Home | 12 ஆம் வகுப்பு | 12வது இயற்பியல் | மூன்று கட்ட மாறுதிசை மின்னோட்ட மின்னியற்றி

தத்துவம்,அமைப்பு,வேலை செய்யும் கொள்கை,வரைபடம், - மூன்று கட்ட மாறுதிசை மின்னோட்ட மின்னியற்றி | 12th Physics : UNIT 4 : Electromagnetic Induction and Alternating Current

   Posted On :  11.10.2022 02:06 am

12 வது இயற்பியல் : அலகு 4 : மின்காந்தத்தூண்டலும் மாறுதிசைமின்னோட்டமும்

மூன்று கட்ட மாறுதிசை மின்னோட்ட மின்னியற்றி

எளிமையான மூன்று - கட்ட AC மின்னியற்றி அமைப்பில், சுருளி உள்ளகத்தின் உட்புற பரப்பில் 6 வரித்துளைகள் வெட்டப்பட்டுள்ளன.ஒவ்வொரு வரித்துளையும் ஒன்றுக்கொன்று 60o இடைவெளியில் உள்ளன.இந்த வரித்துளைகளில் ஆறு கடத்திகள் பொருத்தப்பட்டுள்ளன.

மூன்று கட்ட மாறுதிசை மின்னோட்ட மின்னியற்றி

எளிமையான மூன்று - கட்ட AC மின்னியற்றி அமைப்பில், சுருளி உள்ளகத்தின் உட்புற பரப்பில் 6 வரித்துளைகள் வெட்டப்பட்டுள்ளன. ஒவ்வொரு வரித்துளையும் ஒன்றுக்கொன்று 60o இடைவெளியில் உள்ளன. இந்த வரித்துளைகளில் ஆறு கடத்திகள் பொருத்தப்பட்டுள்ளன. கடத்திகள் 1 மற்றும் 4 தொடராக இணைக்கப்பட்டு கம்பிச்சுருள் 1 உருவாக்கப்படுகிறது. கடத்திகள் 3 மற்றும் 6-ஐ இணைத்து கம்பிச்சுருள் 2-உம், கடத்திகள் 5 மற்றும் 2-ஐ இணைத்து கம்பிச்சுருள் 3-உம் உருவாக்குப்படுகின்றன. எனவே செவ்வக வடிவிலான இந்த கம்பிச்சுருள்கள் ஒன்றுக்கொன்று 120° இடைவெளியுடன் உள்ளன (படம் 4.30)



புலக்காந்தத்தின் தொடக்கநிலை கிடை மட்டமாகவும், புலத்தின் திசை கம்பிச்சுருள் 1-இன் தளத்திற்கு செங்குத்தாகவும் உள்ளது. ஒரு - கட்ட AC மின்னியற்றியில் கண்டவாறு, புலக்காந்தமானது அந்த நிலையிலிருந்து வலஞ்சுழியாக சுழற்றப்பட்டால் கம்பிச்சுருள் 1-இல் தூண்டப்படும் மாறுதிசை மின்னியக்குவிசை ε1 தனது சுற்றை புள்ளி O-இல் இருந்து தொடங்குகிறது. இது படம் 4.31 - இல் காட்டப்பட்டுள்ளது.

புலக்காந்தம் 120° சுழன்ற பிறகு, கம்பிச்சுருள் 2-இல் உள்ள மின்னியக்கு விசை ε2 – ஆனது தனது சுற்றை புள்ளி A-யில் தொடங்குகிறது. எனவே ε1மற்றும் ε2 இடையிலான கட்டவேறுபாடு 120oஆகும். தொடக்க நிலையிலிருந்து புலக்காந்தம் 240o சுழன்ற பிறகு, கம்பிச்சுருள் 3-இல் உள்ள மின்னியக்கு விசை ε3அதன்  சுற்றை புள்ளி B-யில் தொடங்குகிறது. இவ்வாறு மூன்று – கட்ட AC மின்னியற்றில் தூண்டப்படும் மின்னியக்கு விசைகள் ஒன்றுக்கொன்று 120o கட்டவேறுபாட்டைக் கொண்டுள்ளன.

Tags : Principle, Construction, Working Principle, Diagram தத்துவம்,அமைப்பு,வேலை செய்யும் கொள்கை,வரைபடம்,.
12th Physics : UNIT 4 : Electromagnetic Induction and Alternating Current : Three phase AC generator Principle, Construction, Working Principle, Diagram in Tamil : 12th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 12 வது இயற்பியல் : அலகு 4 : மின்காந்தத்தூண்டலும் மாறுதிசைமின்னோட்டமும் : மூன்று கட்ட மாறுதிசை மின்னோட்ட மின்னியற்றி - தத்துவம்,அமைப்பு,வேலை செய்யும் கொள்கை,வரைபடம், : 12 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
12 வது இயற்பியல் : அலகு 4 : மின்காந்தத்தூண்டலும் மாறுதிசைமின்னோட்டமும்