Home | 11 ஆம் வகுப்பு | 11வது தமிழ் | கேள்விகள் மற்றும் பதில்கள்

இயல் 2 | 11 ஆம் வகுப்பு தமிழ் - கேள்விகள் மற்றும் பதில்கள் | 11th Tamil : Chapter 2 : Maamalai potrutum

   Posted On :  16.08.2023 10:04 pm

11 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 2 : மாமழை போற்றுதும்

கேள்விகள் மற்றும் பதில்கள்

11 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 2 : மாமழை போற்றுதும் : கேள்விகள் மற்றும் பதில்கள் | தமிழ்நாடு பள்ளி சமச்சீர் புத்தகங்கள்

இயல் 2

மாமழை போற்றுதும்

 

நம்மை அளப்போம்

 

பலவுள் தெரிக

1. பொருத்தமான இலக்கிய வடிவம் எது?

) ஏதிலிக் குருவிகள் - மரபுக் கவிதை

) திருமலை முருகன் பள்ளு - சிறுகதை

) யானை டாக்டர் - குறும் புதினம்

) ஐங்குறுநூறு - புதுக்கவிதை

[விடை: ) யானை டாக்டர் - குறும் புதினம்]

 

2. மண்ணுக்கு வளம் சேர்ப்பன

) மண்புழு

) ஊடுபயிர்

) இயற்கை உரங்கள்

) இவை மூன்றும்

[விடை: இயற்கை உரங்கள்]

 

3. "வான் பொய்த்தது" - என்ற சொற்றொடர் உணர்த்தும் மறைமுகப்பொருள்

) வானம் இடிந்தது

) மழை பெய்யவில்லை

) மின்னல் வெட்டியது

) வானம் என்பது பொய்யானது

[விடை: ) மழை பெய்யவில்லை]

 

4. கருப்பட்டி, பனங்கற்கண்டு போன்றவை

) மதிப்புக் கூட்டுப் பொருள்கள்

) நேரடிப்பொருள்கள்

i) - மட்டும் சரி

ii) - மட்டும் சரி

iii) இரண்டும் சரி

iv) - தவறு, - சரி

[விடை : i) - மட்டும் சரி]

 

5. பிழையான தொடரைக் கண்டறிக.

) பதநீரிலிருந்து பனங்கற்கண்டு, கருப்பட்டி போன்றவற்றைத் தயாரிக்கின்றனர்.

) ஏதிலிக்குருவிகள் என்பது வாழ்வதற்கான சூழல் கிடைக்காத குருவிகளாகும்.

) யானைகளால் வெகு தொலைவில் உள்ள நீரினை வாசனை மூலம் அறியமுடியும்.

[விடை : ) குறைந்த எட்டுத்தொகை அடிகளை ஐங்குறுநூறு நூல்களுள் உடையது.]

 

குறுவினா

1. தமிழ்நாட்டின் மாநிலமரம் - சிறுகுறிப்பு வரைக.

விடை

தமிழ்நாட்டின் மாநிலமரம் பனைமரம்.

 ஏழைகளின் கற்பக விருட்சம் பனைமரம்.

 சிறந்த காற்றுத்தடுப்பான்,

நிலத்தின் ஆழத்தில் நீர்மட்டம் குறையாமல் நீரைச் சேமித்து வைக்கின்ற தன்மையுடையது.

பனை வளர பெரிய அளவத் தண்ணீர் தேவையில்லை.

 ஏழே ஆண்டுகளில் காய்க்கத் தொடங்கி விடும்.

பனையிலிருந்து நுங்கு, பதநீர், கருப்பட்டி, பனங்கற்கண்டு முதலியவை கிடைக்கின்றன.

 

2. ஏதிலியாய்க் குருவிகள் எங்கோ போயின - தொடரின் பொருள் யாது?

விடை

மரங்கள் வெட்டப்பட்டன.

வான்மழை பொய்த்தது.

மண்வளம் குன்றியது.

குருவிகள் கூடுகட்டி வாழ மரங்கள் இல்லை.

வாழ ஏதுமின்மையால் ஏதிலியாய்க் குருவிகள் எங்கேயோ பறந்து சென்றுவிட்டன.

 

3. வளருங் காவில் முகில்தொகை ஏறும்பொன் மாடம் எங்கும் அகிற்புகை நாறும் - அடிக்கோடிட்ட தொடர் குறிப்பிடுவது என்ன?

விடை

நூல் - திருமலை முருகள் பள்ளு. தென்கரை நாடு.

ஆசிரியர் -பெரியவன் கவிராயர்.

தென்கரை நாட்டின் நீர்டு வளர்ந்த சோலையில் மேகக்கூட்டங்கள் தங்கிச் செல்லும். (கா- சோலை)

 

3. அலர்ந்து - பகுபத உறுப்பிலக்கணம் தருக,

விடை

அலர்ந்து அலர் + த் (ந்) + த் +

அலர் - பகுதி, த் - சந்தி, த் - ந் ஆனது விகாரம், த் - இறந்தகால இடைநிலை, வினையெச்ச விகுதி.

