Home | 11 ஆம் வகுப்பு | 11வது தமிழ் | கேள்விகள் மற்றும் பதில்கள்

இயல் 5 : 11 ஆம் வகுப்பு தமிழ் - கேள்விகள் மற்றும் பதில்கள் | 11th Tamil : Chapter 5 : Naalellam vinasei

   Posted On :  17.08.2023 06:46 am

11 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 5 : நாளெல்லாம் வினைசெய்

கேள்விகள் மற்றும் பதில்கள்

11 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 5 : நாளெல்லாம் வினைசெய் : கேள்விகள் மற்றும் பதில்கள் | தமிழ்நாடு பள்ளி சமச்சீர் புத்தகங்கள்

இயல் 5

நாளெல்லாம் வினைசெய்

 

நம்மை அளப்போம்

 

பலவுள் தெரிக

1. பொருந்தாததைத் தேர்க.

) ஆனந்தரங்கர் எழுதிய நாட்குறிப்புகள் பன்னிரண்டு தொகுதிகளாக வெளிவந்துள்ளன.

) ஒவ்வொருநாள் நிகழ்வுக்கும் ஆண்டு, திங்கள், நாள், கிழமை, நேரம், நிகழ்விடம் ஆகியவற்றைக் குறிப்பிடாமல் செய்திகளை எழுதியுள்ளார்.

) ஆனந்தரங்கரின் நாட்குறிப்பு 18 ஆம் நூற்றாண்டின் தமிழ்ச் சமூகத்தைப் படம்பிடித்துக் காட்டுவதாக அமைந்துள்ளது.

) ஐரோப்பாவிலிருந்து இந்தியாவை அடையக் கப்பல்களுக்கு எட்டுத்திங்கள் தேவைப்பட்டன

i) , ii) , iii) , iv) ,

[விடை: iv) , ]

 

2. ஆனந்தரங்கருக்குத் தொடர்பில்லாத குறிப்பு எது?

) மொழிபெயர்ப்பாளர்

) இந்தியாவின் பெப்பிசு

) தலைமைத் துவிபாஷி

) உலக நாட்குறிப்பு இலக்கியத்தின் தந்தை

[விடை: ) உலக நாட்குறிப்பு, இலக்கியத்தின் தந்தை]

 

3. உறுபகை, இடன் ஆகிய சொற்களின் இலக்கணக்குறிப்பு

) உரிச்சொல்தொடர், ஈற்றுப்போலி

) வினைத்தொகை, இடவாகுபெயர்

) வினையெச்சம், வினைத்தொகை

) பெயரெச்சம், பண்புத்தொகை

[விடை : ) உரிச்சொல்தொடர், ஈற்றுப்போலி]

 

4. சரியானதைத் தேர்ந்தெடுக்க.

) வரை - மலை

) வதுவை திருமணம்

) வாரணம்யானை

) புடவி - கடல்

i) , , - சரி; - தவறு

ii) , , - சரி; - தவறு

iii) , , - சரி; தவறு

iv) , , - சரி; - தவறு

[விடை : i) , , - சரி; தவறு]

 

5. நேரொன்றாசிரியத்தளை எனப்படுவது

) காய் முன் நேர்

) காய் முன் நிரை

) கனி முன் நிரை

) மா முன் நேர்

 [விடை: ) மா முன் நேர்]

 

குறுவினா

1. மதீனா நகரம் ஒரு மாளிகை நகரம் என்னும் கூற்றினை உறுதிப்படுத்துக.

விடை

மேருமலையினைப் போன்று மதீனா நகரின் மேன்மாடங்கள் உயர்ந்திருந்தன.

அங்காடித் தொருக்களில் எழுந்த ஒலி, பெருங்கடல் ஒலி போன்று இருந்தது.

 மதீனா நகரின் வீதிகள் பேரண்டத்தைப் போன்று பரந்திருந்தன.

  மதீனாவில் சிறிதும் இடைவெளியின்றி மாளிகைகள் நெருக்கமாக அமைந்திருந்தன.

 

2. ஆனந்தரங்கரின் வருணனைத் திறனுக்கு ஓர் எடுத்துக்காட்டுத் தருக.

விடை

இங்கிலாந்துக்கும் பிரான்சுக்கும் போர் மூண்டதால் பொருளாதாரத் தட்டுப்பாடு தோன்றியது; மக்கள் கப்பல் வருகையை எதிர்பார்த்தனர்.

கப்பல்கள் வருகின்ற செய்தியைக் கேட்டதும் நஷ்டப்பட்ட திரவியம் மீண்டும் கிடைத்தாற் போலவும்,

 மரணமுற்ற உறவினர்கள் உயிர்பெற்று எழுந்து வந்தது போலவும்,

நீண்ட நாள் தவமிருந்து பத்திரப் பாக்கியம் கிட்டினாற் போலவும்,

தேவாமிர்தத்தைச் சுவைத்தது போலவும் மக்கள் சந்தோஷித்தார்கள். அதனைக் காகிதத்தில் எழுத முடியாது என்று வருணிக்கிறார்.

 

3. நெருங்கின, இரங்கி - உறுப்பிலக்கணம் தருக.

விடை

நெருங்கின - நெருங்கு + (ன்) +

நெருங்கு - பகுதி, (ன்) - இறந்தகால இடைநிலை, -பெயரெச்ச விகுதி.

இரங்கு - இரங்கு +

இரங்கு - பகுதி; - வினையெச்ச விகுதி.

 

4. "ஊனமில் ஊக்கமும் ஒளிரக் காய்த்தநல்

தீன்எனுஞ் செல்வமே பழுத்த சேணகர்"

- இப்பாடலடிகளில் ஒளிரக் காய்த்தது எது? பழுத்தது எது?

விடை

ஒளிரக் காய்த்தது - தானம், தவம், ஒழுக்கம், ஈகை, மானம்.

பழுத்தது - தீன் எனும் மார்க்கம்.

 

5. ஈரசைச் சீர்களுக்கு வழங்கப்படும் வேறு பெயர்கள் யாவை?

விடை

ஈரசைச் சீர்கள் நான்கு வகைப்படும்.

