பைத்தான் - பெயரில்லாத செயற்கூறுகள் | 12th Computer Science : Chapter 7 : Core Python : Python Functions
பெயரில்லாத செயற்கூறுகள் (Anonymous
Function)
பெயரில்லாத செயற்கூறுகள் என்றால் என்ன?
பைத்தானில், பெயரில்லாமல் வரையறுக்கப்படும் செயற்கூறுவுக்கு
பெயரில்லாத செயற்கூறு என்று பெயர். மற்ற சாதாரண செயற்கூறுகள் def என்ற சிறப்பு சொல்லுடன் வரையறுக்கப்படுகிறது. பைத்தானில் பெயரில்லாத
செயற்கூறுகள் லாம்டா சிறப்புச் சொல்லுடன் வரையறுக்கப்படுகிறது. எனவே, பெயரில்லா செயற்கூறுகளை
லாம்டா செயற்கூறுகள் என்றும் அழைக்கலாம்.
லாம்டா அல்லது பெயரில்லா செயற்கூறின் பயன்கள்
• லாம்டா செயற்கூறு பெரும்பாலும் சிறிய மற்றும் ஒரு முறை பெயரில்லாத
செயற்கூறை உருவாக்க பயன்படுகிறது.
• filter( ), map() மற்றும் reduce() போன்ற செயற்கூறுகளுடன்
சேர்த்து லாம்டா செயற்கூறுகளை பயன்படுத்தலாம்.
குறிப்பு
filter(),map()
மற்றும்reduce() செயற்கூறுகள் இந்த புத்தகத்திற்கு அப்பாற்பட்டது.
உங்களுக்குத் தெரியுமா?
லாம்டா செயற்கூறு எண்ணற்ற செயலுருபுகளை எடுத்துக் கொண்டு திருப்பி அனுப்பும் ஒரே ஒரு மதிப்பை கோவை வடிவில் கொடுக்கும். லாம்டா செயற்கூற்றால் முழுதளாவிய மாறிகள் மற்றும் அளபுரு பட்டியலில் உள்ள மாறிகளை மட்டுமே அணுக முடியும்.
1. பெயரில்லா செயற்கூறின் பொது வடிவம்
lambda (argument(s)] :expression
எடுத்துக்காட்டு:
sum = lambda arg1, arg2: argl + arg2
print ('The Sum is :', sum(30,40))
print ('The Sum is :', sum(-30,40))
வெளியீடு
The Sum is: 70
The Sum is: 10
மேற்கண்ட லாம்டா செயற்கூறு arg 1 செயலுருபுவை arg 2 செயலுருபுடன்
கூட்டி விடையை sum மாறியில் சேமிக்கும். print () செயற்கூறை பயன்படுத்தி வெளியீட்டை
வெளியிடும்.