Home | 9 ஆம் வகுப்பு | 9வது சமூக அறிவியல் | விரிவான விடையளிக்கவும்

அறிவு மலர்ச்சியும், சமூக-அரசியல் மாற்றங்களும் | வரலாறு | சமூக அறிவியல் - விரிவான விடையளிக்கவும் | 9th Social Science : History : Intellectual Awakening and Socio-Political Changes

   Posted On :  04.09.2023 11:36 pm

9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : வரலாறு : அறிவு மலர்ச்சியும், சமூக-அரசியல் மாற்றங்களும்

விரிவான விடையளிக்கவும்

9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : வரலாறு : அறிவு மலர்ச்சியும், சமூக-அரசியல் மாற்றங்களும் : புத்தக கேள்விகள் மற்றும் பதில்கள், தமிழ் முக்கியமான கேள்விகள் : விரிவான விடையளிக்கவும்

VI. விரிவான விடையளிக்கவும்.

1. கன்பூசியஸின் ஐந்து முக்கியமான கோட்பாடுகளை விளக்கிக் கூறு.

விடை:

கன்பூசியனிசத்தின் ஐந்து முக்கியக் கொள்கைகள்:

மனிதத்தன்மை

நேர்மை

நன்னடத்தை

மெய்யறிவு

நம்பகத் தன்மை

மனிதத்தன்மை :

மேன்மையான மனிதர் என்பவர் வெறும் அறிவாளியோ, அறிஞரோ மட்டும் இல்லை, முன்மாதிரியான நடத்தை கொண்டவராகவும் இருக்க வேண்டும்.

மேன்மையான மனிதர் புத்திசாலித்தனம், துணிச்சல், நல்லெண்ணம் ஆகிய மூன்று பண்புகளைக் கொண்டவர்.

நேர்மை :

கீழ்ப்படிதல் வற்புறுத்தப்பட்டாலும் உத்தரவு தவறென்றால், இரு மகன் தனது தந்தையை எதிர்க்க வேண்டும், ஓர் அமைச்சர் அரசரை எதிர்க்க வேண்டும்.

ஆட்சியாளர்கள் பாரபட்சமின்றி ஆட்சி நடத்தவேண்டும்.

நன்னடத்தை :

குழந்தைகள் பெற்றோருக்கு கீழ்ப்படியவேண்டும், மனைவி கணவனுக்கு கீழ்ப்படியவேண்டும்.

நன்னடத்தை கொண்டோரைத்தான் அரசப் பதவிகளில் அமர்த்த வேண்டும்.

மெய்யறிவு :

மெய்யறிவு குடும்பத்திலிருந்துதான் வளரும். ஓர் ஒழுங்கான குடும்பத்தின் கட்டுப்பாடுமிக்க தனி நபர்தான் சமூகத்தின் அடித்தளம்.

நம்பகத்தன்மை :

அரசுக்கு அவசியமான மூன்று விஷயங்கள்

  நாட்டில் போதுமான உணவு

  போதுமான இராணுவத் தளவாடங்கள்

  மக்களுக்கு ஆட்சியாளர் மீது நம்பிக்கை

அரசு இயங்க குறிக்கோள் வேண்டும். மக்களுக்கான கடமைகள் உண்டு.

கன்பூசியனிசம் : மதம் அல்ல ஒரு சமூக அமைப்பு அறம்சார் தத்துவ முறை.

 

2. சமண, புத்த சமயக் கொள்கைகளுக்கு இடையேயான ஒற்றுமைகளையும், வேறுபாடுகளையும் எழுதுக.

விடை:

ஒற்றுமைகள் :

மகாவீரரும், கௌதம புத்தரும் தங்களது 30வது வயதில் குடும்பத்தை துறந்தனர்.

சமணரும், புத்தரும் மதச் சடங்குகளுக்காக விலங்குகள் பலியிடுவதை எதிர்த்தனர்.

சமணர் மற்றும் புத்தரின் துறவு, இரந்துண்ணுதல், அரச குடும்ப சொத்துக்களைத் துறந்து வாழும் முறை மக்களுக்கு ஏற்புடையவர்களாக ஆக்கின.

இருவரும் தூய வாழ்க்கை வாழ்ந்தார்கள். தன்னிலை மறுப்பிற்கு எடுத்துக்காட்டாக திகழ்ந்தார்கள்.

புகழ்பெற்ற மகதமன்னர்களான பிம்பிசாரர், அஜாத சத்ரு ஆகியோரின் சம காலத்தவர்கள்.

வைசியர்கள் சமூக நிலையை உயர்ந்த சமணம் மற்றும் பௌத்தம் நோக்கி திரும்பினார்கள்.