தேமா, புளிமா ஆகிய இரனர்டும் நேரீற்று ஈரசைச் சீர்.

கருவிளம், கூவிளம் இரண்டும் நிரையீற்று ஈரசைச் சீர்.

இந்நான்கு இயற்சீர்களும் ஆசிரிய உரிச்சீர்கள் ஆகும்.

 

சிறுவினா

1. "கலைவலார் மறையவர் கருத்தில் எண்ணியது” - யாது?

விடை

வளம்:

பழமையான மதீனா நகரம் கலைஞர்களும் மறையவர்களும் நினைக்கும் அளவு பொருள் வளம் கொண்டது. அங்கு எந்தப் பொருளும் இல்லையென்று சொல்வதற்கு இல்லை.

வள்ளன்மை:

கேட்போர் கேட்கும் பொருளை எல்லாம் வாரிவழங்கும் வள்ளல் தன்மை கொண்டவர்கள் உண்டு. அவ்வள்ளல்களுக்குக் குறையாத பெரும் புகழைப் பெற்றது மதீனா நகரம்.

 

2. "மறுவிலாத அரசென இருந்த மாநகர்” - உவமையைப் பொருளுடன் விளக்குக.

விடை

உவமை:

குறைவில்லாத மானுட அறத்தை உடைய செங்கோல் ஆட்சி நடத்திப் பெரும்புகழ் பெற்ற சிறந்த அரசன்.

உவம உருபு: என (போன்று).

உவமேயம்:

பகை, வறுமை, நீங்கிப் பொலிவுடன் இருந்தது மதீனா - என்று கூறுவது பொருத்தமாக உள்ளது.

 

3. ஆனந்தரங்கர் ஒரு வரலாற்று ஆசிரியர் என்பதைப் பாடப்பகுதிவழி எடுத்துக்காட்டுக.

விடை

ஆனந்தரங்கர் நாட்குறிப்பு 25 ஆண்டுகாலம் பதுவையிலும் தென்னிந்தியாவிலும் நிகழ்ந்த நிகழ்வுகளையும், பிரெஞ்சு பற்றி அறிய உதவ இவருடைய நாட்குறிப்புகள் திகழ்கின்றன.

10.09.1736 ஆம் நாட்குறிப்பு பிரெஞ்சு ஆளுநர் டூமாஸ் நாணய அச்சடிப்பு உரிமை பெற்றதை விளக்குகிறது.

பிரெஞ்சுக் கப்பல் தளபதி லெபூர்தொனே ஆங்கிலேயரின் கட்டுப்பாட்டில் இருந்த சென்னையை 1746 இல் கைப்பற்றியதைநாட்குறிப்பில் கூறியுள்ளார்.

தேவனாம்பட்டிணம் படையெடுப்பு, ஆம்பூர் போர் பற்றிய செய்திகள், தஞ்சைக் கோட்டை மீது நடத்திய முற்றுகை, இராபர்ட் கிளைவின் படையெடுப்பு, பதுச்சேரி முற்றுகை முதலியவற்றை ஒரு வரலாற்று ஆசிரியர் போன்று நாட்குறிப்பில் விளக்கியுள்ளார்.

 

4. மேகத்திடம் கூறுவது போலத் தோழி தலைவனுக்கு உணர்த்திய இறைச்சிப் பொருள் யாது?

விடை

தலைவனுக்குக் குறியிடம் சொல்லும் தோழி மேகத்திடம் சொல்வதுபோல் சொல்கிறாள்.

பெருங்கடலில் நீரை முகந்து கொண்டு செல்லும் மேகக் கூட்டமே!

வானம் இருளும்படி உலாவுகிறாய்!

போர் முரசம் போல முழங்குகிறாய்!

முறைமை தெரிந்து அறநெறி பிழையாமல் திறமையுடன் ஆளும் அரசனின் போர்க்களத்தில் திறமைமிக்க போர் வீரன் சுழற்றும் வாள் போல மின்னுகிறாய்!

முழக்கமும் மின்னலுமாக நாள்தோறும் வெற்று ஆரவாரம் செய்கிறாயா! அல்லது மழைபொழிவாயா!

தலைவி தினைப்புனம் காத்தல்:

பொன்னென மலர்ந்த வேங்கை - மலரைக் கட்டி, அணிந்து கொண்டிருக்கும் தோழியர் ஆயத்தோடு மெல்ல மெல்ல நடந்து குறமகள் தினைப்புனம் காப்பாள்.

தலைவி செயல்பாடுகள்:

தழலை, தட்டை ஆகிய கருவிகளில் ஒலியெழுப்பிப் பறவைகளை ஒட்டிக்கொண்டு காப்பாள். தலைவி அசோக இலைகளால் ஆன தழையாடை அணிவாள். இவ்வாறு குறமகள் தினைப்புனம் காக்கும் பகுதியிலும் மழையே நீ பொழிவாயா.

பாடலில் காணப்படும் இறைச்சிப் பொருள்:

தலைவி தினைப்புனம் காக்கும் இடத்துக்குத் தலைவன் வரலாம் என்பது குறிப்புப் பொருள் இதுவே, இறைச்சிப் பொருள்.

 

5. ஆசிரியப்பாவின் பொது இலக்கணத்துள் எவையேனும் நான்கினைக் கூறுக.

விடை

அசை - அகவலோசை கொண்டது.

அடி எல்லா அடிகளும் நான்கு சீர்களைப் (அளவடி) பெற்று வரும்.

சீர் - இயற்சீர் மிகுந்தும் பிறசீர் கலந்தும் வரும்.

தளை - ஆசிரியத்தளை மிகுந்தும் பிறதளை கலந்தும் வரும்.

அடிவரையறை - மூன்றடிச் சிற்றெல்லையாக அமையும்;

பேரெல்லை பாடுவோன் எண்ணத்திற்கேற்ப அமையும்.

 

நெடுவினா

1. தாம் வாழ்ந்த காலகட்டத்தின் நாகரிகப் புதையலாக நாட்குறிப்பைப் பயன்படுத்தியவர் ஆனந்தரங்கர் என்பதை நிறுவுக.

