Home | 10 ஆம் வகுப்பு | 10வது தமிழ் | மொழி அறிவு - கேள்விகள் மற்றும் பதில்கள்

இயல் 1 | 10 ஆம் வகுப்பு தமிழ் - மொழி அறிவு - கேள்விகள் மற்றும் பதில்கள் | 10th Tamil : Chapter 1 : Amudha oottru

   Posted On :  21.07.2022 03:52 pm

10 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 1 : அமுத ஊற்று

மொழி அறிவு - கேள்விகள் மற்றும் பதில்கள்

10 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 1 : அமுத ஊற்று : மொழி அறிவு - கேள்விகள் மற்றும் பதில்கள்: புத்தக கேள்விகள் மற்றும் பதில்கள், தமிழ் முக்கியமான கேள்விகள் | தமிழ்நாடு பள்ளி சமச்சீர் புத்தகங்கள்

மொழியை ஆள்வோம்

படித்துச் சுவைக்க.

பாடலில், மரம் என்னும் சொல், இடத்திற்கேற்பப் பொருள் தருவதாய் 11 இடங்களில் இடம்பெற்றுள்ளது. பொருள்களைப் பொருத்திப் படித்துச் சுவைக்க.


"மரமது'1 மரத்தில்2 - ஏறி

மரமதைத்3 தோளில் வைத்து

மரமது4 மரத்தைக்5 கண்டு

மரத்தி6 னால் மரத்தைக்7 குத்தி

மரமது8 வழியே சென்று

வளமனைக் கேகும் போது

மரமது9 கண்ட மாதர்

மரமுடன்10 மரம்11 எடுத்தார்"

தனிப்பாடல் திரட்டு - சுந்தரகவிராசர்


 

மொழி பெயர்ப்பு

1. If you talk to a man in a language he understands, that goes to his head. If you talk to him in his own language that goes to his heart – Nelson Mandela.

2. Language is the road map of a culture. It tells you where its people come from and where they are going - Rita Mae Brown.

1. நீங்கள் ஒரு மனிதனிடம் அவன் புரிந்து கொள்ளும் வகையில் ஏதாவது ஒரு மொழியில் பேசினால் அதை அவன் புரிந்து கொண்டு தன் அறிவை வளர்த்துக் கொள்ளலாம் - அதுவே தாய் மொழியில் பேசினால் அது அவனுடைய மனதையே சென்றடையும் என்றார் - நெல்சன் மண்டேலா.

2. மொழியே கலாச்சாரத்தின் வழிகாட்டி - அக்கலாச்சாரமே மக்கள் எங்கிருந்து வந்தார்கள் எங்கு செல்கிறார்கள் என்பதை நமக்குப் புரிய வைக்கும் - ரிட்டா மே பிரவுண்

 

சந்தக் கவிதையில் வந்த பிழைகளைத் திருத்துக.

"தேணிலே ஊரிய செந்தமிழின் - சுவை

    தேரும் சிலப்பதி காறமதை

ஊனிலே எம்முயிர் உல்லலவும் - நிதம்

   ஓதி யுனர்ந்தின் புருவோமே

                  - கவிமணி தேசிக விநாயகனார்

திருத்தம் :

தேனிலே ஊறிய செந்தமிழின் - சுவை

தேறும் சிலப்பதி காமதை

ஊனிலே எம்முயிர் உள்ளளவும் - நிதம்

ஓதி யுர்ந்தின் புறுவோமே"

                     - கவிமணி தேசிக விநாயகனார்

 

• கீழ்க்காணும் சொற்களின் கூட்டப் பெயர்களைக் கண்டுபிடித்து எழுதுக.

(குவியல், குலை, மந்தை, கட்டு)


(குவியல், குலை, மந்தை, கட்டு)

 

வினைமுற்றை வினையாலணையும் பெயராக மாற்றித் தொடர்களை இணைத்து எழுதுக.

1. கலையரங்கத்தில் எனக்காகக் காத்திருக்கிறார். அவரை அழைத்து வாருங்கள்.

2. ஊட்டமிகு உணவு உண்டார். அவர் நீண்ட வாழ்நாள் பெற்றார்.

3. நேற்று என்னைச் சந்தித்தார். அவர் என் நண்பர்.

