இந்தியா - வேளாண்மை | புவியியல் - கால்நடைகள் | 10th Social Science : Geography : Chapter 3 : India - Agriculture
கால்நடைகள்
கால்நடைகள்
இந்தியாவின் விவசாயத்தோடு ஒருங்கிணைந்த கூறுகள் ஆகும். கால்நடைகளின் பல்வேறு வகைப்
பயன்பாடுகள் காரணமாக இவை சமூக மற்றும் பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகக்
கருதப்படுகின்றன. இவை சமூக, கலாச்சாரப் பாதுகாப்பிற்கும் தன் பங்களிப்பை
தருகின்றது. ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை அளிப்பதன் மூலம் இவை உணவு மற்றும்
ஊட்டச்சத்து பாதுகாப்பை மேம்படுத்துகிறது. வேளாண்மை பொய்க்கும் பொழுது வேலை வாய்ப்பையும்,
வருவாயையும்
அளிக்கின்றன. நிலத்தை உழுவதற்கும், பயிர்களுக்கு உரம் அளிப்பவையாகவும் இவை
விளங்குகின்றன.
இந்தியாவில்
மொத்த கால்நடைகளில் மாடுகள் 37.3 சதவிகிதமாகும். உலக அளவில்
பிரேசிலுக்கு அடுத்தபடியாக இந்தியா மாடுகள் எண்ணிக்கையில் இரண்டாவது இடத்தை
வகிக்கிறது. இந்தியாவில் உள்ள மாடுகள் பல்வேறு இனங்களைச் சார்ந்ததாகும். இவை
1. பால் இனம்
2. இழுவை இனம் மற்றும்
3. கலப்பு அல்லது பொது இனம்.
ஏழை மக்களின் பசு என்றழைக்கப்படும் வெள்ளாடுகள்,
பால்,
இறைச்சி,
தோல் மற்றும் உரோமம் போன்றவற்றை அளிக்கின்றன. இது நாட்டின் இறைச்சிக்கு முக்கிய ஆதாரமாக
உள்ளது.
இந்தியாவில்
பால் உற்பத்தியின் ஒரு முக்கிய ஆதாரமாக எருமைகள் உள்ளன. உத்தரப்பிரதேசம் அதிகப்படியான
எருமைகளையும் (28.2%) அதனைத் தொடர்ந்து இராஜஸ்தான்
(9.6%) மற்றும் ஆந்திரப்பிரதேசம் (7.9%)
முறையே
இரண்டாம் மற்றும் மூன்றாம் இடத்தை வகிக்கின்றன.
இந்தியாவின் முதல்
கால்நடை கணக்கெடுப்பு 1919இல் மிகக் குறைந்த பால் பண்ணை கால்நடைகளுடன்
எடுக்கப்பட்டது.
உங்களுக்குத்
தெரியுமா?
தமிழ்நாட்டில்
கால்நடை கணக்கெடுப்பு எவ்வாறு மேற்கொள்ளப்படுகிறது?
தமிழ்நாடு அரசு மாநில அளவிலான
கால்நடை கணக்கெடுப்பை கால்நடை வளர்ப்புத் துறை உதவியுடன் மேற்கொள்கிறது. மாவட்ட
அளவிலான கணக்கெடுப்பு மண்டல இணை இயக்குநர் மூலம் மேற்கொள்ளப்படுகிறது.
இக்கணக்கெடுப்புகள் மத்திய அரசின் 1. வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சகம், கால்நடை
வளர்ப்பு, பால் பண்ணை, மீன்வளத் துறை போன்றவற்றின் வழிகாட்டுதலின் படி
மேற்கொள்ளப்படுகிறது.
மாநில
மற்றும் யூனியன் பிரதேச கால்நடை வளர்ப்புத் துறை 2016-17ஆம்
கணக்கெடுப்பின்படி, நம் நாட்டின் மொத்த பால் உற்பத்தியில்
உத்தரப்பிரதேசம், இராஜஸ்தான்,
மத்தியப்பிரதேசம்
முதன்மை மாநிலங்களாகத் திகழ்கின்றன.
இறைச்சியைப் பொறுத்தவரை
உத்தரப்பிரதேசம் முதன்மை மாநிலமாக விளங்குகிறது. அதனைத் தொடர்ந்து நாட்டின்
இறைச்சி உற்பத்தியில் மகாராஷ்டிரா,
மேற்கு
வங்காளம் ஆகியவை உள்ளன. நம் நாட்டின் மொத்த ரோம் உற்பத்தியில் இராஜஸ்தான் மாநிலம்
முதல் இடத்தையும், அதனைத் தொடர்ந்து கர்நாடகம் இரண்டாம்
இடத்தையும் வகிக்கின்றது.