Home | 5 ஆம் வகுப்பு | 5வது கணிதம் | இடமதிப்பு அட்டவணை

எண்கள் | பருவம் 1 அலகு 2 | 5 ஆம் வகுப்பு கணக்கு - இடமதிப்பு அட்டவணை | 5th Maths : Term 1 Unit 2 : Numbers

   Posted On :  16.10.2023 10:39 am

5 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 1 அலகு 2 : எண்கள்

இடமதிப்பு அட்டவணை

கீழ்க்காணும் அட்டவணையில் சரியான எண்களைக் கொண்டு நிரப்புக.

2. இடமதிப்பு அட்டவணை

கீழ்க்காணும் அட்டவணையில் சரியான எண்களைக் கொண்டு நிரப்புக.


எடுத்துக்காட்டு 1


ஆணிமணிச் சட்டம் காட்டும் எண்: 7,341

எண் பெயர்: ஏழாயிரத்து முந்நூற்று நாற்பத்தொன்று

விரிவாக்க வடிவம்: 7 ஆயிரங்கள் + 3 நூறுகள் + 4 பத்துகள் + 1 ஒன்று

= 7000 + 300 + 40 + 1

= 7 × 1000 + 3 × 100 + 4 × 10 + 1

இவற்றை முயல்க

3,45,678 என்ற எண்ணுடன் 2 ஆயிரங்கள் மற்றும் 4 பத்துக்களை கூட்டுக.

தீர்வு

345678 + 2040 = 347718

= 3 × 100000 + 4 × 10000 + 7 × 1000 + 7 × 100 + 1 × 10 + 8 × 1

 

செயல்பாடு 1


34,284 என்ற எண் ஆணிமணிச் சட்டத்தில் காட்டப்பட்டுள்ளது.

எண் பெயர்: முப்பத்து நான்காயிரத்து இரு நூற்று எண்பத்து நான்கு

விரிவாக்க வடிவம்: 3 பத்தாயிரங்கள் + 4 ஆயிரங்கள் + 2 நூறுகள் + 8 பத்துகள் + 4 ஒன்றுகள்

= 30,000 + 4000 + 200 + 80 + 4

= 3 × 10000 + 4 × 1000 + 2 ×100 + 8 × 10 + 4 × 1

 

இவற்றை முயல்க

34,284 என்ற எண்ணில் எத்தனை ஆயிரங்கள் உள்ளது?

விடை : 34,284 என்ற எண்ணில் 34 ஆயிரங்கள் உள்ளன.

 

செயல்பாடு 2


ஆணிமணிச் சட்டத்தை பார்த்து கோடிட்ட இடங்களை நிரப்புக.

எண் :  52,41,258

எண் பெயர் ஐம்பத்திரண்டு லெட்சத்து நாற்பத்தி ஒன்றாயிரத்து இரு நூற்று ஐம்பத்தி எட்டு

விரிவாக்க வடிவம்: 5 பத்து லட்சங்கள் + 2 லட்சங்கள்4 பத்தாயிரங்கள் + 1 ஆயிரம்  + 2 நூறுகள்  + 5 பத்துகள்  + 8 ஒன்றுகள்

= 5000000 + 200000 + 40000 + 1000 + 200 + 50 + 8.

 

இவற்றை முயல்க 3,45,789 ல் எத்தனை ஆயிரங்கள் உள்ளது?

விடை : 3,45,789 ல் 345 ஆயிரங்கள் உள்ளன

 

எடுத்துக்காட்டு 2


ஆணி மணிச்சட்டத்தில் காட்டப்பட்ட எண் 1,21,35,211

எண் பெயர்: ஒரு கோடியே இருபத்தொன்று லெட்சத்து முப்பத்தைந்தாயிரத்து இருநூற்று பதினொன்று

விரிவாக்க வடிவம்: 1 கோடி + 2 பத்து இலட்சங்கள் + 1 இலட்சம் + 3 பத்தாயிரங்கள் + 5 ஆயிரங்கள் + 2 நூறுகள் + 1 பத்து + 1 ஒன்று

= 10000000 + 2000000 + 100000 + 30000 +5000 +200+ 10 +1

= 1 × 10000000 + 2 × 1000000 + 1 × 100000 + 3 × 10000 + 5 × 1000+ 2 × 100 + 1 × 10 + 1

இவற்றை முயல்க

7226382 என்ற எண்ணில் 2 என்ற இலக்கத்தின் இடமதிப்புகளின் கூடுதல் என்ன?

