இந்திய விவசாயிகள் எதிர் கொள்ளும் முக்கிய சவால்கள்
இந்தியாவில்
மக்கள் அடர்த்தி மிகுந்த மற்றும் தீவிர பயிர் சாகுபடி செய்யும் மாநிலங்களில் சிறிய மற்றும் துண்டாக்கப்பட்ட நில உடமையாளர்கள்
அதிகம் உள்ளனர்.
அதிக
விலையின் காரணமாக நல்ல தரமான விதைகள் சிறு-குறு விவசாயிகளுக்கு எட்டாக் கனியாக
உள்ளது.
இந்திய
மண் பல்லாயிரம் ஆண்டுகளாக தொடர்ந்து வளம் கூட்டல் மற்றும் புதுப்பித்தல்
செயல்பாடியின்றி வேளாண்மைக்கு உட்படுத்தப்பட்டிருப்பதால் மண்ணின் வளம்
குன்றி அதன் உற்பத்தித் திறன் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில்
மூன்றில் ஒரு பங்கு வேளாண் நிலப்பகுதியே பாசன வசதியை பெற்றிருக்கின்றது.
நாட்டின்
பல பகுதிகளில் வேளாண்மை பெரிய அளவில் இயந்திரமயமாக்கப்பட்டிருப்பினும் பெரும்பாலான
பகுதிகளில் மனிதர்களைக் கொண்டு எளிய மற்றும் பழமையான கருவிகள் மூலமே வேளாண்மை
செய்யப்படுகிறது.
காற்று
மற்றும் நீரின் மூலமான மண் அரிப்பில் பெரும் நிலப் பரப்பு பாதிக்கப்பட்டுள்ளது.
தரமான உள்கட்டமைப்பு வசதிகள் இன்மையால் விவசாயிகள் உள்ளூர் வியாபாரிகளிடமும், தரகர்களிடமும் விவசாயப் பொருள்களைக் குறைந்த விலைக்கு விற்பனை செய்கிறார்கள். மேலும் விவசாயப் பொருள்களின் விலையில் அதிகமாக ஏற்றத்தாழ்வுகள் காணப்படுகின்றன.
கிராமப்புற
பகுதிகள் விவசாய சேமிப்பு கிடங்கு வசதியற்றோ அல்லது முழுமை பெறா நிலையிலோ
காணப்படுகிறது. இத்தகைய சூழலில் விவசாயிகள் அறுவடை முடிந்தவுடன் வேளாண் உற்பத்தி
பொருள்களை சந்தையில் விற்கும் கட்டாய நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள்.
இந்திய
வேளாண்மையின் முக்கிய சவால்களில் ஒன்று மலிவான மற்றும் போதுமான போக்குவரத்து
வசதியின்மையாகும்.
வேளாண்மை அதிக மூலதனம் தேவைப்படும் தொழில்களில் ஒன்றாகும். மேம்படுத்தப்பட்ட பண்ணை இயந்திரங்கள் மற்றும் கருவிகள் வாங்க மூலதனம் முக்கிய பங்கு வகிக்கிறது.
இந்தியாவின்
முக்கிய வேளாண் புரட்சிகள்
புரட்சிகள் : உற்பத்திகள்
மஞ்சள்
புரட்சி : எண்ணெய்
வித்துக்கள் (குறிப்பாக கடுகு மற்றும் சூரிய காந்தி)
நீலப் புரட்சி : மீன்கள்
உற்பத்தி
பழுப்புப் புரட்சி : தோல்,
கோக்கோ, மரபுசாரா உற்பத்தி
தங்க
நூலிழைப் புரட்சி : சணல் உற்பத்தி
பொன்
புரட்சி : பழங்கள்,
தேன்
மற்றும் தோட்டக்கலைப்
பயிர்
சாம்பல் புரட்சி : உரங்கள்
இளஞ்சிவப்புப் புரட்சி : வெங்காயம்,
மருந்து பொருள்கள்,
இறால் உற்பத்தி
பசுமைப் புரட்சி : அனைத்து
வேளாண் உற்பத்தி
வெள்ளிப் புரட்சி : முட்டை மற்றும் கோழிகள்
வெள்ளி
இழைப் புரட்சி : பருத்தி
சிவப்புப்
புரட்சி : இறைச்சி உற்பத்தி, தக்காளி உற்பத்தி
வட்டப் புரட்சி : உருளைக்கிழங்கு
வெண்மைப்
புரட்சி : பால் உற்பத்தி