விடை

ஆனந்தரங்கர் 18 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர்.

இவருடைய நாட்குறிப்புகள் 25 ஆனர்டுகாலத் தென்னிந்திய வரலாற்றை வெளிப்படுத்துவன.

நாட்குறிப்பில் ஒவ்வொரு நிகழ்வுக்கும் ஆண்டு திங்கள், நாள், கிழமை, நேரம், நிகழ்விடம் ஆகியவற்றைக் குறிப்பிட்டுள்ளார்.

நாணயம் அச்சிடுதல்:

10.09.1736 ஆம் நாள் பிரெஞ்சு ஆளுநர் டூமாஸ் நாணய அச்சடிப்பு உரிமையைப் பெற்றார்.

இவ்வுரிமையைப் பெற ஆளுநர் பெருந்தொகை செலவழித்தார்.

எட்டு மாற்றுக்குக் குறைவானவராக நாணயங்களை வைத்திருப்பது தண்டனைக்குரிய குற்றம்.

வரலாற்று ஆசிரியர்போல் கூறியுள்ள நிகழ்ச்சிகள்:

தேவனாம் பட்டணத்தைக் கைப்பற்ற ஆங்கிலேயருடன் பிரெஞ்சு நடத்திய படையெடுப்பு,

ஆம்பூர் போர், புதுச்சேரி முற்றுகை.

இராபர்ட் கிளைவின் படையெடுப்பு, தஞ்சைக்கோட்டை முற்றுகை..

1758 ஆம் ஆண்டு சென்னைக் கோட்டையை லல்லி என்பார் முற்றுகை. அப்போது கவர்னர் மேஸ்தர்பிகட் லல்லியின் முற்றுகையை முறியடித்தார்.

வணிகம் பற்றிய செய்திகள்

ஐரோப்பாவிலிருந்து இந்தியாவை அடையக் கப்பல்களுக்கு ஆறுதிங்கள் தேவைப்பட்டன.

 11.11.1737 அன்று பிரான்சிலிருந்து பறப்பட்ட கப்பல் 08.05.1738 அன்று புதுச்சேரியை அடைந்தது.

கப்பல் வந்தவுடன் பீரங்கி முழுங்கும்.

ஒவ்வோர் ஆண்டும் துணிகளுக்காக வர்த்தகரிடமும் தரகரிடமும் ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டது.

துணி வர்த்தகத்திற்குப் பணத்திற்குப் பதிலாக இரசீது பெற்றுக் கொள்ளப்பட்டது.

ஆனந்தரங்கரின் திறமை:

1745 ஆம் ஆண்டு வீசிய பெருங்காற்று புதுச்சேரியைச் சூறையாடின.

மரங்கள் வீழ்ந்தன, வீடுகள் வெள்ளத்தில் மூழ்கின, மனிதர், மிருகங்கள் இறந்தன இவை பற்றியும், பாதிக்கப்பட்டோருக்கு கனகராயர் பெருஞ்சோறு அளித்ததையும் பெருமிதத்துடன் நாட்குறிப்பில் பதிவு செய்துள்ளார்.

முடிவாக,

ஆனந்தரங்கரின் இறுதிக்கால நாட்குறிப்புகள் ஆங்கிலேயர் புதுச்சேரிமீது நிகழ்த்திய முற்றுகையையும் புதுச்சேரியின் வீழ்ச்சியையும் விரிவாகப் பேசியுள்ளன. ஆனந்தரங்கரின் நாட்குறிப்பு ஒரு நாகரிகப் புதையல்.

 

2. மதீனா நகரம் ஒரு வளமான நகரம் என உமறுப்புலவர் வருணிக்கும் செய்திகளைத் தொகுத்து எழுதுக.

விடை

மாளிகை நகரம்:

மேருமலையினைப் போன்று மதீனா நகரின் மேன்மாடங்கள் உயர்ந்திருந்தன.

 அங்காடித் தெருக்களில் எழுந்த ஒலி கடல் ஒலி போன்று இருந்தது.

மதினா நகரின் வீதிகள் பிரபஞ்சத்தைப் போன்று பரந்திருந்தன.

மதீனாவில் இடைவெளியின்றி மாளிகைகள் நெருக்கமாக அமைந்திருந்தன.

கொடை நகரம்:

மதீனா நகரம் கலைஞர்களும் மறையவர்களும் நினைக்கின்ற பொருள் - வளம் கொண்டது.

எந்தப் பொருளும் இல்லை என்று சொல்வதற்கு இல்லை.

கேட்போர்க்கு வாரி வழங்கும் வள்ளல்கள் இருந்தனர்.

தோரணங்களும் கொடிகளும் காடுபோல நெருங்கி இருந்தன.

. மலை போன்ற யானைகள் நிறைந்திருந்தன.

இவற்றால் முழுமை பெற்ற பூமியைப் போல மதீனா பொன்னகராய்ப் பொலிந்தது.

மனை நகரம்:

மதீனாவில் வெண்சுண்ணச் சாந்து கொண்ட மாளிகைகள் ஒளிர்ந்தன.

வீதிகளில் பூக்கள் சிந்திக் கிடந்தன.

கொடுக்கும் விருந்தானது இனிமையுடன் நடந்தது.

மாநகரம்:

பகை, வறுமை, நோய் முதலியவை மதீனாவிலிருந்து ஓடிவிட்டன.

குறைவில்லாத மானுட அறத்தை உடைய செங்கோல் ஆட்சி நடத்திப் பெரும்புகழ் பெற்ற சிறந்த அரசரைப்போல பொலிவுடன் இருந்தது மதீனா.

 

3. பிம்பம் கதையின் வாயிலாகப் பிரபஞ்சன் தெளிவுப்படுத்தும் மனித முகங்களைப் பற்றி விவரிக்க.

விடை

முன்னுரை:

ஒவ்வொரிடமும் தனித்தன்மைகள், விருப்பங்கள் இருக்கின்றன. பிறரோடு உறாவாடும்போது அவரவர்க்கு ஏற்றார்போல், நமது உண்மையான முகத்தை மாற்றியும் மறைத்தும் கொள்கிறோம். இருப்பினும் மனசாட்சியானது நம்முடைய உண்மையான இயல்பை நினைவூட்டிக் கொண்டே இருக்கும்.

