Home | 5 ஆம் வகுப்பு | 5வது கணிதம் | எண்களை ஒப்பிடுதல்

எண்கள் | பருவம் 1 அலகு 2 | 5 ஆம் வகுப்பு கணக்கு - எண்களை ஒப்பிடுதல் | 5th Maths : Term 1 Unit 2 : Numbers

   Posted On :  16.10.2023 10:41 am

5 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 1 அலகு 2 : எண்கள்

எண்களை ஒப்பிடுதல்

நாம் எந்த இரு எண்களையும் >, < மற்றும் = ஆகிய குறிகளைக் கொண்டு ஒப்பிடலாம்.

எண்களை ஒப்பிடுதல்


நாம் எந்த இரு எண்களையும் >, < மற்றும் = ஆகிய குறிகளைக் கொண்டு ஒப்பிடலாம்.

20344 மற்றும் 3241 இவற்றில் சிறியது எது?

இலக்கங்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் எண் பெரிய எண் ஆகும்.

இலக்கங்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கும் எண் சிறிய எண் ஆகும்.

3241 [4 இலக்கங்கள்]  < 20344 [5 இலக்கங்கள்]

73652 அல்லது 56372 இவற்றில் பெரியது எது?

இங்கு இரு எண்களின் இலக்கங்களின் எண்ணிக்கை 5 ஆகும். எனவே இவற்றை ஒப்பிட்டுப் பார்த்து பெரிய எண்ணை கண்டுபிடிக்க வேண்டும்.


இங்கு 7 பத்தாயிரங்கள் 5 பத்தாயிரங்களை விடப் பெரியது.

எனவே,

73652  >  56372

எழுபத்து மூன்றாயிரத்து அறுநூற்று ஐம்பத்திரண்டு, ஐம்பத்தாறாயிரத்து முந்நூற்று எழுபத்திரண்டை விடப் பெரியது எனப் படிக்க வேண்டும்.

54349 அல்லது 53449 இவற்றில் சிறியது எது?

இரண்டு எண்களிலும் ஐந்து இலக்கங்கள் உள்ளது மற்றும் பத்தாயிரம் இடத்தில் நாம் ஒப்பிட்டு பார்க்கும் போது பத்தாயிரம் இடம் சமமாக உள்ளது. எனவே ஆயிரம் இடத்தில் இருக்கும் எண்ணை ஒப்பிட வேண்டும்.


முதல் எண்ணில் 4 ஆயிரங்களும் இரண்டாம் எண்ணில் 3 ஆயிரங்களும் உள்ளது. எனவே இரண்டாவது எண் சிறியதாக உள்ளது.

எனவே,


ஐம்பத்து மூன்றாயிரத்து நானூற்று நாற்பத்தொன்பது, ஐம்பத்து நான்காயிரத்து முந்நூற்று நாற்பத்தொன்பதை விடச் சிறியது.

.கா:

) 54,689 < 54,869

) 75,432 > 75,412

) 45,327  >  45,321

 

செயல்பாடு

கீழே கொடுக்கப்பட்டுள்ள எண் ஜோடிகளை ஒப்பிட்டு <, >, = சரியான குறியிடுக.


. 3,002 < 8,002

. 43,731 < 44,371

. 43,115 < 43,511

. 13,435 < 13,453

 

கொடுக்கப்பட்டுள்ள இலக்கங்களை ஒரே ஒரு முறை மட்டும் பயன்படுத்தி உருவாக்க இயலும் 5 இலக்க மிகப்பெரிய எண்ணையும் மற்றும் மிகச்சிறிய எண்ணையும் எழுதுக.

எடுத்துக்காட்டு

) 1, 2, 3, 4, 5

மிகச்சிறிய எண் : 12,345

மிகப்பெரிய எண் : 54,321

) 7, 6, 9, 4, 8

மிகச்சிறிய எண் : 46,789

மிகப்பெரிய எண் : 98,764

 

செயல்பாடு

கொடுக்கப்பட்டுள்ள இலக்கங்களை ஒரே ஒரு முறை மட்டும் பயன்படுத்தி உருவாக்க இயலும் 5 இலக்க மிகப்பெரிய எண்ணையும் மற்றும் மிகச்சிறிய எண்ணையும் எழுதுக.

) 7, 1, 0, 5, 4

விடை :

மிகச்சிறிய எண் : 10,457

மிகப்பெரிய எண் : 75,410


) 3, 4, 7, 0, 9

விடை :

மிகச்சிறிய எண் : 30,479

மிகப்பெரிய எண் : 97,430

 

) 9, 7, 1, 6, 4

விடை :

மிகச்சிறிய எண் : 14,679

மிகப்பெரிய எண் : 97,641

 

) 4, 5, 9, 6, 7

விடை :

மிகச்சிறிய எண் : 45,679

மிகப்பெரிய எண் : 97,654

 

2. மிகப்பெரிய எண்ணை பூவிலும், மிகச்சிறிய எண்ணை பழத்திலும் எழுதுக,

) 45678, 145, 7829


) 23, 8873, 88738, 883


Tags : Numbers | Term 1 Chapter 2 | 5th Maths எண்கள் | பருவம் 1 அலகு 2 | 5 ஆம் வகுப்பு கணக்கு.
5th Maths : Term 1 Unit 2 : Numbers : Comparison of Numbers Numbers | Term 1 Chapter 2 | 5th Maths in Tamil : 5th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 5 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 1 அலகு 2 : எண்கள் : எண்களை ஒப்பிடுதல் - எண்கள் | பருவம் 1 அலகு 2 | 5 ஆம் வகுப்பு கணக்கு : 5 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
5 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 1 அலகு 2 : எண்கள்