Home | 10 ஆம் வகுப்பு | 10வது சமூக அறிவியல் | சார்க் - தெற்காசிய நாடுகளின் பிராந்தியக் கூட்டமைப்பு

இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை - சார்க் - தெற்காசிய நாடுகளின் பிராந்தியக் கூட்டமைப்பு | 10th Social Science : Civics : Chapter 4 : India’s Foreign Policy

10வது சமூக அறிவியல் : குடிமையியல் : அலகு - 4 : இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை

சார்க் - தெற்காசிய நாடுகளின் பிராந்தியக் கூட்டமைப்பு

சார்க் நாடுகளின் கூட்டமைப்பு என்பது தெற்காசியாவில் அமைந்துள்ள எட்டு நாடுகளின் ஒரு பொருளாதார மற்றும் புவிசார் அரசியல் அமைப்பாகும்.

சார்க் - தெற்காசிய நாடுகளின் பிராந்தியக் கூட்டமைப்பு (SAARC - South Asian Association for Regional Cooperation)

சார்க் நாடுகளின் கூட்டமைப்பு என்பது தெற்காசியாவில் அமைந்துள்ள எட்டு நாடுகளின் ஒரு பொருளாதார மற்றும் புவிசார் அரசியல் அமைப்பாகும். சார்க் (SAARC) நாடுகளின் கொள்கை நோக்கமானது நலம் சார் பொருளாதாரத்தை ஊக்குவித்தல், தெற்காசிய நாடுகளிடையே கூட்டுத்தன்னிறைவு மற்றும் இப்பிராந்தியத்தில் சமூக - பண்பாட்டு மேம்பாட்டினைவிரைவுபடுத்துதல் ஆகியவையாகும். சார்க் அமைப்பின் பேரிடர் மேலாண்மை மையம் புதுடெல்லியில் அமைக்கப்பட்டுள்ளது. இம்மையம் தெற்காசியாவில் பேரிடர் குறைப்பு மற்றும் மேலாண்மைக்கான வல்லுனர்களைக் கொண்ட அமைப்பாகும். இஸ்ரோ (ISRO) அமைப்பு சார்க் பிராந்தியத்திற்கான செய்தித் தொடர்பு மற்றும் வானிலை ஆய்விற்காகசார்க் செயற்கைக்கோளைச் செலுத்தி உள்ளது.

சார்க் அமைப்பின் உறுப்பு நாடுகள்: ஆப்கானிஸ்தான், வங்காளதேசம், பூடான், இந்தியா, நேபாளம், மாலத்தீவு, பாகிஸ்தான் மற்றும் இலங்கை

வெளியுறவுக்கொள்கை என்பது மற்ற நாடுகளுடன் உறவைப் பேணுவதற்காக ஒரு நாட்டால் கவனமாக வடிவமைக்கப்பட்ட உத்திகளின் கலவையாகும்.

இராஜதந்திரம் என்பது ஓர் அரசின் வெளியுறவுக் கொள்கையைச் சூழலுக்குத் தகுந்தாற்போல் செயல்படுத்துவதற்கான கருவி ஆகும்.


 

Tags : India’s Foreign Policy இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை.
10th Social Science : Civics : Chapter 4 : India’s Foreign Policy : SAARC - South Asian Association for Regional Cooperation India’s Foreign Policy in Tamil : 10th Standard Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 10வது சமூக அறிவியல் : குடிமையியல் : அலகு - 4 : இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை : சார்க் - தெற்காசிய நாடுகளின் பிராந்தியக் கூட்டமைப்பு - இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை : 10 ஆம் வகுப்பு புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
10வது சமூக அறிவியல் : குடிமையியல் : அலகு - 4 : இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை