நடுவண் அரசு | குடிமையியல் | சமூக அறிவியல் - விரிவான விடை தருக. | 10th Social Science : Civics : Chapter 2 : Central Government of India
VI. விரிவான விடை தருக.
1. இந்தியக் குடியரசுத் தலைவரின் சட்டமன்ற மற்றும் நீதி
அதிகாரங்களை விவரி.
சட்டமன்ற அதிகாரங்கள்:
• பொதுத் தேர்தலுக்குப் பின்னர்
நாடாளுமன்றத்தின் புதிய கூட்டத்தொடரை இவர் உரையாற்றி துவக்கி வைக்கிறார்.
• ஒவ்வொரு ஆண்டின் நாடாளுமன்றத்தின் முதல் கூட்டம் இவருடைய உரையுடன்
துவங்குகிறது.
• குடியரசுத் தலைவர் ஆண்டுக்கு இரண்டு முறை நாடாளுமன்றத்தைக் கூட்டுகிறார்.
• குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெற்ற பின்னரே அனைத்து மசோதாக்களும்
சட்டமாகின்றன.
• நிதி மசோதாவைக் குடியரசுத் தலைவரின் ஒப்புதல் இன்றி நாடாளுமன்றத்தில்
அறிமுகம் செய்யமுடியாது.
• நாடாளுமன்றத்தின் இரு அவைகளையோ அல்லது ஏதேனும் ஒரு அவையின் கூட்டத்தையோ
குடியரசுத் தலைவர் முடிவுக்குக் கொண்டு வரலாம்.
• மக்களவையின் ஐந்து ஆண்டுகாலம் முடியும் முன்னரே அதனைக் கலைக்கும்
அதிகாரமும் இவருக்கு உண்டு.
• கலை, இலக்கியம்,
அறிவியல், விளையாட்டு, மற்றும்
சமூகப்பணி ஆகிய துறைகளில் சிறந்து விளங்கும் 12 நபர்களைக் குடியரசுத்
தலைவர் மாநிலங்களவைக்கு நியமிக்கிறார்.
• ஆங்கிலோ-இந்தியர் சமூகத்தைச்
சேர்ந்த 2 நபர்களை மக்களவையில் போதுமான பிரதிநிதித்துவம் இல்லை
என்று கருதும் பட்சத்தில் குடியரசுத் தலைவர் நியமிக்கிறார்.
நீதி அதிகாரங்கள்:
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 72 வது பிரிவு நீதிமன்றத்தால் தண்டனை பெற்ற ஒருவரின் தண்டனையைக் குறைக்கவும், ஒத்திவைக்கவும், தண்டனையிலிருந்து விடுவிக்கவும்,
மன்னிப்பு வழங்கவும் குடியரசுத்தலைவருக்கு அதிகாரம் வழங்கியுள்ளது.
2. இந்திய உச்சநீதிமன்றத்தின் நீதிவரையறைகள் ஏதேனும் மூன்றினை
விளக்குக.
நீதித்துறை செயல்பாடுகள் :
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பாதுகாவலன் உச்சநீதிமன்றம் ஆகும்.
அ) தனக்கேயுரிய
நீதி வரையறை
• இந்திய அரசிற்கும் ஒரு மாநிலம் அல்லது அதற்கு மேற்பட்ட மாநிலங்களுக்குமிடையிலான சிக்கல்கள்
• இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மாநிலங்களுக்கிடையிலான சிக்கல்கள்
• அடிப்படை உரிமைகளை நடைமுறைபடுத்துவது தொடர்பாக எழும் சிக்கல்கள் ஆகியன
உச்சநீதிமன்றத்தின் தனக்கேயுரிய நீதி வரையறைக்குட்பட்டதாகும்.
• அடிப்படை உரிமைகளை நடைமுறைப்படுத்திட நீதிப்பேராணைகளை உச்சநீதிமன்றம்
வழங்குகிறது.
ஆ) மேல்முறையீட்டு
நீதிவரையறை :
• உச்சநீதிமன்றமே நாட்டின் இறுதி மேல்முறையீட்டு நீதிமன்றமாகும்.