4. பொது அறிவு நூல்களைத் தேடிப் படித்தார். போட்டித் தேர்வில் வென்றார்.

விடை :

1. கலையரங்கத்தில் எனக்காகக் காத்திருக்கிறவரை அழைத்து வாருங்கள்.

2. ஊட்டமிகு உணவு உண்டவர் நீண்ட வாழ்நாள் பெற்றார்.

3. நேற்று என்னைச் சந்தித்தவர் என் நண்பர்.

4. பொது அறிவு நூல்களைத் தேடிப் படித்தவர் போட்டித் தேர்வில் வென்றார்.

 

தொடர்களில் உள்ள வண்ணச் சொற்களுக்குப் பதிலாக அதே பொருளுடைய வேறு சொற்களைப் பயன்படுத்தித் தொடர்களை மீள எழுதுக.

1. உலகில் வாழும் மக்களில் சிலர் கனியிருக்கக் காய் புசித்தலைப்போல, இன்சொல் இருக்க வன்சொல் பேசி இன்னற்படுகின்றனர்.

2. வள்ளல் குமணன் வறுமையால் வாடி வந்த புலவனுக்குத் தனது தலையைக் கொடுத்து மங்காப் புகழ் பெற்றான்.

3. நளனும் அவனது துணைவியும் நிடதநாட்டுக்கு வந்ததைக் கண்டு, அந்நாட்டு மக்கள் மழைமுகில் கண்ட மஞ்ஞை போலக் களி கொண்டனர்.

4. சோலையிற் பூத்த மணமலர்களில் சுரும்புகள் மொய்த்துப் பண்பாடி மதுவுண்டன.

5. பசுப்போல் சாந்தமும் புலிபோல் தீரமும் யானை போல உழைப்பும் மனிதனுக்கு வேண்டும்.

விடை :

1. புவியில் வாழும் மானுடர்கள் சிலர் பழமிருக்கக் காய் உண்பதைப்போல, இன்சொல் இருக்க வன்சொல் பேசி துன்பப்படுகின்றனர்.

2. வள்ளல் குமணன் ஏழ்மையால் வாடிவந்த அறிஞர்களுக்குத் தனது தலையைக் ஈந்து மங்காப் பெருமை பெற்றான்.

3. நளனும் அவனது மனைவியும் நிடதநாட்டுக்கு வந்ததைக் கண்டு, அந்நாட்டு மக்கள் மழைமேகம் கண்ட மயிலை போலக் மகிழ்ச்சி கொண்டனர்.

4. நந்தவனத்தில் பூத்த மணமலர்களில் வண்டுகள் மொய்த்துப் பண்பாடி தேனைவுண்டன.

5. "" வைப் போல் - அமைதியும் வேங்கை போல் வீரமும் களிறு போல உழைப்பும் மனிதனுக்கு வேண்டும்.

 

கட்டுரை எழுதுக.

குமரிக் கடல்முனையையும் வேங்கட மலைமுகட்டையும் எல்லையாகக் கொண்ட தென்னவர் திருநாட்டிற்குப் புகழ் தேடித்தந்த பெருமை, தகைசால் தமிழன்னையைச் சாரும். எழில்சேர் கன்னியாய் என்றும் திகழும் அவ்வன்னைக்கு, பிள்ளைத் தமிழ் பேசி, சதகம் சமைத்து, பரணி பாடி, கலம்பகம் கண்டு, உலாவந்து, அந்தாதி கூறி, கோவை யாத்து, அணியாகப்பூட்டி அழகூட்டி அகம் மகிழ்ந்தனர் செந்நாப் புலவர்கள்.

இக்கருத்தைக் கருவாகக் கொண்டு ‘சான்றோர் வளர்த்த தமிழ்’ என்னும் தலைப்பில் கட்டுரை எழுதுக.