மகாவீரரும், புத்தரும் சடங்கு, சம்பிரதாயங்களை எதிர்த்து எழுச்சிமிக்க நன்னெறிப் போதனைகளை முன்வைத்தனர்.

காலப்போக்கில் சமணமும். பௌத்தமும் இரண்டிரண்டு பிரிவுகளாகப் பிரிந்தன.

வேற்றுமைகள் :

சமணம்

மகாவீரர் அரண்மனையைத் துறந்து12 ஆண்டுகள் கடுமையான தவத்தில் ஈடுபட்டார்

மும்மணிகள் என்ற முக்கிய கொள்கைகள்

நன்னடத்தைக்கு ஐம்பெரும் சூளுரைகள்

மிகக் கடுமையான துறவு வாழ்வு

சமண மடாலயங்கள் நிறுவப்பட்டன

இந்தியாவில் மட்டும் பரவியது

அரசர்கள் ஆதரவு இல்லை

திகம்பரர், சுவேதாம்பரர் என பிரிவினை

பௌத்தம்

 • கௌதம புத்தர் அரணைமனையைத் துறந்து உண்மையைத் தேடி காட்டிற்குச் சென்றார்

நான்கு பெரும் உண்மைகள்.

துய மனநிலைக்கு எணிவழிப் பாதை

கடுமையான துறவு வாழ்வு இல்லை -

பௌத்த சங்கங்கள் நிறுவப்பட்டன

உலகின் பல பாகங்களிலும் பரவியது

அரசர்கள் ஆதரவு இருந்தது

ஹீனயானம், மஹாயானம் என பிரிவினை


வரலாற்றுடன் வலம் வருக

மாணவர் செயல்பாடுகள்

1. அசோகரின் கல்வெட்டுக் குறிப்புகள் குறித்து ஓர் ஆய்வறிக்கை தருக.

2. புத்தரின் வாழ்க்கை மற்றும் போதனைகளைச் சித்தரிக்கும் வகையில் ஒரு நாடகத்தை நண்பர்களுடன் சேர்ந்து நிகழ்த்தவும்.

ஆசிரியரின் வழிகாட்டலுடன் செய்ய வேண்டியவை

1. புத்த சமயம் பின்பற்றப்படும் நாடுகளைப் பட்டியலிட்டு அதனை உலக வரைபடத்தில் குறிக்கவும்.

2. சாஞ்சி ஸ்தூபி மற்றும் தர்மச்சக்கரத்தின் களிமண் மாதிரிகளைச் செய்க.

 

மேற்கோள் நூல்கள்

1. A. Shah, Glimpses of World Religions. Jaico Books

2. Romila Thapar, Early India, Penguin

3. Jawaharlal Nehru, Glimpses of World History. Penguin

4. A.L. Basham, History and Doctrines of the Ajivikas: A Vanished Indian Religion. Oxford University Press

5. V.A. Smith, Oxford History of India. Oxford University Press

 

இணையச் செயல்பாடு

மெய்நிகர் சுற்றுலா

சாரநாத்திற்குச் சுற்றுலா செல்வோமா?

படிகள்:

படி 1: கொடுக்கப்பட்டிருக்கும் உரலி | விரைவுக்குறியீட்டைப் பயன்படுத்தி 'Google earth' பக்கத்திற்கு செல்க.

படி 2: தேடு பெட்டியில் 'Ashokan pillar, Saranath' என்ற முகவரியைத் தட்டச்சு செய்து தேடவும்.

படி 3: 'மஞ்சள் வண்ண மனிதன்' ஐகானை இழுத்து 'Ashokan pillar' மேல் வைத்து அவ்விடத்திற்கு மெய்நிகர் சுற்றுலா செல்க.

படி 4: சுட்டிக்குறிமுள்ளை மஞ்சள் வரிக்கோட்டின் மேல் நகர்த்தி அவ்விடத்திற்கு மெய்நிகர் சுற்றுலா செல்க.

 உரலி :

 https://earth.google.com/web/

Tags : Intellectual Awakening and Socio-Political Changes | History | Social Science அறிவு மலர்ச்சியும், சமூக-அரசியல் மாற்றங்களும் | வரலாறு | சமூக அறிவியல்.
9th Social Science : History : Intellectual Awakening and Socio-Political Changes : Answer the following in detail Intellectual Awakening and Socio-Political Changes | History | Social Science in Tamil : 9th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : வரலாறு : அறிவு மலர்ச்சியும், சமூக-அரசியல் மாற்றங்களும் : விரிவான விடையளிக்கவும் - அறிவு மலர்ச்சியும், சமூக-அரசியல் மாற்றங்களும் | வரலாறு | சமூக அறிவியல் : 9 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : வரலாறு : அறிவு மலர்ச்சியும், சமூக-அரசியல் மாற்றங்களும்