நீண்ட தொலைவு மின்திறன் அனுப்புகையில் மாறுதிசை மின்னோட்டத்தின் நன்மைகள்
மின்திறன் பெரும் அளவில் ACமின்னியற்றியை பயன்படுத்தி,
மின்திறன் நிலையங்களில் உற்பத்தி செய்யப்படுகிறது. பயன்படுத்தப்படும் எரிபொருள் வகையைப்
பொருத்து இந்த மின்திறன் நிலையங்கள் அனல், நீர் மற்றும் அணுமின்நிலையங்கள் என வகைப்படுத்தப்படுகின்றன.
பெரும்பாலான மின்நிலையங்கள் தொலைதூர இடங்களில் அமைந்துள்ளன. எனவே, உற்பத்தி செய்யப்படும்
மின்திறனானது அவை நுகரப்படும் நகரங்கள் மற்றும் பெருநகரங்களை அடைய நீண்ட தொலைவுகளுக்கு
அனுப்புகை கம்பிகள் வழியாக அனுப்பப்படுகிறது. இந்த செயல்முறை மின்திறன் அனுப்புகை எனப்படுகிறது.
ஆனால் திறன் அனுப்புகையில் ஒரு சிரமம் உள்ளது.
சில நூறு கிலோமீட்டர் நீளம் உள்ள அனுப்புகை கம்பிகளில் ஏற்படும் ஜூல் வெப்பவிளைவினால்
(I2R) ஒரு குறிப்பிடத்தக்க அளவிலானமின்திறன் இழப்பு ஏற்படுகிறது. இந்ததிறன்
இழப்பை i என்ற மின்னோட்டத்தை குறைப்பதாலோ அல்லது மின் அனுப்புகைக்கம்பிகளின் மின்தடை
R ஐக் குறைப்பதாலோ சமாளிக்கலாம். மின்தடை R-ஐ தடிமனான தாமிரம் அல்லது அலுமினிய கம்பிகளை
கொண்டு குறைக்கலாம். ஆனால், இது அனுப்புகை கம்பிகளின் உற்பத்தி விலை மற்றும் தொடர்புடைய
செலவீனங்களை அதிகரிக்கிறது. எனவே இந்த வகையில் திறன் இழப்பைக் குறைக்கும் முறை பொருளாதார
ரீதியாக சாத்தியமில்லை.
உற்பத்தி செய்யப்பட்ட திறன் மாறுதிசைப்பண்பு
கொண்டதால், ஒரு வழி உள்ளது. மின்மாற்றிகளைக் கொண்டு, மாறுதிசை மின்னழுத்த வேறுபாட்டை
உயர்த்தவோ அல்லது குறைக்கவோ முடியும். மாறுதிசை மின்னழுத்த வேறுபாட்டின் மிக முக்கியமான
இந்தப் பண்பைப் பயன்படுத்தி, மின்னோட்டத்தை குறைத்து திறன் இழப்பை பெரும் அளவில் குறைக்கலாம்.
அனுப்பும் இடத்தில் ஏற்று மின்மாற்றியைப் பயன்படுத்தி
மின்னழுத்த வேறுபாடு உயர்த்தப்படுகிறது மற்றும் தொடர்புடைய மின்னோட்டம் குறைக்கப்படுகிறது
(படம் 4.33). பிறகு அது மின் அனுப்புகை கம்பிகள் மூலம் அனுப்பப்படுகிறது. இந்த அதிக
மின்னழுத்த வேறுபாட்டில் உள்ள குறைக்கப்பட்ட மின்னோட்டமானது, எவ்வித கணிசமான இழப்பும்
இன்றி சேரும் இடத்தை சென்றடைகிறது. ஏற்கப்படும்
இடத்தில் இறக்கு மின்மாற்றியைப் பயன்படுத்தி
மின்னழுத்த வேறுபாடு குறைக்கப்படுகிறது மற்றும் மின்னோட்டம் தகுந்த அளவுகளுக்கு உயர்த்தப்படுகிறது.
