Home | 10 ஆம் வகுப்பு | 10வது சமூக அறிவியல் | இந்தியாவில் உள்ள மண்ணின் வகைகள் மற்றும் பண்புகள்
   Posted On :  27.07.2022 07:33 am

10வது சமூக அறிவியல் : புவியியல் : அலகு - 3 : இந்தியா - வேளாண்மை

இந்தியாவில் உள்ள மண்ணின் வகைகள் மற்றும் பண்புகள்

மண் என்பது கனிமங்களின் கூட்டுப் பொருள்கள், மக்கிய தாவரங்கள், விலங்கினப் பொருள்கள், காற்று மற்றும் நீர் ஆகியவற்றை உள்ளடக்கியது. இது புவியின் மேற்பரப்பில் காணப்படும் ஒரு அடுக்காகும்.

மண்

மண் என்பது கனிமங்களின் கூட்டுப் பொருள்கள்மக்கிய தாவரங்கள்விலங்கினப் பொருள்கள்காற்று மற்றும் நீர் ஆகியவற்றை உள்ளடக்கியது. இது புவியின் மேற்பரப்பில் காணப்படும் ஒரு அடுக்காகும். மண்துகள்கள்களிமண்மணல் மற்றும் மண்மண்டி படிவு (Silt) என மூன்று வகைகளாகப் பிரிக்கப்படுகிறது. பல்வேறு காலநிலைச் சூழலில் பாறைகள் சிதைவடைவதால் மண் உருவாகிறது. சில மண்வகைகள் தேயுருதல் காரணிகளால் அரிக்கப்பட்டு பின் படியவைக்கப்பட்டு உருவாகின்றன. மண்ணானது இடத்திற்கு இடம் வேறுபடும்.


மண்ணின் வகைகள்

1953ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகம் இந்தியாவில் காணப்படும் மண்வகைகளை பிரிவுகளாக வகைப்படுத்தியுள்ளது. அவை

1. வண்டல் மண்

2. கரிசல் மண்

3. செம்மண்

4. சரளை மண்

5. காடு மற்றும் மலை மண்

6. வறண்ட பாலை மண்

7. உப்பு மற்றும் காரமண்

8. களிமண் மற்றும் சதுப்பு நில மண்




மண்ணின் பண்புகள்


1. வண்டல் மண்

காதர்: வெளிர் நிறமுடைய மணற்பாங்கான மண். பாங்கர்: சுண்ணாம்பு மற்றும் களிமண் பாங்கான பழைய வண்டல் படிவுகள்அடர் நிறம் உடையது.

உருவாக்கம்: சிற்றோடைகள் மற்றும் ஆறுகளின் வேகம் குறையும் பொழுது படிய வைப்பதினால் உருவாகின்றன.

வேதியியல் பண்புகள்: பொட்டாசியம், பாஸ்போரிக் அமிலம், சுண்ணாம்பு மற்றும் கார்பன் கலவைகள் அதிகமாக காணப்படுகின்றன. நைட்ரஜன் குறைவாக உள்ளது.

மண்ணின் தன்மைகள்: வண்டல், மண்மண்டி (Silt) களிமண் போன்ற கலவைகளுடன் மண்ணடுக்கு காணப்படுகிறது.



2. கரிசல் மண்

உருவாக்கம்: தக்காணப் பகுதியில் உள்ள பசால்ட் பருத்தி, தினை பாறைகளில் இருந்து உருவானது.

நிறம்: டைட்டானியம் மற்றும் இரும்பு தாதுக்களால் கருப்பு நிறமாக உள்ளது. வேதியியல் பண்புகள்: கால்சியம், மக்னீசியம், கார்போனேட்டுகள், அதிக அளவிலான இரும்பு, அலுமினியம், சுண்ணாம்பு மற்றும் மாங்கனீசு ஆகியன காணப்படுகின்றன. நைட்ரஜன், பாஸ்போரிக் அமிலம், மற்றும், இலை மக்குகள் குறைவாக உள்ளன.

