Home | 11 ஆம் வகுப்பு | 11வது தமிழ் | கேள்விகள் மற்றும் பதில்கள்

இயல் 6 : 11 ஆம் வகுப்பு தமிழ் - கேள்விகள் மற்றும் பதில்கள் | 11th Tamil : Chapter 6 : Palkalai niruvu

   Posted On :  17.08.2023 06:51 am

11 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 6 : பல்கலை நிறுவு

கேள்விகள் மற்றும் பதில்கள்

11 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 6 : பல்கலை நிறுவு : கேள்விகள் மற்றும் பதில்கள் | தமிழ்நாடு பள்ளி சமச்சீர் புத்தகங்கள்

இயல் 6

பல்கலை நிறுவு


நம்மை அளப்போம்

 

பலவுள் தெரிக

1. கூற்று 1 : தஞ்சைப் பெரியகோவிலிலுள்ள ஓவியங்களை எஸ்.கே.கோவிந்தசாமி கண்டறிந்தார்.

கூற்று 2 : அங்குள்ள சோழர் காலத்து ஓவியங்கள் ஃபிரெஸீகோ வகையைச் சார்ந்தவை.

) கூற்று 1 சரி, கூற்று 2 தவறு

) கூற்று இரண்டும் தவறு

) கூற்று 1 தவறு, கூற்று 2 சரி

) கூற்று இரண்டும் சரி

[விடை: ) கூற்று இரண்டும் சரி]

 

2. '' எனினும் பெயரில் கவிஞர் ஆத்மாநாமால் வெளியிடப்பட்டது; 'கவிதைக் கிரீடம்' என்று போற்றப்படுவது

) சிற்றிதழ், குற்றாலக் குறவஞ்சி

) கவிதை நூல், திருச்சாழல்

) நாளிதழ், நன்னகர் வெண்பா

) கட்டுரை நூல், குற்றாலக்கோவை

[விடை: ) சிற்றிதழ், குற்றாலக் குறவஞ்சி]

 

3. கீழுள்ளவற்றைப் பொருத்தி விடை நேர்க.

i) விரியன் - 1. தண்டை

ii) திருகுமுருகு - 2. காலாழி

iii) நாங்கூழ்ப்புழு - 3.சிலம்பு

iv) குண்டலப்பூச்சி - 4. பாடகம்

) 3, 4, 2, 1

) 3, 1, 4, 2

) 4, 3, 2, 1

.) 4, 1, 3, 2

[விடை: ) 3, 1, 4, 2]

 

4. பெண்கள் விளையாடும் விளையாட்டு வகைகளுள் ஒன்று .

) சாழல்

) சிற்றில்

) சிறுதேர்

) சிறுபறை

[விடை: ) சாழல்]

 

5. ஈறுபோதல், முன்னின்ற மெய்திரிதல், தனிக்குறில் முன் ஒற்று உயிர்வரின் இரட்டும், உடல்மேல் உயிர்வந்து ஒன்றுதல் ஆகிய வரிசையில் புணர்ந்த சொல்

) வெற்றிடம்

) மூதூர்

) நல்லாடை

) பைந்தளிர்

[விடை: ) நல்லாடை]

 

குறுவினா

1. இந்தியக் கட்டடக் கலையின் மூன்று வகைகள் யாவை?

விடை

இந்தியக் கட்டடக் கலையின் மூன்று வகைகள்:

நாகரம், வேசரம், திராவிடம் என்பன.

தஞ்சைக் கோவில் எண்பட்டை வடிவில் கட்டப்பட்ட திராவிடக்கலைப் பணியாகும்.

 

2. ஒலோகமாதேவீச்சுரம் கோவில் கல்வெட்டில் காணலாகும் பெண் அதிகாரிகளின் பெயர்களிலிருந்து நீங்கள் அறிவது யாது?

விடை

ஓலோகமாதேவீச்சுரம் கோவில் கல்வெட்டில் காணப்படும் பெண் அதிகாரிகளின் பெயர்கள்:

எருதந் குஞ்சர மல்லி - (இராசராசன் காலம்)

அதிகாரச்சி சோமயன் அமிர்த வல்லி - (இராசாதிராசன் காலம்) என்பன.

அறியும் செய்தி:

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே பெண்கள் அதிகாரிகளாகப் பணிபுரிந்திருக்கின்றனர்.

"ஆணுக்குப் பெண் இளைப்பில்லைக் காணி' என்ற பாரதியின் கனவே அந்நாட்களிலேயே நடந்தேறியுள்ளது.

 

3. அயர்ந்து, எழுந்த - பகுபத உறுப்பிலக்கணம் தருக.

விடை

அயர்ந்து - அயர் + த்(ந்) + த் +

அயர் - பகுதி, த் - சந்தி, 'ந்' ஆனது விகாரம், த் - இறந்தகால இடைநிலை, - வினையெச்ச விகுதி.

எழுந்த - எழு + த்(ந்) + த் +

எழு - பகுதி, த் - சந்தி, ‘ந்ஆனது விகாரம், த் - இறந்தகால இடைநிலை, - பெயரெச்ச விகுதி.

 

4. தொடர் அமைத்து எழுதுக: அன்றொருநாள், நிழலிலிருந்து.

விடை

அன்றொருநாள் கோடையில் வெளியே சென்று கொண்டிருந்த போது சாலையோர மர  நிழலிலிருந்து என்னை யாரோ அழைப்பதை உணர்ந்தேன்.


சிறுவினா

1. ஃபிரெஸ்கோ ஒவியங்கள் கற்றளிக் கோவில்கள் குறித்து நீவீர் அறிவன யாவை?

