இந்தியா - வேளாண்மை | புவியியல் - மீன் வளர்ப்பு | 10th Social Science : Geography : Chapter 3 : India - Agriculture
மீன் வளர்ப்பு
இந்தியாவில்
மீன் வளர்ப்பு ஒரு முக்கியப் பொருளாதார நடவடிக்கையாகும். இத்துறை வளர்ந்து வரும்
துறையாகவும் பல்வேறு வளங்களைக் கொண்டதாகவும் உள்ளது. மீன் பிடி தொழிலானது
இந்தியாவின் கடலோர மாநிலங்களில் ஒரு முக்கிய தொழிலாக 14
மில்லியன் மக்கள் தொகைக்கும்
அதிகமானோருக்கு வேலை வாய்ப்பை அளிக்கிறது. உலக மீன் உற்பத்தியில் 3
சதவிகிதத்துடன்
சீனாவிற்கு அடுத்த படியாக இந்தியா இரண்டாம் இடத்தில் உள்ளது. மீன் பிடி தொழில்
உணவு உற்பத்தியை அதிகரித்தல், வேலைவாய்ப்பை உருவாக்கல்,
ஊட்டச்சத்து
அளித்தல், அன்னிய செலாவாணி ஈட்டல் போன்ற பல வழிகளில் உதவி
புரிகிறது.
இந்தியாவில்
மீன்பிடி தொழில் இருவகைகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.
1) கடல் மீன் பிடிப்பு
2) உள்நாட்டு (அ) நன்னீர்
மீன்பிடிப்பு
மீன்பிடித்தல்
கடற்கரைப்பகுதி,
கடற்கரையை
ஒட்டிய பகுதி மற்றும் ஆழ்கடல் முக்கியமாக கண்டத்திட்டு பகுதிகளில் மீன் பிடித்தல்
நடைபெறுகிறது. கேரளா கடல்மீன் உற்பத்தியில் முதன்மையானதாக உள்ளது.
நீர்த்தேக்கங்களான
ஆறுகள், ஏரிகள்,
கால்வாய்கள்,
குளங்கள்
மற்றும் கண்மாய்கள் போன்ற நீர் நிலைகளில் நடைபெறும் நன்னீர் மீன்பிடிப்பு இவற்றில்
அடங்கும். நாட்டின் மொத்த மீன் உற்பத்தியில் சுமார் 50
சதவிகிதம்
உள்நாட்டு மீன் பிடித்தல் மூலம் கிடைக்கிறது. இந்தியாவில் ஆந்திரப்பிரதேசம்
உள்நாட்டு மீன் பிடித்தலில் முதன்மை மாநிலமாகத் திகழ்கிறது.
இந்தியாவில்
மீனவர்களால் பிடிக்கப்படும் முக்கியமான மீன் வகைகள் கெளுத்தி,
ஹெர்கிங்ஸ்,
கானாங்
கெளுத்தி, பெர்சல்,
ஈல்மீன்
முல்லட்டை மீன் போன்றவையாகும்.