மண்ணின் தன்மைகள்: ஈரமாக இருக்கும் போது சேறாகவும்ஈரப்பதத்தை நீண்ட நேரம் தக்க வைத்துக் கொள்ளும் தன்மையும் உடையது.


3. செம்மண்

உருவாக்கம்: பழமையான படிக பாறைகளான கிரானைட்நைஸ் போன்ற பாறைகள் சிதைவடைவதால் உருவாகின்றன.

வேதியியல் பண்புகள்: இரும்பு மற்றும் மக்னீசியம் அதிகமாக காணப்படுகிறது. நைட்ரஜன், இலைமட்குகள், பாஸ்போரிக் அமிலம் மற்றும் சுண்ணாம்பு சத்துக்கள் குறைவாக காணப்படுகின்றன. 

மண்ணின் தன்மைகள்: மென்துகள்கள் குறிப்பிடப்பட்டுள்ள உப்புக்கரைசல்வெண்களிப் பாறைத்தாதுக்கள்சிறு வெடிப்புகளுடன் கூடிய செம்மண் படிவு.


4. சரளை மண்

உருவாக்கம்: வெப்பம் மற்றும் குளிர் அடுத்தடுத்து நிகழும் போது மண்சுவரல் (leaching) காரணமாக உருவாகிறது. 

வேதியியல் பண்புகள்; இரும்பு மற்றும் அலுமினியத்தின் நீரேற்ற ஆக்சைடுகளால் உருவானது.

மண்ணின் தன்மை: உயரமான மலைப் பகுதிகளில் அதிகமான அமிலத்தன்மையுடனும் தாழ்வான பகுதிகளில் குறைந்த அளவும் உள்ளது.பொதுவாக இது ஈரப்பதத்தை தக்கவைத்துக் கொள்வதில்லை. ஆனால் களிமண் கலந்த வண்டல் படிவுகளைக் கொண்ட சமவெளிப் பகுதிகளில் ஈரப்பதத்தை தக்கவைத்துக் கொள்கிறது.


5. காடு மற்றும் மலை மண்

உருவாக்கம்: பனிமழை வெப்பநிலை வேறுபாடுகளால் பௌதீக சிதைவின் காரணமாக உருவாகின்றது. காலநிலைக்கு ஏற்ப இடத்திற்கு இடம் மாறுபடுகிறது

வேதியியல் பண்புகள்: பொட்டாஷ், பாஸ்பரஸ் மற்றும் சுண்ணாம்புச் சத்துக்கள் குறைவாகக் காணப்படுகிறது.

தன்மை: மென்மையான மணல் மற்றும் பாறை துகள்கள் கலந்து காணப்படுகிறது. இம் மண்ணின் தன்மை தாய்பாறைக் கேற்ப மாறுபடுகிறது. அதிக இலை மட்குச் சத்துகள் உடையது மெதுவாக மட்குகளால் சிதைவுறுவதால் காரத்தன்மை கொண்டதாக உள்ளது.


6. வறண்ட பாலை மண்

உருவாக்கம்: வறண்ட கால நிலை, அதிக வெப்பம் காரணமாக ஆவியாதல் அதிகமாக இருப்பதால் மேல் மண் வறண்டு காணப்படுகிறது. தாவரங்கள் இல்லாமையால் இலை மட்குச் சத்து குறைவாகக் காணப்படுகிறது. 

வேதியியல் பண்புகள்: அதிக அளவிலான உப்பு, அமிலத்தன்மை, பாஸ்பேட், பல்வேறு அளவுகளில் உள்ள கால்சியம் கார்பனேட், உயிர்சத்துக்கள் மற்றும் நைட்ரஜன் குறைவாகவும் காணப்படுகிறது.

தன்மை: வெளிர்நிறம் குறைந்த இலை மட்கு சத்து புரைத்தன்மையுடையது, குறைந்த ஈரப்பதம் உடையது.