சான்றோர் வளர்த்த தமிழ்

குறிப்புச்சட்டம் :

முன்னுரை - ஜி.யூ போப் - வீரமாமுனிவர் - ஆறுமுக நாவலர் - குணங்குடி மஸ்தான் சாகிபு - உலகத்தமிழ் மாநாடு - நான்காம் தமிழ்ச் சங்கம் - முடிவுரை. ("கல் தோன்றி மண்தோன்றாக் காலத்தே வாளோடு முன் தோன்றிய மூத்த குடி”)

முன்னுரை :

செந்தமிழ் ஒரு பூந்தோட்டம். அப்பூந்தோட்டத்தில் அன்றலர்ந்த மலர்கள் மணம் பரப்பி வருகின்றன. காலந்தோறும் நந்தமிழ்நாட்டில் தமிழ்ச் சான்றோர் பலர் தோன்றித் தமிழ் மொழிக்குப் புத்துயிரூட்டிப் புதுமணம் பரப்பி வருகின்றனர். இவர்களுக்கு முன்பே தமிழில் அகர முதலியை தோற்றுவித்தும் இசைப்பாடல்கள் பாடியும் தமிழுக்கு உரைவளம் சேர்த்துதொண்டாற்றிய தமிழறிஞர் பலர் உள்ளனர். அவருள் சிலரைப் பற்றி பின்வருமாறு காணலாம்.

ஜி.யூ. போப்

ஜி.யூ. போப் என்றழைக்கப்படும் ஜியார்ஜ் யூக்ளோ போப் கி.பி 1820ஆம் ஆண்டு ஏப்ரல் 24 ஆம் நாள், பிரான்சு நாட்டில் எட்வர்டு தீவில் பிறந்தவர். சிறந்த தொண்டுள்ளம் உடையவர். கல்விப்பணியையும் சமயப் பணியையும் ஒருங்கே ஆற்றினார். தமிழ் இலக்கியத்தில் ஆர்வமும், பாட நூலின் முன்னோடியாகவும் விளங்கினார். திருக்குறளை 40 ஆண்டுகள் படித்துச் சுவைத்த போப், அதனை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து 1886 ஆம் ஆண்டில் வெளியிட்டார். நமது 80 ஆம் அகவையில் 1900 ஆம் ஆண்டு திருவாசகத்தினை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து வெளியிட்டார். ஆங்கில மொழியை அன்னை மொழியாகக் கொண்ட போப் "இங்கே ஒரு தமிழ் மாணவன் உறங்கிக் கொண்டிருக்கிறான் " என தனது கல்லறையில் எழுதுமாறு இறுதிமுறியில் எழுதி தன்னைத் தமிழராகவே ஆக்கிக் கொண்டார்.

வீரமாமுனிவர் :

இத்தாலி நாட்டில் பிறந்த வீரமாமுனிவர் தமிழகம் வந்து தமிழைக் கற்றார். தமிழ் மொழிப்பற்றினால் "தைரிய நாதர்" என முதலில் சூட்டிக் கொண்ட தனதுபெயரைத் தனித்தமிழாக்கி "வீரமாமுனிவர்எனச் சூட்டிக் கொண்டார். இவர், தமிழில் முதன் முதலாகச் சதுரகராதி என்னும் அகரமுதலியை வெளியிட்டார். இவர் எழுதிய தேம்பாவணி, காவலூர் கலம்பகம், கதம்ப மாலையாகவும், தொன்னூல் பொன் நூலாகவும், சதுரகராதி முத்தாரமாகவும் விளங்குகிறது. தமிழ் முனிவர்களுள் ஒருவராக விளங்குகிறார் வீரமாமுனிவர் என ரா.பி. சேதுப்பிள்ளை புகழாரம் சூட்டினார்.

ஆறுமுக நாவலார்:

யாழ்ப்பாணம் நல்லூரில் பிறந்த இவர்தம் மொழித்திறமையும் வாக்கு வன்மையும் பொருள் விளக்கும் தன்மையும் கண்டு திருவாவடுதுறை ஆதினத்தார் மகிழ்ந்தனர். அதனால் ஆதினத்தார் இவருக்கு "நாவலர்" என்னும் பட்டத்தைச் சூட்டிச் சிறப்பித்தனர். இவரை "வசன நடை கைவந்த வள்ளலார்" என பரிதிமாற் கலைஞர் பாராட்டியுள்ளார். சென்னையில் அச்சுக்கூடம் அமைத்து சிறந்த தமிழ் நூல்களைப் பதிப்பித்தார். தமிழ் இலக்கிய இலக்கண நூல்களைப் பதிப்பித்தும், பல பாடல்களை எழுதி பதிப்பித்தும் வெளியிட்டு தமிழ் மொழியை வளர்த்தார்.