 

5. ய், வ், ஞ், ட், ற், ந் - மெய்களுக்கான வேற்றுநிலை, உடனிலை மெய்ம்மயக்கங்களுக்கு எடுத்துக்காட்டுகள் தருக,

விடை

வேற்றுநிலை மெய்ம்மயக்கம்

ய் வாய்மை (ய்)

வ் தெவ்யாது (வ்)

ஞ் மஞ்சள் ()

ட் காட்சி (ட்)

ற் பயிற்சி (ற்)

ந் மந்தை (ந்)

உடனிலை மெய்ம்மயக்கம்

செய்யாமை (ய்)

இவ்விதம் (வ்)

விஞ்ஞானம் ()

பட்டம் (ட்)

வெற்றி (ற்)

செந்நாய் (ந்)

 

6. காற்றின் தீராத பக்கங்களில் எது எதனை எழுதிச் சென்றது?

விடை

ஒரு பறவையின் சிறகிலிருந்து பிரிந்து விழுந்த இறகு ஓன்று காற்றின் தீராத பக்கங்களில் அப்பறவையின் வாழ்வை எழுதிச் செல்கிறது.

 

சிறுவினா

1. வேதிக்கலப்பில்லாத பூச்சிக்கொல்லி நடைமுறைக்குச் சாத்தியமா? - நும் கருத்தை எழுதுக.

விடை

வேதிக் கலப்பில்லாத பூச்சிக்கொல்லியைப் பயன்படுத்துவது நடைமுறைக்குச் சாத்தியம்.

முன்னோர்கள் எந்தவிதமான இரசாயனப் பூச்சிக் கொல்லியையும் பயன்படுத்தவில்லை.

வேப்பங்கொட்டை, நொச்சி இலை, புங்கன், பிரண்டை, கற்றாழை எல்லாவற்றையும் இடித்து, கோமியத்தில்ஊறவைத்துப் பயிரில் தெளித்தார்கள்.

பூச்சியும் படிப்படியாகக் குறைந்தது.

இவ்வேதிக்கலப்பில்லாத பூச்சிக் கொல்லியால் நுண்ணுயிர்ப் பெருக்கமும், மண்வளமும் ஏற்பட்டன.

இரசாயனப் பூச்சிக்கொல்லி பயிர்களுக்குள் ஊடுருவி, சாப்பிடுகிற மக்களுக்கும் நிறைய நோய் உண்டாக்கும்.

 

2. காற்றில் ஆடும் புல் வீடுகளுக்கு அழகிய பெரியவன் தரும் ஒப்பீடு யாது? ஏன்?

விடை

குருவிகளையும் கூடுகளையும் காணமுடியவில்லை.

முன்பெல்லாம் அடைமழைக்காலம் ஆற்றில் வெள்ளம் கரைபுரணர்டு ஓடும்.

கரைகளில் நெடிய மரங்கள்.

மரங்களில் பறவைகளின் ஒலிகள்.

வழிநெடுகளிலும் தூக்கணாங்குருவி கூடுகள், முள்ளால் கட்டப்பட்ட இக்குருவி கூடுகளில் குருவிகள் இல்லாத காரணத்தால் ஏக்கத்தின் காரணமாக காற்றில் அசையும் வீடுகளென வருணிக்கிறார்.

 

3. "சலச வாவியில் செங்கயல் பாயும்” - இடஞ்சுட்டிப் பொருள் விளக்குக.

விடை

நூல் : திருமலை முருகன் பள்ளு - வடகரை நாடு பாடல் அடிகள்.

ஆசிரியர் : பெரியவன் கவிராயர்.

இடம் : வடகரைநாட்டின் வளத்தைக் கூறும் பாடலில் இவ்வரி இடம்பெற்றுள்ளது.

பொருள் : வடகரை நாட்டின் தாமரைத் தடாகத்தில் மீன்கள் துள்ளிப் பாய்ந்து விளையாடும்.

விளக்கம் : வடகரை நாட்டில் மலரில் மொய்க்கும் வண்டுகள் இந்தளம் என்ற பண்ணினை இசைப்பதால் உள்ளான் பறவை வாலை ஆட்டிக்கொண்டு, மதகுகளின் சங்கிலியில் மீனைப் பிடித்து உண்பதற்காக அமர்ந்திருக்கும். அப்போது தாமரைத் தடாகத்தில் மீன்கள் துள்ளிப் பாய்ந்து விளையாடும்.

 

4. ஐங்குறுநூற்றுப் பாடல் சுட்டும் திணை, முதற்பொருள், கருப்பொருள்களை அட்டவணைப்படுத்துக.

விடை

தினை : முல்லைத் திணை

முதற்பொருள் : நிலமும் பொழுதும்

நிலம்காடும் காடு சார்ந்த இடமும்

பெரும்பொழுது - கார்காலம்

சிறுபொழுது - மாலை

கருப்பொருள்:

தெய்வம் - திருமால் (மாயோன்)

மக்கள - ஆயர் - ஆய்ச்சியர், இடையர் - இடைச்சியர்

தொழில் - வரகு, சாமை விதைத்தல், ஆநிரை மேய்த்தல், ஏறுதழுவல், களை பறிப்பு.

