Home | 12 ஆம் வகுப்பு | 12வது இயற்பியல் | மின்தடையாக்கி மட்டும் உள்ள AC சுற்று

கட்ட விளக்கப்படம், சுற்று வரைபடம்,சூத்திரம் | மாறுதிசைமின்னோட்டம் - மின்தடையாக்கி மட்டும் உள்ள AC சுற்று | 12th Physics : UNIT 4 : Electromagnetic Induction and Alternating Current

12 வது இயற்பியல் : அலகு 4 : மின்காந்தத்தூண்டலும் மாறுதிசைமின்னோட்டமும்

மின்தடையாக்கி மட்டும் உள்ள AC சுற்று

ஒரு மாறுதிசை மின்னழுத்த மூலத்துடன் R மின்தடை கொண்ட மின்தடையாக்கி இணைக்கப்பட்டுள்ள சுற்று ஒன்றைக் கருதுக

மின்தடையாக்கி மட்டும் உள்ள AC சுற்று


ஒரு மாறுதிசை மின்னழுத்த மூலத்துடன் R மின்தடை கொண்ட மின்தடையாக்கி இணைக்கப்பட்டுள்ள சுற்று ஒன்றைக் கருதுக (படம் 4.40). மாறுதிசை மின்னழுத்த வேறுபாட்டின் கணநேர மதிப்பானது


இந்த மின்னழுத்த வேறுபாடு காரணமாக இச்சுற்றில் பாயும் மாறுதிசை மின்னோட்டம் i ஆனது R இடையே ஒரு மின்னழுத்த வேறுப்பட்டை உருவாக்குகிறது. அதனை இவ்வாறு எழுதலாம்.


கிர்க்காஃபின் சுற்று விதியின் படி, (பகுதி 2.5.2 ஐக் காண்க) ஒரு மூடிய சுற்றில் உள்ள மின்னழுத்த வேறுபாடுகளின் குறியியல் கூட்டுத்தொகை சுழியாகும். இந்த மின்தடைச் சுற்றுக்கு


சமன்பாடு (4.37) மற்றும் (4.38) - இல் இருந்து

இங்கு Vm/R= Im என்பது சுற்றில் உள்ள மாறுதிசை மின்னோட்டத்தினபெரும மதிப்பு ஆகும். சமன்பாடுகள் (4.37) மற்றும் (4.39) இல் இருந்து, ஒரு மின்தடைச் சுற்றில் செலுத்தப்பட்ட மின்னழுத்த வேறுபாடு மற்றும் மின்னோட்டம் ஒரே கட்டத்தில் உள்ளன என்பது தெளிவாகிறது. அதன் பொருள், அவற்றின் பெருமம் மற்றும் சிறுமத்தை ஒரே நேரத்தில் அவை அடைகின்றன. இதை கட்ட விளக்கப் படத்தில் காணலாம் (படம் 4.41). மின்னழுத்த வேறுபாடு மற்றும் மின்னோட்டம் ஒரே கட்டத்தில் உள்ளதை அலை வரைபடமும் காட்டுகிறது (படம் 4.41).


Tags : Phasor diagram, Circuit Diagram, Formula | Alternating Current (AC) கட்ட விளக்கப்படம், சுற்று வரைபடம்,சூத்திரம் | மாறுதிசைமின்னோட்டம்.
12th Physics : UNIT 4 : Electromagnetic Induction and Alternating Current : AC circuit containing pure resistor Phasor diagram, Circuit Diagram, Formula | Alternating Current (AC) in Tamil : 12th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 12 வது இயற்பியல் : அலகு 4 : மின்காந்தத்தூண்டலும் மாறுதிசைமின்னோட்டமும் : மின்தடையாக்கி மட்டும் உள்ள AC சுற்று - கட்ட விளக்கப்படம், சுற்று வரைபடம்,சூத்திரம் | மாறுதிசைமின்னோட்டம் : 12 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
12 வது இயற்பியல் : அலகு 4 : மின்காந்தத்தூண்டலும் மாறுதிசைமின்னோட்டமும்