விடை

ஃபிரெஸ்கோ ஓவியங்கள்:

ஃபிரெஸ்கோ என்ற இத்தாலியச் சொல்லுக்குப் புதுமை என்று பொருள். சுண்ணாம்புக்காரைப் பூச்சின் மீது, அதன் ஈரம் காயும் முன் வரையப்படும் பழமையான ஓவியம்.

சான்று: அஜந்தா, எல்லோரா, சித்தன்னவாசல்,

கற்றளிக் கோயில்கள்:

செங்கற்களை ஒன்றன்மேல் ஒன்றாக அடுக்கிக் கட்டுவது போல கருங்கற்களை அடுக்கிக் கட்டுவதற்குக் கற்றளி என்று பெயர். ஏழாம் நூற்றாண்டில் 2 ஆம் நரசிம்மவர்மன் என்ற பல்லவ மன்னன் உருவாக்கியது.

சான்று: மகாபலிபுரம் கடற்கரைக் கோயில், காஞ்சி கைலாசநாதர் கோயில், பனைமலைக் கோயில்.

 

2. கலைச்சொல்லாக்கத்திற்கும் அகராதிக்கும் உள்ள வேறுபாடு யாது?

விடை

கலைச்சொல்லாக்கம்

பொருள் தெரிந்த பிறமொழிச் சொற்களுக்குத் தாய்மொழியில் முன்பே உள்ள சொற்களை அடையாளம் காட்டி தேவையானவிடத்துப் புதிதாகச் சொற்களை உருவாக்கித் தருவதாகும்.

சான்று = Smartphone - திறன்பேசி

அகராதி

பொருள் தெரியாத சொற்களுக்குப் பொருள் கூறுவதாகும்.

சான்று: குழல் - கூந்தல்.

 

3. சிங்கி பெற்ற பரிசுப் பொருட்களாகக் குற்றாலக் குறவஞ்சி கூறுவன யாவை?

விடை

சேலந்து நாட்டில் குறிசொல்லிப் பெற்ற சிலம்பு.

கோலத்து நாட்டார் கொடுத்த சன்மானம் தண்டை.

பாண்டியனார் மகளுக்குக் குறி சொன்னதற்காகப் பெற்ற பாடகம்.

கண்டிய தேசத்தில் முன்பு குறத்தி பெற்ற காலாழி பீலி.

இவையாவும் குறவஞ்சி பெற்ற பரிசுப் பொருட்கள் ஆகும்.

 

4. உணவும் உறக்கமும் அணில் கனவாம்; உங்கள் கனவை உங்கள் சொற்களில் விளக்குக.

விடை

என் வருங்காலக் கனவு:

நான் +2 படித்து தேர்ச்சி பெற்றபிறகு சென்னையில் ஒரு சிறந்த கல்லூரியில் BE சேர்ந்து நல்ல முறையில் படித்து, பிறகு IAS தேர்வு எழுதி, தேர்ச்சிப் பெற்று, பணியையும் பெற்று ஏழை மக்களுக்கு பலன் ஏதும் பாராமல் என்னால் ஆன தொண்டுகளைச் செய்வேன்.

 

5. தமிழகப் பெண்கள் பாடிக்கொண்டே விளையாடும்போது வெளிப்படுத்தும் மேன்மையான கருத்துகளாகத் திருச்சாழல் உணர்த்துவன யாவை?

விடை

திருச்சாழல் என்பது மொழி விளையாட்டின் மூலம் இறைவனின் பெருமையைப் பெண்கள் பேசும் செய்யுள் வகை. சாழல் என்பது பெண்கள் விளையாடும் விளையாட்டு.

ஒரு பெண் இறைவனைப் பழிப்பது போலவும், இன்னொருத்தி இறைவனது செயலை நியாயப்படுத்துவது போலவும் பாடப்படுவது.

ஒருவர் : சுடுகாட்டைக் கோயிலாகவும், புலித்தோலை ஆடையாகவும் உடைய உங்கள் தலைவனுக்குத் தாய், தந்தை இல்லை என்கிறார்.

மற்றொருவர் : எங்கள் இறைவனுக்குத் தாய் தந்தை இல்லை. ஆனால் அவர் சினத்தால் உலகம் கல்பொடியாகிவிடும் என்கிறார்.

ஒருவர் : அக்காலத்தில் பாற்கடலைக் கடைந்தபோது உண்டாகிய நஞ்சை சிவன் உண்டதன் காரணம் கூறு என்றார்.

மற்றொருவர் : நஞ்சை இறைவன் உண்டிருக்காவிட்டால், பிரம்மன் விஷ்ணு முதலிய தேவர்கள் அன்றே அழிந்திருப்பார்கள் அதனால் நஞ்சு உண்டான் என்றார்.

ஒருவர் : உங்கள் இறைவன் முடிவு, இல்லாதவன் இருந்தும், ஆனந்த வெள்ளத்தில் அழுந்தச் செய்த பதுமை என்ன?

மற்றொருவர் : உன்னை ஆனந்த வெள்ளத்தில் அழுந்தச் செய்த எங்கள் இறைவனது திருவடிகள் தேவர்களுக்கும் மேன்மையான பொருள் என்றார்.

இவ்வாறு இறைவன் இயல்பையும், மேன்மையையும் திருச்சாழல் என்னும் பாடல் மூலமாக மாணிக்கவாசகர் பாடியுள்ளார்.

