எண்களும் அதன் அடிப்படைச் செயல்பாடுகளும் - . கூட்டல் | 5th Maths : Term 1 Unit 2 : Numbers
எண்களும் அதன் அடிப்படைச் செயல்பாடுகளும்
1. கூட்டல்
அறிமுகம்
''ஆனந்தன் சீக்கிரமாக வா, பேருந்து வந்து விடும்" என்று ஆனந்தனுடைய அம்மா கூப்பிட்டார். "நான் தயாராகி விட்டேன், இங்கே தான் இருக்கிறேன்" என்று சொல்லிக் கொண்டே ஆனந்தன் வேகமாக ஓடி வந்தான். ஆனந்தனுடைய சகோதரியின் திருமணத்திற்காக புத்தாடைகள் வாங்குவதற்காக ஆனந்தனின் மொத்தக் குடும்பமும் மிகவும் பரபரப்பாக இருந்தது. குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் புத்தாடைகள் வாங்கிவிட்டு வீடு திரும்பினர்.
ஆடைகளுக்காக எவ்வளவு செலவு செய்தீர்கள்? என்று ஆனந்தன் அப்பாவிடம் கேட்டான். ஆண்களுக்கு
₹25,050, பெண்களுக்கு ₹47,025, குழந்தைகளுக்கு ₹7,125
மணப்பெண் மற்றும் மணமகனுக்கான ஆடைகள்
₹17,500 என அவனுடைய அப்பா கூறினார். இப்போது மொத்தத் தொகையைக் கூறு ?
ஆனந்தன் ஒரு காகிதம் மற்றும் எழுதுகோல் எடுத்து எல்லாத் தொகைகளையும் இடமதிப்புக்கேற்ப எழுதினான்.
மேற்கண்ட மொத்தத் தொகை சரியா அல்லது தவறா என சரிபார்.
ஆனந்தன் சரியாக செய்திருக்கிறார். குழந்தைகளுக்கான செலவு, ₹7,125 ல் பத்தாயிரம் இடமதிப்பு காலியாக உள்ளது. எனவே ஆனந்தன் இடமதிப்பிற்கேற்ப எண்களை வரிசைப்படுத்தி எழுதினான். நாம் எண்களின் இடமதிப்பை கற்றுக் கொண்டோம். ஆகவே நாம் அந்த முறையைப் பயன்படுத்தி பல எண்களின் கூடுதலை கண்டறியப் உள்ளோம். கீழ்க்கண்ட எண்களை ஒன்றன் கீழ் ஒன்றாக எழுதி கூட்டுக
1,37,462 + 4,005 + 38 + 56,734.
கொடுக்கப்பட்ட எண்களை அதன் இடமதிப்பிற்கேற்ப வரிசைப்படுத்தவும். அனைத்து விதமான கூட்டல் கணக்குகளையும் இந்த முறையில் நாம் செய்யலாம்.
படி 1: ஒன்றுகளிலிருந்து கூட்டுக. 19 ஒன்றுகள் உள்ளன
படி 2: 19 ஒன்றுகளை 1 பத்து மற்றும் 9 ஒன்றுகளாக இடமாற்றம் செய்யவும் ஒரு பத்தை பத்தாம் இடத்திலும் எழுதவும்
படி: 3 ஒரு பத்தை பத்தாம் இடத்திலும் 9ஐ ஒன்றாம் இடத்திலும் போடவும் இதைப்போன்று நூறுகளுக்கும் ஆயிரங்களுக்கும் செய்யலாம்.
குறிப்பு:
ஒன்றாம் இடமதிப்பிலிருந்து அதாவது வலப்பக்கத்திலிருந்து எண்களை எழுத ஆரம்பித்தால், தவறுகளைத் தவிர்க்கலாம்.