Home | 9 ஆம் வகுப்பு | 9வது கணிதம் | முறுடுகளை விகிதப்படுத்துதல் (Rationalisation of Surds)

இணை முறுடுகள் (Conjugate Surds) | எண்ணியல் கணக்குகள் பதில்கள் மற்றும் தீர்வுகள் | மெய்யெண்கள் | கணக்கு - முறுடுகளை விகிதப்படுத்துதல் (Rationalisation of Surds) | 9th Maths : UNIT 2 : Real Numbers

   Posted On :  24.09.2023 09:21 am

9 ஆம் வகுப்பு கணக்கு : அலகு 2 : மெய்யெண்கள்

முறுடுகளை விகிதப்படுத்துதல் (Rationalisation of Surds)

கொடுக்கப்பட்ட ஓர் உறுப்பை விகிதமுறு எண்ணாக மாற்ற அதை எந்த உறுப்பால் பெருக்க அல்லது வகுக்க வேண்டுமோ, அந்த உறுப்பு கொடுக்கப்பட்ட உறுப்பின் "விகிதப்படுத்தும் காரணி" எனப்படும்.

முறுடுகளை விகிதப்படுத்துதல் (Rationalisation of Surds)

கொடுக்கப்பட்ட ஓர் உறுப்பை விகிதமுறு எண்ணாக மாற்ற அதை எந்த உறுப்பால் பெருக்க அல்லது வகுக்க வேண்டுமோ, அந்த உறுப்பு கொடுக்கப்பட்ட உறுப்பின் "விகிதப்படுத்தும் காரணி" எனப்படும்.

எடுத்துக்காட்டுகள் :

(i) √3 இன் விகிதப்படுத்தும் காரணி √3 ( √3×√3 = 3 ஒரு விகிதமுறு எண்)

(ii) 7√54 இன் விகிதப்படுத்தும் காரணி 7√53 (பெருக்கற்பலன்7√57 = 5, ஒரு விகிதமுறு எண்)

சிந்தனைக் களம்:

1. மேலே கண்ட எடுத்துக்காட்டு (i) இல் √12 என்பதும் ஒரு விகிதப்படுத்தும் காரணியா

√3 −க்கு வேறு ஏதேனும் எண்கள் விகிதப்படுத்தும் காரணியாக இருக்க முடியுமா

2. எடுத்துக்காட்டு (ii) 7√53க்கு வேறு ஏதேனும் எண்கள் விகிதப்படுத்தும் காரணியாக இருக்க இயலுமா?

3. முறுடைக் கொண்ட ஒரு விரிவாக்கத்திற்கு ஒன்றுக்கு மேற்பட்ட விகிதப்படுத்தும் காரணிகள் இருக்கும்போது, அவற்றுள் மிகச் சிறியதை விகிதப்படுத்தும் காரணியாகக் கணக்கிடுவதற்கு நாம் எடுத்துக்கொண்டால் நமக்கு ஏதேனும் பயன் உண்டா ?

முன்னேற்றத்தைச் சோதித்தல் 

கீழ்க்காணும் ஒவ்வொன்றுக்கும் விகிதப்படுத்தும் காரணியைக் கண்டறிந்து அவற்றைச் சரிபார்க்க

(i) √18 (ii) 5√12 (iii) 3√49 (iv) 1/√8


1. இணை முறுடுகள் (Conjugate Surds)

 3+ √2 என்பதன் விகிதப்படுத்தும் காரணியை உம்மால் ஊகிக்க முடிகிறதா? இந்த முறுடானது ஒரு விகிதமுறு பகுதியையும், ஒரு மூலக்குறியீட்டுப் பகுதியையும் கொண்டுள்ளது. இந்நிலைகளில் விகிதப்படுத்தும் காரணி ஓர் சிறப்பு மிக்க வடிவம் ஆகும்.

3+√2 இன் விகிதப்படுத்தும் காரணி 3 − √2. இதை மிகவும் எளிமையாகச் சரிபார்க்கலாம்

(3+ √2) (3−√2) = 32 − (√2)2 = 7 (ஒரு விகிதமுறு எண்)

= 9−2  = 7 (ஒரு விகிதமுறு எண்)

a, b என்பன விகிதமுறு எண்கள் எனில், a + √b இன் விகிதப்படுத்தும் காரணி என்ன? a−√b என்பது சரியா? சரிபார்க்க. a, b என்பன விகிதமுறு எண்கள் எனில், √a + √b என்பதன் விகிதப்படுத்தும் காரணி எது? √a − √b என்பது சரியா அல்லது −√a + √b என்பது சரியா? ஆராய்க.

a+√b மற்றும் a−√b என்ற வடிவத்தில் உள்ள முறுடுகள் இணை முறுடுகள் என அழைக்கப்படுகின்றன. √b + a இன் இணை எது? −√b + a என்பது சரியா? முறுடுக்கு முன்னால் உள்ள குறியை மாற்றுவதன் மூலம் அந்த எண்ணின் இணை முறுடைப் பெறலாம் என்பதை அறிய முடிகிறது!


எடுத்துக்காட்டு 2.27

பகுதியை விகிதப்படுத்துக. (i) 7/√14 (i) (5+√3) / (5−√3)

தீர்வு:

(i) விகிதப்படுத்தும் காரணியான √14 ஆல் பகுதி மற்றும் தொகுதியைப் பெருக்குக.



Tags : Conjugate Surds | Example Solved Problems | Real Numbers | Maths இணை முறுடுகள் (Conjugate Surds) | எண்ணியல் கணக்குகள் பதில்கள் மற்றும் தீர்வுகள் | மெய்யெண்கள் | கணக்கு.
9th Maths : UNIT 2 : Real Numbers : Rationalisation of Surds Conjugate Surds | Example Solved Problems | Real Numbers | Maths in Tamil : 9th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 9 ஆம் வகுப்பு கணக்கு : அலகு 2 : மெய்யெண்கள் : முறுடுகளை விகிதப்படுத்துதல் (Rationalisation of Surds) - இணை முறுடுகள் (Conjugate Surds) | எண்ணியல் கணக்குகள் பதில்கள் மற்றும் தீர்வுகள் | மெய்யெண்கள் | கணக்கு : 9 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
9 ஆம் வகுப்பு கணக்கு : அலகு 2 : மெய்யெண்கள்