எண்கள் | பருவம் 1 அலகு 2 | 5 ஆம் வகுப்பு கணக்கு - பெருக்கல் | 5th Maths : Term 1 Unit 2 : Numbers
3. பெருக்கல்
முந்தைய வகுப்பில் நாம் லாட்டீஸ் பெருக்கல் முறையை கற்றோம். இப்போது எண்களை இடமதிப்புகளைப் பொருத்து பெருக்குவதை பற்றி தெரிந்து கொள்ளப்போகிறோம்.
ஐந்தாம் வகுப்பில் 35 மாணவர்கள் பயில்கிறார்கள். ஒரு மாணவனின் சீருடையின் விலை ₹350 எனில் 35 மாணவர்களுக்கான சீருடையின் மொத்தத் தொகை எவ்வளவு?
இங்கு ஒன்றாம் இடமதிப்பு எண்கள் 5
மற்றும் 0
இந்த எண்களை முதலில் பெருக்க வேண்டும்.
படி 1: பெருக்கப்பட வேண்டிய எண்ணை ஒன்றாம் இடமதிப்பில் உள்ள இலக்கத்துடன் பெருக்க வேண்டும்.
படி 2: பெருக்கிப் போடப்பட்ட ஒன்றாம் இடமதிப்பின் கீழே ஒன்றாம் இடத்தை அடைத்துகொள்ள நட்சத்திர குறி போட வேண்டும்.
படி 3: இப்போது பெருக்கப்பட வேண்டிய எண்ணை பத்தாம் இடமதிப்பில் உள்ள இலக்கத்துடன் பெருக்குக
படி 4: பெருக்கப்பட்ட விடைகளைக் கூட்ட வேண்டும்.
கீழ்க்காணும் படிகளைக் கவனி:
படி : 1
ஒ – ஒன்றுகள்
ப – பத்துகள்
நூ – நூறுகள்
5 × 0 = 0
படி : 2
5 × 2 = 25
2 – ஐ நூறாம் இடமதிப்பிற்கு எடுத்து செல்ல வேண்டும்.
படி : 3
இப்போது நூறாம் இடமதிப்பை ஒன்றாம் இடமதிப்பில் உள்ள இலக்கங்களால் பெருக்கவும்
5 × 3 = 15
15 + 2 = 17
படி : 4
பத்தாம் இடமதிப்பு பெருக்கும் எண்ணாகும் போது இரண்டாம் வரிசையின் ஒன்றாம் இடமதிப்பில் '0' போட வேண்டும். பின்பு பத்தாம் இடமதிப்பைப் பெருக்கி பத்தாம் இடமதிப்பிலிருந்து போட வேண்டும்.
படி : 5
கீழே * குறியிட்டு பத்தாம் இடத்தில் உள்ள இலக்கத்தை கொண்டு பெருக்கவும்.
3 × 0 = 0
படி : 6
3 × 5 =15
1 – ஐ நூறாம் இடமதிப்பிற்குக் கொண்டு செல்லவும்.
படி : 7
3 × 3 = 9
9 + 1 = 10
எண்களை கூட்டினால் பெருக்கற்பலன் கிடைக்கும்.