விடை : 2 + 20000 + 200000 = 220002

 

செயல்பாடு 3

ஆணிமணிச் சட்டத்தை பார்த்து கோடிட்ட இடங்களை நிரப்புக..

கொடுக்கப்பட்ட எண்: 6,42,35,415

எண் பெயர்: ஆறு கோடியை நாற்பத்திரண்டு இலட்சத்து முப்பத்தைந்தாயிரத்து நானுற்று பதினைந்து

விரிவாக்க வடிவம் :

6 கோடிகள் + 4 பத்து இலட்சங்கள் + 2 இலட்சங்கள் + 3 பத்தாயிரங்கள் + 5 ஆயிரங்கள் + 4 நூறுகள் + 1 பத்து + 5 ஒன்றுகள்

 = 6,00,00,000 + 40,00,000 + 2,00,000 + 30,000 + 5000 + 400 + 10 + 5

= 6 × 10000000 + 4 × 1000000 + 2 × 100,000 + 3 × 10000 + 5 × 1000 + 4 × 100 + 1×10 + 5 × 1

 

எடுத்துக்காட்டு 3

கொடுக்கப்பட்டுள்ள எண்ணின் ஒவ்வொரு எண்ணிற்கும் இடமதிப்பு எழுதுக.


4 34, 56,789

9 ன் இடமதிப்பு            9 × 1 = 9

8 ன் இடமதிப்பு             8 × 10 = 80

7 ன் இடமதிப்பு             7 × 100 = 700

6 ன் இடமதிப்பு              6 × 1000 = 6000

5 ன் இடமதிப்பு             5 × 10000 = 50000

4 ன் இடமதிப்பு             4 × 100000 = 400000

3 ன் இடமதிப்பு             3 × 1000000 = 3000000

4 ன் இடமதிப்பு             4 × 10000000 = 40000000

 

உங்களுக்குத் தெரியுமா?

100 இலட்சங்கள் என்பது 1 கோடி ஆகும்

 

செயல்பாடு 4

கீழேக் கொடுக்கப்பட்டுள்ள எண்களில் 7 மற்றும் 1 என்ற இலக்கங்களின் இடமதிப்புகளை எழுதுக.

. 81,70,453

7ன் இடமதிப்பு 7 × 10000 = 70000

1ன் இடமதிப்பு 1 × 100000 = 100000


. 3,46,710

7ன் இடமதிப்பு  7 × 100 = 700

1ன் இடமதிப்பு 1 ×  10 = 10

 

. 5,87,13,946

7ன் இடமதிப்பு 

7 × 100000 = 700000

7 × 10 = 70

1ன் இடமதிப்பு 

1 × 1 = 1

1 × 10000 = 10000

1 × 10000000 = 10000000

Tags : Numbers | Term 1 Chapter 2 | 5th Maths எண்கள் | பருவம் 1 அலகு 2 | 5 ஆம் வகுப்பு கணக்கு.
5th Maths : Term 1 Unit 2 : Numbers : Importance of commas or periods Numbers | Term 1 Chapter 2 | 5th Maths in Tamil : 5th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 5 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 1 அலகு 2 : எண்கள் : இடமதிப்பு அட்டவணை - எண்கள் | பருவம் 1 அலகு 2 | 5 ஆம் வகுப்பு கணக்கு : 5 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
5 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 1 அலகு 2 : எண்கள்