மனசாட்சியும் கதாபாத்திரமும்:

வீட்டின் மையப் பகுதியில் நாற்காலி மீது கதாபாத்திரம் அமர்ந்திருக்கிறார். மனசாட்சி அவரின் முன்னேநின்று வீட்டை நோட்டம் விடுகிறது. நோட்டம் விட்ட திசையில் கதாபாத்திரம் தின்று துப்பிய எனும்புத் துண்டுகள். வாரிக் குப்பைத்தொட்டியில் போட்டிருக்கலாம் அல்லது ஒரு துணியால் மூடியிருக்கலாம் என்று கதாபாத்திரம் நினைக்கிறது.

இடப்பக்கத்ததுத் தாழ்வார அறை

தாழ்வார அறைக்குள் மனசாட்சி சென்றது. கதாபாத்திரத்தினுடைய அப்பாவின் பழைய சட்டை, நைந்துபோனதை எடுத்து வந்தது. இதை இன்னமும் ஏன் வைத்திருக்கிறாய் என்றது மனசாட்சி, என்னுடைய சட்டைகள் என்னை முழுமையாகப் போர்த்தாதபோது அப்பாவின் சட்டையைப் போர்த்திக் கொள்வேன். குளிர் அடங்கிவிடும் என்றார் கதாபாத்திரம். இச்சட்டை எனக்குக் கவசம் போன்றது என்றார்.

வாசலை ஒட்டிய அறை:

வாசலை ஒட்டிய அறைக்குள் மனசாட்சி சென்றது. நைந்து போன பழைய கவுன் ஒன்றைக் கையில் எடுத்து வந்தது மனசாட்சி. இந்தக் கவுன் உனக்கெதுக்கு என்று கதாபாத்திரத்தைப் பார்த்துக் கேட்டது மனசாட்சி. அம்மாவுக்குப் பெண் குழந்தை இல்லை. அதனால், எனக்கு அணிவித்துப் பார்த்தாள். பொட்டு, பூ, ஜடை எனப் பலவாறு அலங்காரம் செய்து அழகு பார்த்தாள் என்றார் கதாபாத்திரம். ஆம்பிளையான என்னை இந்த வனாந்தரங்களில் மேயும் துஷ்ட மிருகங்கள் சீண்டாமல் இருக்க இதற்குள் நுழைந்து கொள்வேன் என்றார். இது ஒரு தப்புதல் ஆகும்.

கடைசியாக மனசாட்சி:

மனசாட்சி கடைசியாக வீட்டுக்குள் சென்றது. எதை எதையோ வாரிக்கொண்டு வந்து கதாபாத்திரத்தின்முன்னே கொட்டியது. இவை என் முகங்கள் என்றார் கதாபாத்திரம். இத்தனை முகங்கள் உனக்கெதுக்கு என்றது மனசாட்சி. பல சந்தர்ப்பங்களில் நான் அணிந்துகொள்ளும் முகங்கள் இவை என்றார் கதாபாத்திரம். மேலும், கதாபாத்திரத்தை மனசாட்சியும் மனசாட்சியைக் கதாபாத்திரமும் ஏமாற்றிக் கொள்ளுதலே இத்தகையவை என்றார். கதாபாத்திரம். கீழே கிடந்தவற்றுள் (முகங்களுள்) சில பதுசு, சில பழசு, சில தேவையற்றவை எனப்பல இருந்தன.

மனசாட்சியின் கேள்வி:

இவற்றில் சில முகங்களைச் சூழ்நிலை மாறி, காலமும் மாறி, பாத்திரமும் மாறி இடமும் மாறி மாற்றிக் (மாட்டிக்) கொள்ள மாட்டாயா என்றது மனசாட்சி. முகத்தை மாற்றி அமைக்க மாட்டேன் என்றும் ஏக்கு - , இசட்டுக்கு - இசட் தான் என்றார்.

அம்மா, மனைவி:

அம்மாவிடம் கூடவா மாறுமுகம் காட்டுவாய் என்றது மனசாட்சி. அம்மாவிடம் காட்டவும் ஒரு முகம் இருக்கிறது என்றார் கதாபாத்திரம். மனைவிடம் கூடவா மறுமுகம் காட்டுவாய் என்றது மனசாட்சி. உண்மையில் மனைவியிடம் காட்ட பல முகங்கள் தேவை என்றும் அவள் என்னிடம் காட்ட பல முகங்களைத் தயார் நிலையில் வைத்திருந்தாள் என்றார் கதாபாத்திரம். குடும்ப விஷயத்தில் வினாடிக்கு ஒரு மறை முகம் மாற்றும் சக்தி முக்கியமானது என்றார் கதா... ஆனால், இன்றுவரை என்முகத்தை மனைவியோ, மனைவி முகத்தை நானோ பார்த்ததில்லை. இவைப் போலிகள் என்று இருவருக்கும் தெரியும் என்றார் கதாபாத்திரம்.

இறுதியாக:

இப்போது போட்டிருப்பது கூட போலிதானா என்றது மனசாட்சி, போலிதான் என்றார் கதாபாத்திரம், கொஞ்சம் நேரம் கழித்து விடைபெற்றது மனசாட்சி. கதவைத் திறந்து வெளியே சென்ற மனசாட்சி இறுதியாகக் கேட்டது உனது முகம்தான் எது என்றது மனசாட்சி. எனக்கு முகமே கிடையாது - இது கதாபாத்திரத்தின் பதில்,

முடிவுரை:

காலத்தின் கட்டாயம் நமது நிலையைப் புலப்படுத்த பலவாறு மாறவேண்டி உள்ளது. உலகமே நாடக மேடை. நாம் ஒவ்வொருவரும் நடிகர்களே. மாறாதது மனமும் குணமுமே.