• மாநில உயர்நீதிமன்றங்கள் உரிமையியல், குற்றவியல் அரசியலமைப்பு வழக்குகள் மீதான தீர்ப்புகளுக்கு
எதிரான மேல்முறையீட்டு வழக்குகளை உச்சநீதிமன்றம் விசாரிக்கின்றது.
இ) ஆலோசனை
நீதிவரைறை :
பொது முக்கியத்துவம் வாய்ந்த எந்தவொரு சட்டம் அல்லது உண்மை மீதான உச்சநீதிமன்றத்தின்
கருத்தினைப் பெற அரசியலமைப்புச் சட்டம் குடியரசுத் தலைவருக்கு அதிகாரத்தினை வழங்குகிறது.
3. இந்தியப் பிரதம அமைச்சரின் பணிகள் மற்றும் கடமைகள் யாவை?
பிரதம அமைச்சரின் பணிகள் கடமைகள்:
• அரசியலமைப்பு சட்டப்பிரிவு 78 பிரதம அமைச்சரின் கடமைகளைப் பற்றி குறிப்பிடுகிறது.
• பிரதம அமைச்சர் அமைச்சர்களின் நிலையை அறிந்து அவர்களுக்கு அரசின்
பல்வேறு துறைகளை ஒதுக்கீடு செய்கிறார்.
• தான் தலைமை வகிக்கும் அமைச்சரவைக் கூட்டத்தின் தேதி நிகழ்ச்சி நிரல்
குறித்து முடிவு செய்வார்.
• கேபினெட் கூட்டம் நடைபெறாத பொழுது பிரதம அமைச்சர் தனது மூத்த சகாக்கள் இருவர் அல்லது
மூவரை இயல்பாகக் கலந்தாலோசிக்கலாம்.
• பிரதம அமைச்சர் பல்வேறு துறைகளின் பணிகளை மேற்பார்வையிடுகிறார்.
•
அமைச்சரவையின் அனைத்து முடிவுகளையும் குடியரசுத்தலைவருடன் விவாதிக்கிறார்.
• குடியரசுத் தலைவருக்கும் அமைச்சரவைக்கும் இடையே பாலமாக பிரதம அமைச்சர்
செயல்படுகிறார்.
• பிரதம அமைச்சர் நாட்டின் தலைவராவார். அவர் நாட்டின் முக்கிய செய்தித் தொடர்பாளராகவும் செயல்படுகிறார்.
• காமன்வெல்த், அணிசேரா நாடுகளின்
உச்சி மாநாடு, சார்க் நாடுகளின் மாநாடு ஆகியவற்றில் இந்திய நாட்டின்
பிரதிநிதியாக பங்கு கொள்கிறார்.
4. நாடாளுமன்றத்தின் அதிகாரங்கள் மற்றும் செயல்பாடுகளை
திறனாய்வு செய்க.
• இந்திய நாடாளுமன்றம் சட்டமியற்றுதல், நிர்வாகத்தினை மேற்பார்வையிடுதல், வரவு செலவுத் திட்டத்தினை நிறைவேற்றுதல், பொதுமக்கள்
குறைகளைப் போக்குதல், வளர்ச்சித் திட்டங்கள், சர்வதேச உறவுகள், உள்நாட்டுக் கொள்கைகள் போன்றவைகளை விவாதித்தல்
போன்ற பணிகளைச் செய்கிறது.
• நாடாளுமன்றம் குடியரசுத் தலைவர் மீதான அரசியல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கவும், உச்சநீதிமன்ற உயர்நீதிமன்ற நீதிபதிகள் தலைமை தேர்தல்
ஆணையர், இந்தியத் தலைமை கணக்காய்வாளர் - தணிக்கையாளர் ஆகியோரை அரசியலமைப்புச் சட்ட விதிமுறைகளின்படி பதவிநீக்கம் செய்யவும்
அதிகாரம் பெற்றுள்ளது.
• மாநிலங்களின் எல்லைகளை மாற்றி அமைத்திட நாடாாளுமன்றத்திற்கே அதிகாரம்
உண்டு.
VII. செயல்திட்டம் மற்றும் செயல்பாடு.
1. மாதிரி நாடாளுமன்றத்தை உன்னுடைய வகுப்பறையில் ஏற்பாடு
செய். குடியரசுத்தலைவர், பிரதம அமைச்சர்,
அமைச்சர்களின் பங்கு பற்றி விவரி.
