Posted On : 11.10.2022 02:11 am
12 வது இயற்பியல் : அலகு 4 : மின்காந்தத்தூண்டலும் மாறுதிசைமின்னோட்டமும்
நிலையான சுருளிச் சுற்று - சுழலும் புல மின்னியற்றியின் நன்மைகள்
பொதுவாக மின்னியற்றிகள் அதிகமின்னோட்டம் மற்றும் அதிக மின்னழுத்த வேறுபாடு கொண்டுள்ள இயந்திரங்கள் ஆகும். நிலையான சுருளிச் சுற்றுசுழலும் புல அமைப்பு பல நன்மைகளைக் கொண்டது.
நிலையான
சுருளிச் சுற்று - சுழலும் புல மின்னியற்றியின் நன்மைகள்
பொதுவாக மின்னியற்றிகள் அதிகமின்னோட்டம் மற்றும் அதிக மின்னழுத்த வேறுபாடு கொண்டுள்ள இயந்திரங்கள் ஆகும். நிலையான சுருளிச் சுற்றுசுழலும் புல அமைப்பு பல நன்மைகளைக் கொண்டது. அவற்றில் சில வருமாறு.
1) தூரிகைத் தொடர்புகளைப் பயன்படுத்தாமல், மின்னோட்டமானது நேரடியாக நிலையி பகுதியில் பொருத்தப்பட்டுள்ள முனைகளில் இருந்து பெறப்படுகிறது.
2) நிலையான சுருளிச் சுற்றை மின்காப்பு செய்வது எளிமையானதாகும்.
3) நழுவும் தொடர்புகளின் (நழுவு வளையங்கள்) எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது. மேலும் நழுவும் தொடர்புகள் குறைந்த மின்னழுத்த நேர்த்திசை மின்னோட்ட மூலத்திற்கு மட்டுமே பயன்படுகின்றன.
4) சுருளிச் சுற்றுகள் இயந்திரவியல் தகைவின் காரணமாக உருக்குலைவதைத் தடுக்கும் வகையில் அதிக உறுதியாக அமைக்க முடியும்.
12th Physics : UNIT 4 : Electromagnetic Induction and Alternating Current : Advantages of stationary armature-rotating field alternator in Tamil : 12th Standard
TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer.
12 வது இயற்பியல் : அலகு 4 : மின்காந்தத்தூண்டலும் மாறுதிசைமின்னோட்டமும் : நிலையான சுருளிச் சுற்று - சுழலும் புல மின்னியற்றியின் நன்மைகள் - : 12 ஆம் வகுப்பு
தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.