இந்தியா - வேளாண்மை | புவியியல் | சமூக அறிவியல் - பின்வரும் வினாக்களுக்கு விரிவான விடையளிக்கவும். | 10th Social Science : Geography : Chapter 3 : India - Agriculture
VIII. பின்வரும் வினாக்களுக்கு
விரிவான விடையளிக்கவும்.
1. இந்திய மண்வகைகள் ஏதேனும் ஐந்தினைக் குறிப்பிட்டு,
மண்ணின் பண்புகள் மற்றும் பரவல் பற்றி விவரி.
வண்டல் மண் - வேதியியல் பண்புகள்:
பொட்டாசியம், பாஸ்பேரிக் அமிலம்,
சுண்ணாம்பு மற்றும் கார்பன் கலவைகள் அதிகமாக காணப்படுகின்றன.
மண்ணின் தன்மைகள்:
வண்டல் மண் மண்டி, களிமண் போன்ற
கலவைகளுடன் மண்ணடுக்கு காணப்படுகிறது.
பரவல் : கங்கை, உத்ரகாண்ட் உத்திரப்பிரதேசம்.
வளரும் பயிர்கள் : நெல்,
கோதுமை.
கரிசல் மண் - தன்மைகள்:
ஈராமாக இருக்கும் போது சேறாகவும், ஈரப்பதத்தை நீண்ட நேரம் தக்க வைத்துக் கொள்ளும் தன்மையும் உடையது.
பரவல் : மகாராஷ்டிரா,
மாளவப் பீடபூமி, கத்தியவார் தீபகற்பம்.
வளரும் பயிர்கள் : திணை,
பருத்தி, கரும்பு.
செம்மண் - வேதியியல் பண்புகள்:
• இரும்பு மற்றும் மக்னீசியம் அதிகமாக காணப்படுகிறது.
• நைட்ரஜன், இலைமக்குகள்,
பாஸ்பேரிக் அமிலம் மற்றும் சுண்ணாம்பு சத்துகள் குறைவாக காணப்படுகின்றன.
மண்ணின் தன்மைகள்:
மென் துகள்கள் இடையளவு குறிப்பிடப்பட்டுள்ள உப்புக் கரைசல், வெண்களிப் பாறைத்துகள்கள், சிற
வெடிப்புகளுடன் கூடிய செம்மண் படிவு.
பரவல் : தக்காண பீடபூமியின் கிழக்குப் பகுதி, தென் மாநிலங்களான கேரளா, தமிழ்நாடு.
வளரும் பயிர்கள் : கோதுமை,
நெல், பருத்தி.
சரளை மண் - வேதியியல் பண்புகள்:
இரும்பு மற்றும் அலுமினியத்தின் நீரேற்ற ஆக்சைடுகளால் உருவானது.
மண்ணின் தன்மைகள்:
உயரமான மலைப்பகுதிகளில் அதிகமான அமிலத்தன்மையுடன் தாழ்வான பகுதிகளில்
குறைந்த அளவும் உள்ளது. பொதுவாக இது ஈரப்பதத்தை
தக்கவைத்துக் கொள்வதில்லை.
பரவல் : அசாம் குன்றுகள்,
கேரளா மற்றும் கர்நாடகா.
வளரும் பயிர்கள் : காபி,
இரப்பர், முந்திரி.
காடு மற்றும் மலை மண் வேதியியல் பண்புகள்:
பொட்டாஷ், பாஸ்பரஸ், சுண்ணாம்புச் சத்துகள் குறைவாகக் காணப்படுகிறது.
மண்ணின் தன்மைகள்:
• மென்மையான மணல் மற்றும் பாறை துகள்கள் கலந்து காணப்படுகிறது.
• இம் மண்ணின் தன்மை தாய்பாறைக்கேட்ப மாறுபடுகிறது.
• அதிக இலை மக்குச் சத்துகள் உடையது.
• மெதுவாக மக்குகளால் சிதைவுறுதலால் காரத்தன்மை கொண்டதாக உள்ளது.
பரவல் : ஜம்மு காஷ்மீர், உத்தரகாண்ட்,
சிக்கிம்.
வளரும் பயிர்கள் : காபி,
நெல், தேயிலை.
2. பல்நோக்குத் திட்டம் என்றால் என்ன? ஏதேனும் இரண்டு இந்திய பல்நோக்கு திட்டங்கள் பற்றி எழுதுக.
இது ஒரு அறிவியல் முறையிலான நீர்வள மேலாண்மை திட்டமாகும். ஆற்றின் குறுக்கே பல்வேறு நோக்கங்களுக்காக அணைகளைக்
கட்டுவதால் இவை பல்நோக்கு ஆற்றுப் பள்ளத்தாக்குத் திட்டங்கள் என்று அழைக்கப்படுகிறது.
பக்ரா நங்கல் அணை:
• சட்லெஜ் ஆற்றின் மீது கட்டப்பட்ட மிகப்பெரிய பல்நோக்கு இந்திய திட்டங்களில்
ஒன்று.
