வரையறை, விளக்கம், சூத்திரம், | மின்காந்தத் தூண்டல் - லாரன்ஸ் விசையிலிருந்து இயக்க மின்னியக்கு விசை | 12th Physics : UNIT 4 : Electromagnetic Induction and Alternating Current
லாரன்ஸ் விசையிலிருந்து இயக்க மின்னியக்கு விசை (Motional emf from
Lorentz force)
l நீளமுள்ள நேரான கடத்தும் தண்டு AB ஆனது ஒரு
சீரான காந்தப்புலம் இல் உள்ளதாகக் கருதுக. படம் 4.9 (அ) இல் காட்டியுள்ளவாறு
காந்தப்புலமானது தாளின் தளத்திற்கும் தண்டின் நீளத்திற்கும் செங்குத்தாக உள்ளது. தண்டானது
வலது பக்கமாக என்ற மாறா திசைவேகத்தில் இயங்குவதாகக் கொள்க.
தண்டு இயங்கும் போது அதில் உள்ள கட்டுறா எலக்ட்ரான்களும்
அதே திசைவேகத்தில் காந்தப்புலத்தில் இயங்கும். அதன் விளைவாக கட்டுறா எலக்ட்ரான்கள்
மீது B இல் இருந்து A இன் திசையில் லாரன்ஸ் விசை செயல்படுகிறது. அதன் தொடர்பானது
இந்த லாரன்ஸ் விசையானது கட்டுறா எலக்ட்ரான்களை
முனை A இல் குவிக்கிறது. கட்டுறா எலக்ட்ரான்களின் இந்தக் குவியல் தண்டிற்கு குறுக்கே
மின்னழுத்த வேறுபாட்டை உருவாக்கி, BA திசையில் என்ற மின்புலத்தை தோற்றுவிக்கிறது
(படம் 4.9(ஆ)). இந்த மின்புலம் காரணமாக கட்டுறா எலக்ட்ரான்கள் மீது கூலும் விசையானது
AB திசையில் செயல்படத் தொடங்கும். அதன் சமன்பாடானது
A முனையில் எலக்ட்ரான்கள் குவிகிற வரை மின்புலம் இன் எண்மதிப்பு அதிகரித்துக் கொண்டே இருக்கும். சமநிலை அடையும் வரை விசையும் அதிகரிக்கிறது. சமநிலையில் லாரன்ஸ் விசை மற்றும் கூலும்
விசை ஒன்றையொன்று சமன் செய்கின்றன. A முனையில் கட்டுறா எலக்ட்ரான்கள் மேற்கொண்டு
குவியாது.
தண்டின் இரு முனைகளுக்கிடையே உள்ள மின்னழுத்த
வேறுபாடு
இந்த மின்னழுத்த வேறுபாடு உருவாவதற்கு கட்டுறா
எலக்ட்ரான்களின் மீதான லாரன்ஸ் விசையே காரணமாகும். எனவே அது உருவாக்கிய மின்னியக்கு
விசை
இந்த மின்னியக்கு விசை தண்டின் இயக்கத்தால் உருவாக்கப்படுவதால் இது பெரும்பாலும் இயக்க மின்னியக்கு விசை என்றழைக்கப்படுகிறது. மொத்த மின்தடை R கொண்ட ஒரு புறச்சுற்றில் முனைகள் A மற்றும் B இணைக்கப்பட்டால், i = ε/R = Blu/R என்றமின்னோட்டம் அதில் பாயும். மின்னோட்டத்தின் திசை வலக்கை பெருவிரல் விதியிலிருந்து அறியப்படுகிறது.