இயல் 6 : 11 ஆம் வகுப்பு தமிழ் - மொழி அறிவு - கேள்விகள் மற்றும் பதில்கள் | 11th Tamil : Chapter 6 : Palkalai niruvu
இலக்கண தேர்ச்சி கொள்
1. கலைச்சொல்லாக்கம் - பொருள் தருக.
விடை
கலைச்சொல்லாக்கம் என்பது பொருள் தெரிந்த பிறமொழிச் சொற்களுக்குத் தாய்மொழியில் முன்பே உள்ள சொற்களை அடையாளம் காட்டியும் தேவையானவிடத்துப் புதிதாகச் சொற்களை உருவாக்கியும் தருவதாகும்.
2. கலைச்சொல்லாக்கப் பணிகள் தொடங்குவதற்குரிய விதிமுறைகள் யாவை?
விடை
❖ ஆக்கப் பெறும் சொல் தமிழ்ச் சொல்லாக இருத்தல் வேண்டும்.
❖ பொருள்பொருத்தமுடையதாக, அதே நேரத்தில் செயலைக் குறிப்பதாக அமைதல் வேண்டும்.
❖ வடிவில் சிறியதாக, எளிமையாக இருத்தல் வேண்டும்.
❖ ஓசை நயமுடையதாக இருத்தல் வேண்டும்.
❖ தமிழ் இலக்கண மரபுக்கு உட்பட்டதாய் இருத்தல் வேண்டும்.
கற்பவை கற்றபின்
1. அருகிலுள்ள கோவில் சிற்பங்கள், கோபுரங்கள் குறித்த சிறப்புத் தகவல்களைத் திரட்டிப் படங்களுடன் தொகுப்பேடு உருவாக்குக.
விடை
நடராஜன் கோயில் சிற்பங்கள்
முக்குறுணி விநாயகர்
திருமுறை காட்டி விநாயகர்
தபால்லாப் பிள்ளையார்
வல்லப கணபதி
நவகிரக சன்னதி,
பதஞ்சலி சன்னதி
கோயிலுக்குள்ளே கோயில் அமைந்த கோயில்
கோவிந்த ராஜபெருமாள் கோவில்
சிவகாம சுந்தரி அம்மன் கோவில்
நடராஜன் கோயில் கோபுரங்கள்
இக்கோவிலில் நான்கு ராஜகோபுரங்கள் உண்டு. ஏழுநிலைகளைக் கொண்டது. கோபுரத்தின் அடிப்பகுதி 90 அடி நீளம், 60 அடி அகலம், 135 அடி உயரம், 40 அடி உயரம் உடைய வாசல். கிழக்குக் கோபுரத்தில் 108 சிவதாண்டவங்களுக்கான சிற்பம் உள்ளது.
2. 'தட்சினா மேரு' குறித்துப் பாடத்தில் சொல்லப்படாத பல்வேறு தகவல்களைத் திரட்டி வகுப்பில் கலந்துரையாடுக.
விடை
ஆசிரியர் : தமிழக வரலாற்றின் பொற்காலம் எனப் போற்றப்படும் சோழர் காலத்தில் தட்சிணமேரு பற்றிக் கலந்துரையாடுவோம். அதற்கு முன்பாக முன் வகுப்பில், விமானம் கருவறை, கற்றளி இதைப் பற்றி பார்த்தோம். இதில் சொல்லாதவற்றை நாம் பார்ப்போம்.
பாலன் : வணக்கம் ஐயா. கருவறையில் சொல்லாத செய்தியை நான் சொல்கிறேன். கருவறை இரண்டு தளம் உடையது. மேற்தளத்தில் சிவபெருமான் நடனமாடும் சிற்பங்கள் உள்ளன. கருவறை சாந்தாரக் கட்டடக்கலை அமைப்பு ஆகும். விமானத்தில் உட்கூடு ‘கதலிகா கர்ணம்’ என்ற கட்டடக்கலை ஆகும்.
மாலன் : ஐயா! இறைவனுக்கு சூட்டப்படும் நகைகளின் பெயர்கள் பற்றி கூறுகிறேன்.
திருப்பட்டம், திருப்பட்டிகை, திருமுடி, திருமாலை, ரத்னகடகம். மேலும் வெள்ளியாலான பாத்திரங்கள் மண்டை, கொண்டி, தட்டம், கிடாரம் ஆகியன.
