அலகு 17 | 8 ஆம் வகுப்பு அறிவியல் - தாவர உலகம் | 8th Science : Chapter 17 : Plant Kingdom

   Posted On :  30.07.2023 03:39 am

8 ஆம் வகுப்பு அறிவியல் : அலகு 17 : தாவர உலகம்

தாவர உலகம்

கற்றல் நோக்கங்கள் இப்பாடத்தைக் கற்றபின் மாணவர்கள் பெறும் திறன்களாவன: ❖ பாசிகளின் சிறப்புப் பண்புகளை அறிதல். ❖ நிறமிகளின் அடிப்படையில் பாசிகளை வகைப்படுத்துதல். ❖ பூஞ்சைகளின் சிறப்பியல்பு, உணவூட்டம், வகைப்பாடு மற்றும் பயன்களைப் புரிந்துகொள்ளல். ❖ பிரையோஃபைட்டா, டெரிடோஃபைட்டா தாவரங்களை வேறுபடுத்துதல். ❖ மருத்துவத் தாவரங்களின் முக்கியத்துவத்தையும் பயன்களையும் பட்டியலிடுதல். ❖ பூக்கும் தாவரங்களின் வகுப்புகளையும் அவற்றின் பண்புகளையும் புரிந்துகொள்ளல். ❖ விதைத் தாவரங்களின் பெந்தம் மற்றும் ஹீக்கர் வகைப்பாட்டை அட்டவணைப்படுத்துதல்.

அலகு 17

தாவர உலகம்



 

கற்றல் நோக்கங்கள்

இப்பாடத்தைக் கற்றபின் மாணவர்கள் பெறும் திறன்களாவன:

பாசிகளின் சிறப்புப் பண்புகளை அறிதல்.

நிறமிகளின் அடிப்படையில் பாசிகளை வகைப்படுத்துதல்.

பூஞ்சைகளின் சிறப்பியல்பு, உணவூட்டம், வகைப்பாடு மற்றும் பயன்களைப் புரிந்துகொள்ளல்.

பிரையோஃபைட்டா, டெரிடோஃபைட்டா தாவரங்களை வேறுபடுத்துதல்.

மருத்துவத் தாவரங்களின் முக்கியத்துவத்தையும் பயன்களையும் பட்டியலிடுதல்.

பூக்கும் தாவரங்களின் வகுப்புகளையும் அவற்றின் பண்புகளையும் புரிந்துகொள்ளல்.

விதைத் தாவரங்களின் பெந்தம் மற்றும் ஹீக்கர் வகைப்பாட்டை அட்டவணைப்படுத்துதல்.


 

அறிமுகம்

பூமியில் வாழும் அனைத்து உயிரினங்களும் அமைப்பு, வளரியல்பு, வாழிடம், உணவு உட்கொள்ளும் முறை மற்றும் உடற்செயலியல் ஆகியவற்றில் வேறுபடுகின்றன. ஏறத்தாழ 8.7 மில்லியன் (1 மில்லியன் சிற்றினங்கள் பூமியின் மீது உள்ளன. அவற்றுள் 6.5 மில்லியன் சிற்றினங்கள் நிலத்திலும், 2.2 மில்லியன் சிற்றினங்கள் பெருங்கடல்களிலும் வாழ்கின்றன. இந்த சிற்றினங்களுள் 4 இலட்சம் சிற்றினங்கள் பூக்கும் தாவரங்கள் ஆகும். உயிரினங்கள் பல்வேறு ஒற்றுமை மற்றும் வேற்றுமைகளைக் கொண்டுள்ளன. எனவே, அவற்றை பல்வேறு குழுக்களாகப் பிரிக்கலாம். பாரம்பரிய வகைப்பாட்டு முறையில் தாவர உலகம் இரண்டு துணை உலகங்களாகப் பிரிக்கப்பட்டது. அவை, பூவாத் தாவரங்கள் (கிரிப்டோகேம்கள் மற்றும் பூக்கும் தாவரங்கள் (பனரோகேம்கள்) ஆகும். தாலோஃபைட்டா, பிரையோஃபைட்டா மற்றும் டெரிடோஃபைட்டா ஆகியவை பூவாத்தாவரங்கள் ஆகும். இப்பாடத்தில் ஆல்கா, பூஞ்சை, பிரையோஃபைட்டுகள், எடரிடோஃபைட்டுகள் பற்றியும், தாவரங்களின் வகைப்பாடு பற்றியும் நாம் படிக்க இருக்கிறோம்.

Tags : Chapter 17 | 8th Science அலகு 17 | 8 ஆம் வகுப்பு அறிவியல்.
8th Science : Chapter 17 : Plant Kingdom : Plant Kingdom Chapter 17 | 8th Science in Tamil : 8th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 8 ஆம் வகுப்பு அறிவியல் : அலகு 17 : தாவர உலகம் : தாவர உலகம் - அலகு 17 | 8 ஆம் வகுப்பு அறிவியல் : 8 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
8 ஆம் வகுப்பு அறிவியல் : அலகு 17 : தாவர உலகம்