 

 

மொழியை ஆள்வோம்


சான்றோர் சித்திரம்


இரசிகமணி டி.கே. சிதம்பரநாதர் (1882-1954)

தமிழில் எல்லாம் உண்டு; தமிழின் கவிச் சுவைக்கு ஈடுமில்லை இணையுமில்லை; தமிழால் அறிவியல் மட்டுமன்று; அனைத்து இயல்களையும் கற்கமுடியும்எனச் சான்றுகளுடன் எடுத்துச் சொன்ன பெருந்தகை இரசிகமணி டி.கே. சிதம்பாநாதர். இவர், தமது இலக்கிய இரசிகத் தன்மையால் தமிழுக்கும் தமிழருக்கும் புத்துணர்வு ஊட்டியவர். டி. கே. சி யின் வீட்டுக் கூடத்தில் டி.கே.சி. (1882-1954) வட்டவடிவமான தொட்டிக் கட்டில், ஞாயிறுதோறும் மாலை ஐந்து மணிக்குக் கூடிய கூட்டம், இலக்கயித்தைப் பற்றிப்பேசியது. அவ்வமைப்பு 'வட்டத் தொட்டி' என்றே பெயர்பெற்றது. டி.கே.சி. இலக்கியங்களின் நயங்களைச் சொல்லச் சொல்லக் கூட்டத்திலுள்ள அனைவரும் தங்களை மறந்து இலக்கியத்தில் திளைப்பர். தமிழின் இனிமை என்பது மட்டும் அவர்கள் உள்ளங்களில் நிறைந்திருக்கும். வழக்கறிஞராகத் தொழில் புரிவதைவிடத் தமிழின்பத்தில் திளைப்பதையே டி.கே. சி. விரும்பினார். தமிழ்க்கலைகள், தமிழ் இசை, தமிழ் இலக்கியம் ஆகியவற்றின் சுவையையும் மேன்மையையும் தனித்தன்மையையும் எடுத்துச் சொன்னார். கடிதங்களிலும் அவற்றையே வியந்து எழுதினார். அவரதம் கடிதங்கள் இலக்கியத் தரம் கொண்டு புதிய இலக்கிய வகையாகவே கருதப்பட்டன. இதய ஒலி, கம்பர் யார்? முதலான நூல்களும் முத்தொள்ளாயிரம், கம்பராமாயணம் ஆகியவற்றுக்கு எழுதிய உரையும் அவர்தம் இலக்கிய நுகர்வுக்கடலின் சில அலைகள் எனலாம். சென்னை மாநில மேலவையின் உறுப்பினராகவும் அறநிலையத் துறையின் ஆணையராகவும் திகழ்ந்த டி.கே.சி. ஏற்றிய இலக்கிய ஒளி தமிழ் அழகியலை வெளிச்சப்படுத்தியது.

வினாக்களுக்கு விடையளிக்க.

1. அன்று, அல்ல என்பவற்றுக்கான பொருள் வேறுபாடு அறிந்து தொடர் அமைக்க.

விடை

நான் கண்ட காட்சி அது அன்று. இவை நல்ல பழங்கள் அல்ல.

 

2. சொல்லச் சொல்ல, திளைப்பர் - இலக்கணக்குறிப்புத் தருக.

விடை

சொல்லச் சொல்ல - அடுக்குத் தொடர்; திளைப்பர் - பலர்பால் வினைமுற்று.

 

3. ரசிகர் - தமிழ்ச்சொல் எழுதுக. மாநில மேலவை - ஆங்கிலக் கலைச்சொல் தருக.

விடை

நேயர்; Legislative Council.

 

4. வழக்கறிஞராகத் தொழில் புரிவதைவிடத் தமிழின்பத்தில் திளைப்பதையே டி.கே.சி விரும்பினார்.

விடை

எத்தொழில் புரிவதை விட எவ்வின்பத்தில் திளைப்பதை டி.கே.சி விரும்பினார்?

 

5. மேலவை, புத்துணர்வு, இச்சொற்களின் புணர்ச்சி வகையைக் கண்டறிக.

விடை

மேலவை = மேல் + அவை

விதி : 'உடல்மேல் உயிர் வந்து ஒன்றுவது இயல்பே' எனும் விதிப்படி (ல் + = ) மேலவை எனப் புணர்ந்தது.

புத்துணர்வு = புதுமை + உணர்வு

விதி : 'ஈறுபோதல்' எனும் விதிப்படி 'மை' விகுதி கெட்டு புது + உணர்வு என்றானது.

விதி : உயிர்வரின் உக்குறள் மெய்விட்டோடும்' எனும் விதிப்படி, புத் + உணர்வு, என்றானது.

விதி : "தன்னொற்று இரட்டல்' எனும் விதிப்படி, புத்த் + உணர்வு என்றானது.

`விதி : உடல்மேல் உயிர் வந்து ஒன்றுவது இயல்பே' எனும் விதிப்படி, (த் + = து) புத்துணர்வு எனப் புணர்ந்தது.

 

தமிழாக்கம் தருக.

The folk songs of Tamilnadu have in them a remarkable charm just as we find in the folk songs of any other country. But what is special in these Tamil songs is, they not only possess a native charm and the aroma of the soil but have preserved in them a certain literary and artistic quality. This is so because the people who speak the language of these folk songs, the Tamils, have had a great historical past and a wonderful literary tradition. Folk songs are so old and yet so full of life that they are always new and progressively modern. These songs were born several centuries ago; they are being born every generation; they will be born and reborn over and over again!