ஆசிரியர் : பிரகதீஸ்வரம் என்றால் என்ன?
பாலன் : விஸ்வரூபம் என்பது.
ஆசிரியர் : இக்கோயில் எத்தனையாவது ஆட்சி ஆண்டில் வழிபாட்டிற்கு வந்தது.
மாலன் : இராஜராஜசோழனின் 25 ஆவது ஆட்சி ஆண்டில்,
பாலன் : இக்கோவிலில் தேவாரம் பாட - 48 பேர், மத்தளம் மற்றும் உடுக்கை வாசிக்க - 50 பேர், மேலும் கோவில் பணிக்காக 400 பேர் என நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஆசிரியர் : நன்றி மாணவர்களே! யோசிக்க யோசிக்க மனம் மிகப் பெரிதாய் விரிவடைகிறது. வழிபாட்டுத்தலமாக மட்டுமல்லாமல் ஆற்றங்கரை நாகரிகத்தின் வரலாற்றுப் பதிவாகும்.
3. உங்களுக்குப் பிடித்த கவிதை ஒன்றைப் படித்து அதன் நுட்பத்தை வகுப்பறையில் பகிர்ந்து கொள்க.
விடை
எனக்குப் பிடித்த கவிதை:
விரகர் இருவர் புகழ்ந்திட வேண்டும்
விரல் நிறைய மோதிரம் வேண்டும்
அரை அதனில் பஞ்சேனும்
பட்டேனும் இருந்தால்
அவர் தம் கவிதை நஞ்சேனும்
வேம்பேனும் நன்று.
பொருள்:
விரகர் - நலன் எதிர்பார்த்து துதி செய்பவர்.
பரிசு பெற வந்த புலவர் அருகே இருவர் அமர்ந்து துதி பாட வேண்டும்.
புலவர்கள் விரல் நிறைய மோதிரங்கள் விளங்க வேண்டும்.
இடுப்பில் பஞ்சாடையோ, பட்டாடையோ இருத்தல் வேண்டும்.
பாடல் நஞ்சாக இருந்தாலும், வேம்புபோல் கசப்பாக இருந்தாலும் நல்லது என்று போற்ற வேண்டும்.
பாடலின் நுட்பம்:
சோழனின் அவை புலமைக்கு மதிப்புதரவில்லை. புலவரின் புறத்தோற்றத் தகுதியை நோக்கியே மதிப்புக் கிடைக்கிறது என்று ஔவையார் பாடியுள்ளார்.
4. குறவஞ்சியில் கூறப்பட்டுள்ள அணிகலன்களின் பெயர்களைப்படங்களுடன் திரட்டி அணிகலன்கள் அணியப்படுவதற்கான அறிவியல் காரணங்களையும் இணைத்து, படத்தொகுப்பேடு உருவாக்குக.
விடை
நம் பாடப்பகுதியான குற்றாலக் குறவஞ்சியில் சில அணிகலன்களின் பெயர்களை அறிந்தோம். அவற்றைப் போன்ற அணிகலன்களை அணியப்படுவதற்கான காரணங்களைக் காண்போம்.
அணிகலன்கள் அணியப்படுவதற்கான காரணங்கள்
சிலம்பு :
குதிகால் நரம்பைத் தொட்டுக் கொண்டு இருப்பதாலும், காலிலே அது கிடப்பதாலும் குதிகால் நரம்பின் வழியாக மூளைக்குச் செல்லும் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்துகிறது.
கலாழி :
கால் விரலில் அணியப்படும் ஒருவகை அணிகலன். வெள்ளியில் இருக்கும் காந்தச் சக்தி கால் நரம்புகளில் ஊடுருவி நோய் எதிர்ப்புச் சக்தி தரும்.
கணையாழி :
கை விரலில் அணியப்படும் அணிகலன் இது. மன அழுத்தத்தைக் குறைக்கும். இனிமையான பேச்சுத்திறன், குரல் வளம் தரும்.