உணவு - வரகு, சாமை, முதிரை.

விலங்கு - மான், முயல்

பூ - முல்லை, தோன்றி

ஊர் - பாடி, சேரி

பறை - ஏறுகோட் பறை

யாழ் - முல்லை யாழ்

சான்று : 'காயா கொன்றை நெய்தல் முல்லை....' பேயனார் பாடிய பாடல்.

 

5. தமிழ் நெடுங்கணக்கு வரிசையில் இனவெழுத்துகளின் பங்கைக் குறிப்பிடுக.

விடை

தமிழ்எழுத்துகளின் அகர வரிசைப் பட்டியலில் ஒரு வல்லெழுத்து அடுத்து ஒரு மெல்லெழுத்து அமையப் பெற்றிருப்பது தமிழின் சிறப்பு,

இவ்வாறு அமையப்பெற்றுள்ள வல்லினமும் மெல்லினமும் ஒன்றுக்கொன்று இனவெழுத்துகள் ஆகும்.

பிறக்கும் இடம், ஒலிக்கும் முயற்சி இவற்றால் ஒன்றுபடுவது இனவெழுத்தாம்.

.கா: கங்கை (கங), பஞ்சு (சஞ), மண்டபம் (டண), பந்தம் (தந), கம்பு (பம), மன்றம் (றன)

இனவெழுத்தின் பயன்:

மொழியைப் பிழையின்றிப் பேசவும் எழுதவம் பொருள் மாறாமல் இருக்கவும் உதவுகிறது.

 

நெடுவினா

1. 'சுற்றுச்சூழலை வளப்படுத்துவது இயற்கை வேளாண்மையே' என்னும் தலைப்பில் மேடைப் பேச்சிற்கான உரையை உருவாக்குக.

விடை

சுற்றுச்சூழலை வளப்படுத்துவது இயற்கை வேளாண்மையே என்னும் தலைப்பில் என் கருத்தினைப் பதிவு செய்ய வந்துள்ளேன்.

நிலவளப் பராமரிப்பு:

நிலத்தின் வளத்தை அக்கறையுடன் பராமரித்தால் பதிலுக்கு நிலமும் மனிதத் தேவைகளை நல்ல முறையில் நிறைவு செய்யும். விவசாயத்தின் வசந்தகாலமாக இயற்கை வேளாண்மை எல்லாக் காலத்திலும் திகழும்.

இயற்கை வேளாண்மை:

இரசாயன உரம், இரசாயன பூச்சுக்கொல்லி - இவற்றைப் பயன்படுத்தாமல் விதை விதைப்பது, தொழு உரம் இடுவது ஊடு பயிர் போடுவது, ஓட்டுமொத்தமாக விதைப்பதில் தொடங்கி விளைச்சல் முடிகின்ற வரைக்கும் வேதிக்கலப்பே இல்லாமல் பயிர் செய்வது இயற்கை வேளாண்மை.

இயற்கைப் பூச்சிக்கொல்லி:

வேப்பங்கொட்டை, நொச்சி இலை, புங்கன், பிரண்டை கற்றாழை - இவை எல்லாவற்றையும் இடித்துக் கோமியத்தில் ஊறவைத்துத் தெளிப்பதுவே இயற்கைப் பூச்சிக்கொல்லி ஆகும். தொழு உரம்:

மாட்டுச் சாணம், கோமியம் ஆகிவற்றைக் கலந்து வைக்கோலை மட்கச் செய்து இடுவது நன்செய்க்கு உரியது. காய்ந்த இலைச்சருகு. சாம்பல் ஆகிவற்றை கலந்து போடுவது புன்செய்க்குரியது.

இயற்கை வேளாண்மையின் பயன்கள்:

இயற்கைப் பூச்சிக்கொல்லி, தொழு உரம் இவற்றைப் பயன்படுத்துவதால்.

மண்ணில் நுண்ணுயிர்ப் பெருக்கம் ஏற்படும்.

மண் தன் வளத்தை இழக்காது.

மண்புழ போன்ற சின்ன உயிர்கள் அழிவது தடுக்கப்படும்.

விளைச்சல் குறையாது.

நாம் பயன்படுத்துகின்ற உரம். மருந்து எல்லாமே இயற்கையாக நம்மிடம் இருப்பதால் சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படும் என்பது உண்மை என்று கூறி முடிக்கிறேன். நன்றி!

 

2. திருமலை முருகன் பள்ளு கூறும் வடகரை, தென்கரை நாட்டுப் பாடல்கள்வழி இயற்கை வளங்களை விவரிக்க.

விடை

வடகரை நாடு:

வடகரை நாட்டில் மலரில் மொய்க்கும் வண்டுகள் இந்தளம் என்னும் பண்ணை ரீங்காரமிட்டுப் பாடும்.

இவ்விசையைக் கேட்டு மெய்மறந்து வாய்க்காலின் மதகுகளிடையே கட்டப்பட்ட சங்கிலியின் மீது அமர்ந்தஉள்ளான் பறவை, மீனைப் பிடித்து உண்ணாமல் வாலை ஆட்டிக் கொண்டு அமர்ந்திருக்கும்.