 

நெடுவினா

1. கல்லும் கதை சொல்லும்' - என்னும் தொடர் தஞ்சைப் பெரிய கோவிலுக்குப் பொருந்துவதை விளக்கி எழுதுக.

விடை

காலத்தை வென்ற கலை:

கலை ஒரு சமூகத்தின் நாகரிகம்: தமிழகத்தில் பழங்காலத்திலேயே சிற்பம், கட்டம், ஆடல், பாடல் முதலிய கலைகள் சிறப்புற்றிருந்தன. ஆயிரம் ஆனர்டுகள் கடந்தும் கம்பீரமாய்க் காட்சி அளிக்கும் தஞ்சைப் பெரிய கோவிலின் கட்டடக்கலை நம்மை வியப்படையச் செய்கிறது.

கேரளாந்தகன் வாயில்:

தஞ்சைக் கோயிலின் கோபுரங்களில் உயரமானது கேரளாந்தகன் கோபுரம். இராசராசன் 989 ஆம் ஆனர்டு சேர நாட்டை வெற்றி கொண்டதன் வகையில் கேரளாந்தகள் கோபுரம் எனப் பெயரிடப்பட்டுள்ளது.

இராசராசனும் - தஞ்சைக் கோயிலும்:

11 ஆம் நூற்றாண்டில் சோழநாட்டை ஆட்சிப்புரிந்த இராசராசன் தஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டினான். 1003 ஆம் ஆண்டு தொடங்கி 1010 ஆம் ஆண்டு வரை கோயிலைக் கட்டினான்.

கோயிலின் சிறப்பு:

தஞ்சைப் பெரிய கோயில் நம் நாட்டிலுள்ள கற்றளிக் கோயில்களிலேயே பெரியதும் உயரமானதும் ஆகும். இராசராசனால் இக்கோயில் ஏறத்தாழ ஏழு ஆண்டுகள் முயன்று கட்டி முடிக்கப்பட்டது. இக்கோயில் விமானம் 216 அடி உயரம், கருவறை விமானம் 13 தளங்களையும் உடையது.

கோயில் அமைப்பு:

தஞ்சைப் பெரிய கோயில் கருவறையின் இரு தளங்களில் உள்ள சுற்றுக்கூடம், சாந்தார நாழிகைப் பகுதிச் சுவர்களில் ஓவியங்கள் கண்டறியப்பட்டுள்ளன.

கோயில் நந்தி:

இங்கு காணப்பெறும் பெரிய நந்தியும் மண்டபம் நாயக்கர் காலத்தவை. சோழர் காலத்து நந்தி தற்போது தென்புறச் சுற்றில் உள்ளது.

பிரமந்திரக் கல்:

கோயிலின் சிகரத்தில் பிரமந்திரக்கல் ஒற்றைக்கல் அன்று. கருவறை விமானத்தின் மேல் எண்பட்டை அமைப்பில் ஆரஞ்சுப் பழச்சுனைப் போன்று எட்டுக் கற்கள் நெருக்கமாக வைத்து ஒட்டப்பட்டவை. வெளிக்கோபுரம் உயரமாகவும், உட்கோபுரம் உயரம் குறைவாகவும் என இரண்டு வகைக் கோடபுரங்களைக் கட்டும் புதிய மரபைத் தோற்றுவித்தான் இராசராசன்.

முடிவாக,

கல்லும் கதை சொல்லி விட்டதுகேட்ட நமது நெஞ்சம் பெருமிதம் கொள்கிறது.

 

2. சிம்பொனித் தமிழரும் ஆஸ்கர் தமிழரும் இசைத்தமிழுக்கு ஆற்றிய பணிகளை நும் பாடப்பகுதி கொண்டு தொகுத்தெழுதுக,

விடை

முன்னுரை:

தமிழகத்தின் இசை முத்திரைகள் இருவர். ஒருவர் சிம்பொனித் தமிழர்; மற்றறொருவர் ஆங்கர் தமிழர் ஆகிய இருவரையும் பற்றி இக்கட்டுரையில் கார்போம்.

) சிம்பொனித் தமிழர்:

அன்னக்கிளியில் ஆரம்பித்து இசை இன்று அகில உலகமும் துள்ளி எழச் செய்தவரும், தூங்கச் செய்தவரும் சிம்பொனித் தமிழர் ஆவார். இவர் தேனி மாவட்டம், பண்ணையபுரத்தில் தோன்றியவர். உழைக்கும் மக்களின் துள்ளல் இசையையும், பழந்தமிழர் இசையினையும் கலந்து தந்தவர். திரையிசையில் கருநாடக இசையை உணர வைத்தவர். 1970களில் பிறமொழிப் பாடல்களைக் கேட்ட செவிகளைத் தம் பக்கம் திருப்பியவர் இளையராஜா. 1980களில் சமூக மாற்றங்களின் குறியீடாக இவரது இசை இருந்தது. இவர் சாமானியரையும் தம்வசம்படுத்தியவர். செய்யுளின் யாப்போசையைப் புரிந்து இசை வழங்கியவர்.

இசைத்தொகுப்பு:

எப்படிப் பாடுவேன், காற்றைத்தவிர ஏதுமில்லை இவரின் இசைத்தொகுப்பு. மகிழச்சி, ஏக்கம், வலி முதலான உணர்வுகளுக்கு இந்தியா 24 மணி நேரம் என்னும் குறும்படத்தின் மூலமாக இசை வடிவம் கொடுத்தவர்.