தண்டை, பாடகம், காப்பு போன்ற அணிகலன்களை இன்னும் மலைவாழ் மக்கள் அணிகின்றனர். மாம்பிஞ்சு சிலம்பு அத்திக்காய் கொலுசு, ஆலங்காய் கொலுசு எனப் பல வடிவமைப்புகளில் அணியும் இவற்றால் 'ஒவ்வாமை' போன்ற உபாதைகள் கூட வருவதில்லை. என அறிவியல் தெரிவிக்கிறது. இதுவே இயற்கையோடு இயைந்த வாழ்வாகும்.
5. குறவஞ்சியில் இடம்பெறும் உரையாடல் நயத்தைப் புலப்படுத்துக.
விடை
பரிசில் பெற்றுவரும் சிங்கிக்கும் சிங்களுக்கும் இடையிலான உரையாடல் சுவைமிக்கது. சிங்கன் சிங்கியிடம் இத்தனை நாட்களாக உன்னை காணவில்லையே என்று கேட்டதற்கு, தான் குறிகூறிய நாடுகளையும், அவ்விடங்களில் பெற்ற பரிசுகளையும் குறிப்பிடுகிறாள். சேலத்து நாடு, கோலத்து நாடு, பாண்டிய நாடு, கண்டிய நாடு ஆகியவற்றில் சிலம்பு தனர்டை, பாடகம், மணிக்கெச்சம், காலாழி பீலி போன்ற அணிகலன்களைப் பரிசாகப் பெற்றதையும் எடுத்துரைக்கிறாள். ஆனால் சிங்கி பரிசு பெற்ற பொருட்கள் சிங்கனின் பார்வையில் சிலம்பு பெரிய விரியனாகவும், தண்டை திருமுறுகாகவும், பாடகம் மர்புழுவாகவும், மணிக்கெச்சம் மாண்ட தவளையாகவும், காலாழி பீலி குண்டலப் பூச்சியாகவும் தெரிவதாக மிகுந்த நயத்துடன் உரையாடலை அமைத்துள்ளார் திரிகூடராசப்பர்.
6. i. இரண்டு அடி வாங்கினால்தான்
திருந்துவாய் என்றால்
வள்ளுவரிடம் வாங்கு.
ii. ஏய்! யாரங்கே ஆற்றில்
பாலைக் கொட்டிவீட்டு ஒலமிடுவது?
அருவி
பழிப்பது போலப் புகழும் மொழி நுட்பம் இக்கவிதைகளின் பொருளை மெருகேற்றுகிறதா? விவாதிக்க,
விடை
❖ வாய்ப்பேச்சால் திருத்தமுடியாது. எனவே இரனர்டு அடி வாங்கினால்தான் திருந்துவாய் என்பது பழிப்பதுபோல உள்ளது.
❖ அந்த இரண்டு அடியை திருவள்ளுவரிடம் வாங்கு என்பது புகழ்வதுபோல் உள்ளது.
❖ இதில் இரண்டு அடி என்பது திருக்குறளைக் குறிப்பதால் திருக்குறள் கருத்துகளுக்குச் செவிமடு என்று பொருள்படும்.
ii. ஏய்! யாரங்கே ஆற்றில்
பாலைக் கொட்டிவீட்டு ஒலமிடுவது?
அருவி
விடை
❖ தவறுதலாக பாலினை ஆற்றில் கொட்டி விட்டு வருத்தப்படுவது இயற்கை. இது பழிப்பது போல் உள்ளது.
❖ இங்கே பாலைக் கொட்டிவிட்டு ஓலமிடுவது நீர்வீழ்ச்சியாக சித்தரிக்கப் படுவதால் புகழ்வது போல் உள்ளது
❖ பழிப்பதுபோல புகழ்வதும் புகழ்வது போல பழிப்பதும் வஞ்சப்புகழ்ச்சி அணியாகும்.
❖ இங்கே இருபெருள்பட அமைந்து இரட்டுற மொழிதல் அணியாகவும் பயின்று வந்து பதுக்கவிதைக்கு அழகு சேர்க்கிறது.
7. தமிழ்த்தாய் வாழ்த்து. நாட்டுப்பணி, தமிழில் பிறந்தநாள் பாடல் - போன்றவற்றை நண்பர்களுடன் இணைந்து இசையுடன் பாடிப் பயிற்சி பெறுக.
8. மாணவர் ஒவ்வொருவரும் 25 கலைச்சொற்களைப் பொருளுடன் திரட்டி அகராதியாக்குக,
விடை