தாமரைத் தடாகத்தில் மீன்கள் துள்ளிப் பாய்ந்து விளையாடும்.

முத்துக்களை ஈன்ற வெண்சங்குகள் பரவிக் காணப்படும்.

மின்னலையொத்த பெண்கள் பெய் என்றால் மழை பெய்யும்.

உள்ளங்கை ஏந்தி இரந்துண்ணும் இயல்புடைய முனிவர்கள் கூறுவது மெய்யாகும்.

இத்திருமலையில் புலவர்கள் போற்றும் திருமலைச் சேவகன் வீற்றிருக்கிறார்.

தென்கரை நாடு:

தென்கரை நாட்டின் நீண்டு வளர்ந்த சோலையில் மேகக்கூட்டங்கள் தங்கிச் செல்லும்.

தென்கரை நாட்டில் உள்ள பொன்னாலான மாடமாளிகையில் அகிற்புகையின் நறுமணம் பரவிக் கொண்டே இருக்கும்.

மாட மாளிகைகளை மயில்களும் கார்கால மேகங்களும் சூழ்ந்து காக்கும்.

செங்கோலைக் கொண்ட மன்னர் தென்கரை நாட்டை நீதி தவறாது காவல் காப்பார்.

இளம்பெண்கள் பொன்னாலான அரங்கில் நடித்து விளையாடி மகிழ்வர்.

குளங்களில் அலைகள் முத்துக்களை ஏந்தி வரும்.

அலைகள் சுரையில் மோதும்போது முத்துக்கள் சிதறி வெடிக்கும்.

இந்தகைய குற்றாலத்தில் வண்டுகள் மொய்க்கும் கொன்றை மலர்ச்சூடி தென்னாடுடைய சிவன் குற்றாலநாதராக வீற்றிருக்கிறார்.

 

3. யானை டாக்டர் கதை வாயிலாக இயற்கை, உயிரினப் பாதுகாப்பு ஆகியவை குறித்து நீவிர் அறிந்தவற்றைத் தொகுத்து எழுதுக,

விடை

முன்னுரை:

ஜெயமோகன் நாகர்கோவிலைச் சேர்ந்தவர். இவர் இயற்கை ஆர்வலர், யானையைப் பாத்திரமாகப் படைத்து ஊமைச் செந்நாய், மத்தகம் போன்ற கதைகளை எழுதியுள்ளார். இதில் சுதாபாத்திரமாக வந்துள்ள டாக்டர், வி. கிருஷ்ணமூர்த்தி ஒரு காட்டு விலங்கியல் வல்லுநர், கதையின் நோக்கம்:

யானை வாழும் காடுகளில் மனிதர்களால் கொடுக்கப்படும் உயிர்ப் பாதுகாப்பும், மனிதர்களால் ஒருபோதும் இழைக்கப்படக் கூடாத செயல்பாடுகளும் இக்கட்டுரையில் பகிரப்பட்டுள்ளன.

முதுமலையில் யானைக்குக் கால் வீக்கம்:

கதையைக் கூறும் கதாபாத்திரமாக வனத்துறை அதிகாரி டாக்டர். வி.கிருஷ்ணமூர்த்தியுடன் புண்பட்ட யானை இருக்கும் முதுமலைக் காட்டிற்குச் செல்கின்றனர். வழிகாட்ட மலைவாழ் குறும்பர்களுடன் இருவரும் காட்டினுள் சென்றனர். கொஞ்ச நேரத்தில் யானைகளின் நெடி (நாற்றம்) வந்தது. புல்வெளியில் பன்னிரெண்டும், மூங்கில் புதரில் ஆறும், குட்டிகள் நான்கும் என யானைக் கூட்டமே கண்ணில் பட்டது.

டாக்டர் கேயும் புண்பட்ட யானையும்:

தன்னுடன் வந்தவர்களை நிற்க வைத்துவிட்டு டாக்டர் யானைக் கூட்டத்தை நெருங்கினார். புண்பட்டயானை மரத்தடியில் நின்றது. டாக்டர் யானைக் கூட்டத்தை நெருங்கியதும் பிடியானை ஒன்று எதிர்த்தது. சில மணிகளுக்குப் பிறகு பின் வாங்கியது. டாக்டர் தன் வேலையை ஆரம்பித்தார். மயக்க மருந்து கலந்த ஊசியைத் துப்பாக்கியில் வைத்து சுட்டார். யானை சற்றே சாய்ந்தது.

யானைக்குச் சிகிச்சை:

யானையின் காலில் மனித மிருகங்கள் குடித்துவிட்டு தூக்கி எறிந்த கண்ணாடிக் குப்பி நன்றாகப் பதிந்திருந்தது. சீழ்க்கட்டிப் பெரிதாக இருந்தது. சீழ்கட்டி வெட்டியெடுக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. இன்னும் பத்துப் பதினைந்து நாட்களில் குணமாகி விடும். சிகிச்சை முடித்து டாக்டர் திரும்பினார். இப்போது புண்பட்ட யானையைச் சுற்றி யானைகள் கூட்டம் பிளறியது. இதற்கிடையில் மஞ்சணத்தி மரத்திடியில் ஒரு குட்டியானை வந்தவர்களை நோட்டம் விட்டது.

