Home | 8 ஆம் வகுப்பு | 8வது கணிதம் | பாடச்சுருக்கம்

அளவைகள் | அலகு 2 | 8 ஆம் வகுப்பு கணக்கு - பாடச்சுருக்கம் | 8th Maths : Chapter 2 : Measurements

   Posted On :  20.10.2023 10:36 pm

8 ஆம் வகுப்பு கணக்கு : அலகு 2 : அளவைகள்

பாடச்சுருக்கம்

8 ஆம் வகுப்பு கணக்கு : அலகு 2 : அளவைகள் : பாடச்சுருக்கம்

பாடச்சுருக்கம்


* வட்டத்தின் மீதுள்ள ஏதேனும் இரு புள்ளிகளை இணைக்கும் கோட்டுத்துண்டு 'நாண்' எனப்படும்

* ஒரு வட்டத்தின் விட்டமானது, அந்த வட்டத்தை இரு சம அளவுள்ள வட்டத்துண்டுகளாகப் பிரிக்கிறது. மேலும் அது வட்டத்தின் மிகப்பெரிய நாண் ஆகும்.  

* வட்டப்பரிதியின் ஒரு பகுதி வட்டவில் ஆகும்.

* ஒரு வட்டத்தின் இரண்டு ஆரங்களாலும், அந்த ஆரங்களால் வட்டப்பரிதியில் வெட்டப்படும் வில்லாலும் அடைபடும் சமதளப்பகுதி வட்டக்கோணப்பகுதி ஆகும்

* ஒரு வட்டக்கோணப் பகுதியானது, அவ்வட்டத்தின் மையத்தில் ஏற்படுத்தும் கோணம் வட்ட மையக்கோணம் ஆகும்

* கூட்டு வடிவங்களின் சுற்றளவு என்பது, அந்த மூடிய வடிவத்தினைச் சுற்றி எல்லையாக அமைந்துள்ள மொத்தப் பக்க அளவுகளின் கூடுதல் ஆகும்

* கூட்டு வடிவங்களின் பரப்பளவு என்பது, அக்கூட்டு வடிவத்தினை உருவாக்கும் அனைத்து எளிய வடிவங்களின் பரப்பளவுகளின் கூடுதலாகும்

* நீளம், அகலம் மற்றும் உயரம் (ஆழம்) ஆகிய மூன்று பரிமாணங்களையும் கொண்டுள்ள வடிவங்கள் முப்பரிமாண வடிவங்கள் என்று அழைக்கப்படுகின்றன. அதைச் சுருக்கமாக 3−D வடிவங்கள் என்றும் கூறலாம்

* ஒரு கனச்சதுரத்தில் 6 முகங்கள், 12 விளிம்புகள் மற்றும் 8 உச்சிகள் உள்ளன.



இணையச் செயல்பாடு

இந்த செயல்பாடு மூலம் வட்டக் கோணப்பகுதியின் பரப்பளவு காணும் முறையினை அறிந்து கொள்ளலாம்


படி − 1 கூகுள் தேடுபொறியில் www.Geogebra.com தட்டச்சு செய்யவும் () இந்த விரைவுக் குறியீட்டினை (QR CODE) பயன்படுத்தவும்.

படி − 2 தேடு பகுதியில் Area of sector எனத் தட்டச்சு செய்யவும்

படி− 3 வட்ட ஆரஅளவை மாற்ற Radius Slide எனும் பகுதியையும் கோண அளவினை மாற்ற Degree slide எனும் பகுதியையும் நகர்த்தவும்.


இணைய உரலி: அளவைகள் 

https://www.geogebra.org/m/FSqNDNxN 

படங்கள் அடையாளங்களை மட்டுமே குறிக்கும் 

இந்த பக்கத்தை பார்க்க தேடுபொறி தேவையென்றால் Flash Player அல்லது Java Script அனுமதிக்கவும்.

Tags : Measurements | Chapter 2 | 8th Maths அளவைகள் | அலகு 2 | 8 ஆம் வகுப்பு கணக்கு.
8th Maths : Chapter 2 : Measurements : Summary Measurements | Chapter 2 | 8th Maths in Tamil : 8th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 8 ஆம் வகுப்பு கணக்கு : அலகு 2 : அளவைகள் : பாடச்சுருக்கம் - அளவைகள் | அலகு 2 | 8 ஆம் வகுப்பு கணக்கு : 8 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
8 ஆம் வகுப்பு கணக்கு : அலகு 2 : அளவைகள்