்கும் நிகழ்வுகளைக் காலக்கோட்டில் அமைத்துக் காட்டுக.

விடை

ஆனந்தரங்கர் நாட்குறிப்பு விவரிக்கும் காலக்கோடு


 

3. நீங்கள் வாழும் நகரத்தின் வரலாற்றுச் சிறப்புகளைத் திரட்டிப் படக் கட்டுரையாக்குக.

விடை

சான்று: திருநெல்வேலி நகரத்தின் வரலாற்றுச் சிறப்புகள்


எங்கள் ஊர் திருநெல்வேலி. பாடல் புகழ் பெற்ற இடம்.

திருநெல்வேலியைத் 'திக்கெல்லாம் புகழுறும் திருநெல்வேலி என்று சம்பந்தரும், 'தண்பொருநைப் புணல்நாடு' என்று சேக்கிழாரும் பாடுகிறார்.

சிவபெருமான நெல்லுக்கு வேலியிட்டுக் காத்ததால் 'திருநெல்வேலி' எனப்படுகிறது என்பர். இதனை 'நெய்லை' என்றும் அழைப்பர். கோயில்கள் நிறைந்த ஊர்.

திருநெல்வேலி என்றால் நினைவுக்கு வருவது. அனைவருக்கும்  நாஊறும் அல்வா தான். கூந்தன்குளம் பறவைகள் சரணாலயம் அமைந்த ஊர்.

இயற்கையே கெஞ்சும் குற்றாலம் அருகில் உள்ளது.

தாமிரபரணிக் கரையில் அமைந்துள்ள நாட்டின் மிக முக்கிய அறிவியல் மையங்களில் ஒன்று களக்காடு வனவிலங்கு சரணாலயம் அமைந்த ஊர்.

பெயர் பெற்ற மாஞ்சோலைத் தோட்டம், மணிமுத்தாறு அணை, கழுகுமலை, பாபநாசம், பத்தமடைபாய், கும்பருட்டி அருவி, சிவனும் பெருமாளும் ஒருவாய் இணைந்த சங்கரன்கோயில், ட்ரினிடி கதீட்ரல் தேவாலயம், கப்பல் மாதா தேவாலயம்..... என்று அளவிட்டு சொல்லமுடியாத அளவு, பெருமைகளைக் கொண்டது திருநெல்வேலி நகரம்.

 

4. 'நான் பார்க்க விரும்பும் இடம்' என்னும் தலைப்பில் உங்களின் கருத்துகளைக் காரணங்களுடன் பதிவு செய்க.

விடை

சான்று: நான் பார்க்க விரும்பும் இடம் - தூத்துக்குடி

காரணங்கள்:

கி.பி. 7 ஆம் நூற்றாண்டிலே கடல் வழி வாணிபம் துவங்கப்பட்ட இடம்.

சோழ, பாண்டிய மன்னர்கள் காலத்தில் துறைமுகம் நிறுவப்பட்டது.

முத்துக்குளிக்கும் பெருநகரமாகும்.

வீரபாண்டியன், பாரதி, ..சிதம்பரம் போன்ற மகான்கள் பிறந்த ஊர்.

மன்னார் வளைகுடா அமைந்த பகுதி.

தமிழகத்தில் மிக வேகமாக வளரும் தொழில் நகரங்களில் ஒன்று தூத்துக்குடி.

இங்குத் தயாராகும் உப்பு ஆசியாக் கண்டத்திலேயே மிகச்சிறந்த உப்பாகும்.

சுடுமனைகள் அதிக அளவு உள்ள நகரமாகும்.

பரோட்டாவிற்கு பெயர் பெற்ற இடமாகும்.

 பனிமயமாதா தேர்த்திருவிழா சிறப்பாக நடைபெறும் இடமாகும்.

இத்தகைய காரணங்களால் தூத்துக்குடி நகரம் எனக்குப் பிடித்ததால் அப்பகுதியைப் பார்வையிட விரும்புகிறேன்,

 

5. சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ள கூற்றுமுறைகள் குறித்து வகுப்பறையில் கலந்துரையாடுக.