விடியற்காலையில் யானைக் குட்டி:

ஒருநாள் விடியற்காலையில் டாக்டரின் வீட்டுக்குச் சற்று தூரத்தில் ஒரு யானைக் குட்டி இரண்டு வயதிருக்கும் தள்ளாடியது. டாக்டர் யானைக்குட்டியை நெருங்கி வாயில் மயக்கமருந்து ஊசி போட்டார். முன்போலவே யானைக்குட்டியின் கால்களில் மதுக்குப்பியின் கண்ணாடித் துண்டு, வெளியே எடுக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டது. ஓரிரு மணிகளில் யானைக்குட்டி எழுந்து விடும். மோப்பம் பிடித்துக்கொண்டு முந்நூறு மைல்தூரம் கூட வரும் சக்தி கொண்டவை யானைகள். சிகிச்சை முடித்து வீட்டின் படிகளிலை நின்று பார்த்தார் டாக்டர். யானைக்குட்டிக்கு அருகில் பத்துப் பண்ணிரண்டு யானைகள் பிளிறிப் பேரொலி எழுப்பின. யானைகளின்முகத்தில் வானவர் புன்னகைக் காணப்பட்டது.

முடிவுரை:

இயற்கையோடு இயற்கையாய் வாழும் யானைகள் இருக்குமிடத்திற்கு மனிதர்கள் சென்றால், ஆபத்து நிறைந்த கண்ணாடி மதுக்குப்பிகளை எறிவதைக் கட்டாயம் நிறுத்த வேண்டும். யானைகளுக்கு இவை ஆபத்தானவை என்று தெரியாது. அவைகளின் உயிர்ப் பாதுகாப்புக்கு மனிதர்கள்தான் உத்திரவாதம் தர வேணடும்.

கீழ்மையான செயல்களைத் தவிர்ப்போம்! விலங்குகளுக்கு உயிர்ப்பாதுகாப்பு அளிப்போம்!!

 


 

மொழியை ஆள்வோம்

 

சான்றோர் சித்திரம்


தமிழிசை இயக்கத்தின் தந்தை என்று போற்றப்படும் ஆபிரகாம் பண்டிதர் தென்காசிக்கு அருகேயுள்ள சாம்பவர் வடகரை என்னும் சிற்றூரில் பிறந்தவர். இளமையிலேயே புகைப்படக்கலை, அச்சுக்கலை, சோதிடம், மருத்துவம், இசை ஆகிய துறைகளில் பெருவிருப்பம்கொண்டு, நேரம் கிடைக்கும்போதெல்லாம் அதன் நுட்பங்களைப் பயின்றார். திண்டுக்கல்லில் ஆப்ரகாம் பண்டிதர் ஆசிரியராகப் பணியாற்றும்போதே சித்த மருத்துவத்தில் சீரிய அறிவு, பெற்று மக்களால் அன்புடன் பண்டுவர்’ (மருத்துவர்) என்று அழைக்கப்பட்டார். சில ஆண்டுகள் பணியாற்றியபின் அதைவிடுத்து முழுமையாகச் சித்தமருத்துவத்தில் கவனம் செலுத்தினார். தஞ்சையில் குடியேறினார். மக்கள் அவரைப் பண்டிதர் என அழைக்கத் தொடங்கினர். பண்டைத் தமிழ் நூல்களையெல்லாம் ஆழ்ந்து கற்று, 'சங்கீத வித்தியா மாகஜன சங்கம்' என்னும் அமைப்பை உருவாக்கி, தமது சொந்தச் செலவிலேயே தமிழிசை மாநாடுகள் நடத்தினார். அனைத்திந்திய அளவில் நடந்த இசை மாநாடுகளுக்கும் சென்று உரையாற்றினார். அவருடைய இசைத்தமிழ்த் தொண்டின் சிகரம் 'கருணாமிர்த சாகரம்', எழுபத்தோராண்டுகள் வாழ்ந்து தமிழக்குத் தொண்டு செய்தவர் ஆபிரகாம் பண்டிதர்.

வினாக்களுக்கு விடையளிக்க:

1. உடனிலை மெய்ம்மயக்கச் சொற்களை எடுத்து எழுதுக.

2. வேற்றுநிலை மெய்மயக்கச் சொற்களை எடுத்து எழுதுக.

3. உடனிலை மெய்ம்மயக்கமாகவும், வேற்றுநிலை மெய்ம்மயக்கமாகவும் உள்ள சொற்களை எழுதி, மெய்களை அடிக்கோடிடுக.

4. கீழ்க்காணும் வடமொழிச் சொற்களைத் தமிழாக்குக.

) சங்கீதம் ) வித்தியா ) மகாஜனம் ) சாகரம்

5. இலக்கணக் குறிப்பும் பகுபத உறுப்பிலக்கணமும் தருக.