ஆன்மீக இசை:

திருவாசகப் பாடல்களுக்கு ஆரட்டோரியோ வடிவம், ரமணமாலை, கீதாஞ்சலி, கன்னடத்தில் மூகாம்பிகை இசைத்தொகுப்பு, மீனாட்சி ஸ்தோத்திரம் என்பன இவரது இசைத்திறமைக்குச் சான்றுகள்.

இராஜாவின் இசை நுணுக்கம்:

மேற்கத்திய இசை பயின்றவர் இராஜா. கருநாடக இசை வடிவமும், கல்யாணி இராகத்தின் ஆரோகண சுரங்களைக் கொண்டும் "கலைவாணியே உன்னைத்தானேஎன்ற பாடல் மெட்டமைத்தவர். மூன்று சுரங்களில் ஒரு பாடல், நான்கு கருவிகளில் ஒரு பாடல், அரை நாளில் ஒரு படத்திற்கு இசை அமைக்க இவரால் மட்டும் தான் முடியும்.

முடிவாக:

இசையின் ராஜா இளையராஜா, ஒளிப்படக்கலைஞர், கவிஞர், பாடகர், எழுத்தாளர் ஆவார். பதின்மூன்று நாட்களிலேயே சிம்பொனி இசைப்பணி சாதனை செய்து உலகப்புகழ் பெற்றவர் இளையராஜாவே ஆவார்.

) ஆஸ்கர் தமிழர்:

அகிலம் போற்றும் ஆஸ்கர் தமிழர் முதல்முதலாக ரோஜா படத்தில் இசையமைத்து தேசிய விருது பெற்றவர். இளமையோ வறுமை; தந்தையோ இசைக்கலைஞர். அவரோடு இசைப்பயணம் சிறுவயதில். நான்கு வயதில் இசையை இசைக்க ஆரம்பித்தவர்.

சோதனை:

மொட்டாகி, பூவாகி மலரும் தருவாயில் தந்தையை இழந்தார். குடும்பச்சுமை, பசி, பட்டினி இவற்றிற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்க இரவெல்லாம் இசைப்பணிக்கும், பகலெல்லாம் பள்ளிக்கும் சென்றார், படிப்பு பாதியில் நின்றது. இசையால் இளைஞர்களை ஆடச் செய்த இவர் 90 களில் உலக இளைஞர்களை இணைத்தவர். நாட்டுப்புற இசை, கருநாடக இசை, இரண்டையும் கலந்து கணினி இசையை உருவாக்கியவர்.

சாதனை:

பல சோதனைகளைக் கடந்து 2009 ஆம் ஆண்டிற்கான சிறந்த திரைப்படப் பின்னணி இசைக்கான ஆஸ்கர் விருதும், சிறந்த திரையிசைப் பாடலுக்கான விருதும் உலக அரங்கில் சாதனை நாயகனான .ஆர்.இரகுமானுக்கு வழங்கப்பட்டது.

இரகுமானின் தாளம் உருவாக்கம்:

பாடலுக்கான சூழலை உள்வாங்கி, தாளக்கட்டை உருவாக்கி, பாடலுக்கான மெட்டை வெளிக்கொணர்வார்.

இசையமைப்புத் தொகுதிகள்:

வந்தே மாதரம், ஜன கண மன என்பன இவரது இசைத்தொகுதிகளின் நாட்டுப்பற்றின் வெளிப்பாடுகளேயாம். மலையாளம், தெலுங்கு, கன்னடம் முதலான மொழிப் படங்களுக்கும் இந்தியில் இசையமைத்தும் முத்திரைப் பதித்தவர். சூஃபி இசையை இவர்தான் அறிமுகப் படுத்தியவர்.

விருதுகள்:

ஸ்லம்டாக் மில்லியனர்க்காக கோல்டன் குளோப் விருதும், கிராமிய விருதும் பெற்றார். இந்திய அரசு பத்மபூஷன் விருதும், தமிழ்நாடு அரசு கலைமாமணி விருதும் அளித்தது.

இறுதியாக:

தமிழர் வாழ்வின் எல்லா நிலைகளிலும் இசைக்கென்று ஓர் தனி இடமுண்டு. அதில் இளையராஜாவுக்கும், .ஆர்.இரகுமானுக்கும் சிம்மாசனம் உண்டு.

 

மொழியை ஆள்வோம்

 

சான்றோர் சித்திரம்


நாடகத்தமிழை வளர்த்த நல்லறிஞராய்த் திகழ்ந்த சங்கரதாசு சுவாமிகள், நாடகங்களை உருவாக்கிய ஆசிரியர்களுக்கெல்லாம் முன்னோடியாகவும், முதல்வராகவும் விளங்கினார். பெரும்புலவர்கள், சுவாமிகளின் பாடல் திறத்தையும் உரையாடல் தரத்தையும் உணர்ந்து நெஞ்சாரப் பாராட்டியுள்ளனர். இளமையில் புலவரேறு பழநி தண்டபாணி சுவாமிகளைத் தேடிச் சென்று, சங்கரதாக சுவாமிகள் தமிழறிவைப் பெற்ற இவர் தம்முடைய 16ஆவது வயதிலேயே கவியாற்றல் பெற்று வெண்பா, கலித்துறை இசைப்பாடல்களை இயற்றத் தொடங்கிவிட்டார். இரணியன், இராவணன், எமதருமன் ஆகிய வேடங்களில் நடித்துப் புகழடைந்தபோது அவருடைய வயது 24. வர்ணாம், சந்தம் பாடுவதில் வல்லராயிருந்த சுவாமிகளின் 'சந்தக்குழிப்புகளின்' சொற்சிலம்பங்களைக் கண்டு அக்காலத்தில் மக்கள் வியப்புற்றனர்.

