Home | 9 ஆம் வகுப்பு | 9வது சமூக அறிவியல் | சுருக்கமான விடை தருக.

அறிவு மலர்ச்சியும், சமூக-அரசியல் மாற்றங்களும் | வரலாறு | சமூக அறிவியல் - சுருக்கமான விடை தருக. | 9th Social Science : History : Intellectual Awakening and Socio-Political Changes

   Posted On :  04.09.2023 11:30 pm

9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : வரலாறு : அறிவு மலர்ச்சியும், சமூக-அரசியல் மாற்றங்களும்

சுருக்கமான விடை தருக.

9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : வரலாறு : அறிவு மலர்ச்சியும், சமூக-அரசியல் மாற்றங்களும் : புத்தக கேள்விகள் மற்றும் பதில்கள், தமிழ் முக்கியமான கேள்விகள் : சுருக்கமான விடை தருக.

V. சுருக்கமான விடை தருக.

1. ஹீனயானம் மற்றும் மகாயானம் பற்றி குறிப்பு வரைக.

விடை:

ஹீனயானம் (சிறிய பாதை) :

ஹீனயானம் புத்தர் போதித்த அசல் வடிவம்.

இதைப் பின்பற்றியவர்கள் புத்தரைத் தமது குருவாக ஏற்றார்கள். அவரைக் கடவுளாக வழிபடவில்லை .

இவர்கள் உருவவழிபாட்டை மறுத்தார்கள். மக்கள் மொழியையே (பாலி) தொடர்ந்து பயன்படுத்தினார்கள்.

மகாயானம்:  

மஹாயானம் புத்தர் கடவுளாக வழிபடப்பட்டார்.

இதைப் பின்பற்றுவோர் புத்தர் சிலைகளைநிறுவி அவர் புகழ்பாடும் மந்திரங்களைச் சொல்லிவழிபட்டனர்.

இவர்கள் தம்முடைய மதநூல்களை சமஸ்கிருதத்தில் எழுதினார்கள்.

 

2. மும்மணிகள் (திரி ரத்னா) - இச்சொல்லை விளக்கிக் கூறு.

விடை:  

மும்மணிகள் (திரிரத்னா) என்று அழைக்கப்படும் சமண மதத்தின் முக்கியமான மூன்று கொள்கைகளைக் குறிப்பதாகும். அந்த மூன்று கொள்கைகள்,

நன்னம்பிக்கை - ஞானத்தில் நம்பிக்கை வைத்தல்.

நல்லறிவுகடவுள் இல்லை, அனைத்துக்கும் ஆன்மா உண்டு என்ற கருத்துகளை ஏற்றல்.

நன்னடத்தை - மகாவீரரின் ஐம்பெரும் சூளுரைகளைக் கடைபிடிப்பிடித்தல்.

 

3. அஜாத சத்ருவைப் பற்றிக் கூறு?

விடை:

இராணுவ வெற்றிகள் மூலம் ஆட்சியை விரிவுபடுத்தும் தனது தந்தையின் கொள்கையைப் பின்பற்றிய அஜாத சத்ரு, தனது தந்தை பிம்பிசாரரைக் கொன்றுவிட்டு கி.மு. 493ல் அரியணை ஏறினார்.

ஐந்து மலைகளால் சூழப்பட்ட பாதுகாப்பான, மகதத் தலைநகரான ராஜகிருஹம் கோட்டையை வலுப்படுத்தினார். கங்கைக் கரையில் பாடலி கிராமத்தில் மற்றொரு கோட்டையை கட்டினார்.

உள்ளூர் உற்பத்திகளுக்கான பரிமாற்றமையமாக விளங்கிய பாடலிபுத்திரம் மௌரியத் தலைநகரமாக மாறியது. கி.மு. 461ல் அஜாத சத்ரு இறந்தார்.

 

4. கலிங்கா கல்வெட்டுக் குறிப்பு கூறுவது என்ன ?

விடை:

கலிங்கா கல்வெட்டு:

அசோகரின் கல்வெட்டுகளில் 2 கலிங்கக் கல்வெட்டுகள், ஒரு கல்வெட்டில் அசோகர் போர் மற்றும் வெற்றிக்காக நடந்த படுகொலைகளைக் கண்டு தான் அடைந்த மனவேதனையைப் பதிவு செய்துள்ளார்.

மற்றொரு கல்வெட்டில் அசோகர், தான் இனிமேல் கலிங்கப் போரில் நடந்த படுகொலைகளில் நூற்றில் ஒரு பங்காகக்கூட, ஏன் ஆயிரத்தில் ஒரு பங்கைக்கூட பொறுத்துக் கொள்ளப் போவதில்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.

 

5. புத்த சமயத்தைப் பரப்ப அசோகர் மேற்கொண்ட முயற்சிகள் என்னென்ன ?

விடை:

தீவிர புத்த பற்றாளரான அசோகர் புத்த மத கருத்துக்களை பாறைகளில் பொறித்தார். விலங்குகளைப் பலியிடுவது தடை செய்யப்பட்டது. விலங்குகளுக்கான மருத்துவமனைகள் திறக்கப்பட்டன.

தனது மகன் மகேந்திரனையும், மகள் சங்கமித்திரையையும் புத்த தம்மம் குறித்த செய்தியைப் பரப்ப இலங்கைக்கு அனுப்பினார்.


Tags : Intellectual Awakening and Socio-Political Changes | History | Social Science அறிவு மலர்ச்சியும், சமூக-அரசியல் மாற்றங்களும் | வரலாறு | சமூக அறிவியல்.
9th Social Science : History : Intellectual Awakening and Socio-Political Changes : Answer the following briefly Intellectual Awakening and Socio-Political Changes | History | Social Science in Tamil : 9th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : வரலாறு : அறிவு மலர்ச்சியும், சமூக-அரசியல் மாற்றங்களும் : சுருக்கமான விடை தருக. - அறிவு மலர்ச்சியும், சமூக-அரசியல் மாற்றங்களும் | வரலாறு | சமூக அறிவியல் : 9 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : வரலாறு : அறிவு மலர்ச்சியும், சமூக-அரசியல் மாற்றங்களும்