) பயின்றார் ) தொடங்கினர்

விடைகள்:

1. இயக்கத்தின் (க்க) திண்டுக்கல்லில் (க்க) புகைப்படக்கலை (ப்ப) மக்களால் (க்க) - 2

2. ஆழ்ந்து - (ழ்) வாழ்ந்து - (ழ்)

3. போற்றப்படும் (ற்ற) சாம்பபுவர் (ம்ப) பிறந்தவர் (ந்த) சிற்றூரில் (ற்றூ)

4. ) இசை ) கல்வி ) மக்கள் ) கடல்

5. இலக்கணக் குறிப்பு:

) பயின்றார் பலர்பால் வினைமுற்று

) தொடங்கினார் - பலர்பால் வினைமுற்று

பகுபத உறுப்பிலக்கணம்:

) பயின்றார் - பயில்(ன்) + ற் + ஆர்

பயில் - பகுதி, ல் - ன் ஆனது விகாரம், ற் - இறந்தகால இடைநிலை, ஆர் - பலர்பால் வினைமுற்று விகுதி.

) தொடங்கினர் - தொடங்கு + இன் + அர்

தொடங்கு - பகுதி, இன் - இறந்தகால இடைநிலை, அர் - பலர்பால் வினைமுற்று விகுதி.

 

தமிழாக்கம் தருக.

1. Just living is not enough. One must have sunshine, freedom and a little flower - Hans Anderson.

சாதாரண வாழ்க்கை வாழ்ந்தால் மட்டும் போதாது சூரியனைப் போல பிரகாசமாகவுயும் சுதந்திரமாகவும் பூவின் மணம் போலவும் வாழ வேண்டும் - ஹேன்ஸ் ஆண்டர்சன்.

2. In nature, light creates the colour. In the picture, colour creates the light - Hans Hofmann.

இயற்கையின் ஒளியிலிருந்து நிறம் கிடைக்கிறது. ஆனால் ஓவியங்களின் நிறம் ஒளியை உண்டாக்குகிறது - ஹேன்ஸ் ஹோ ஃப்மன்,

3. Look deep into nature and then you will understand everything better - Albert Einstein.

இயற்கையை உற்று நோக்குங்கள். பின்னர் எல்லாவற்றையும் நன்கு அறிவீர்கள் - ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்..

4. Simplicity is nature's first step, and the last of art – Philip James Bailey.

எளிமைதான் இயற்கையின் முதற்படியும் சுலையின் இறுதிப்படியும் ஆகும் - பிலிப் ஜேம்ஸ் பெய்லி.

5. Roads were made for journeys not destinations - Confucius.

வாழ்க்கைப் பாதையில் பயணம் தொடரும்; எண்ணங்கள் ஈடேறுவதில்லை - கன்பூஷியஸ்.

 

மயங்கொலிச் சொற்களை ஒரே தொடரில் அமைத்து எழுதுக.

1. உலை, உளை, உழை

2, வலி, வளி, வழி

3. கலை, களை, கழை

4. கனை, கணை

5. குரை, குறை

6. பொரி, பொறி

(.கா.) 1. உலை, உளை, உழை

மன உளைச்சல் தீரவும் வீட்டில் உலை கொதிக்கவும் உழைக்க வேண்டும்.

2. வலி, வளி, வழி

விடை :

வளியானது வலிமை கொண்டு வீசுவதால் மேகக்கூட்டம் வழியறியாமல் கலைகின்றது.

3. கலை, களை, கழை

விடை :

கலைகளில் ஒன்றான கழைக்கூத்தினைக் காழ்ப்புணர்வுகொண்டு களையக்கூடாது.

4. கனை, கணை

விடை :

கனைக்கும் பரியேறி களத்தில் பகைவனின் மார்பில் கணை விடுத்தான்.

5. குரை, குறை

விடை :

எங்கள் ஊரில் குரைக்கும் நாய்களுக்கு குறைவில்லை.

6. பொரி, பொறி

விடை :

பொறிக்கும் எந்திரத்தில் பொரி பொறிக்கப்பட்டது.

 

கீழ்க்காண் விளம்பரத்தைப் பத்தியாக மாற்றி அமைக்க.

உடல் வளர்த்தேன்! உயிர் வளர்த்தேன்!!!

இயற்கை உணவுத் திருவிழா


நாள் : தை 5 முதல் 11 வரை நேரம்: மாலை 6-10 மணி இடம்: தீவுத்திடல், சென்னை.

தூதுவளைச் சாறு

குதிரைவாலிப் பொங்கல்

வாழைப்பூ வடை

தினைப் பணியாரம்

வல்லாரை அப்பளம்

முடக்கத்தானி தோசை

ஆவாரம்பூச் சாறு

சாமைப் பாயாசம்

கேழ்வரகு உப்புமா

கம்புப் புட்டு

அகத்திப்பூ போண்டா

முள்முருங்கை அடை

இன்னும் பல......

விடை :

உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேன் என்ற திருமூலரின் திருமந்திரப்படி, இயற்கை உணவுத் திருவிழா, சென்னைத் தீவத் திடலில், தை-5 முதல் 11 வரை, நாள்தோறும் காலை 6 மணி முதல் மாலை 10 மணி வரை நடைபெறவிருக்கிறது.

