வரலாறு - மீள்பார்வை - அறிவு மலர்ச்சியும், சமூக-அரசியல் மாற்றங்களும் | 9th Social Science : History : Intellectual Awakening and Socio-Political Changes
மீள்பார்வை
● கி.மு. (பொ.ஆ.மு). ஆறாம் நூற்றாண்டு பொருள்,
பண்பாடு மற்றும் அறிவாற்றல் வளர்ச்சிக்கான காலகட்டமாக இருந்தது.
● சீனாவின் கன்பூசியஸின் அறநெறிகள்,
பாரசீகத்தில் ஜொரஸ்டரின் மதம், இந்தியாவில் மகாவீரரின் மும்மணிகள், புத்தரின் எண் வழிப்பாதை ஆகியனமனித குல வளர்ச்சியில் புதிய விழிப்புணர்வினையும், மனித குலத்துக்கு மேலதிக ஒழுக்க நெறிகளையும் உருவாக்கித் தந்தன.
● கி.மு. (பொ.ஆ.மு). ஆறாம் நூற்றாண்டு மகாஜனபதங்களின் உருவாக்கத்தை கண்டது. பதினாறு மகாஜனபதங்களில் மகதம் வலிமைமிக்க பேரரசாக உருவெடுத்தது.
● சந்திர குப்த மௌரியர் சாணக்கியரின் உதவியுடன் மௌரிய அரச மரபைத் தோற்றுவித்தார்.
● மௌரிய நிர்வாக முறையும், அசோகர் பின்பற்றிய தம்மமும் விளக்கப்பட்டுள்ளன.