விடை

ஆசிரியர் : மாணவர்களே! சங்க இலக்கியங்களில் புலவர்கள் மிகுதியான கூற்று முறைகளை அகப்பாடலில் கையாண்டுள்ளனர். அவற்றைப் பற்றி இவ்வகுப்பில் கலந்துரையாடுவோமா!

மாணவர்கள் : சரிங்க ஐயா! கலந்துரையாடுவோம்.

ஆசிரியர் : முதலில் அன்புச்செல்வன் அகத்திணையில் நற்றிணையில் இருந்து கூறு பார்க்கலாம்.

அன்புச்செல்வன் : வணக்கம் ஐயா! தொகை நூலில் முதல் நூல். கபிலர் பாடிய குறிஞ்சித்திணையின் ஒரு பாடல்.

"நின்ற சொல்வர் நீடு தோறினியர்

என்றும் என்தோள் பிரியறியவரே" - இப்பாடலில் தோழிக்குத் தலைவி கூறியது. ஆதலால் தலைவி கூற்றாக அமைகிறது.

விளக்கம் : தன்னைவிட்டுத் தலைவன் பிரிவதை உணர்ந்து அஞ்சிய தலைவி தன் வருத்தத்தைத் தெரிவித்தாள். தன்னிடம் தலைவன் நீங்கா காதல் உடையவர் என்பதுபோல் பாடல் அமைகிறது.

ஆசிரியர் : அருமை. நன்றாகக் கூறினாய். அடுத்து ஐங்குறுநூலிலிருந்து அன்புச்செல்வி கூறு பார்க்கலாம்.

அன்புச்செல்வி : வணக்கம் ஐயா! திணைக்கு நூறு பாடல் என்று பாடப்பட்ட நூல் ஐங்குறுநூறு. பேயனார் பாடல் பற்றி கூறுகிறேன்.

காயா கொன்றை நெய்தல், முல்லை

போதவிழ் தளவரமாடு பிடவலாந்து கவினிப்

பூவணி கொண்டன்றால் புறவே

பேரமர்க் கண்ணி ஆடுகம் விரைந்தே

- இப்பாடலில் தலைவிக்குத்தலைவன் உரைத்தது. அதாவது தலைவன் கூற்றாக அமைகிறது.

விளக்கம் : கார்காலம் குறித்துப் பிரிந்த தலைமகன் அப்பருவத்திற்கு முன்னே வந்தமை தோன்ற தலைவிக்கு உரைப்பது.

ஆசிரியர் : மகிழ்ச்சி மாணவர்களே! நம் மாணவர்களின் அறிவுத்திறனுக்கு அளவே இல்லை என்பதை இக்கலந்துரையாடல் மூலம் அறியமுடிகிறது.

 

 

6. படத்துக்குப் பொருத்தமான திருக்குறளைக் கண்டுபிடிக்க.


) வில்லேர் உழவர் பகைகொளினும் கொள்ளற்க

சொல்லேர் உழவர் பகை.

) இரவென்னும் ஏமாப்பில் தோணி கரவென்னும்

பார்தாக்கப் பக்கு விடும்.

) உள்ளியது எய்தல் எளிதுமன் மற்றும்தான்

உள்ளியது உள்ளப் பெறின்.

[விடை: ) வில்லேர் உழவர் பகைகொளினும் கொள்ளற்க

சொல்லேர் உழவர் பகை.]

 

2. கவிதைக்குப் பொருந்தும் திருக்குறளைக் கண்டறிக.

கொடி தவித்ததைப் பாரி

அறிந்துகொண்டான்

மயில் தவித்ததைப் பேகன்

உணர்ந்து கொண்டான்

பிள்ளையின் பரிதவிப்பைத்

தாய் அறிவாள்

பளிங்கு முகத்தைப் படித்துக்கொள்

அப்படிப் படித்தவர்களைப்

பிடித்துக் கொள்.

