இந்தியா | புவியியல் - வேளாண்மை | 10th Social Science : Geography : Chapter 3 : India - Agriculture
வேளாண்மை
வேளாண்மை என்பது குறிப்பிடப்பட்ட பயிர்களை உற்பத்தி செய்தும் மற்றும் கால்நடைகளை வளர்த்தும் மக்களுக்கு உணவையும் கால்நடைகளுக்கு தீவனத்தையும், நார் மற்றும் தேவையான இதர பொருள்களையும் வழங்குவதாகும்.
இந்திய வேளாண்மையை பல காரணிகள் நிர்ணயிக்கின்றன. அவற்றில் சில முக்கியக் காரணிகளாவன.
1) இயற்கைக் காரணிகள் : நிலத்தோற்றம், காலநிலை மற்றும் மண்
2) அமைப்பு சார் காரணிகள் : வேளாண் நிலத்தின் அளவு, நில உரிமை முறை மற்றும் நிலச்சீர்திருத்தங்கள்
3) உட்கட்டமைப்பு காரணிகள் : நீர்ப்பாசனம், மின்சாரம், போக்குவரத்து, வரவு, சந்தை, காப்பீடு மற்றும் சேமிப்பு வசதிகள்.
4) தொழில்நுட்பக் காரணிகள் : வீரிய விதைகள், இரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லிகள் மற்றும் இயந்திரங்கள்
இந்தியாவில் கணிசமான அளவு விவசாயிகள் தன்னிறைவு வேளாண்மை முறையை பின்பற்றுகிறார்கள். பெரும்பாலும் குடும்ப உறுப்பினர்களின் உதவியுடன் சாகுபடி செய்யப்பட்டு நிலத்தின் மொத்த விளைச்சலின் பெரும் பகுதி குடும்ப உறுப்பினர்களால் நுகரப்பட்டு மீதம் உள்ளவை அருகில் உள்ள சந்தையில் விற்பனை செய்யப்படுகிறது. உணவுப் பயிர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டாலும் கரும்பு, எண்ணெய் வித்துக்கள், பருத்தி, சணல் மற்றும் புகையிலை ஆகியவை சிறிய அளவில் பயிரிடப்படுகின்றன. பாரம்பரிய விவசாய முறையாதலால் குறைவான உற்பத்தியை அளிக்கிறது.
இவ்வகை வேளாண்மை பழங்குடி இன மக்களால் காடுகளில் ஒரு சிறிய பகுதியிலுள்ள மரங்களை அகற்றி சாகுபடி செய்யப்படுகிறது. இரண்டு அல்லது மூன்றாண்டுகள் சாகுபடிக்குப் பிறகு, மண்ணின் வளம் குறைவதால் அவ்விடத்தைக் கைவிட்டு மக்கள் வேறொரு புதிய இடத்திற்குச் செல்வர். இவ்வாறாக இது தொடர்ச்சியாக நடைபெறும் சில உணவுபயிர்களும், காய்வகை பயிர்களும் மனித உழைப்பின் மூலம் பயிரிடப்படுகிறது. இவை ‘வெட்டுதல்’ மற்றும் 'எரித்தல்' வேளாண்மை என்றும் அழைக்கப்படுகிறது.
இந்தியாவில் உள்ள இடப்பெயர்வு வேளாண்மையின் பல்வேறு
பெயர்கள்
பெயர் : மாநிலம்
ஜூம் : அசாம்
பொன்னம் : கேரளா
பொடு : ஆந்திரப்பிரதேசம் மற்றும்
ஒடிசா
பீவார், மாசன், பென்டா, பீரா : மத்தியப்பிரதேசம்
தீவிர வேளாண்மை எனப்படுவது இயந்திரங்கள் மற்றும் பல்வேறு நவீன யுக்திகள் மூலம் உற்பத்தியை அதிகப்படுத்துவதாகும். சிறிய நிலத்தில் பூச்சிக் கொல்லிகள், களைக்கொல்லிகள் மற்றும் இரசாயன உரங்களை அதிகமாக பயன்படுத்தி அதிகபட்ச விளைச்சலை பெறுவது இதன் நோக்கமாகும்.