பிறகு நுகர்வோர்களுக்கு விநியோகிக்கப்படுகிறது. இவ்வாறு மின்திறன் அனுப்புகை திறமையாகவும்,
சிக்கனமாகவும் செய்யப்படுகிறது.
விளக்கம்
இரு வேறுபட்ட மின்னழுத்த வேறுபாட்டில், 2
MW மின்திறனானது மொத்த மின்தடை R = 40 Ω கொண்ட
மின்அனுப்புகை கம்பிகள் வழியாக ஓரிடத்திற்கு அனுப்படுகிறது. ஒன்று குறைவான மின்னழுத்த
வேறுபாடு (10 kV) மற்றும் மற்றொன்று உயர் மின்னழுத்த வேறுபாடு (100 kV). இந்த இரு நேர்வுகளிலும்
உள்ள திறன் இழப்புகளை தற்போது நாம் கணக்கிட்டு, பின் ஒப்பிடுவோம்.
நேர்வு
(i)
P = 2 MW; R = 40Ω; V
= 10 kV
நேர்வு (ii)
P= 2 MW; R = 40Ω; V
= 100 kV
ஆகவே, உயர் மின்னழுத்த வேறுபாட்டில் மின்திறன்
அனுப்பப்பட்டால், திறன் இழப்பு பெருமளவு குறைக்கப்படுகிறது என்பது தெளிவாகிறது.
ஒரு பகுதியில் அமைந்துள்ள மின் திறன் நிலையங்கள்
ஒன்றுடன் ஒன்று இணைக்கப்பட்டு, பொதுவான மின்வலை அமைப்பு ஏற்படுத்தப்படுகிறது. அமைப்பில்
உள்ள உற்பத்தி நிலையங்கள் அனைத்தும் பக்க இணைப்பில் செயல்படுகின்றன. எந்த ஒரு மின்
திறன் நிலையத்திலும் மின் உற்பத்தி தடை பட்டாலோ அல்லது உற்பத்தி நிலையத்தின் திறனை
விட திடீரென பளு (மின்தேவை) அதிகரித்தாலோ, அதிக அளவிலான பயனாளர்களுக்கு தடையற்ற மின்திறன்
வழங்குவதற்கு இந்த மின்வலை அமைப்பு பயன்படுகிறது.
இதன் பல்வேறு உறுப்புகளான மின் உற்பத்தி நிலையங்கள்,
மின் அனுப்புகை கம்பிகள், துணை மின் நிலையங்கள் மற்றும் திறன் வழங்கிகள் முதலிய அனைத்தும்
மின் ஆற்றலின் தொடர்ச்சியான உற்பத்தி மற்றும் நுகர்வுக்காக ஒன்றாக இணைக்கப்பட்டுள்ளன.
இதுவே திறன் அமைப்பு (Power system) எனப்படுகிறது. திறன் அமைப்பின் பகுதியான துணை நிலையங்கள்
மற்றும் அனுப்புகை கம்பிகள் ஆகியவை மின் இணைத்தொகுதி (Electric grid) எனப்படுகிறது.
திறன் அமைப்பில் உற்பத்தி செய்யப்பட்ட மின்திறன்
இரு கட்டங்களாக நுகர்வோர்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது. அவை மேலும் இரு கட்டங்களாக
பிரிக்கப்படுகின்றன.
1) அனுப்புகை கட்டம்
a) முதன்மை அனுப்புகை கட்டம்
b) துணை அனுப்புகை கட்டம்
2) விநியோகக் கட்டம்
a) முதன்மை விநியோகக் கட்டம்
b) துணை விநியோகக் கட்டம்
பிறகு அது தனித்தனி நுகர்வோர்களுக்குவழங்கப்படுகிறது.