• பக்ரா நங்கல் அணை உலகின் மிக உயர்ந்த அணைகளில் ஒன்று.
• பக்ரா அணை 10,000 மில்லியனுக்கும்
அதிகமான தண்ணீரை சேமிக்கும் திறன் கொண்டது.
• இந்த ஏரி கோவிந்த் சாகர் ஏரி என்று பிரபலமாக அறியப்படுகிறது.
• பஞ்சாப், ஹரியானா மற்றும் ராஜஸ்தான்
பகுதிகள் பயனடைகின்றன.
ஹிராகுட் திட்டம்:
• மகாநதி ஆற்றின் மீது கட்டப்பட்ட மிகப்பெரிய பல்நோக்கு இந்திய திட்டங்களில்
ஒன்று.
• இது உலகின் மிக நீளமான அணை.
அதன் நோக்கங்கள்:
• நீரின் விரைவான ஓட்டத்திலிருந்து ஏராளமான நீர் மின் சக்தியைப் பயன்படுத்துதல்,
• வெள்ளம் மற்றும் அதன் விளைவாக ஏற்படும் அழிவைக் கட்டுப்படுத்துதல்,
• பூரி மற்றும் கட்டாக் மாவட்டங்களுக்கு கால்வாய்கள் வழியாக நீர்ப்பாசனம்.
• நீர் போக்குவரத்தை மேம்படுத்துதல்.
• வேலைவாய்ப்பை வழங்குவதன் மூலம் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சி.
• நிலையான மற்றும் உறுதியான மின்சாரம் மூலம் விரைவான தொழில்மயமாக்கல்.
3. தீவிர வேளாண்மை மற்றும் தோட்ட வேளாண்மையின் பண்புகளை
வெளிக் கொணர்க.
தீவிர வேளாண்மை :
• தீவிர வேளாண்மை எனப்படுவது இயந்திரங்கள் மற்றும் பல்வேறு நவீன யுகத்தின்
மூலம் உற்பத்தியை அதிகப்படுத்துவதாகும்.
• சிறிய நிலத்தில் பூச்சிக் கொல்லிகள், களைக்கொல்லிகள் மற்றும் இரசாயன உரங்களை அதிகமாக பயன்படுத்தி
அதிகபட்ச விளைச்சலை பெறுவது இதன் நோக்கமாகும்.
தோட்ட வேளாண்மை:
• தோட்டப்பயிர்கள் ஏற்றுமதி செய்யும் நோக்கத்துடன் பயிரிடப்படுகிறது.
• இவை மலைச்சரிவுகளில் பெரிய எஸ்டேட் பண்ணைகளில் பயிரிடப்படுகிறது.
• தேயிலை, காபி, இரப்பர் மற்றும் வாசனைப் பொருள்கள் ஆகியவை இந்தியாவின் முக்கியத் தோட்டப்பயிர்களாகும்.
4. நெல் மற்றும் கோதுமை பயிரிடுவதற்கு ஏற்ற புவியியல் சூழல்கள்
பற்றி விவரி.
நெல்:
• நெல் இந்தியாவின் பூர்வீகப் பயிராகும்.
• உலகளவில் நெல் உற்பத்தியில் சீனாவிற்கு அடுத்தப்படியாக இந்தியா இரண்டாம்
இடத்தை வகிக்கிறது.
• இது அயனமண்டலப் பயிராகும்.
• 24° C சராசரி வெப்பநிலையும்,
150 செ.மீ ஆண்டு மழையளவும் உள்ள பகுதிகளில்
பயிரிடப்படுகிறது.
• வளமான களிமண் அல்லது வண்டல் மண் நெல் சாகுபடிக்கு ஏற்றது. நெல் பயிரிட அதிகமான தொழிலாளர்கள் தேவைப்படுகிறார்கள்.
கோதுமை:
• நெல் பயிருக்கு அடுத்தாற் போல் இரண்டாவது முக்கிய உணவுப் பயிராக விளங்குவது
கோதுமை ஆகும்.
• இப்பயிர் விதைக்கும் பருவத்தில் 10 - 15°
C வெப்பமும், முதிரும் பருவத்தில் 20 -
25° C வெப்பநிலையும் தேவைப்படுகிறது.
• சுமார் 85 சதவீதத்திற்கும்
மேலான கோதுமை உற்பத்தி உத்திரப்பிரதேசம், பஞ்சாப், ஹரியானா, இராஜஸ்தான், மத்தியப்
பிரதேசம் ஆகிய ஐந்து மாநிலங்களிலிருந்து கிடைக்கிறது.
IX. உயர் சிந்தனை வினாக்கள்:
1. வேளாண்மை இல்லாத உலகை கற்பனை செய்து பார்க்க முடியுமா?
ஆசிரியர் மாணவர் செயல்பாடு.
2. தென்னிந்தியாவில் நிலவும் நீர் பங்கீட்டு பிரச்சனைக்கு
ஏதேனும் தீர்வை உங்கள் கொடுக்க முடியுமா?
ஆசிரியர் மாணவர் செயல்பாடு.