குணங்குடி மஸ்தான் சாகிபு :

"மாதவஞ் சேர் மேலோர் வழுத்தும் குணங்குடியான்" என்று புலவர் பெருமக்களால் புகழப்பட்டவர். இவரின் இயற்பெயர் "சுல்தான் அப்துல் காதிறு" என்பதாகும். தம் இளம் வயதில் முற்றும் துறந்து தனித்திருந்து ஞானம் பெற்றவர். இவர் தாயுமானவரைப்போல் பல்வேறு கண்ணி நூல்களைப் பாடியுள்ளார். இவர்தம் பாடல்கள் உலகின் உண்மைநிலை என்றும் அழியாப் பேரின்ப வாழ்வுக்கு அழைத்துச் செல்வன. இவர் குருநிலை, தவநிலை, துறவுநிலை, தியான நிலை, சமாதிநிலை எனப்பொருள் தரும் வகையில் பாடல்கள் பல இயற்றி தமிழுக்குத் தொண்டாற்றினர்.

உலகத்தமிழ் மாநாடு :

உலகிலேயே மொழிக்காக முதன் முதலில் மாநாடு நடத்திய நாடு மலேசியா. அதுவும் தமிழ் மொழிக்காக நடைபெற்றது. இலங்கை, சிங்கப்பூர் மலேசியா ஆகிய நாடுகளில் இன்றும் தமிழே ஆட்சிமொழியாகத் திகழ்கிறது. காரணம் அவ்விடங்களில் குடிபெயர்ந்த தமிழர்கள் தமிழ்ப்பற்றும் தமிழை வளர்க்கும் நோக்கமும் உடையவர்களாக இருப்பதால்தான்.

நான்காம் தமிழ்ச்சங்கம்

முதல், இடை, கடைஆகிய முச்சங்கங்கள் அமைத்து தமிழை வளர்த்தனர் புலவர்கள். ஆனால், இவை கடற்கோளால் அழிந்தன. அதன் பின்னர் பரிதி மாற்கலைஞர், .வே.சா, இராகவனார் முதலிய பேராசிரியர்களின் முயற்சியால் பாசுகர சேதுபதியின் தலைமையில் வள்ளல் பாண்டித்துரைத்தேவர் மேற்பார்வையில் 14.09.1901 இல் மதுரையில் நான்காம் தமிழ்ச் சங்கத்தை அமைத்துத் தமிழை வளர்த்தனர்.

முடிவுரை

தமிழச் சான்றோர்கள் உலகம் யாவையும் தாமுளவாக்கித் தம் கலைகளையும் சிந்தனைகளையும் வேர்விட்டுப் பயிர் வளர்த்த செந்தமிழ் மரபில் தோன்றியவர்கள். தரணியெங்கும் தொண்டாற்றி வருகிறார்கள். யாதும் ஊரே யாவரும் கேளீர்" எனப் பாடிய தோடல்லாமல் உலகம் உய்யவும் நலம் பெறவும் அடித்தளமிட்டு வருகிறார்கள். குமரிக்கண்டத்தில் தோன்றிய தமிழினம் உலகமெங்கும் பரவி புகழ் பெறக் காரணம் நம் சான்றோர்களால் தான். "தமிழன் என்றோர் இனமுண்டு தனியே அவர்க்கொரு குணமுண்டு"

 

நயம் பாராட்டுக.

தேனினும் இனியநற் செந்தமிழ் மொழியே!

தென்னாடு விளங்குறத் திகழுந்தென் மொழியே!

ஊனினும் ஒளிர்வுறும் ஒண்டமிழ் மொழியே!

உணர்வினுக் குணர்வதாய் ஒளிர் தமிழ் மொழியே!

வானினும் ஓங்கிய வண்டமிழ் மொழியே!

மாந்தருக் கிருகணா வயங்குநன் மொழியே!

தானனி சிறப்புறுந் தனித்தமிழ் மொழியே!

தழைத்தினி தோங்குவாய் தண்டமிழ் மொழியே!

                                      - கா. நமச்சிவாயர்.

