வரையறை, விளக்கம்,தீர்க்கப்பட்ட எடுத்துக்காட்டு சிக்கல்கள் | மின்காந்தத் தூண்டல் - மின்காந்தத்தூண்டலும் மாறுதிசைமின்னோட்டமும் | 12th Physics : UNIT 4 : Electromagnetic Induction and Alternating Current
எடுத்துக்காட்டு
4.8
சென்னையில் புவி காந்தப்புலத்தின் கிடைத்தளக்கூறு
4.04 x 10-5 T கொண்ட ஒரு இடத்தில் 7.2 m உயரமுள்ள ஒரு கட்டிடத்தின் மேற்புறத்தில்
இருந்து 0.5 m நீளமுள்ள கடத்தும் தண்டு தடையின்றி விழுகிறது. தண்டின் நீளம் புவிகாந்தப்புலத்தின்
கிடைத்தளக்கூறுக்கு செங்குத்தாக இருப்பின், தண்டானது தரையை தொடும் போது தண்டில் தூண்டப்பட்ட
மின்னியக்கு விசையைக் காண்க (தண்டானது 10 ms-2 என்ற சீரான முடுக்கத்துடன்
விழுவதாகக் கொள்க).
தீர்வு:
l = 0.5 m; h = 7.2 m; u = 0 ms-1;
g= 10 m s-2; BH = 4.04
x 10-5T
தண்டின் இறுதி திசைவேகம்
தண்டானது தரையைத் தொடும்போது தூண்டப்பட்ட மின்னியக்கு
விசையின் எண்மதிப்பு
எடுத்துக்காட்டு
4.9
படத்தில் காட்டியுள்ளவாறு B என்ற காந்தப்புலத்தில்
l நீளமுள்ள தாமிரத்தண்டு அதன் ஒரு முனையைப் பொருத்து w என்ற கோணத்திசைவேகத்தில் சுழலுகிறது.
சுழலும் தளமானது புலத்திற்கு செங்குத்தாக உள்ளது. தண்டின் இரு முனைகளுக்கிடையே தூண்டப்பட்ட
மின்னியக்கு விசையைக் காண்க.
தீர்வு:
தண்டு உருவாக்கும் வட்டத்தின்மையத்திலிருந்து
x தொலைவில் dx நீளமுள்ள சிறு பகுதியைக் கருதுக. இந்தப் பகுதி புலத்திற்கு செங்குத்தாக
v = xɷ என்ற நேர்கோட்டு திசைவேகத்தில் இயங்குவதால் dx பகுதியில் உருவான மின்னியக்கு
விசை
தண்டானது இது போன்ற பல சிறு பகுதிகளைக் கொண்டு,
புலத்திற்கு குத்தாக இயங்குகிறது. அதன் இரு முனைகளுக்கிடையே உருவான மின்னியக்கு விசை