சங்கரதாஸ் சுவாமிகள் சமரச சன்மார்க்க சபை' என்னும் நாடக குழுவை உருவாக்கினார். இந்தக் குழுவில் பயிற்சி பெற்ற எஸ்.ஜி.கிட்டப்பா நாடகக் கலைத்துறையில் பெரும்புகழ் எட்டினார். மேடை நாடகம் தரம் குன்றிய நிலையில், மதுரை வந்த சுவாமிகள், 1918இல், 'தத்துவ மீனலோசனி வித்துவ பால சபை' என்னும் நாடக அமைப்பை உருவாக்கி ஆசிரியர் பொறுப்பேற்றார். இங்கு உருவானவர்களே டி.கே.எஸ். சகோதரர்கள், நாடகத்தின் மூலம் மக்களுக்கு அறவொழுக்கத்தையும் தமிழின் பெருமையையும், பண்பாட்டையும் தம் சுவைமிகுந்த பாடல், உரையாடல் வழியே உணர்த்திய சங்கரதாசு சுவாமிகளை நாடகத்துறைக் கலைஞர்கள், 'தமிழ் நாடகத் தலைமை ஆசிரியர்' என்று உளமகிழ்ந்து போற்றுகின்றனர்.

வினாக்கள்:

1. தமிழ்ச்சொல்லாக்குக - சன்மார்க்கம், வித்துவ பால சபை.

2. நாடகத் தமிழை வளர்த்த நல்லறிஞராய்த் திகழ்ந்தவர் சங்கரதாசு சுவாமிகள் - அடிக்கோடிட்ட வினையாலணையும் பெயரை வினைமுற்றாக்கித் தொடரை எழுதுக.

3. ஈட்டினார் - பகுபத உறுப்பிலக்கணம் தருக.

4. தன்னன்ன தானேன் தன்னானே - இந்தச் சந்தத்தில் பொருள் பொதிந்த இரண்டு அடிகள் கொண்ட பாடல் எழுதுக.

.கா: இந்திய நாட்டினில் வாழ்வதையே

இன்பமாய்க் கருதிடல் வேண்டுமப்பா...

5. தமிழ் நாடகத் தலைமையாசிரியர் - சிறப்புப்பெயருக்கான காரணத்தை அளிக்க.

விடைகள்:

1. சன்மார்க்கம் - நன்னெறி; வித்துவ பால சபை - கலை பயில் இளைஞர் அமைப்பு,

2. நாடகத் தமிழை வளர்த்த நல்லறிஞராய் சங்கரதாசு சுவாமிகள் திகழ்ந்தார்.

3. ஈட்டினார் - ஈட்டு + இன் + ஆர்

பகுதி - ஈட்டு, இன் - இறந்தகால இடைநிலை. ஆர் - பலர்பால் வினைமுற்று விகுதி,

4. தமிழ் நாட்டினில் வாழ்வதையே

தவமாய்க் கருதிடல் வேண்டுமப்பா!...

5. நாடகத்தின் மூலம் மக்களுக்கு அறவொழுக்கத்தையும் தமிழின் பெருமையையும் பண்பாட்டையும் சுவை மிகுந்த பாடல், உரையாடல் வழியே உணர்த்திய சங்கரதாசு சுவாமிகளை நாடகத்துறைக் கலைஞர்கள் தமிழ்நாடகத் தலைமை ஆசிரியர் என்று உளமகிழ்ந்து போற்றுகின்றனர்.

 

தமிழாக்கம் தருக.

The oldest documented forms of art are visual arts, which include creation of images or objects in fields including today painting, sculpture, print making, photography and other visual media. Music, theatre, film, dance and other performing arts, as well as literature and other media such as interactive media, are included in a broader definition of art or the arts. Until the 17th century, are referred to any skill or mastery and was not differentiated from crafts or sciences. Art has had a great number of different functions throughout its history, making its purpose difficult to abstract or quantify to any single concept. This does not imply that the purpose of Art is "vague", but that it has had many unique, different reasons for being created.

விடை:

பழமையான வரையறுக்கப்பட்ட கலையே காட்சிக்கலையாகும். இக்கலைகள் இன்றைய வண்ணம் தீட்டம், சிலை வடித்தல், அச்சிடுதல், புகைப்படமெடுத்தல் மற்றும் பிறவும் காட்சிக் கலைகளாகும். இசை, திரையரங்கம், படம், நாட்டியம் மற்றும் பிற கலைகள் திறத்தை வெளிப்படுத்துவன. இவை கலைகள் சார்ந்த வரையறைக்குள் உட்படுத்தப்பட்டுள்ளன. 17ஆம் நூற்றாணர்டு வரை கலை அறிவியிலிருந்தும், கைவினையிலிருந்தும் வேறுபடுத்தப்படவில்லை. கலை அதன் பழைய செயல்பாடுகளிலிருந்து மாறுபாடுகளைக் கொண்டது. கலை உருவாக்கத்தினை அளவிடுவது கடினம். இதனால் கலை குறிக்கோளற்றது என்று கூற முடியாது. எனவே, கலைகள் மாறுபட்ட காரணங்களுக்காக உருவாக்கப்பட்டது எனில் மிகையாகாது.

 

தொடர் மாற்றம்

1. மூன்று நாளிகள் கல்லூரிக்கு விடுமுறை. மாணவர்கள் தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோயிலுக்குச் சென்றனர். சிற்பங்களைக் கண்டு மகிழ்ந்தனர். (கலவைத் தொடராக மாற்றுக)

விடை

மூன்று நாள்கள் விடுமுறையாதலால், மாணவர்கள் தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோயிலுக்குச் சென்று, சிற்பங்களைக் கண்டு மகிழந்தனர்.