திரண்ட கருத்து :

"வாழைக்கு அழகு குருத்து, பாடலுக்கு அழகு கருத்து"

"தேனினும் இனிமையான செம்மை பெற்ற மொழி தமிழ் மொழி". தென்னாட்டில் சிறந்து விளங்குகின்ற மொழி தமிழ் மொழி. ஒளி வீசி அறிவும், செறிவும், நுட்பமும் கொண்ட மொழி தமிழ் மொழி. உணர்வோடு உணர்வான மொழி. வானைக் காட்டிலும் உயர்ந்து விளங்குகின்ற வன்மையான மொழி. தழைத்து ஓங்குவாய் குளிர்ச்சி தங்கிய தமிழ் மொழி என தமிழ் மொழியைச் சிறப்பித்துக் கூறியுள்ளார் கா. நமச்சிவாயர்.

மைய கருத்து :

இப்பாடலில் தமிழ் மொழியின் இனிமையையும் பெருமையினையும், புகழையும் சிறப்பையும் அழகாகக் கூறியுள்ளார் ஆசிரியர்.

தொடைநயம் :

"தொடையற்ற பாட்டு நடையற்றுப் போகும்"

செய்யுளானது எதுகை மோனை, இயைபு, முரண் முதலியவற்றால் தொகுக்கப்படுவது தொடை எனப்படும். இப்பாடலில் தொடை நயங்கள் சிறப்பாகக் கையாளப்பட்டுள்ளன.

மோனை நயம் :

"மோனையற்ற பாட்டு சேனையற்ற நாடு"

செய்யுளில் அடி அல்லது சீர் தோறும் முதல் எழுத்து ஒன்றிவரத் தொடுப்பது மோனைத்தொடை ஆகும்.

(.கா) தேனினும் - தென்னாடு

வானினும் - ண்டமிழ் - யங்கு

னினும் - ணர்வினும்

தானனி - னித்தமிழ் - ழைத்தினி

எதுகை நயம் :

செய்யுளில் இரண்டாம் எழுத்து ஒன்றி வரத் தொடுப்பது எதுகைத் தொடை ஆகும்.

(.கா)

தேனினும்

னினும்

வானினும்

இயைபு நயம் :

செய்யுளில் கடைசி எழுத்தோ, சீரோ, அசையோ ஒன்றி வரத்தொடுப்பது இயைபுத் தொடை ஆகும். "மொழியே'' என்னும் சொல் அடிதோறும் வந்து இயைபாக அமைந்துள்ளது.

(.கா) மொழியே

அணி நயம் :

"கோவிலுக்கு அழகு மணி; செய்யுளுக்கு அழகு அணி"

இப்பாடலில் ஆசிரியர் இயல்பான தமிழ் மொழியை சற்று உயர்வுபடுத்தி (தமிழ் மொழியை ) கூறியுள்ளதால், உயர்வு நவிற்சி அணி இடம் பெற்றுள்ளது.

சந்த நயம் :

"யானைக்கு அழகு தந்தம்; செய்யுளுக்கு அழகு சந்தம்''

இப்பாடலைப் பாடுவதற்கு இனிமையாகவும் பொருள் புரிவதற்கு எளிமையாகவும் அழகிய சந்த நயத்துடனும் பாடியுள்ளார்.

சொல் பொருள் நயம் :

இச்செய்யுளில் சொல்லும் பொருளும் அழகுபட அமைந்துள்ளன. (.கா) செந்தமிழ் - செம்மையான மொழி; ஒண்டமிழ் - ஒளிர்கின்ற மொழி; வண்டமிழ் - வளமிக்கமொழி.

தலைப்பு :

தலைப்பில்லாக் கவிதை "தாயில்லாப் பிள்ளை போல" இச்செய்யுளுக்கு ஏற்ற தலைப்பு தமிழ் மொழியின் சிறப்புகள்.

 

மொழியோடு விளையாடு

சொற்களை இணைத்து புதிய சொற்களை உருவாக்குக.

(தேன், விளக்கு, மழை, விண், மணி, விலங்கு, செய், மேகலை, வான், பொன், பூ)

புதிய சொற்கள்:

தேன்மழை; மணிவிளக்கு; மழைத்தேன்; விண்மணி; மணிமேகலை; பொன் விலங்கு; செய்வான்; வான்மழை; பொன்மணி; பொன்விளக்கு; பூமழை; பூமணி; பூவிலங்கு.

 

குறிப்புகளைக் கொண்டு வினாவிலேயே விடை இருப்பது போன்று வினாத் தொடர்கள் அமைக்க.