விடை

நாட்டுப்புறப் பாடல்

பிறநாடுகளில் காணப்படும் நாட்டுப்புறப் பாடல்களைவிட தமிழ்நாட்டின் நாட்டுப்புறப் பாடல்கள் குறிப்பிடத்தக்க அழகுடையதாக உள்ளது. ஆனால் தமிழக நாட்டுப்புறப்பாடல்களின் சிறப்பு என்னவென்றால், இயற்கை அழகு, மண்வாசனை அல்லாமல் இலக்கிய நயமும் கலைத்திறனும் கொண்டதாக உள்ளது. அது ஏனென்றால், மக்கள் பேசும் தமிழ்மொழியிலேயே நாட்டுப்புறப் பாடல்களும் உள்ளன. தமிழ்மொழி பழமையான வரலாற்றினையும் சிறப்பான இலக்கிய மரபினையும் உடையது. நாட்டுப்புறப் பாடல்கள் மிகவும் பழமை வாய்ந்தவை ஆயினும், வாழ்வில் கலந்து புதுமை உடையதாகவும், இக்காலத்திற்கு ஏற்றவாறும் மாற்றிக் கொள்கின்றன. இத்தகைய பாடல்கள் பல நூ ற்றாண்டுகளுக்கு முன்னரே தோன்றின. இப்பாடல்கள் ஒவ்வொரு தலைமுறையினருக்காகவே தோன்றுகின்றன. நாட்டுப்புறப் பாடல்கள் மீண்டும் தோன்றி, மறுமலர்ச்சிப் பெற்று மேலும் மேலும் (மென்மேலும்) வளரும்.


கீழ்க்காணும் பாடலின் முதலடியைக் கவனித்து. பிற அடிகளில் உள்ள சீர்களை ஒழுங்கு செய்க.

கோடையிலே இளைப்பாற்றிக் கொள்ளும்வகை கிடைத்த

குளிர்தருவே தருநிழலே நிழலகனிந்த கனியே

ஓடையிலேஊறுகின்றதீஞ்சுவைத்தண்ணீரே

உகந்ததண்ணீர்இடைமலர்ந்தசுகந்தமணமலரே

மேடையிலே வீசுகின்றமெல்லிய பூங்காற்றே

மென்காற்றில்விளைசுகமேகசுத்திலுறும்பயனே

ஆடையிலேஎனைமணந்தமணவாளாபொதுவில்

ஆடுகின்றஅரசேஎன் அலங்கலணிந்தருளே.


விடை:

கோடையிலே இளைப்பாற்றிக் கொள்ளும்வகை கிடைத்த

குளிர்தருவே தருநிழலே நிழல்கனிந்த கனியே

ஓடையிலே ஊறுகின்ற தீஞ்சுவைத்தண் ணீரே

உகந்ததண்ணீர் இடைமலர்ந்த சுகந்தமண மலரே

மேடையிலே வீசுகின்ற மெல்லியபூங் காற்றே

மென்காற்றில் விளைசுகமே சுகத்திலுறும் பயனே

ஆடையிலே எனைமணந்த மணவாளா பொதுவில்

ஆடுகின்ற அரசேஎன் அலங்கலணிந் தருளே.

 

படித்துப்பார்த்துப் படைத்துக்காட்டுக.

புத்தகத் திருவிழாவின் தொடக்க நிகழ்ச்சிக்கு வருகை தந்த சான்றோர் குறித்த அறிமுக உரை

பேரன்பு கொண்டோரே! பேரறிவுச் செல்வமே பெருஞ்செல்வம் எனக் கருதி வந்திருக்கும் சான்றோரே! இளைய தலைமுறையே! உங்கள் அனைவருக்கும் முதற்கண் வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

புத்தக வாசிப்பை மூச்சுக்காற்றாய்ச் சுவாசித்து வாழ்கின்ற படிப்பாளர்களாகிய உங்கள் முன்பு படைப்பாளர் ஒருவரை, மிகச் சிறந்த பண்பாளரை அறிமுகப்படுத்துவதில் பெருமகிழ்வு, கொள்கின்றேன்.

சிறுவயது முதலகத் தனக்குப் பெற்றோர்கள் அளித்த சில்லறைகளைச் சேகரித்து ஆண்டுதோறும் புத்தகம் வாங்கம் வழக்கத்தைக் கொண்டவர். புத்தகங்களோடு வாழ்ந்து வருபவர். புத்தகத்தை வாங்குவதோடு மட்டுமல்லாமல் முழுமையாக அவற்றை வாசிப்பதும் குறிப்பெடுப்பதும் இளையதலைமுறையினர்க்குத் தன்னம்பிக்கை அளிக்கும் கூட்டங்களில் பேசுவதும் எனப் பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வருபவர்.

ஷேக்ஸ்பியர் என்னும் மாபெரும் படைப்பாளனின் பிறந்த நாளான ஏப்ரல் 23 உலகம் முழுவதும் புத்தகநாளாகக் கொண்டாடப்படுகிறது. அதற்குக் காரணம் அவரிடம் இருந்த வாசிப்புப் பழக்கமே ஆகும்.

அவ்வகையில் வாசிப்பையே தம் வாழ்க்கையாய்க் கொண்டிருக்கும் நம் சிறப்பு விருந்தினர் நமக்கெல்லாம் முன்மாதிரியானவர். அவர்வழியில் பத்தக வாசிப்பைத் தொடர்வோம்! புதியதோர் உலகம் படைப்போம்! வெல்வோம்!

 

உங்கள் பகுதி நூலகத்தில் வாசகர்களுக்கு நூலக உறுப்பினர் அட்டை வழங்க வருகைதரும் அறிஞர் ஒருவரைக் குறித்து அறிமுக உரை எழுதுக.

விடை

அறிமுக உரை

நூலே வாழ்க்கையாகவும்

நூலகமே வாழிடமாகவும்

கற்றலுக்கும் வாழ்க்கைக்கும்

இடையே இடைவெளியின்றி விளங்கும்

நமது ஊர் நூலகத்தின் உறுப்பினர்களே! உங்கள் அனைவருக்கும் வணக்கமும் வாழ்த்துகளும்!

நமது ஊரின் நூலகத்திற்கு நமது அழைப்பிற்கு இசைவு தந்து அவரது திருக்கரங்களால் உறுப்பினர் அட்டை வழங்க வந்திருக்கும் புலவர் திரு. தமிழரசு அவர்களைப் பற்றி ஒருசில தகவல்களை உங்கள் முன் வைக்கிறேன்.