 

2. தஞ்சைக் கோவில் எண்பட்டை வடிவில் கட்டப்பட்ட திராவிடக் கலைப்பாணியாகும். (வினாத் தொடராக்குக)

விடை

தஞ்சைக் கோவில் எவ்வடிவில் கட்டப்பட்ட திராவிடக் கலைப்பாணியாகும்?

 

3. என்னே! மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சிற்பக்கலை. (செய்தித் தொடராக்குக)

விடை

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சிற்பக்கலை மிகவும் அழகானது.

 

4. நான் வாரத்தின் இறுதி நாள்களில் நூலகத்திற்குச் செல்வேன்,

(பொருள் மாறா எதிர்மறைத் தொடராக மாற்றுக)

விடை

நான் வாரத்தின் இறுதி நாள்களில் நூலகத்திற்குச் செல்லாமல் இரேன்.

 

மெய்ப்புத் திருத்துநர் பணி வேண்டி நாளிதழ் முதன்மையாசிரியர்க்குக் கீழ்க்காணும் விவரங்களுடன் தன்விவரக்குறிப்பு ஒன்று எழுதுக.

(பெயர், வயது, பாலினம், பிறந்த நாள், பெற்றோர், முகவரி, அலைபேசி எண், மின்னஞ்சல், முகவரி. அறிந்த மொழிகள், எடை, உயரம். குருதிவகை, கல்வித்தகுதி)

விடை

அனுப்புதல்

. அமுதன்,

எனர் 2/22, காந்தி நகர்,

மகத்துவபுரம், கன்னியாகுமரி.

பெறுதல்

உயர்திரு முதன்மையாசிரியர் அவர்கள்,

தினத்தந்தி' நாளிதழ்,

சென்னை.

மதிப்பிற்குரிய ஐயா,

பொருள் : மெய்ப்புத் திருத்துநர் பணி வேண்டுதல் தொடர்பாக.

வணக்கம்.

தங்கள் நாளிதழில் மெய்ப்புத்திருத்துநர் பணிக்கு ஆள் தேவை என நாளிதழ் மூலம் அறிந்தேன். எனவே, உடன் விண்ணப்பிக்கிறேன். என்னைத் தேர்வு செய்வீர்கள் எனில் என்கடன் பணி செய்து கிடப்பதே எனும் முதுமொழிக்கேற்ப நல்வழியில் நடந்து கொள்வேன் என்று உறுதியளிக்கிறேன்.

நன்றி!

05.07.2022

கன்னியாகுமரி

 

இப்படிக்கு,

தங்கள் உண்மையுள்ள,

. அமுதன்.

 

தன்விபரக்குறிப்பு

பெயர் : . அமுதன்

வயது : 25

பாலினம் : ஆண்

பிறந்த நாள் : 04.05.1994

இயல்

பெற்றோர் : அழகேசன் - அமுதா

முகவரி : 2/22, காந்திநகர், மகத்துவடம், கன்னியாகுமரி.

அலைபேசி எண் : 98321 44123

மின்னஞ்சல் முகவரி : amudhamamudhu@gmail.com

அறிந்த மொழிகள் : தமிழ், ஆங்கிலம், இந்தி.

எடை : 65 கிலோ

உயரம் : 176 செ.மீ.

குருதி வகை : A+

கல்வித் தகுதி : இளங்கலை (தமிழ்)

 

இலக்கிய நயம் பாராட்டுக.

தண்டலை மயில்கள் ஆட, தாமரை விளக்கம் தாங்க,

கொண்டல்கள் முழவின் ஏங்க, குவளைகணி விழித்து நோக்க,

தெண் திரை எழினி காட்ட, தேம்பிழி மகர யாழின்

வண்டுகள் இனிது பாட, மருதம் வீற்றிருக்கும் மாதோ,

- கம்பர்

விடை

தலைப்பு: மருத நிலம்.

திரண்ட கருத்து:

குளிர்ச்சி நிறைந்த தலைகளை உடைய மயில் ஆட, தாமரைத் தன் மலர் விளக்குகளை ஏந்த, மேகங்கள் இடிகளாகிய மத்தளங்களைக் கொட்ட, குவளை மலர்கள் தன் கண்களை விழித்துப் பார்க்க தெளிந்த நீர் அலைகள் திரைச்சீலை போல் காட்சியளிக்க, வண்டுகள் மகரயாழை இசைப்பது போல இயற்கைக் காட்சியளிக்கிறது.

மோனை நயம்:

நா ருசிப்பது தேனை

நாம் ரசிப்பது மோனை

பாடல் அடிகளின் சீர்களின் முதல் எழுத்து ஒன்றி வருவது மோனை.

சான்று: தண்டலை தாமரை

எதுகை நயம்:

எது கை கொடுக்காவிட்டாலும்

எதுகை கை கொடுக்கும்

பாடல் அடிகளின் சீர்களில் முதல் எழுத்து அளவொத்து இருக்க, இரண்டாம் எழுத்து ஒன்றி வருவது எதுகை.

சான்று: தண்டலை கொண்டல்கள் தெண்டிரை வண்டுகள்

அணி நயம்:

கழுத்துக்கு அழகு மணி

பாட்டுக்கு அழகு அணி

"கொண்டல்கள் முழவின் ஏங்க இவ்வரியில் மேகங்கள் மோதிக்கொள்வது மத்தாளங்களின் முழக்கத்தை ஒத்திருக்கிறது. எனவே, இதில் உயர்வு நவிற்சி அணி இடம் பெற்றுள்ளது.