7. உப்பு மற்றும் காரமண்

உருவாக்கம்: வடிகாலமைப்பு இல்லாமையால் நீர்பிடிப்புக் காரணமாக தீங்கு விளைவிக்கக் கூடிய உப்புகள் நுண்புழை நுழைவு காரணமாக மண்ணின் கீழ் அடுக்கிலிருந்து மேற்பரப்பிற்கு கடத்தப்படுகிறது. இதனால் இம்மண்உப்பு மற்றும் காரத் தன்மையுடன் காணப்படுகிறது.

வேதியியல் பண்புகள்: சோடியம், மக்னீசியம், கால்சியம் மற்றும் சல்பூரிக் அமிலம் காணப்படுகிறது.

தன்மை: சிதைக்கப்படாத பாறைகள் மற்றும் சிதைவுற்ற கனிமங்களை உடையது.


8. களிமண் மற்றும் சதுப்பு நில மண்

உருவாக்கம்: உயிரினப் பொருட்களிலிருந்து ஈர காலநிலை உள்ள பகுதிகளில் இம்மண் காணப்படுகிறது. இவ்வகை மண் கருமை நிறம் மற்றும் அதிககாரத் தன்மையுடையது.அதிக மழையளவு, அதிக ஈரப்பதம் கொண்ட பகுதிகளில் காணப்படுகிறது. 

வேதியியல் பண்புகள்: பொட்டாஷ் மற்றும் பாஸ்பேட், சத்துகள் குறைவாகவும், காணப்படுகிறது.

தன்மை: ஈரத்தன்மையுடன் இலை மட்கைக் கொண்டும் கருமை நிறத்திலும் உள்ளது.



மண் சீரழிவு: இந்தியாவில் மண் சீரழிவு என்பது ஒரு முக்கிய பிரச்சனையாக உள்ளது. இந்திய தொலை நுண்ணுணர்வு (IIRS), 2015ஆம் ஆண்டு அறிக்கையின் படி 147 மில்லியன் ஹெக்டேர் நிலப்பரப்பு மண் அரிப்பால் பாதிப்படைந்துள்ளது.

இந்திய மண் வகைகள் எதிர்கொள்ளும் சவால்கள்:

1. மண் அரிப்பு (தாள் அரிப்பு, நீரோட்ட மண்ணரிப்பு, நீர் பள்ள மண்ணரிப்பு, பள்ளத்தாக்கு மண்ணரிப்பு). 2. மண் சீரழிவு 3. நீர் தேங்குதல் 4. உவர்ப்பு மற்றும் காரத்தன்மை 5. உப்பு படிவுகள் ஆகியனவாகும்.

மண் வளப்பாதுகாப்பும் மண்வள மேலாண்மையும்:

1. காடுகள் உருவாக்கம்

2. அணைகள் மற்றும் குறுக்கணைகள் கட்டுதல்.

3. அதிக மேய்ச்சலைத் தடுத்தல்

4. மேம்பட்ட பயிர்ச்சாகுபடி முறைகளைப் பின்பற்றல் 

சம உயரம் உழுதல், பயிற்சுழற்சி முறை, கரைகள் கட்டுதல், படிக்கட்டு வேளாண்மை, பட்டை பயிரிடல், காற்றெதிர் திசையில் மரங்கள் நடல், நிலைத்த வேளாண் நுட்பத்தையும் மண் மேலாண்மைக்கு உகந்த பாதுகாப்பு முறைகளையும் பின்பற்றுதல்.


10th Social Science : Geography : Chapter 3 : India - Agriculture : Types and Characteristics of Soils in India in Tamil : 10th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 10வது சமூக அறிவியல் : புவியியல் : அலகு - 3 : இந்தியா - வேளாண்மை : இந்தியாவில் உள்ள மண்ணின் வகைகள் மற்றும் பண்புகள் - : 10 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
10வது சமூக அறிவியல் : புவியியல் : அலகு - 3 : இந்தியா - வேளாண்மை