Home | 11 ஆம் வகுப்பு | 11வது இயற்பியல் | பருமனில் மாற்றம் ஏற்படும்போது செய்யப்பட்ட வேலை
   Posted On :  20.10.2022 02:26 pm

11வது இயற்பியல் : அலகு 8 : வெப்பமும் வெப்ப இயக்கவியலும்

பருமனில் மாற்றம் ஏற்படும்போது செய்யப்பட்ட வேலை

நகரும் பிஸ்டனைக் கொண்ட வாயு நிரப்பப்பட்ட உருளை ஒன்றைக் கருதுக.

பருமனில் மாற்றம் ஏற்படும்போது செய்யப்பட்ட வேலை: 


நகரும் பிஸ்டனைக் கொண்ட வாயு நிரப்பப்பட்ட உருளை ஒன்றைக் கருதுக. படம் 8.21 இல் காட்டியுள்ளவாறு மீமெது நிகழ்வில் உள்ளவாறு வாயு விரிவடைந்து பிஸ்டனை dx தொலைவு மெதுவாகத் தள்ளுகிறது.

இங்கு மீமெது நிகழ்வின் அடிப்படையில் வாயு விரிவடைகிறது. எனவே ஒவ்வொரு கணத்திலும் அழுத்தம், வெப்பநிலை மற்றும் அக ஆற்றல் ஆகியவை ஒரு குறிப்பிட்ட மதிப்பினைப் பெற்றிருக்கும். 

வாயுவால் பிஸ்டன் மீது செய்யப்பட்ட சிறிய வேலை


வாயுவால் பிஸ்டனின் மீது செலுத்தப்பட்ட விசை F = PA. இங்கு A என்பது பிஸ்டனின் பரப்பையும், P என்பது வாயு பிஸ்டனின் மீது செலுத்தும் அழுத்தத்தையும் குறிக்கிறது.


சமன்பாடு (8.14) ஐ பின்வருமாறு மாற்றியமைக்கலாம்


ஆனால், Adx = dV = வாயுவின் விரிவினால் ஏற்பட்ட பருமன் மாறுபாடு

எனவே வாயு விரிவடைந்ததால் செய்யப்பட்ட சிறிய வேலை


இங்கு dV நேர்க்குறி என்பதை கவனிக்க வேண்டும். ஏனெனில் பருமன் அதிகரிக்கிறது. 

பொதுவாக வாயுவின் பருமன் Vi லிருந்து Vf வரை அதிகரிப்பதால் செய்யப்பட்ட வேலையை பின்வருமாறு குறிப்பிடலாம்.


அமைப்பின் மீது வேலை செய்யப்பட்டிருப்பின் (Vi > Vf ) W எதிர்க்குறி மதிப்பைப் பெறும். 

சமன்பாடு (8.17) இல் அழுத்தம் P, தொகைக் குறியீட்டிற்கு உள்ளே உள்ளதைக் கவனிக்க வேண்டும். அமைப்பு வேலை செய்யும் போது அழுத்தம் மாறிலியாக இருக்க வேண்டிய அவசியமில்லை என்பதை இது உணர்த்துகிறது. தொகையீட்டு மதிப்பினைக் காண நிலைச் சமன்பாட்டைப் பயன்படுத்தி அழுத்தத்தை பருமன் மற்றும் வெப்பநிலையின் சார்பாகக் குறிப்பிட வேண்டும்.

11th Physics : UNIT 8 : Heat and Thermodynamics : Work done in volume changes - Internal Energy (U) in Tamil : 11th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 11வது இயற்பியல் : அலகு 8 : வெப்பமும் வெப்ப இயக்கவியலும் : பருமனில் மாற்றம் ஏற்படும்போது செய்யப்பட்ட வேலை - : 11 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
11வது இயற்பியல் : அலகு 8 : வெப்பமும் வெப்ப இயக்கவியலும்