கற்பனை நயம்:

மருதநிலக் காட்சியில் குளிர்ச்சியான தலையுடைய மயில் ஆடவும், தாமரைத்தன் மலர் விளக்குகளை ஏந்தவும்.... என்பன போன்ற வர்ணனைகளை அவிழ்த்துவிட்டு மருத நிலத்தமிழனை மயங்கச் செய்கிறார் கம்பர்.

 


மொழியோடு விளையாடு

 

எண்ணங்களை எழுத்தாக்குக.


விடை

நீருக்குள் எங்கள் உலகம்

நீந்துதல் எங்கள் பழக்கம்

நீரின்றி நாங்கள் இல்லை

நீங்கினால் நாங்கள் இல்லை

அழுக்குதான் எங்கள் உணவு

அழுதாலும் ஆதரவில்லை எங்(மீன்)களுக்கு

துள்ளும் எங்களைக் கொல்லத்

தூண்டில் போடுவது நல்லதோ

 

தேர்க்கவி (இரத பந்தம்   தேர்க்கவி எழுதிப்பழகு

சித்திரகவி வகைகளுள் ஒன்று தேர்க்கவி. தேர் வடிவத்தினுள் சொற்களை அமைத்துப்பாடுவது.


கல்செல் நீ நிமிர்ந்து நட

கற்பந்து நீயே தகர் தடை

தீ மிதி நிமிர்ந்து நில்


பாடு தேடு உடம்படு

நேயம் தேடு சுபம்

தேயம் தேடல் சுபம்

 

விடுபட்ட இடத்தில் அடுத்து வரவேண்டிய சொற்களைக் கண்டறிந்து எழுதுக.

1. தனிமொழி - அறிவு; தொடர்மொழி - வண்ண மயில்; பொதுமொழி - பலகை (பல + கை)

2. கார்காலம் - ஆவணி புரட்டாசி குளிர்காலம் - ஐப்பசி, கார்த்திகை; முன்பனி - மார்கழி, தை

3. எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி.

4. எழுத்து, அசை, சீர், தளை, அடி, தொடை,

5. சேரன் - வில்; சோழன் - பலி; பாண்டியன் - மீன்.

 

செய்து கற்போம்

நீவிர் வசிக்கும் பகுதிக்கு அருகில் உள்ள வழிபாட்டுத்தலங்கள், சுற்றுலாத்தலங்கள் போன்றவற்றிற்குச் சென்று அங்கு உமக்கு கிடைக்கும் கலையனுபவங்களைக் கட்டுரையாக்குக.

 

நிற்க அதற்குத் தக


நம் நாட்டின் பெருமைகளில் ஒன்று தொன்மைச் சின்னங்கள். அவை நம் வரலாற்றைப் பறைசாற்றுபவை. கோவில்களிலும் தொன்மையான இடங்களிலும் கல்வெட்டுகளிலும் சிலர் கிறுக்குவதை, சிதைப்பதைப் பார்த்திருக்கிறீர்களா? நம்முடைய பெருமையை நாமே சிதைக்கலாமா? அவற்றை அழியாமல் பாதுகாக்க நாம் என்ன செய்யப்போகிறோம்? பட்டியலிடுக.

விடை

நம் முன்னோர்கள் வாழ்ந்ததையும், வாழப்போவதையும் அன்றே உணர்த்தினர். தொன்மை வாய்ந்த சிற்பங்கள், சின்னங்கள் எல்லாம் நம் மூதாதையர்கள் உருவாக்கியதால் அவற்றை நாம் தாய்தந்தை போல பாதுகாக்க வேண்டும். சிதைக்காமல், கிறுக்காமல் அவ்வப்போது வர்ணங்கள் பூசி, சிதிலம் அடைந்ததை சரிசெய்து கோயில் தரும் உணவுப்பொருட்களை உண்டபிறகு சிலைகள் மீது தடவாமல், அவற்றின் மீது சாயாமல் பாதுகாக்க வேண்டும். கல்லும் கவிபாடும்; கலையும் கதை சொல்லும்.

 

கலைச்சொல் அறிவோம்

நுண்கலைகள் - Fine Arts

ஆவணப்படம் - Documentary

கல்வெட்டு - Inscription/Epigraph

தானியக் கிடங்கு - Grain Warehouse

பேரழிவு - Disaster

தொன்மம் - Myth

 

அறிவை விரிவு செய்

சிவானந்த நடனம் - ஆனந்த குமாரசுவாமி

தஞ்சைப் பெருவுடையார் கோயில் - இராசராசேச்சுரம் - கோயில் நுட்பம் -  குடவாயில் பாலசுப்பிரமணியன் ஆத்மாநாம் கவிதைகள்

 

இணையத்தில் காண்க

http://www.thebigtemple.com/

architecture1.html - 

தஞ்சை கோவிலின் இணையத்தளம்

Photos on art - and-archaeology web site - 

தொல்லியல் துறையின் இணையத்தளம்

http://www.tamilvu.org/ta/courses-degree

-co12-c0123-

html-co1233l1-15035 - '

குறவஞ்சி இலக்கியம்.

http://www.tamilvu.org/slet

/l4100/l4100pd2.jsp?

bookid=116&pno=338 - 

சாழல் வடிவம் - விளக்கம்

 