அண்ணல் அம்பேத்கர் வெளிநாட்டில் படிக்கச் சென்றபோது பல்கலைக்கழக நூலகத்தில் நுழையும் முதல் ஆளாகவும், நூல்நிலையம் மூடும் போது வெளியே வரும் கடைசி ஆளாகவும் இருப்பாராம். படிக்கும் இடமும் படுக்குமிடமும் பக்கத்திலேயே இருக்க வேண்டும் என்று எண்ணியவர் அம்பேத்கர். தனக்கு நடக்கவிருந்த அறுவை சிகிச்சையை அடுத்த நாள் தள்ளிப்போடக்கூடாதா, அதற்குள் தான் ஒரு பத்தத்தின் சில பகுதிகளைப் படித்து விடுவேன் என்று அமெரிக்க மருத்துவரிடம் வேண்டினாராம் அறிஞர் அண்ணா. இவர்களைப் போன்றே புலவர் தமிழரசு பத்தகங்களின் மீது தீராக்காதல் கொண்டவர்.

இவரது திருக்கரங்களால் நூலக உறுப்பினர் அட்டையைப் பெறுவது நமக்குப் பெருமையே புலவர் தமிழரசு அவர்களை வருக! வருக! என இருகரம் கூப்பி வரவேற்போம். நன்றி!

நூல் பல கற்போம்! நூற்படி நிற்போம்!!

 

இலக்கிய நயம் பாராட்டுக.

செந்நெலும் கரும்பும் விளைந்தனவே - நல்ல

தேன்பொழி மலர்களும் விரிந்தனவே

இன்னலும் பசியும் போயொழிக - தேசம்

எழிலுடன் கூடியே நலமுறுக

 

பிரிவுகள் பேசியே பூசலிட்ட - பழம்

பேதமை தனைத்தள்ளி அனைவருமே

ஒருதனிக் குடும்பமாய் வாழ்ந்திடுவோம் - நம்முள்

ஒற்றுமை ஓங்கிடச் செய்திடுவோம்

 

தமிழன் திருநாள் பொங்கலென்றால் - அதில்

தமிழன் பண்புகள் பொங்குமன்றோ?

புவியெலாம் சேர்ந்தொரு வீடதிலே - யாரும்

பறம்பிலை என்றசொல் தமிழன்றோ?

 

யாதும் ஊரெனச் சாற்றியதும் - மக்கள்

யாவரும் கேளிர் என்றதுவும்

மேதினிக் குரைத்தவர் நம்முன்னோர் - இன்று

வேற்றுமை நாமெண்ணல் சரியாமோ?

- பெ. தூரன்

விடை

தலைப்பு: ஒற்றுமை.

திரண்ட கருத்து:

நெல்லும் கரும்பும் விளைந்து, தேன்தந்த மலர்கள் விரிந்து, துன்பமும் பசியும் ஒழிந்து நாடு நலமுடன் விளங்க உயர்வு தாழ்வின்றி குழப்பம் விளைவிக்கும் அறியாமையை ஒழிப்போம். எல்லோரும் ஓர் குடும்பம் என்ற ஒற்றுமையை ஓங்கச் செய்வோம். தமிழர் திருநாளாம் பொங்கல் நன்னாளில் நம்மிடையே தமிழ்ப்பண்பு பொங்கட்டும். எல்லோரும் வாழும் இப்புவியில் மாற்றார் யாருமில்லை என்று தமிழ்ப் பெருமை பேசட்டும். எல்லா ஊரும் நம் ஊரே என்றும், எல்லா உறவும் நம் உறவே என்றும் உரக்க உரைத்து வேற்றுமையைத் தகர்த்து வாழ்வோம்.

மோனை நயம்:

குயவனின் கைவண்ணம் பானை

புலவனின் கைவண்ணம் மோனை

செய்யுளில் முதல் எழுத்து ஒன்றி வரத் தொடுப்பது மோனை.

சான்று: பிரிவுகள் - பூசலிட்ட; ஒருதனிஒற்றுமை

எதுகை நயம்:

ஓவியத்திற்கு வேண்டும் தூரிகை

பாடலுக்கு வேண்டும் எதுகை

செய்யுளில் முதல் எழுத்து அளவொத்து நிற்க, இரண்டாம் எழுத்து ஒன்றி வரத் தொடுப்பது எதுகை.

சான்று: தேனிபொழி - இனினல்; யாதும் - மேதினி

அணிநயம்:

கழுத்துக்கு அழகு மணி

பாடலுக்கு அழகு அணி

புவியெலாம் சேர்ந்தொரு வீடதிலே

யாதும் ஊரெனச் சாற்றியதும்' இவ்வரிகளில் கவிஞர், தமிழனையும், தமிழ்நாட்டையும், பண்பாட்டுக் கூறுகளுள் ஒன்றான ஒற்றுமையின் முன்னோடியாகவும், உயர்ந்தவர்களாகவும் கூறியிருக்கிறார். எனவே, இப்பாடலில் உயர்வு நவிற்சி அணி பயின்று வந்துள்ளது.

கற்பனை நயம்:

செந்நெல் விளைந்தது. மலர்கள் மலர்ந்தன, துன்பமும் பசியும் போயின, பிரிவுகள் தள்ளிப்போயின் ஒரே குடும்பமாயினர், தமிழ்ப் பண்புகள் மேலோங்கின, யாவரும் ஒன்றாயினர். எல்லாரும் உறவாயினர் என்று பெ. தூரன் அவர்களின் கற்பனை வளம் பாராட்டுக்குரியது.

 

 

மொழியோடு விளையாடு

 

கருத்துப்படத்தைப் புரிந்துகொண்டு பத்தியாக எழுதுக.


விடை

பத்தி

தமிழ் இலக்கணம் ஐந்து வகைப்படும். அவை: எழுத்திலக்கணம், சொல் இலக்கணம், பொருள் இலக்கணம், யாப்பு இலக்கணம், அணி இலக்கணம் என்பனவாகும். பொருள் இலக்கணம் அகப்பொருள், புறப்பொருள் என இரண்டுவகைப்படும். அகப்பொருளுக்குஐந்து திணைகள் உண்டு. அவை: குறிஞ்சி, முல்லை, மருதம் நெய்தல், பாலை என்பனவாகும்.