) இகழ்ச்சியில் கெட்டாரை உள்ளுக தாம்தம்

மகிழ்ச்சியின் மைந்துறும் போழ்து.

) குறிப்பில் குறிப்புணர் வாரை உறுப்பினுள்

யாது கொடுத்தும் கொளல்.

) இளைதாக முள்மரம் கொல்க களையுநர்

கைகொல்லும் காழ்த்த விடத்து.

[விடை: ) குறிப்பில் குறிப்புணர் வாரை உறுப்பினுள்

யாது கொடுத்தும் கொளல்.

 

3. மகிழ்ச்சியின் மைந்துறும் போழ்து ------ நினை

) முகக்குறிப்பை அறிந்தவரை

) எண்ணியதை எண்ணியவரை

) மறதியால் கெட்டவர்களை

) சொல்லேர் உழவரை

 [விடை: ) மறதியால் கெட்டவர்களை)

 

4. பொருள் கூறுக.

) ஏமம் - பாதுகாப்பு

) மருந்துழைச் செல்வான் - நோயாளியிடம் சென்று மருந்தை முறைப்படி தருபவன் () மருந்தாளுநர்

 

5. இலக்கணக்குறிப்பு தருக.

) கெடுக - வியங்கோள் வினைமுற்று

) குறிப்புணர்வார் - விளையாலணையும் பெயர்

 

குறுவினா

1. மருத்துவத்தின் பிரிவுகளாகக் குறள் கூறுவன யாவை?

விடை

நோயாளி, மருத்துவர், மருந்து, மருந்தாளுநர்.

 

2. படைக்குப் பாதுகாப்பாக இருப்பவை எவை?

விடை

வீரம், மானம், முன்னோர் வழி நடத்தல், நம்பிக்கைக்கு உரியவர் ஆதல்.

 

3. பகைவர் வலிமையற்று இருக்கும்போதே வென்றுவிட வேண்டும் எனினும் குறட்பாவைக் கூறுக.

விடை

குறட்பா:

இளைதாக முள்மரம் கொல்க களையுநர்

கைகொல்லும் காழ்ந்த விடத்து.

 

4. எப்போது மருந்து தேவையில்லை என்று திருவள்ளுவர் கூறுகிறார்?

விடை

உண்டதும், செரித்ததும், அறிந்து உண்டால் மருந்து என ஒன்று வேண்டியது இல்லை.

 

சிறுவினா

1. உருவக அணிக்குத் திருக்குறள் ஒன்றை எடுத்துக்காட்டாகத் தந்து விளக்குக.

விடை

அணி இலக்கணம்:

உவமையையும் உவமேயத்தையும் வேறுபடுத்தாமல் இரண்டையும் ஒன்றுபடுத்துவது உருவக அணி ஆகும்.

சான்று:

இரவென்னும் மாப்பில் தோணி கரவென்னும்

பார்தாக்கப் பக்கு வடும்.

பொருத்தம்:

பிறரை எதிர்பார்த்து இரந்து வாழ்தல் என்பது பாதுகாப்பற்ற படகு என உருவகப்படுத்தப் பட்டுள்ளது. கொடாமை (கொடுக்காதது) என்பது பாறையாக உருவகப்படுத்தப்பட்டுள்ளது.

 

2. இளைதாக முள்மரம் கொல்க களையுநர்

கைகொல்லும் காழ்த்த இடத்து - இக்குறட்பாவில் பயின்று வரும் அணியை விளக்குக.

விடை

இக்குறட்பாவில் பிறிதுமொழிதல் அணி பயின்று வந்துள்ளது.

அணி இலக்கணம்:

செய்யுளில் உவமையை மட்டும் கூறி உவமேயத்தைப் பெறவைப்பத பிறிதுமொழிதல் அணியாகும்.

பொருத்தம்:

பகை சிறியதாக இருக்கும்போதே அதனை அழித்துவிட வேண்டும் (இல்லையெனில்) பகையை வளரவிட்டால் மிகத்துன்பம் தரும் என்னும் உவமேயம் பெறப்படுகிறது.

