வரையறை, சூத்திரம்,தீர்க்கப்பட்ட எடுத்துக்காட்டு சிக்கல்கள் | மின்காந்தத் தூண்டல் - காந்தப்பாயம் | 12th Physics : UNIT 4 : Electromagnetic Induction and Alternating Current

   Posted On :  16.10.2022 07:57 pm

12 வது இயற்பியல் : அலகு 4 : மின்காந்தத்தூண்டலும் மாறுதிசைமின்னோட்டமும்

காந்தப்பாயம்

ஒரு காந்தப்புலத்தில் வைக்கப்பட்டுள்ள பரப்பு A உடன் தொடர்புடைய காந்தப்பாயம் ØB என்பது அந்தப் பரப்பின் வழியே செங்குத்தாக கடந்து செல்லும் காந்தப்புலக் கோடுகளின் எண்ணிக்கை என வரையறுக்கப்படுகிறது.

காந்தப்பாயம் (ØB): (Magnetic flux)

ஒரு காந்தப்புலத்தில் வைக்கப்பட்டுள்ள பரப்பு A உடன் தொடர்புடைய காந்தப்பாயம் ØB என்பது அந்தப் பரப்பின் வழியே செங்குத்தாக கடந்து செல்லும் காந்தப்புலக் கோடுகளின் எண்ணிக்கை என வரையறுக்கப்படுகிறது. மேலும் அதற்கான சமன்பாடு பின்வருமாறு (படம் 4.1(அ)).


இங்கு தொகையீடானது பரப்பு A இன் மேல் எடுக்கப்பட்டுள்ளது. θ என்பது காந்தப்புலத்தின் திசைக்கும், பரப்பின் வெளிநோக்கிய செங்குத்துக்கும் இடையே உள்ள கோணமாகும்.

 

படம் 4.1(ஆ) இல் காட்டியுள்ளவாறு காந்தப்புலம்  ஆனது பரப்பு A இன் மீது சீராகவும் மற்றும் பரப்பிற்கு செங்குத்தாகவும் இருந்தால், மேற்கண்ட சமன்பாடானது


காந்தப்பாயத்தின் SI அலகு T m2. இது வெபர் அல்லது Wb எனவும் அளவிடப்படுகிறது.


 

எடுத்துக்காட்டு 4.1

3 m2 பரப்பு கொண்ட வட்ட விண்ணலைக்கம்பி (Circular Antenna) ஒன்று மதுரையில் உள்ள ஒரு இடத்தில் நிறுவப்பட்டுள்ளது. விண்ண லைக் கம்பியின் பரப்பின் தளம் புவிகாந்தப்புலத் திசைக்கு 47° சாய்வாக உள்ளது. அந்த இடத்தில் புவிகாந்தப்புலத்தின் மதிப்பு 4.1 X 10-5 T எனில், விண்ணலைக் கம்பியுடன் தொடர்புடைய காந்தப்பாயத்தை கணக்கிடுக. 

தீர்வு:

B = 4.1 X 10-5 T;  θ= 90° - 47° = 43'; A = 3m2

நாம் அறிந்த வகையில், ØB = BA cosθ


 

எடுத்துக்காட்டு 4.2

5 x 10-2 m2 பரப்புள்ள ஒரு வட்ட வடிவச் சுற்று, 0.2T சீரான காந்தப்புலத்தில் சுழல்கிறது. படத்தில் காட்டியுள்ளவாறு சுற்றானது காந்தப்புலத்திற்கு செங்குத்தாக உள்ள அதன் விட்டத்தைப் பொருத்து சுழன்றால், சுற்றின் தளமானது (i) புலத்திற்கு செங்குத்தாக (ii) புலத்திற்கு 60° சாய்வாக மற்றும் (iii) புலத்திற்கு இணையாக உள்ளபோது சுற்றுடன் தொடர்புடைய காந்தப்பாயத்தைக் கணக்கிடுக.


தீர்வு:

A = 5 x 10-2m2; B = 0.2 T

(i) θ = 0;


(ii) θ = 90° - 60° = 30°;


(iii) θ = 90';


Tags : Definition, Formula, Solved Example Problems | Electromagnetic Induction வரையறை, சூத்திரம்,தீர்க்கப்பட்ட எடுத்துக்காட்டு சிக்கல்கள் | மின்காந்தத் தூண்டல்.
12th Physics : UNIT 4 : Electromagnetic Induction and Alternating Current : Magnetic Flux Definition, Formula, Solved Example Problems | Electromagnetic Induction in Tamil : 12th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 12 வது இயற்பியல் : அலகு 4 : மின்காந்தத்தூண்டலும் மாறுதிசைமின்னோட்டமும் : காந்தப்பாயம் - வரையறை, சூத்திரம்,தீர்க்கப்பட்ட எடுத்துக்காட்டு சிக்கல்கள் | மின்காந்தத் தூண்டல் : 12 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
12 வது இயற்பியல் : அலகு 4 : மின்காந்தத்தூண்டலும் மாறுதிசைமின்னோட்டமும்