ஒவ்வொரு திணைக்கும் முதற்பொருள், கருப்பொருள், உரிப்பொருள் உண்டு. முதற்பொருள் என்பது நிலமும் பொழுதும் ஆகும். பொழுது - சிறுபொழுது, பெரும்பொழுது என மேலும் இருவகைப்படும். சிறுபொழுது - வைகறை, காலை, நண்பகல், எற்பாடு, மாலை, (இரவு) யாமம் என்பனவாகும். பெரும் பொழுது - கார், குளிர், முன்பனி, பின்பனி, இளவேனில், முதுவேனில் என்பனவாகும்.

 

எண்ணங்களை எழுத்தாக்குக.


விடை

குறிஞ்சி நிலம் குளிர்ச்சி நிறைந்த நிலம்

வாரி வழங்கும் வள்ளல்கள் வாழ்ந்த நிலம்

பாரி வள்ளல் வாழ்ந்த பறம்பு மலை

தேனெடுத்தல் குலத்தொழில்

வேட்டை ஆடுதல் விருப்பமான தொழில்

தேனோடு தினை திகட்டாத உணவு

கோட்டையயும் இல்லை கொடிகளும் இல்லை.

கூடிவாழும் கொள்கை கொண்டு ஆடிப்

பாடி கூடிவாழும் குறிஞ்சி மக்கள்

 

புதிர்களுக்கான விடைகளைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

(கம்பு,மை,வளை, மதி, இதழ், ஆழி)

1. எலியும் நுழையும்; எழிலரசி கையும் நுழையும்.

விடை : வளை

2. அடிக்கவும் செய்யலாம்; கோடைக்குக் கூழாகவும் குடிக்கலாம்.

விடை : கம்பு

3. கண்ணிலும் எழுதலாம்; வெண்தாளிலும் எழுதலாம்.

விடை : மை

4. அறிவின் பெயரும் அதுதான்; அம்புலியின் பெயரும் அதுவேதான்.

விடை : மதி

5. பூவின் உறுப்பும் நானே; புன்னகையின் பிறப்பிடமும் நானே.

விடை : இதழ்

6. வண்டியையும் இயக்கும்; பெரும் கப்பலையும் தாங்கும்.

விடை : ஆழி

 

நிற்க அதற்குத் தக

 

நாகரிகம்

கலைவாணன் தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருக்கிறான். கடைக்குச் சென்ற அவன் தாத்தா பை நிறையப் பொருள்களைத் தூக்கிக் கொண்டு வருகிறார். சுமை தாங்காது உதவிக்கு அழைக்கிறார். தொலைக்காட்சியில் வைத்தகண் வாங்காமல் நிகழ்ச்சியொன்றினைப் பார்த்துக்கொணர்டிருக்கும் அவன் என்ன செய்ய வேண்டும்?

விடை

கடைப்பிடிப்போம்

வயதான பெரியோர்களுக்கு உதவி செய்யும் பழக்கம் இருக்க வேண்டும்.

பெரியோர்களின் வார்த்தைகளை மறுக்காமல் உடன்பட்டுச் செய்ய வேண்டும்.

தாத்தா அழைத்தவுடன் தொலைக் காட்சியை அணைத்து விட்டு, தாத்தாவுடன் பொருள்கள் வாங்க உடன் செல்ல வேண்டும்.

 

உங்களது வீட்டிற்கு விருந்தினர் ஒருவர் வந்திருக்கிறார். முன்னறிவிப்பின்றி வந்திருக்கும் அவர் மிகவும் களைப்புடன் காணப்படுகிறார். நீங்கள் அவரை எவ்விதம் வரவேற்பீர்கள்?

விடை

'வாருங்கள்' என்று கூறி வரவேற்க வேண்டும்.

வீட்டினுள் இருக்கை எடுத்துப் போட்டு அமரச் செய்ய வேண்டும்.

அவரது களைப்பு நீங்குவதற்குத் தண்ணீர் அருந்தக் கொடுக்க வேண்டும்.

இன்முகத்துடன் நலம் விசாரிக்க வேண்டும்.

 

கலைச்சொல் அறிவோம்

ஆவணம் - Document

படையெடுப்பு - Invasion

உப்பங்கழி - Back water

பண்பாடு - Culture

ஒப்பந்தம் - Agreement

மாலுமிSailor

 

அறிவை விரிவு செய்

1. மறைக்கப்பட்ட இந்தியா - எஸ். இராமகிருஷ்ணன்

2. பிரபஞ்சன் சிறுகதைகள்

 

இணையச் செயல்பாடு

தமிழ் மின் நிகண்டு

ஒத்த சொல் அறிவோம்!


படிகள்:

கொடுக்கப்பட்டிருக்கும் உரலி / விரைவுக்குறியீட்டைப் பயன்படுத்தி "Vimal Thesusrus for Taணி தமிழ் மின் நிகண்டு' என்னும் செயவியைப் பதிவிறக்கி நிறுவிக் கொள்க.

இப்போது திரையில் தோன்றும் 'தேடும் சொல்' என்னும் பெட்டியில் தேவையான சொல்லை இட்டு அதற்கொத்த பல சொற்களை அறிக.

எடுத்துக்காட்டாக 'கூதிர்' என்னும் சொல்லை உள்ளீடு செய்து பனிக்காற்று, குளிர், குளிர்காலம் போன்ற வழக்கில் உள்ள சொற்களை அறிக.

செயல்பாட்டின் படிநிலைக்கான படங்கள் :


செயல்பாட்டிற்கான உரலி

https://play.google.com/store/apps/detailsë7d-com.tamilva.visualthesarurs_mobileapp

படங்கள் அடையாளத்திற்கு மட்டுமே

Tags : Chapter 5 | 11th Tamil இயல் 5 : 11 ஆம் வகுப்பு தமிழ்.
11th Tamil : Chapter 5 : Naalellam vinasei : Questions and Answers Chapter 5 | 11th Tamil in Tamil : 11th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 11 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 5 : நாளெல்லாம் வினைசெய் : கேள்விகள் மற்றும் பதில்கள் - இயல் 5 : 11 ஆம் வகுப்பு தமிழ் : 11 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
11 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 5 : நாளெல்லாம் வினைசெய்