(குறளின்பம், சுவைக்காத இளநீர், காப்பியச் சுவை, மனிதகுல மேன்மை, விடுமுறை நாள்)

• குறளின்பத்தில் திளைக்காத தமிழன் உண்டா?

• மனிதர்கள் சுவைக்காத இளநீர் உண்டோ ?

• நீ காப்பியச் சுவையை அறிந்துள்ளாயா?

• இக்காலங்களில் மனிதகுல மேன்மை சிறப்புற உள்ளதா?

தேரோட்டம் அன்று உள்ளூர் விடுமுறை நாள்" என அறிவிக்கப்படுமா?

 

 

எண்ணுப்பெயர்களைக் கண்டு தமிழ் எண்களில் எழுதுக.


 

அகராதியில் காண்க.

அடவி - காடு

அவல் - பள்ளம்

சவல் - பிடரி, முதுகு

செறு - வயல் கோபம்

பழனம் - வயல்

புறவு - சிறு காடு

 

காட்சியைக் கண்டு கவிதை எழுதுக.


மனிதர்களின் மனமாற்றம் என்றும்

மரத்திற்கு மரம் தாவும் குரங்கு போல

மனம் போன போக்கில் கற்கும் பாடம்

மதியைக் கெடுக்கும் பூட்டு - உன்

மதியைத் திறக்கப்படாதே காரணம்

மதியென்னும் அறிவு பூட்டைத் திற

வாழ்க்கையில் வெற்றி பெறுவாய்.

வாழ்வும் மலரும் உடலும் உள்ளமும் செழிக்கும்

வாழ்வில் வளமாய் இருப்பாய் நீ

 

செயல் திட்டம்

நீங்கள் வாழும் பகுதியிலுள்ள எவையேனும் ஐந்து பயிர்வகைச் சொற்களுக்கான படத்தொகுப்பை உருவாக்குக.

 

நிற்க அதற்குத் தக.


இன்சொல் வழி                 தீய சொல் வழி

பிறர் மனம் மகிழும்            பிறர் மனம் வாடும்

அறம் வளரும்                 அறம் தேயும்

புகழ் பெருகும்                 இகழ் பெருகும்

நல்ல நண்பர்கள் சேருவர்      நல்ல நண்பர்கள் விலகுவர்

அன்பு நிறையும்                பகைமை நிறையும்

இதில் நீங்கள் செல்லும் வழி யாது? உங்கள் நண்பருக்குக் காட்டும் வழி யாது?

நாம் இன் சொல்லையே பேசுவோம்; நம் நண்பர்களையும் தீய சொல்லை நீக்கி இன்சொல்லைப் பேசி வாழ்க என அறிவுரை கூறுவோம்; அதன் வழியை பின்பற்றச் செய்வோம்.

 

கலைச்சொல் அறிவோம்

Vowel - உயிரெழுத்து

Consonant - மெய்யெழுத்து

Gomograph - ஒப்பெழுத்து

Monolingual - ஒரு மொழி

Conversation - உரையாடல்

Discussion கலந்துரையாடல்

 

அறிவை விரிவு செய்

நாம் ஏன் தமிழ் காக்க வேண்டும் – முனைவர் சேதுமணி மணியன்

தவறின்றித் தமிழ் எழுதுவோம் – மா. நன்னன்

பச்சை நிழல் – உதயசங்கர்


 

இணையத்தில் காண்க.

http://www.tamilvu.org/library/ nationalized/html/naauthor-58.htm

http://www.tamilvu.org/library/ lA460/html/lA460ind.htm

https://www.vikatan.com/news/ tamilnadu/115717-

devaneya-pavanar-birth-anniversary.html

 

Tags : Chapter 1 | 10th Tamil இயல் 1 | 10 ஆம் வகுப்பு தமிழ்.
10th Tamil : Chapter 1 : Amudha oottru : Tamil Language Exercise - Questions and Answers Chapter 1 | 10th Tamil in Tamil : 10th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 10 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 1 : அமுத ஊற்று : மொழி அறிவு - கேள்விகள் மற்றும் பதில்கள் - இயல் 1 | 10 ஆம் வகுப்பு தமிழ் : 10 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
10 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 1 : அமுத ஊற்று