திறன் அனுப்புகையின் இரு கட்டங்களும் ஒற்றை வரிப்படமாககாட்டப்பட்டுள்ளன. மைய அமைப்பு
பொதுவாக 11 kV அளவிற்கு திறனை உற்பத்தி செய்கிறது. பின்னர் அது 132 kV ஆக உயர்த்தப்பட்டுமின்
அனுப்புகை கம்பிகள் வழியாக அனுப்பப்படுகிறது. இது முதன்மை அல்லதுஉயர் மின்னழுத்த அனுப்புகை
எனப்படுகிறது.
இந்த உயர் - மின்னழுத்த திறன்நகரங்களின் புறப்பகுதியில்
அமைந்துள்ள ஏற்பு நிலையங்களை அடைகிறது. அங்கு 33 kV அளவிற்கு குறைக்கப்பட்டு துணை அல்லது
குறை-மின்னழுத்த அனுப்புகையாக நகர எல்லைக்குள் அமைந்துள்ள துணை - மின்நிலையங்களுக்கு
அனுப்பப்படுகிறது.
முதன்மை விநியோகஅமைப்பில் மின்னழுத்தமானது
33 kv-இல் இருந்துதுணை மின்நிலையங்களில் 3.3kV ஆக குறைக்கப்பட்டு, விநியோக மின்மாற்றிகளுக்குவழங்கப்படுகிறது.
இறுதியாக மின்னழுத்த வேறுபாடு 440 V அல்லது 230 V ஆகக் குறைக்கப்பட்டு, அங்கிருந்து
விநியோக வலை அமைப்புகளின் வழியாக தொழிற்சாலைகளுக்கும் (440 V) மற்றும் இல்லங்களுக்கு
(230 V) விநியோகிக்கப்படுகிறது.
எடுத்துக்காட்டு
4.16
ஒரு இலட்சிய மின்மாற்றியானது முதன்மைச்சுருள்
மற்றும் துணைச்சுருள்களில் முறையே 460 மற்றும் 40,000 சுற்றுகளைக் கொண்டுள்ளது. மின்மாற்றியானது
230 V AC மூலத்துடன் இணைக்கப்பட்டால், துணைச்சுருளின் ஒரு சுற்றில் உருவான மின்னழுத்த
வேறுபாட்டைக் காண்க. துணைச்சுருளுடன் 104Ω மின்தடைப்
பளு இணைக்கப்படுகிறது. பளுவிற்கு வழங்கப்பட்ட திறனைக் கணக்கிடுக.
தீர்வு:
Np= 460 சுற்றுகள்; Ns
= 40,000 சுற்றுகள்
Vp = 230 V; Rs =
104Ω
(i) துணைச்சுருள் மின்னழுத்த வேறுபாடு,
(ii) வழங்கப்பட்ட திறன்
எடுத்துக்காட்டு
4.17
மின்புரட்டி (inverter) என்பது நமது இல்லங்களின்
பயன்படுத்தப்படும் மின்கருவி ஆகும். வீட்டில் மின்சாரம் இல்லாதபோது, மின்விசிறி அல்லது
மின்விளக்கு போன்ற சில கருவிகளை இயக்கத் தேவையான மாறுதிசை மின்னோட்டத்திறனை மின்புரட்டி
வழங்குகிறது. மின்புரட்டியின் உள்ளே ஒரு ஏற்று மின்மாற்றி பொருத்தப்பட்டுள்ளது. அது
12V ACஐ 240V AC ஆக மாற்றுகிறது. முதன்மைச்சுருள் 100 சுற்றுகளைக் கொண்டுள்ளது.
50mA மின்னோட்டத்தை புற்ச்சுற்றுக்கு மின்புரட்டி அளிக்கிறது. துணைச்சுருளில் உள்ள
சுற்றுகளின் எண்ணிக்கை மற்றும் முதன்மை மின்னோட்டம் ஆகியவற்றைக் காண்க.
தீர்வு
Vp = 12 V; Vs =
240 V
Is = 50mA; Np =
100 சுற்றுகள்
துணைச்சுருளில் உள்ள சுற்றுகளின் எண்ணிக்கை
முதன்மை மின்னோட்டம்,