Home | 5 ஆம் வகுப்பு | 5வது கணிதம் | இலக்க எண்களை 2 இலக்க எண்களால் வகுத்தல்

எண்கள் | பருவம் 1 அலகு 2 | 5 ஆம் வகுப்பு கணக்கு - இலக்க எண்களை 2 இலக்க எண்களால் வகுத்தல் | 5th Maths : Term 1 Unit 2 : Numbers

   Posted On :  16.10.2023 09:42 pm

5 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 1 அலகு 2 : எண்கள்

இலக்க எண்களை 2 இலக்க எண்களால் வகுத்தல்

முந்தைய வகுப்பில் ஒரு எண்ணை ஓரிலக்க எண்ணால் வகுப்பதைப் பற்றி கற்றோம். தற்போது 4 இலக்க எண்ணை 2 இலக்க எண்ணால் வகுக்கும் வழிமுறையை கற்போம்.

இலக்க எண்களை 2 இலக்க எண்களால் வகுத்தல்

முந்தைய வகுப்பில் ஒரு எண்ணை ஓரிலக்க எண்ணால் வகுப்பதைப் பற்றி கற்றோம். தற்போது 4 இலக்க எண்ணை 2 இலக்க எண்ணால் வகுக்கும் வழிமுறையை கற்போம்.


அன்றைய நாள் 5 -ம் வகுப்பு மாணவர்கள் மிகவும் ஆர்வத்துடன் இருந்தார்கள். ஏனென்றால் கல்வி சுற்றுலா செல்வதற்கான பேருந்து பள்ளிக்கு வந்தது. வகுப்பு ஆசிரியர் மாணவர்களை பேருந்திற்குள் செல்ல அனுமதித்தார். மாணவர்கள் பேருந்திற்குள் சந்தோஷமாக சத்தம் போட்டுக் கொண்டே உள்ளே ஏறினார். பேருந்து அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவை சென்றடைந்தது. வகுப்பாசிரியர் மாணவர்களின் அனுமதிக் கட்டணமாக ₹1530 செலுத்தினார். மொத்த மாணவர்கள் 34 எனில், ஒரு மாணவனின் அனுமதிக் கட்டணம் எவ்வளவு?

எனவே நாம், மொத்தத் தொகை ₹1530 34 ஆல் வகுப்போம்.

1530 ÷ 34

படி : 1


2 இலக்க எண்ணால் வகுக்கும்போது வகுபடும் எண்ணின் முதல் இரண்டு எண்களை எடுத்துக் கொள்ள வேண்டும்.


ஆனால் 15 என்ற எண் 34 விட சிறியது, எனவே பத்தாம் இடமதிப்பிலுள்ள 3-யும் எடுத்து வகுக்க வேண்டும்.


படி : 2


இப்போது 153 34 ஆல் வகுப்போம்.

153 −ல் எத்தனை 34 உள்ளது?

4 × 34 = 136.

படி : 3


அடுத்து, ஒன்றாம் இடமதிப்பில் 0 எழுத வேண்டும்.

170 ஆகிறது.

170 -ல் எத்தனை 34 உள்ளது?

5 × 34 = 170

எனவே ஒரு மாணவனின் அனுமதிக் கட்டணம் 45 ஆகும்.

ஈவு = 45,

மீதி = 0

 

வகுத்து ஈவு மற்றும் மீதி கண்டுபிடி,

எடுத்துக்காட்டு 1


 

எடுத்துக்காட்டு 2

ஒரு கார் தொழிற்சாலை ஒரு மாதத்திற்கு (30 நாள்கள்) 3750 கார்களைத் தயாரிக்கிறது. எனில், ஒரு நாளில் அந்தத் தொழிற்சாலையில் எத்தனை கார்கள் தயாரிக்கப்படும்?

3750 30 நாள்களால் வகுக்க

3750 ÷ 30

படி : 1


வகுபடும் எண்ணிலிருந்து முதல் இலக்கமான 37 தெரிந்து கொள்வோம்.

37ல் எத்தனை 30 உள்ளன?

1 × 30 = 30

படி : 2


37 லிருந்து 30 ஐக் கழித்தால் 7 கிடைக்கும். இப்போது பத்தாம் இடமதிப்பு 5 கீழே எழுதுக.

படி : 3


75 30 ஆல் வகுக்க.

75 -ல் எத்தனை 30 உள்ளன?

2 × 30 = 60

75 லிருந்து 60 ஐக் கழித்தால் 15 கிடைக்கிறது.

படி : 4


அடுத்தபடியாக ஒன்றாம் இடமதிப்பான '0' வை கீழே எழுதவும்.

150ல் எத்தனை 30கள் உள்ளன?

5 × 30 = 150

ஈவு = 125

மீதி = 0

 

எடுத்துக்காட்டு 3

4327 18 ஆல் வகுத்து ஈவு மற்றும் மீதி காண்க.

தீர்வு :


வகுபடும் எண் = 4327

வகுக்கும் எண் = 18

ஈவு = 240

மீதி = 7

Tags : Numbers | Term 1 Chapter 2 | 5th Maths எண்கள் | பருவம் 1 அலகு 2 | 5 ஆம் வகுப்பு கணக்கு.
5th Maths : Term 1 Unit 2 : Numbers : Divide 4 digits by 2 digits Numbers | Term 1 Chapter 2 | 5th Maths in Tamil : 5th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 5 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 1 அலகு 2 : எண்கள் : இலக்க எண்களை 2 இலக்க எண்களால் வகுத்தல் - எண்கள் | பருவம் 1 அலகு 2 | 5 ஆம் வகுப்பு கணக்கு : 5 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
5 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 1 அலகு 2 : எண்கள்