அவ்வியற்கை உணவுத் திருவிழாவில் ஆவாரம்பூச் சாறு, தூதுவளைச் சாறு. குதிரைவாலிப் பொங்கல், சாமைப் பாயசம், வாழைப்பூ வடை, கேழ்வரகு உப்புமா, தினைப் பணியாரம், கம்புப் புட்டு, வல்லாரை அப்பளம், அகத்திப்பூ போண்டா, முடக்கத்தான் தோசை, முள்முருங்கை அடை முதலிய இயற்கை உணவுகள் வழங்கப்பட இருக்கின்றன.

வாருங்கள்வந்து சுவையுங்கள்!!

 

நயம் பாராட்டுக.

மீன்கள்கோடி கோடிசூழ வெண்ணிலாவே! ஒரு

வெள்ளியோடம்போல வரும் வெண்ணிலாவே

வளர்ந்துவளர்ந்து வந்த வெண்ணிலாவே!

மீண்டும் வாடிவாடிப் போவதேனோ? வெண்ணிலாவே!

கூகை ஆந்தைபோல நீயும் வெண்ணிலாவே! பகல்

கூட்டினில் உறங்குவாயோ? வெண்ணிலாவே

பந்தடிப்போம் உன்னையென்று வெண்ணிலாவே! நியும்

பாரில் வர அஞ்சினையோ? வெண்ணிலாவே!

- கவிமணி

விடை :

தலைப்பு : வெண்ணிலவு

திரண்ட கருத்து:

கோடி மீன்கள் சூழ்ந்திருக்க நடுவினில் ஒரு வெள்ளி ஓடம்போல வெண்ணிலவு பவனி வருகிறது. வெப்பமிகு சுதிரவனின் ஒளிதனைப் பெற்று நாளும் சுடலின் நடுவே ஆடுகிறது வெண்ணிலவு நாள்தோறும் வளரும் வெண்ணிலவே, பின்னர் நாள்தோறும் தேய்வதேனோ வெண்ணிலவே. பகலில் உறங்கும் ஆந்தைபோல நீயும் கூட்டினில் உறங்குகின்றாயோ வெண்ணிலவே. உன்னைப் பந்தாடி விளையாடலாம் என்று நினைத்தால் நீயும் உலகிற்கு வரமாட்டேன் என்கிறாய் வெண்ணிலவே.

மோனை நயம்:

இசைக்கு அழகு வீணை

செய்யுளுக்கு அழகு மோனை

பாடல் அடிகளின் சீர்களில் முதல் எழுத்து ஒன்றி வருவது மோனை.

சான்று : வளர்ந்து வாடி

கூகைகூட்டினில்

இயைபு நயம் :

பாடலின் ஈற்றசையோ, ஈற்றுச் சீரோ, ஒன்றி வருவது இயைபு ஆகும்.

சான்று: வெண்ணிலவே - வெண்ணிலவே

அணி நயம்:

நீர் தருவது கேணி

சீர் தருவது அணி

பாடலை அழகுறச் செய்வது அணி.

பாடலில் வெள்ளியோடம்போல்' என்ற வரிகளில் போல் என்ற உவமை உருபு காணப்படுகிறது. எனவே, இப்பாடலில் உவமையணி பயின்று வந்து பாடலை அழகுப்படுத்துகிறது.

கற்பனை நயம்:

சுதந்திரம் இருந்தால்தான் அறமும் புகழும் ஓங்கும் என்று தனது கற்பனையை நனவாக்கிக் காட்டியுள்ளார் கவிமணி.

 

மொழியோடு விளையாடு


எண்ணங்களை எழுத்தாக்குக.


விடை:

1. கவி 2. வின் 3. கலை 4. விலை-கவின்கலை

மரங்களே மனிதனின் வாழ்வாதாரம்

மரங்களே மக்களுக்குக் காற்றுதரும்

மரங்களே மக்களுக்கு மருத்துவமாகும்

மரங்களை வெட்டினால் மழையில்லை

மரங்களை வெட்டினால் குளிர்ச்சியில்லை

மரங்களை நடுவோம் வீதியோரம்

மரங்களே வாழ்வின் ஆதாரம்

மரங்களே கடவுளின் அவதாரம்

 

விழுந்த மலர்

கிளைக்குத் திரும்புகிறது

அடடா ... வண்ணத்துப்பூச்சி

- மோரிடாகே

ஓர் அழகு போனாலும் மற்றொரு அழகு அதன் இடத்தை நிரப்பும் என்பது இதன் உட்கருத்து.

 

புதிர்களில் மறைந்துள்ள சொற்களைக் கண்டுபிடிக்க.

1. ஐந்தெழுத்துக்காரன் முதலிரண்டோ பாட்டெழுதுபவரின் பட்டம் இரண்டும் மூன்றுமோ பசும்பால் என்பதன் பின் இறுதி கடைசி இரண்டெழுத்தோ மானினத்தில் ஒரு வகையாம் இரண்டும் ஐந்துமோ பொருளை விற்கத் தேவையாம் அது என்ன?

