அறிமுகம் | கணக்கு - மெய்யெண்கள் | 9th Maths : UNIT 2 : Real Numbers

9 ஆம் வகுப்பு கணக்கு : அலகு 2 : மெய்யெண்கள்

மெய்யெண்கள்

கற்றல் விளைவுகள் • இரு விகிதமுறு, எண்களுக்கிடையே எண்ணற்ற விகிதமுறு எண்கள் இருப்பதை அறிதல். • விகிதமுறு, விகிதமுறா எண்களை எண் கோட்டில் குறித்தல் மற்றும் அவற்றை தசம வடிவில் குறிப்பிடுதல். • மெய்யெண்களை எண் கோட்டில் காணுதல். • முறுடுகளை அடையாளம் காணுதல். • முறுடுகளில் கூட்டல், கழித்தல், பெருக்கல், மற்றும் வகுத்தல் போன்ற அடிப்படைச் செயல்களைச் செய்து பார்த்தல். • முறுடுகளின் பகுதியை விகிதப்படுத்துதல். • அறிவியல் குறியீடுகளைப் புரிந்துகொள்ளுதல்.

அலகு 2

மெய்யெண்கள்


பொதுவாகக் கணக்கீட்டில் மக்களுக்கு எது தேவையாக உள்ளது எனக் கருதும்போது, அதை நான் எப்பொழுதும் ஓர் எண்ணாகவே கண்டறிந்தேன்

அல் ஃவாரிஷ்மி


அல் ஃவாரிஷ்மி (Al khwarizmi) என்ற பாரசீகக் கணித மேதைதான் கணிதத்தில் குறிப்பிடும்படியாக, முறுடுகள் (surdus) என்ற சிறப்பு மிக்க கருத்தினை அடையாளம் கண்டார். விகிதமுறா எண்களை அவர்காதுகேளாமை’ (inaudible) என்ற பொருளில் குறிப்பிட்டார். பின்னர் அது இலத்தீன் மொழியில் சர்டஸ் (surdus) என மொழி பெயர்க்கப்பட்டது. கணிதத்தில் ஒரு மூலத்தை விகிதமுறு எண்ணாக எழுத இயலவில்லை எனில், அது முறுடு (surd) அல்லது முருட்டெண் அல்லது விகிதமுறா மூலம் எனப்படும்.


அல் ஃவாரிஷ்மி (கி.பி (பொ.) 780 − 850)


கற்றல் விளைவுகள்

இரு விகிதமுறு, எண்களுக்கிடையே எண்ணற்ற விகிதமுறு எண்கள் இருப்பதை அறிதல்

விகிதமுறு, விகிதமுறா எண்களை எண் கோட்டில் குறித்தல் மற்றும் அவற்றை தசம வடிவில் குறிப்பிடுதல்

மெய்யெண்களை எண் கோட்டில் காணுதல்

முறுடுகளை அடையாளம் காணுதல்

முறுடுகளில் கூட்டல், கழித்தல், பெருக்கல், மற்றும் வகுத்தல் போன்ற அடிப்படைச் செயல்களைச் செய்து பார்த்தல்

முறுடுகளின் பகுதியை விகிதப்படுத்துதல்

அறிவியல் குறியீடுகளைப் புரிந்துகொள்ளுதல்.


அறிமுகம்

எங்கெங்கு காணினும் எண்கள்

உங்கள் வீட்டில் தொலைபேசி உள்ளதா? அத்தொலைபேசியில் உள்ள இலக்கங்கள் எத்தனை

உங்கள் பகுதியின் அஞ்சலகக் குறியீட்டு எண் என்ன? அது எவ்வாறு பயனுள்ளதாக இருக்கும்

வண்டிகளை நிறுத்துமிடத்தில் அடையாள வில்லை வாங்கியுள்ளீர்களா? அதன் நோக்கம் என்ன ?


நீங்கள் 24 கேரட் தங்கத்தைக் கையாண்டிருக்கிறீர்களா? அதன் தரத்தினை எவ்வாறு முடிவு செய்வாய்

உன் கண்ணாடியின் பார்வைத் திறன் அளவு எவ்வளவு

உங்கள் வீட்டிலுள்ள மேல்நிலை நீர்த்தொட்டியின் கொள்ளளவு எவ்வளவு

உனது நண்பனுக்குக் காய்ச்சலா? அவரது உடலின் வெப்பநிலை எவ்வளவு

எண்களின் பல்வேறு வகைகள் பற்றி இதுவரை நீங்கள் அறிந்ததை விரிவுபடுத்தி அறியவேண்டிய நேரம் இது.

Tags : Maths அறிமுகம் | கணக்கு.
9th Maths : UNIT 2 : Real Numbers : Real Numbers Maths in Tamil : 9th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 9 ஆம் வகுப்பு கணக்கு : அலகு 2 : மெய்யெண்கள் : மெய்யெண்கள் - அறிமுகம் | கணக்கு : 9 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
9 ஆம் வகுப்பு கணக்கு : அலகு 2 : மெய்யெண்கள்