நீர் பாசன வசதி இல்லாத வறண்ட பகுதிகளில் இவ்வகையான வேளாண்முறை பின்பற்றப்பட்டு வருகிறது. இந்தப் பகுதிகளில் பயிரிடப்படும் பயிர்கள் வறட்சியை தாங்கக் கூடியவை. பாசன வசதி உதவியுடன் பயிரிடப்படும் பயிர்களும் இவ்வேளாண்மையின் கீழ் பயிரிடப்படுகின்றன. இத்தகைய சூழ்நிலையில் விளைச்சல் பொதுவாக குறைவாகவே இருக்கும்.பெரும்பாலான பகுதிகளில் ஓர் ஆண்டிற்கு ஒரு பயிர் மட்டுமே பயிரிடப்படுகின்றது.
கலப்பு வேளாண்மை என்பது பயிரிடுதலுடன் கால்நடை வளர்ப்பு, கோழி வளர்ப்பு, மீன் வளர்ப்பு, தேனீ வளர்ப்பு போன்றவற்றை உள்ளடக்கியதாகும். விவசாயிகளின் பல தேவைகளை இது பூர்த்தி செய்கிறது.
கலப்பின விவசாயம்
இவ்வேளாண்மை முறையானது மலைப்பிரதேசங்களில் பின்பற்றப்படுகிறது. இப்பகுதி நிலங்கள் இயற்கையாகவே சரிவு அமைப்பை கொண்டவை. மலைச்சரிவுப் பகுதிகள் சமப்படுத்தப்பட்டு நிலம் நிலையான வேளாண் பகுதிகள் போலவே பயன்படுத்தப்படுகிறது. ஏனெனில் சமமான நிலப்பகுதி குறைவாக இப்பகுதிகளில் உள்ளது. படிக்கட்டு நிலங்கள் சிறிய சமமான நிலப்பகுதிகளாக உருவாக்கப்படுகின்றன. மலைச் சரிவுகளில் உள்ள படிக்கட்டு முறை அமைப்பு மண் அரிப்பை தடுக்கிறது.
தாமோதர்
பள்ளத்தாக்குத் திட்டம் : தாமோதர் - மேற்கு வங்காளம், ஜார்கண்ட்
பக்ரா
நங்கல் திட்டம் (உலகின் பெரிய புவி ஈர்ப்பு அணை) : சட்லஜ் - பஞ்சாப், ஹரியானா, இராஜஸ்தான்
ஹிராகுட்
திட்டம் (உலகின் மிக நீளமான அணை) : மகாநதி - ஒடிசா
கோசி
திட்டம் : கோசி - பீகார் மற்றும் நேபாளம்
துங்கபத்ரா
திட்டம் : துங்கபத்ரா - ஆந்திரப் பிரதேசம் மற்றும் கர்நாடகா
தெகிரி
அணை : பாகீரதி - உத்தரகாண்ட்
சம்பல்
பள்ளத்தாக்குத் திட்டம் : சம்பல் - இராஜஸ்தான் மற்றும் மத்தியப்பிரதேசம்
நாகார்ஜுன
சாகர் திட்டம் : கிருஷ்ணா - ஆந்திரப் பிரதேசம்
சர்தார்
சரோவர் திட்டம் : நர்மதை - மத்தியப்பிரதேசம், மகாராஷ்டிரா, இராஜஸ்தான்
இந்திரா
காந்தி கால்வாய்த் திட்டம் : சட்லஜ் - இராஜஸ்தான், பஞ்சாப், ஹரியானா
மேட்டூர்
அணை : காவிரி - தமிழ்நாடு