விடை:

1. கவி 2. வின் 3. கலை  4. விலைகவின்கலை

 

2. இறுதி இரண்டெழுத்தோ பழத்தின் முந்தைய பச்சை நிலை தமிழ்க்கடவுளின் முற்பாதியை முதலிரு எழுத்தில் வைத்திருக்கும் நடுவிலோ ஓரெழுத்து ஒருமொழி அதற்கும் முன் பொட்டு வைத்த ஙகரம் சேர்த்தால் காயாவான் பிரித்தால் நிலைமொழியில் மாமாவான் ஏழெழுத்துக்காரன் அவன் யார்?

விடை:

1. காய் 2. முரு 3. கை

4. முருங்கை - முருங்கைக்காய்

 

சுற்றுச்சூழல் விழிப்புணர்வு, இயற்கைப் பாதுகாப்பு குறித்த முழக்கத்தொடர்கள் எழுதிக் காட்சிப்படுத்துக.

.கா:

1. விதைப்பந்து எறிந்திருடுவீர்! பூமிப்பந்து காத்திடுவீர்!

2. சிட்டுக்குருவிக்குச் கொஞ்சம் அரிசியிடு! உலக உயிர்களுக்கு கருணையிடு!

விடை :

குப்பையை எறியாதீர்! குப்பைத் தொட்டியில் சேர்ப்பீர்!

மாற்றுத்திறனாளிக்கு உதவுவீர்! மாற்றுத்திறனாளிகளை மதிப்பீர்!

 

செய்து கற்போம்

வேளாண்மை தொடர்பான சொல் விளக்க அகராதி ஒன்று உருவாக்குக

 


நிற்க அதற்குத் தக


முன்மாதிரியானவர்கள் என்று யாரைக் கருதுவீர்கள்? அவர்களிடமிருந்து நீங்கள் கற்றுக்கொள்ள விரும்பும் நற்பண்புகளைக் குறிப்பிடுக.

முன்மாதிரியானவர் நான் விரும்பிய நற்பண்பு

தந்தை - நேரந்தவறாமை

தொடக்கப்பள்ளி ஆசிரியர் - எதற்கும் அஞ்சாமை

உறவினர் - எதையும் பெரிய துன்பமாக எண்ணாமை

 

கலைச்சொல் அறிவோம்

இயற்கை வேளாண்மை - Organic Farming

வேதி உரங்கள் - Chemical Fertilizers

ஒட்டு விதை- Shell Seeds

தொழு உரம் – Farmyard Manure

மதிப்புக்கூட்டுப் பொருள் - Value Added Product

வேர்முடிச்சுகள் – Root Nodes

தூக்கணாங்குருவி-Weaver Bird

அறுவடை - Harvesting

 

அறிவை விரிவு செய்

இயற்கை வேளாண்மை - கோ. நம்மாழ்வார்.

பனைமரமே பனைமரமே - . சிவசுப்பிரமணியன்.

பறவை உலகம் - சலீம் அலி.

யானைகள்-அழியும் பேருயிர் - . முகமது அலி, . யோகானந்த்

Elephants: Majestic Creatures of the Wild - Shoshani. J.

 

இணையத்தில் காண்க

https://www.elephantvoices.org/

 

இணையச் செயல்பாடு

இயற்கை வேளாண்மை

இயற்கை வேளாண்மை அறிவோம்!


படிகள்:

. கொடுக்கப்பட்டிருக்கும் உரலி / விரைவுக்குறியீட்டைப் பயன்படுத்தி 'இயற்கை வேளாண்மை' என்னும் செயலியைப் பதிவிறக்கி நிறுவிக்கொள்க.

●  செயலியின் முதல் பக்கத்தில் சங்க காலத்தில் ஏர்ப் பயன்பாடு, சங்க காலத்தில் எள் விளைச்சல் எப்படி இருந்தது போன்ற தகவல்கள் கொடுக்கப்பட்டிருக்கும்.

இடப்பக்கம் மேல்பகுதியில் உள்ள பட்டியலில் இயற்கை வேளாண்மை செய்திப்பிரிவுகளில் இயற்கை உரம், காணொலி, கீரை வகைகள், சிறுதானியச் சமையல், பழமொழி போன்ற பல தெரிவுகள் மூலம் இயற்கை வாழ்வியல் முறையை அறிக.

செயல்பாட்டின் படிநிலைக்கான படங்கள் :


செயல்பாட்டிற்கான உரலி

https://play.google.com/store/apps/details?id=

com.Aapp.-vivasayamintamil&hl=en

படங்கள் அடையாளத்திற்கு மட்டுமே.

 

Tags : Chapter 2 | 11th Tamil இயல் 2 | 11 ஆம் வகுப்பு தமிழ்.
11th Tamil : Chapter 2 : Maamalai potrutum : Questions and Answers Chapter 2 | 11th Tamil in Tamil : 11th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 11 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 2 : மாமழை போற்றுதும் : கேள்விகள் மற்றும் பதில்கள் - இயல் 2 | 11 ஆம் வகுப்பு தமிழ் : 11 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
11 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 2 : மாமழை போற்றுதும்