சாலைப் பாதுகாப்பு

எட்டாவது படிக்கையில், கால் எட்டாத பருவத்தில் இருசக்கர ஊர்தியை ஓட்டும் மகனைப் பெருமையுடன் பார்க்கும் பெற்றோர். கல்லூரி படிக்கும்போது நச்சரித்து வாங்கிய புதுவண்டியை மிகவேகமாக ஓட்டுவதைப் பார்க்கும்போது அடிவயிறு கலங்குவது உண்மை!. வேகம், விவேகம் அன்று! எந்தச் சாலையில், எந்தப் பகுதியில் எவ்வளவு வேகத்தில் போகவேண்டும் என்பதை அரசு, குறியீடுகளாக நட்டுவைத்திருப்பதைப் பார்த்து அதன்படி பயணித்தல் நல்லது. முன்னால் செல்லும் ஊர்திகளை முந்தும் பெருவிருப்பத்துடன் தங்கள் வண்டிகளை விரட்டுவதில் கிளர்ச்சி அடைகின்றனர் இக்காலத்தில் சிலர்,

பச்சை விளக்கு எரிகிறதா - செல்க!

மஞ்சள் விளக்கு எரிகிறதா - விரைவாகச் செல்க!

சிவப்பு விளக்கு? - காவலர் இல்லையெனில் மிகவிரைவாகச் செல்க..என்பதான போக்கு மாறவேண்டும். சாலையில் ஊர்தி ஓட்டுவதில் இராணுவக் கட்டுப்பாடு வேண்டும்.

தலைக் கவசம் - உயிர்க் கவசம்

"தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போய்விட்டது' என்ற கூற்று. முற்றிலும் பொருந்துவது ஊர்தி ஓட்டுநர்களுக்குத்தான். அரசும் நீதிமன்றமும் அடுக்கடுக்காக அறிவுறுத்தியும், அபராதம் போட்டும் கவசம் அணிவதில் சுணக்கம்! சிலர் வாங்கி வைத்த கவசத்தை இருக்கைக்கு அடியிலும், சிலர் பெட்ரோல் கலனிலும் வைத்துவிட்டுக் காவலரைப் பார்க்கும்போது மட்டும் ஒற்றைச் கையால் எடுத்து மாட்டும் அழகு இருக்கிறதே! ஏமாற்றுகிறார்களாம்! வரும் தலைமுறைக்கு வழிகாட்டியாக அல்லவா இருக்க வேண்டும்.

கீழ்வருவன தவிர்க்க

மது அருந்தி ஊர்தி ஓட்டுதல்

மக்கள் நெரிசலில் வேகமாக ஓட்டுதல்

முறையான உரிமம் வாங்கும் முன் ஊர்திகளை ஓட்டுதல்

ஒளிர்தலும் எரிதலும்

ஊர்தியில் உள்ள விளக்குகளைச் சரியாகப் பயன்படுத்தும் முறையைப் போக்குவரத்து அலுவலகங்களிலும் ஓட்டுநர் பள்ளிகளிலும் முறைப்படி கற்றுக்கொண்டு அவற்றைப் பயன்படுத்தவேண்டும். ஊர்தியின் வேகம் குறைதல், வலப்பக்கமாகவோ, இடப்பக்கமாகவோ திரும்புவதற்கான சைகைகள் போன்றவற்றுக்கு இவ்விளக்குகள் பயன்படுகின்றன.

முகப்பு விளக்குகள் ஒளிரவேண்டும் எரியவிடக்கூடாது!

எதிரில் வரும் ஊர்தி ஓட்டுநர்களின் கண்களைக் கூசவைக்கும் அளவுக்கு முகப்பு விளக்கு விளக்குகளை எரியவிடுவது அவர்களைத் தடுமாற வைக்கும். ஆயுத பூசைக்குப் பூ வைத்துப் பொட்டு வைக்கும்போது மறக்காமல் முகப்பு விளக்கின் நடுவில் கருப்புப் பொட்டு வைத்துவிடுவது நன்று?

போதையின் பாதை

மதுஓட்டுநருக்கு, சாலைக்கு, உயிருக்குக் கேடு! போதையில் ஊர்தி ஓட்டுதல் விதிமீறல்.

போக்குவரத்துச் சட்டப்படி ஆறுமாத சிறைத் தண்டனை அல்லது ரூபாய் 2000/- தண்டத் தொகை (முதல் முறை).

மீண்டும் போதையில் செய்யும் பயணம், இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை அல்லது ரூபாய் 3000/- தண்டத் தொகை, அல்லது இரண்டுக்கும் வழிவகுக்கும்.

கவனத்தில் கொள்க

தலைதெறிக்கும் வேகத்தில் செல்லாதீர்கள் - தலை தெறிக்கும்

நடைமேடை நடப்பவர்களுக்கே ஓட்டுநர்களுக்கு இல்லை!

போதையுடன் ஓட்டாதீர்கள் - வாழ்க்கையின் பாதை முடிந்துவிடும்!

உரிமத்துடன், விவேகமுடன் ஓட்டுங்கள் - வாழ்க்கை ஒளிரும்!

 

Tags : Chapter 6 | 11th Tamil இயல் 6 : 11 ஆம் வகுப்பு தமிழ்.
11th Tamil : Chapter 6 : Palkalai niruvu : Questions and Answers Chapter 6 | 11th Tamil in Tamil : 11th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 11 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 6 : பல்கலை நிறுவு : கேள்விகள் மற்றும் பதில்கள் - இயல் 6 : 11 ஆம் வகுப்பு தமிழ் : 11 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
11 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 6 : பல்கலை நிறுவு