வகுப்பறை மாணவர் செயல்பாடுகள்.
2. இந்தியக் குடியரசுத் தலைவருக்கும், அமெரிக்க ஐக்கிய நாடுகளின் குடியரசுத் தலைவருக்கும் இடையேயான
ஒற்றுமைகளையும், வேற்றுமைகளையும் வெளிக்கொணர்க.
இந்தியக் குடியரசுத் தலைவர்
• இந்திய ஜனாதிபதி மறைமுகமாகத் தேர்ந்தெடுக்கப்படுகிறார்.
• இந்திய ஜனாதிபதி மாநிலத் தலைவர் மட்டுமே.
• அமெரிக்க ஜனாதிபதி 4 ஆண்டுகள் பதவியில் இருக்கிறார்.
• இந்திய ஜனாதிபதி மக்களவை மற்றும் மாநிலங்களவை ஆகியவற்றிற்கு பொறுப்பானவர்.
• அமெரிக்க ஜனாதிபதியை விட இந்திய ஜனாதிபதிக்கு ஒப்பீட்டளவில் குறைந்த
மறுப்பணை அதிகாரம் உள்ளது. இந்திய ஜனாதிபதி மறுபரிசீலனை
செய்வதற்கான மசோதாவை ஒரு முறை மட்டுமே அனுப்ப முடியும். பாராளுமன்றத்தில்
ஒரு எளிய பெரும்பான்மையால் கூட இந்த மசோதா மீண்டும் நிறைவேற்றப்பட்டால், அவர் மசோதாவில் கையெழுத்திட கடமைப்பட்டிருக்கிறார்.
• இந்திய ஜனாதிபதி பாராளுமன்றத்தை கலைக்க முடியும்.
அமெரிக்க ஐக்கிய நாடுகளின் குடியரசுத் தலைவர்
• அமெரிக்க ஜனாதிபதி நேரடியாக தேர்ந்தெடுக்கப்படுகிறார்.
• அமெரிக்காவின் ஜனாதிபதி உண்மையான நிர்வாகி.
• இந்திய ஜனாதிபதி 5 ஆண்டுகள் பதவியில் இருக்கிறார்.
• அமெரிக்க ஜனாதிபதி எந்த சட்டமன்றங்களுக்கும் பொறுப்பானவர் அல்ல.
• அமெரிக்க ஜனாதிபதிக்கு மறுப்பணை அதிகாரம் உள்ளது.
• அமெரிக்க ஜனாதிபதிக்கு பாராளுமன்றத்தை கலைக்க அதிகாரங்கள் இல்லை.
3. இந்தியக் குடியரசுத் தலைவர்கள் மற்றும் பிரதமர்களின்
பட்டியலை தயார் செய்க.
இந்தியக் குடியரசுத் தலைவர்கள்:
• டாக்டர். இராஜேந்திரப் பிரசாத்
• ஜெயில் சிங்
• சர்வபள்ளி ராதாகிருஷ்ணன்
• ரா. வெங்கட்ராமன்
• ஜாகீர் உசேன்
• சங்கர் தயாள் சர்மா
• வி.வி. கிரி
• கே.ஆர். நாராயணன்
• முகம்மது இதயத்துல்லா
• ஏ.பி.ஜே. அப்துல் கலாம்
• பக்ருதின் அலி அகமது
• பிரதீபா பட்டீல்
• பசப்பா தனப்பா ஜாட்டி
• பிரணப் முக்கர்ஜி
• நீலம் சஞ்சீவி ரெட்டி
• ராம்நாத் கோவிந்த்
இந்தியப் பிரதமர்கள்:
• ஜவஹர்லால் நேரு
• சந்திரசேகர்
• குல்சாரிலால் நந்தா
• பி.வி. நரசிம்மராவ்
• லால் பகதூர் சாஸ்திரி
• அடல் பிகாரி வாஜ்பாய்
• இந்திரா காந்தி
• ஹெச்.டி. தேவகவுடா
• மௌராஜி தேசாய்
• இந்தர் குமார் குஜ்ரால்
• சரண்சிங்
• மன்மோகன் சிங்
• ராஜீவ் காந்தி
• நரேந்திர மோடி
• விஸ்வநாத் பிரதாப் சிங்