 

3. மருந்து, மருத்துவர், மருத்துவம் ஆகியன பற்றித் திருக்குறள் கூறுவன யாவை?

விடை

மருந்து : உண்டதும் செரித்ததும் அறிந்து உண்டால் மருந்து என ஒன்று வேண்டியதில்லை.

மருத்துவர் : நோய், நோய் வந்ததன் காரணம், நோய் நீக்கும் வழியை ஆராய்ந்து செயல்படுபவர் மருத்துவர்,

மருத்துவம் : நோயாளி, மருத்துவர், மருந்து, மருந்தாளுநர் - என்று மருத்துவம் நான்கு வகையில் அடங்கும்.

 

நெடுவினா

1. வாழ்வின் உயர்வுக்கு உறுதுணையாக நீங்கள் கருதும் குறட்பாக்கள் சிலவற்றை விளக்கிக் கட்டுரையாக்குக.

விடை

முன்னுரை

குறள்மறை தந்தருளிய வள்ளுவனை எந்நாளும் உள்ளுவோம். வாழ்வுக்கு இலக்கணம் தந்த முப்பாலை எப்பொழுதும் மறவோம். இத்தகைய வாழ்வியல் நூலில் மானுட உயர்வுக்கு உறுதுணையாக இருக்கும்

'உள்ளியது எய்தல் எளிதுமன் மற்றும்தான்

உள்ளியது உள்ளப் பெறின்

எப்பொழுதும் எண்ணியதையே எண்ணிக் கொண்டிருந்தால், எண்ணியதை அடைதல் எளிது.

'குறிப்பில் குறிப்புணர் வாரை உறுப்பினுள்

யாது கொடுத்தும் கொளல்'

முகக்குறிப்பில் அக(மன)க் குறிப்பை அறிந்து கொள்பவரை எதைக் கொடுத்தாவது துணையாக்கிக் கொள்ள வேண்டும்.

பகைஎன்னும் பண்பில் அதனை ஒருவன்

நகையேயும் வேண்டற்பாற்று அன்று"

பகை என்னும் பண்பற்றதை ஒருவன் விளையாட்டுக்குக் கூட விரும்பக் கூடாது.

இளைதாக முள்மரம் கொல்க களையுநர்

கைகொல்லும் காழ்த்த இடத்து"

சிறியதாக இருக்கையிலேயே முள்மரத்தைக் களைந்து விடுக. முதிர்ந்துவிட்டால் வெட்டுபவரின் கையைக் காயப்படுத்தும்.

'மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது

அற்றது போற்றி உணின்'

உண்டதும், செரித்ததும் அறிந்து உண்டால் மருந்து என ஒன்று உடலுக்கு வேண்டியதில்லை.

"இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து

கெடுக உலகியற்றி யான்"

பிறரிடம் கையேந்தி உயிர்வாழும் நிலை இருக்கும் எனில், அப்படி அந்நிலையை உருவாக்கிப் படைத்தவன் அலைந்து கெடட்டும்.

முடிவுரை:

வாழும் வாழ்க்கைக்கு உறுதுணையாக ஒவ்வொரு குறட்பாவம் நம்மை வழிநடத்தும். மனிதன் தன் வாழ்நாளில் ஒரேயொரு குறட்பாவின் பின்னணியில் வாழ்ந்தால் வையம் ஓங்கும்..

Tags : Chapter 5 | 11th Tamil இயல் 5 : 11 ஆம் வகுப்பு தமிழ்.
11th Tamil : Chapter 5 : Naalellam vinasei : Tamil Language Exercise - Questions and Answers Chapter 5 | 11th Tamil in Tamil : 11th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 11 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 5 : நாளெல்லாம் வினைசெய் : மொழி அறிவு - கேள்விகள் மற்றும் பதில்கள் - இயல் 5 : 11 ஆம் வகுப்பு தமிழ் : 11 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
11 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 5 : நாளெல்லாம் வினைசெய்